கல்விப்பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை, 2024(2025)
தமிழ் மொழியும் இலக்கியமும் - III
01. சுருக்கமான விடை தருக.
(1) "தெண்ணீர்க் கயத்துட் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே
(அ) சினை
(ஆ) நுண்ணிது
ஆகியவற்றின் பொருளைத் தருக?
அ. சினை
- முட்டை
ஆ. நுண்ணிது - சிறியது/மிகச்சிறியது
(11) "பிரசண்ட மாருதத்துக்குப் பிறகு என்று சொல்லுகிற 'பிறகு' அந்தச் சபையில் நிலவியது
(அ) பிரசண்ட மாருதம் என்றால் என்ன?
சூறாவளிகள் காற்று/புயல்/ புயற்காற்று/பெருங்காற்று/கடுங்காற்று
(ஆ)
இங்கு 'பிறகு' என்ற சொல்லால் குறிப்பிடப்படுவது யாது?
அமைதி
(iii) "கையில் அகல செம்புக் காப்புக்களென அமர்க்களமாய் பார்க்க அம்சமாய் இருப்பா"
(அ) அமர்க்களம் என்பதன் நேர்ப்பொருள் யாது?
போர்க்களம்/யுத்தகளம்
(ஆ) அது இங்கே என்ன பொருளில் வழங்குகிறது?
சிறப்பு/அழகு/லாவண்யம்/சௌந்தர்யம்/இலட்சணம்/கவர்ச்சி
(iv) "வெங்கட் பிறைக்கும் கரும்பிறைக்கும்
மெலிந்தப் பிறைக்கும் விழிவேலே"
(அ) பிறையை 'வெங்கட் பிறை'
என்று கூறுவதன் காரணம் யாது?
பிரிந்த காதலர்களுக்கு வருத்தம் ஏற்படுத்துவதால் / தலைவன் இல்லாதது தலைவியை வருத்தல் / துன்பம் தருதல் / அவளை வருத்துகின்றது.
(ஆ)
இதில் இடம்பெற்றுள்ள அணியை இனங்கண்டு விளக்குக?
உருவக அணி - விழி வேலாக உருவகிக்கப்பட்டுள்ளது.
(v) "கடுமையார் கானகத்துக் கருணையார் கலி ஏக
(அ) கடுமையார் கானகத்துக்கு ஏகியவரின் பெயர் யாது?
இராமன்
(ஆ) இங்கு 'கலி' என்பதன் பொருள் யாது?
கடல்
(vi) "இப்போ இந்த மலையைப் பிரிவது மலையைவிடக் கூடுதலாகக் கனக்கிறதே. ஆனால், என் அருமைச் செல்வங்களே... புறப்பட வேண்டியதுதான்."
(அ) பறம்பு மலையைப் பிரிவதில் உள்ள அதிக வேதனை எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றது?
மலையை விட கனக்கிறது என்பதனூடாக பிரிவது மலையை விட கனக்கிறது.
(ஆ). அதைப் பிரிந்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தை உணர்த்தும் தொடர் யாது?
புறப்பட வேண்டியதுதான்
(vii) "அரவு உயர்த்தோன் கொடுமையிலும் முரசு உயர்த்தோய்
உனது அருளுக்கு அஞ்சினேனே"
இக்கூற்று,
(அ) யாரால் கூறப்பட்டது?
வீமனால்
(ஆ) எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது?
தர்மன் மீண்டும் சமாதானத்தை வலியுறுத்தி கிருஷ்ணனைத் தூது போகும்படி கேட்ட சந்தர்ப்பத்தில் / சமாதானம் கேள்
/ தூது செல்ல
(viii) "அன்னநடை மைவிழியா ளம்பொன்மலர்க் கொம்பனையாள்
என்னிதய தாமரைக்கோ ரிலக்குமியாம்"
இந்தச் செய்யுட் பகுதியிற் காணப்படும்.
(அ) உவமையணி ஒன்றை இனங்கண்டு குறிப்பிடுக?
அன்னம் போன்ற நடை / அன்னநடை, மலர்க் கொம்பு அனையாள் / அம்பொன் மலர்கொம்பனையார்
(ஆ)
உருவக அணி ஒன்றை இனங்கண்டு குறிப்பிடுக?
இதயத்தாமரை / இலக்குமி
(ix) "மறையென லறியா மாயமி லாயம்"
(அ) இங்கு ஆயம் என்ற சொல் யாரைச் சுட்டுகிறது?
நண்பர்கள் / நண்பர்கூட்டம்/ இளைஞர் கூட்டம் / கூட்டம்
(ஆ)
அந்த ஆயத்தின் சிறப்பு எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது?
மறை அறியாதவர் / மாயம் இல்லாதவர் / ஒளிவுமறைவு இல்லாதவர் / கபடம், வஞ்சகம் இல்லாதவர்
(x) "ஏர் தழைக்கவேணும் தம்பிரானே
எல்லோரும் வாழவேணும் தம்பிரானே"
(அ) ஏர் என்பதற்கு நிகரான பிறிதொரு சொல்லைக் குறிப்பிடுக.
மேழி / கலப்பை
(ஆ) 'ஏர் தழைக்க வேணும்' என்ற தொடரால் உணர்த்தப்படுவது யாது?
விவசாயம் / வேளாண்மை சிறக்க வேண்டும் / உழவுத்தொழிலின் சிறப்பு / கமம்
(02 10 = 20 புள்ளிகள்
)
