4.12.25

G.C.E.O/L, பேதைமை கடந்தகால வினாத்தாள்

 

பேதைமை

கடந்தகால வினாத்தாள்

G.C.E.O/L-2023(2024)

03. () பேதைமை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் கூறியுள்ளவற்றைத் தெளிவுபடுத்துக?

(). தனக்குக் கேடு தருவனவற்றை ஏற்றுக்கொண்டு நன்மை தருவனவற்றைக் கைவிடுவதே பேதைமை

தனக்குப் பொருத்தமில்லாத ஒழுக்கத்தில் ஆசை கொள்வது பேதைமை யாவற்றிலும் பேதைமையாகும்

.தகாதவற்றுக்கு நாணாதிருத்தல், தக்கவற்றை நாடாதிருத்தல், அன்பின்மை, நன்மைகளை விரும்பாமை

ஆகியன பேதையர் தொழில்கள்

.நூல்களை ஓதி அவற்றின் பொருளை உணர்ந்து பிறர்க்கு எடுத்துரைத்தபோதும் தான் அந்த

நெறியில் நில்லாதவனைவிட பெரிய பேதை எவனும் இல்லை.

.பேதை, ஏழு பிறப்புகளில் தான் அழுந்தத்தக்க துன்பத்தை ஒரு பிறப்பிலேயே செய்துகொள்ள

வல்லவன்

.ஒழுக்கநெறி அறியாத பேதை ஒரு செயலை மேற்கொண்டால் அச்செயல் நிறைவுபெறாது பொய்படுவது மாத்திரமன்றி அவன் சிறை செல்லவும் நேரும்.

.பேதை ஒருவன் பெருஞ்செல்வத்தை அடைந்தால் அவனோடு தொடர்பில்லாதவர்கள் அதனை

அனுபவிக்க, அவனது சுற்றத்தார் பசியால் வாடுவர்.

.பேதை ஒருவனுக்கு ஏதேனும் கிடைத்தால் அவனது நிலை பித்தன் ஒருவன் கள்ளுண்டு மயங்கியது

போலாகும்.

.பேதையருடன் கொள்ளும் நட்பு இனியது. ஏனெனில் பேதையரின் பிரிவு துன்பம் தருவதில்லை.

சான்றோர் குழுவில் பேதை புகுவது தூய்மையற்றதை மிதித்த ஒருவன் கழுவாத காலொடு

படுக்கையில் புகுந்தது போன்றதாகும்.

() அதில் வள்ளுவர் கையாண்ட அணிகளை இனங்கண்டு, அவற்றில் நீர்காணும் நயங்களை விளக்குக?

(). உவமையணி

1. மையல் ஒருவன் களித்தற்றால் -.......

உவமானம் :- பைத்தியமான ஒருவன் கள்ளுக்குடித்தநிலை

உவமேயம் :- அறிவில்லாதவனிடம் செல்வம் சேருதல்

பொதுத்தன்மை :- குழப்பம் / பயனின்மை / வீண்விரயம்

நயம் :- பேதையருக்கு வரும் வசதிகளால் தீமையே அதிகரிக்கும் என்பது உணர்த்தப்படல்

 

2. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் .......

உவமானம் :- அழுக்கான காலைப் படுக்கையில் வைத்தல்

உவமேயம் :- சான்றோர் கூட்டத்தில் பேதை புகுதல்

பொதுத்தன்மை :- பொருத்தமின்மை / இழிவானது

நயம் :- பேதையரின் இழிவு உணர்த்தப்படல்

 

G.C.E.O/L-2022(2023)

02. (ii) பேதைமை என்பதுஒன்று யாதெனில் ஏதம் கொண்டு

ஊதியம் போகவிடல்.

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை

கையல்ல தன்கண் செயல்.

() பேதைமை என்பதை வரைவிலக்கணம் செய்க?

(அ). தனக்குக் கெடுதியான செயல்களை ஏற்றுக்கொண்டு நன்மை தரும்

செயல்களைக் கைவிடுதல்

() 'காதன்மை கையல்லதன்கண் செயல்' என்ற தொடரை விளக்குக?

). தனக்குப் பொருந்தாத ஒழுக்கத்தில் ஆசைகொள்ளுதல்

 

G.C.E.O/L-2021(2022)

01. (vii) நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்."

(
) 'யாதொன்றும் பேணாமை' என்பதன் மூலம் உணர்த்தப்படுவது யாது?

() பேணவேண்டிய எதையும் பேணி நடவாமை

() 'நாரின்மை' என்பதனை விளக்குக?

() அன்பின்மை

G.C.E.O/L-2020

5. பேதைமை என்ற அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு பின்வருவனவற்றை விளக்குக.

() பேதையர் இயல்பு

(). பேதையர் இயல்பு

தனக்கு கேடு தருபவற்றை ஏற்றுக் கொண்டு, நன்மை பயப்பனவற்றை விட்டுவிடுதல்

தனக்குப் பொருந்தாத ஒழுக்கத்தில் ஈடுபடுதல்

வெட்கப்பட வேண்டியவற்றிற்கு வெட்கப்படாமை

நல்லவற்றை நாடாமை

யாரிடத்தும் அன்பில்லாமை

பேணிக்காக்க வேண்டிய எதனையும் பேணாமை

ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்காமை

பேதையின் செல்வம் பிறருக்கே பயன்படுதல்

தனது உடைமைகளை சரியாகப் பயன்படுத்தத் தெரியாமை

() பேதையர் அடையும் கேடு

(). ஏழு பிறவியிலும் வருந்தக்கூடிய நரகத்தை ஒரு பிறவியிலே ஏற்படுத்திக் கொள்ளல்

செய்யும் வகை அறியாத பேதையின் செயல் பாழ்படும், அவன் தண்டனை பெற்று விலங்கிடப்படுவான்.

G.C.E.O/L-2018

4. பேதைமை என்ற அதிகாரத்தில்,

() பேதைமை உடையோரின் செயல்கள்

(அ). தனக்கு கெடுதியான செயல்களை ஏற்றுக்கொண்டு நன்மை தரும் செயல்களை கைவிடல்.

தனக்குப் பொருந்தாத ஒழுக்கத்தில் ஆசை கொள்ளுதல்.

தகாத செயல்களுக்கு நாணாது இருத்தல்.

தக்க செயல்களை ஏற்காது இருத்தல்.

அன்பு இல்லாதிருத்தல்.

நன்மை தரும் செயலை விரும்பாதிருத்தல்.

ஏழு பிறவியில் அழுந்துவதற்குரிய நரகத் துன்பத்திற்கு காரணமான செயலை செய்வான்.

நிறைவு பெறாத செயல்களிலேயே ஈடுபடுவான்.

தன்னைக் குற்றவாளியாக்கக்கூடிய செயல்களைச் செய்வான்.

() பேதைமை உடையோரைச் கட்டப் பயன்படும் அணிகள்

என்பனவற்றை விளக்குக.

. அணிகள்

குறள் - 8 உவமை அணி

"மையல் ஒருவன் ..

பேதையின் கையில் ஒரு பொருள் பெற்றால் அது பித்துப் பிடித்த ஒருவன் மயங்கியது போலாகும்.

உவமானம் :- - பித்துப்பிடித்தவன் மது அருந்தி மயங்கி நடத்தல்.

உவமேயம் :- பேதையின் கையில் பொருள் கிடைக்க அவன் செய்வதறியாது நடத்தல்.

பொதுத்தன்மை :- செய்வதறியாது மயங்கிக் கிடத்தல்.

 

குறள் - 10 உவமை அணி

"கழா அக்கால்.

சான்றோர் கூட்டத்துள் பேதை புகுதல், ஒருவன் தூய்மையற்றவற்றை மிதித்து கழுவாத காலை

படுக்கையில் வைப்பது போன்றது.

உவமானம் :- தூய்மையில்லாததை மிதித்துக் கழுவாத காலை படுக்கையில் வைத்தல்.

உவமேயம் :- சான்றோர் கூட்டத்தில் பேதை புகுதல்.

பொதுத்தன்மை :- தகாத செயல்

 

G.C.E.O/L-2016

4. திருகுறளிலுள்ள பேதைமை என்ற அதிகாரத்தின் அடிப்படையில்,

() பேதைமை என்றால் என்ன ?

தனக்குக் கெடுதியானதைக் கைக்கொண்டு ஊதியமானதைக் கைவிடுதல் பேதமையாகும்.

தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் விருப்பம் செலுத்துதல் பெரும் பேதமையாகும்.

() பேதையர் அடையும் துன்பம்

என்பவற்றை விளக்குக.

). ஏழு பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதை தன் ஒரு பிறவியிலேயே தேடிக்கொள்வான்.

செய்யும் வகை அறியாத பேதை ஒரு செயலைச் செய்தால் அச் செயல் முழுமையாகப் பாழ்படும். மேலும் தானும் தண்டனை பெற்று விலங்கிடப்படுவன்.

பேதை பெருஞ்செல்வம் அடைந்த போது அவனோடு தொடர்பில்லாத அயலவர் நன்மை பெற அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.

பேதை செல்வம் பெற்றால் பித்துப் பிடித்த ஒருவன் மது குடித்து மயங்குவது போல நடந்து கொள்வான்.

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக