இலங்கையின் மும்மொழிச் சமூகம் ஒன்றை
உருவாக்குதல்.
இந்து சமுத்திரத்தின் முத்தாக திகழும் இலங்கை ஒரு சிறிய தீவு ஆகும். இச்சிறிய நாட்டில் தமிழர், சிங்களவர், இஸ்லாமியர். பறங்கியர் என பல்லின சமூகம் நீண்ட நெடும் காலமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பல இனத்தவராக வாழ்ந்து வந்தாலும் இவர்கள் பேசும் மொழியும் வேறுபாடு உடையதாக காணப்படுகின்றது. ஒரு சமூக இசைவாக்கத்திற்கு அந்நாட்டில் வழங்கும் மொழியே அடிப்படையாக அமைகின்றது. எனவே,
ஒரு நாட்டின் சமூக உறவுக்கு அடிப்படையான அம்சம் மொழியே ஆகும். இந்த வகையில் இலங்கை எனும் சிறிய நாட்டில் பல்லின சமூகம் வாழ்ந்தாலும் இந்நாட்டின் தேசிய மொழியாக தமிழும், சிங்களமும் காணப்பட்டாலும், இந்நாட்டின் சர்வதேச மொழியாகிய ஆங்கிலமும் செல்வாக்கு பெற்று உள்ளது. எனவே
பல்லினச் சமூகம் வாழும் இந்நாட்டில் பன்மொழி அறிவும் அவசியம் ஆகின்றது. எனவே இலங்கை தீவில் ஒரு மும்மொழிச் சமூகம் உருவாக்கப்படுவது இன்றியமையாதது ஆகும். பல்லினச் சமூகம் வாழும் நாட்டிலே பன்மொழி அறிவு இருப்பது அவசியமாகும். இவ்வாறான பன்மொழி இடம் பெறுமாயின் அந்நாட்டில் மொழிகளின் ஊடாக புரிந்துணர்வை ஏற்படுத்த முடியும். இந்தவகையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் ஏற்படும். அத்துடன் ஜனநாயகம் மிக்க ஒரு நாடாக இத்தீபகற்பம் மிளிர்வதற்கும் அடி கோலும். ஒரு நாட்டில் பன்மொழி அறிவு முனைப்பு பெற்று காணப்பட்டால் கருத்துச் சுதந்திரம் காணப்படும். மத ஒருமைப்பாடும், கலாசார விழுமியங்கள் பாதுகாக்கப்படுவதற்கும் கல்வியில் உலக அரங்கில் உயர்ந்தவர்களாக விளங்குவதற்கும் அரசியல் ரீதியில் பகைமைகள் களையப்பட்டு இன ஒருமைப்பாட்டோடும், புரிந்துணர்வுடனும் மக்கள் வாழ்வதற்கு மும்மொழிச் சமூகம் ஒன்று உதவியாக அமையும். எம்நாட்டின் தேசிய மொழிகளாகிய தமிழ், சிங்கள மொழிகளுடன் சர்வதேச மொழியாகிய ஆங்கிலமும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழியாக அமையுமாயின் உலகத்தரம் வாய்ந்த கல்வி வாய்ப்பை ஏற்படுத்துவதற்கும் உறுதுணையாக அமையும். அத்துடன், உலக ரீதியான அரசியல் விடயங்களை
நடைமுறைப்படுத்துவதற்கும் சர்வதேச அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொள்வதற்கும் பேருதவியாக இருக்கும். நிருவாக ரீதியான சுற்றறிக்கைகள், தாபனக் கோவைகள் மும்மொழி மூலமாக பிரசுரிப்பதனால் மக்களுக்கு ஏற்படும் இடர்கள் நீக்கப்படும். அத்துடன், நீதித் துறையின் செயற்பாட்டிற்கும் இவ் மும்மொழிச் சமூகம் பெரிதும் பங்கு பற்றுவதாக அமையும்.
மும்மொழிச் சமூகம் ஓன்றை உருவாக்குவதால் ஏற்படும் நன்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதன் ட்மூலம் மக்கள் இத்திட்டத்திற்கு தமது ஒத்துழைப்பை. நல்குவார்கள். சமூகங்களில் மத்தியிலும், அரசாங்க சர்வதேச மட்டத்திலும் மட்டத்திலும் வைக்கப்பட்டு அவர்களுடைய முன்மொழிவுகள் அபிப்பிராயத்தினையும் ஏற்றுச்செயற்பட வேண்டும். இவ்வாறு மும்மொழிச் சமூகம் ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் இன, மத முரன்பாடுகள் நீக்கப்பட்டு உள்நாட்டு யுத்தம் அற்ற ஒரு சுபீட்சகரமான இலங்கைத் தீவினை கட்டியெழுப்ப முடியும் அது மட்டுமன்று கல்வி வசதி வாய்ப்புக்கள் நாடு முழுவதும் விஸ்தரிக்கப்படுவதுடன், வேலைவாய்ப்புக்கள் இலகுவாக்கப்பட்டு, வேலையற்றப் பிரச்சினைக்கும் தீர்வினை ஏற்படுத்த முடியும்.
மும்மொழித் திட்டம் அமுலாக்கப்பட்டு அது நடை முறைப்படுத்தப்பட்ட போதிலும் அது முற்று முழுதாக ஒரு செயலூக்கம் உடையதாக அமையாமை குறைபாடு உடையதாகும். இன்று பெயரளவில்இது அமுலாக்கப்பட்ட போதிலும் முழுமையாக இது நடைமுறைப்படுத்தப் படாமை பெரும் குறைபாடு ஆகும். எனவே மும்மொழி சமூகம் ஒன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் 67637 எதிர்பார்க்கப்படுகிறது. அலுவலக பணியாளர்கள் மும்மொழி தேர்ச்சி உடையவராக நியமித்தல், பாடசாலைக் கலைத் திட்டத்தில் மும்மொழிகளுக்கும் முன்னுரிமை அளித்தல், ஒரு இன மொழி பேசும் மக்கள் மற்றைய மொழி பேச எழுத தெரிந்து கொண்டால், அவர்களுக்கு சில சலுகைகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வது பயனுறுதி உடையதாக அமையும். மேற்கூறப்பட்ட விடயங்களை தொடுத்து நோக்கும்போது ஒரு நாட்டின் அரசியல், சமய, சமூக வளர்ச்சிக்கு அந்நாட்டின் தேசிய மொழியுடன் சர்வதேச மொழியின் அவசியமும் இன்றியமையாதது ஆகும். எனவே,
இலங்கையில் தமிழ், சிங்கள, ஆங்கில மொழி புலமையுடைய ஒரு மும்மொழி சமூகம் ஒன்று கட்டியெழுப்பப்படுமாயின் அது நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியமானதாக அமையும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக