3.12.25

O/L, நாவலர் எழுந்தார் கடந்தகால வினாத்தாள்

நாவலர் எழுந்தார்

கடந்தகால வினாத்தாள்

G.E.C.O/L-2024(2025)

01. (ii) "பிரசண்ட மாருதத்துக்குப் பிறகு என்று சொல்லுகிற 'பிறகு' அந்தச் சபையில் நிலவியது"

() பிரசண்ட மாருதம் என்றால் என்ன?

சூறாவளிக்காற்று\புயல்\புயற்காற்று\பெருங்காற்று\கடுங்காற்று

() இங்கு 'பிறகு' என்ற சொல்லால் குறிப்பிடப்படுவது யாது?

அமைதி

02. (iv). சேர். பொன். இராமநாதன் துரைக்கு அப்போது இருபத்தைந்து வயசு. சிரித்த முகம்; தங்க சொரூபம்; அப்பொழுதுதான் சென்னைப் பட்டணத்திலிருந்து படித்துவிட்டு வந்தவர். யாழ்ப்பாணத்தவரேயாயினும் யாழ்ப்பாணத்தவர்க்கு அவரைப் பற்றி ஒன்றுந் தெரியாது. யாழ்ப்பாணம் வந்திருக்கின்றார்.
பிறிற்றோ என்பவர் பிரசித்திபெற்ற வழக்கறிஞர். அக்காலத்து சட்ட நிபுணர்களுள்ளே தலைசிறந்தவர் அவர். இலங்கையிலேயுள்ள எல்லாரும் அவரை அறிவர். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் அவருக்கு பெரிய பேர். பாரிய வழக்குகளுக்கும் அப்பீல்களுக்கும் அவரை நியமிப்பது வழக்கம். அவருக்கு யாழ்ப்பாணத்தில் அளவுகடந்த செல்வாக்கு அந்த நாட்களில் இருந்தது.
(
) 'பிறிற்றோ பிரசித்திபெற்ற வழக்கறிஞர்' என்பது எவ்வாறு உணர்த்தப்படுகிறது?

() சட்ட நிபுணர்களில் தலை சிறந்தவர். பாரிய வழக்குகளுக்கும் அப்பீல்களுக்கும் அவரை நியமிப்பது வழக்கம்.

() சேர். பொன். இராமநாதனின் பிரசித்தமின்மையும் பிறிற்றோவின் அதிக பிரசித்தமும் பற்றிய இந்த விபரிப்பு, நாவலரின் வாதத் திறமையை உணர்த்துவதற்கு எவ்வகையில் உதவுகிறது?

() பொன் இராமநாதன் யாராலும் அறியப்படாதவராயும் பிறிற்றோ மிகப் பிரசித்தமானவராயும் இருந்த நிலையில், இராமநாதன் அவர்களை சட்டசபைக்குள் பிரதிநிதியாக மக்கள் தெரிவு செய்தது நாவலரின் வாதத்தின் விளைவே.

G.C.E.O/L- 2023(2024)
6. நாவலர் எழுந்தார் என்ற கட்டுரையில்,
(
) வாதமகாசபையின் இயல்புகள்

(). வாதமகாசபையின் இயல்புகள்
வாதம் செய்வதில் வல்லவரும் அறிஞருமான விசுவநாதபிள்ளை தலைமைதாங்குகின்ற சபை
கல்விமான்கள், பிரபுக்கள், பிராமணர், உபாத்தியாயர் உள்ளிட்ட பிரபல்யமானவர்கள் திரள் திரளாக வந்து வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட்ட பெருமை உடையது.
யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களைச் சேர்ந்த பெரும் சட்டநிபுணர்களால் நிறைந்தது.
வாதமில்லா இடத்திலும் வாதம் வருவிக்கக்கூடிய திறமை வாய்ந்த சட்டநிபுணர்கள் கூடியிருக்கும் சிறப்புடையது.
வாதமகாசபை என சிறப்பிக்கத்தக்கது.
போர்க்களங்களில் உபயோகிக்கப்படும் ஆயுதங்களை ஒத்ததான வாதத்திறமை காணப்பட்டமை.

(
) நாவலர் எழுந்தமை
என்பனவற்றை ஆசிரியர் வெளிப்படுத்தும் வகையினை விளக்குக?
() நாவலர் எழுந்தமை
தலையணைகள் அங்குமிங்கும் சிதறின என நாவலர் தருமாவேசத்துடன் எழுந்த வேகத்தைக் குறிப்பிடல்
நாவலர் வாதத்துக்கு எழுந்த வேகத்தை கம்பராமாயணத்தில் இராமன் கோதண்ட வில்லை வளைக்க எழுந்த வேகத்துடன் ஒப்பிடல்
நாவலருடைய தோற்றம், பார்வை, வேகம், இவற்றை வர்ணிக்க ஒரு கம்பர் இல்லையே என ஆதங்கப்படல்
நாவலர் எழுந்தபோது சபையில் ஏற்பட்ட அமைதியை பிரசண்டமாருதத்திற்குப் பின் ஏற்படும் அமைதியுடன் ஒப்பிடுதல்.

G.C.E.O/L- 2022(2023)
02. (v). வாதத்துக்கென்று வந்திருந்தவர்களில் இருந்தவர்கள் இருந்தே விட்டார்கள். எழுந்தவர்கள் வேறு வியாசம் பண்ணிக்கொண்டு வெளியில் போய்விட்டார்கள். போனவர்கள் பின் உள்ளே வரவில்லை. தப்பித்துக்கொள்ள வழிவகைகளின்றித் தம்மை அறியாமலே வாய்குழறி அகப்பட்டுக்கொண்டவர்கள் தமது உடல் நடுங்க நாத் தழுதழுத்து பிறிட்டோ தக்கவர் அல்லர் என்று தாமே சொல்லிச் சமாதானப்பட்டுக் கொண்டார்கள். அன்று நடந்த கூட்ட நிகழ்ச்சியோடு பிறிட்டோவின் பிரதிநிதித்துவக் கதை நின்றுவிட்டது. ஆறுமுக நாவலர் அவர்களின் ஆசீரவாதத்தால் சேர் பொன். இராமநாதன்துரை அன்று தொடக்கம் அரை நூற்றாண்டுக்கு மேல் இலங்கைச் சட்டசபையில் ஓர் இலங்கைச் சிவப்பாயிருந்து விளங்கினார்.
(
) பிறிட்டோ சார்பாக வாதிட வந்தவர்களின் இயலாமை எவ்வாறு நயம்பட விவரிக்கப்படுகின்றது?

(). இருந்தவர்கள் இருந்தே விட்டார்கள்
எழுந்தவர்கள் வேறு போய்விட்டார்கள் வியாசம் பண்ணிக்கொண்டு வெளியில்
அகப்பட்டுக்கொண்டவர்கள் தப்பித்துக்கொள்ள வழிவகையின்றி உடல் நடுங்க நாத் தழுதழுத்து பிறிற்றோ தக்கவர் அல்லர் என்று தமக்குத் தாமே சமாதானப்பட்டனர்
இவ்வாறான வெளிப்பாடுகள் மூலம் விபரிக்கப்படுகிறது.

() இலங்கை அரசியலில் சேர் பொன். இராமநாதன் பெற்றிருந்த முக்கியத்துவம் எவ்வாறு விவரிக்கப்படுகின்றது?

(ஆ). அரை நூற்றாண்டுக்கு மேல் இலங்கைச் சட்டசபையில் ஓர் இலங்கைச் சிவப்பாயிருந்து விளங்கினார் என்று விபரிக்கப்படுகிறது.

G.C.E.O/L- 2021(2022)
01. (ii) "வாதப்பிரதிவாத மின்னல்கள் முழக்கங்கள் நடக்கின்றன."
(
) 'பிரதிவாதம்' என்றால் என்ன?

எதிர்வாதம்
() இதில் இடம்பெற்ற அணி யாது?
உருவக அணி

04. 'நாவலர் எழுந்தார்' என்ற கட்டுரையில்,

() வாதமகாசபையினதும் அங்கு இடம்பெற்ற வாதங்களினதும் சிறப்பு

() வாத மகாசபையின் சிறப்பு

மாபெரும் கூட்டம். முன்பின் காணாத, கேளாத கூட்டம் எனச் சிறப்பிக்கப்படுகின்றமை.

கல்விமான்கள் உள்ளிட்ட பிரபலமானவர்கள் திரள்திரளாக வந்து வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டமை.

பிரசித்தி பெற்ற சட்ட நிபுணர்கள் (யாழ்ப்பாணம், கொழும்பு) கலந்து கொண்டிருக்கின்றமை.

வாதஞ் செய்வதில் சாமர்த்தியவானாகிய வை.விசுவநாதபிள்ளை தலைமை தாங்குகின்றமை.

வாதமில்லாத இடத்திலும் வாதம் வருவிக்கக் கூடியவர்கள் வந்திருந்தமை.

வாதங்களின் சிறப்பு

மின்னல்கள் முழக்கங்கள் போல வாதப்பிரதிவாதங்கள் உக்கிரமாக இருந்தமை.

பிரசண்ட மாருதம் போல வாதங்கள் இருந்தமை.

எதிர்க்கருத்துடையவர்களை வெல்லவென கைவேல், எறிகிறவேல் முதலிய ஆயுதங்களைப் பயன்படுத்துவதைப் போல வாதிட்டமை.

ஆதாரம் காட்டி விவாதிக்கின்றமை (தபால், தந்தி)

() கடும் நோய்க்கு மத்தியிலும் நியாயத்தின்பால் நாவலர் காட்டிய சிரத்தை என்பன விவரிக்கப்பட்டிருக்குமாற்றை விளக்குக?

() நாவலரின் சிரத்தை

மூச்சுவிட முடியாத பேச முடியாத பொல்லாத வருத்தம்.

கடுமையான நோய் நிலையிலும் கூட்டத்திற்கு வருகை தந்திருந்து கூட்டத்தைக் கூர்ந்து நோக்கியமை.

பேசவியலாமல் காசநோயினால் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தாலும் நியாயம் மிக்க கட்சியின் வாதங்கள் சோர்ந்துபோயிருந்த வேளையில் அதற்காகக் குரல் கொடுக்கத் துணிந்தமை.

பிறிற்றோவின் நேர்மையற்ற செயலைக் கண்டிக்கவென வீறுகொண்டு எழுந்தமை.

G.C.E.O/L- 2020
01.(ii) "அது கிடக்க எடுத்துக்கொண்டு வா தபாற்தந்திக் கட்டுக்களை"
(
) இவ்வாறு கூறியவர் யார்?

நாவலர்
(
) அதனை அவர் யாருக்குக் கூறினார்?

விசுவநாதபிள்ளை\ வை.விசுவநாதபிள்ளை

G.C.E.O/L- 2018
3. நாவலர் எழுந்தார் என்ற கட்டுரையில்,

() நாவலரின் ஆளுமையும் நேர்மையும்

. நாவலரது ஆளுமை

தமிழ் மக்களின் தலைமையைத் தெரிவு செய்யக்கூடிய தகுதி.

தமிழ் அறிஞர் குழாத்துக்கு தலைமை தாங்கக் கூடிய தகுதி.

நிலைமையை அனுசரித்து பொருத்தமான இடத்தில் வாதங்களை முன்வைக்கும் திறன்.

அது கிடக்க கொண்டு வா தபாற் தந்திக் கட்டுக்களை)

கம்பீரமான தோற்றம், வீறு கொண்ட பார்வை, எண்ணங்களின் வேகம் - இவற்றை வருணிக்க கம்பர் இல்லை எனக் கட்டுரையாசிரியர் கூறுதல்.

ஒருவர் ஒருவராகவோ இருவராகவோ கூட்டமாகவோ வாதத்துக்கு வரலாம் என நாவலர் அழைத்தல்.

பிரசண்ட மாருதத்திற்குப் பிறகு என்று சொல்லப்படுகின்ற அமைதி சபையில் நிலவியது எனச் சபை நாவலரது செயலால் அடங்கிப் போனமை.

நாவலர் நோய் வாய்ப்பட்டிருந்த போதும் நியாயத்துக்காக வாதிட முற்படும் போது நோயைப்பொருட்படுத்தாமல் வாதிட்டமை.

நேர்மை

பிறிற்றோவின் கபடச் செயலை அனுமதிக்காமை.

பிறிற்றோவைத் தெரிவு செய்தால் அவர் நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கைத் தமக்குச் சாதகமாகத்

திருப்புவார் என்பதை நாவலர் அறிந்தும் அதற்கு உடன்படாமை.

நேர்மையான ஒரு தலைவரே தமக்குத் தேவை என்பதில் உறுதியாக இருத்தல்.

பிறிற்றோ கட்சியினரின் நேர்மையற்ற செயல் நாவலரின் இதயத்தில் பெரு நெருப்பை கொளுத்தி விட்டது' எனக் கட்டுரையாசிரியர் குறிப்பிடல்.

() பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் சம்பவச் சித்திரிப்புத் திறனும் புலப்படுமாற்றை விளக்குக.

. பண்டித மணியின் சம்பவச் சித்திரிப்புத் திறன்

பண்டிதமணி இந்தச் சம்பவம் நடந்தபோது உடனிருக்கவில்லை. செவி வழியாகக் கேட்ட கதையொன்றை நாடக பாணியில் உயிர்த்துடிப்புடன் சித்திரித்தமை.

நாவலரது சுகவீனம் அவரது சோர்வு ஆகியவற்றைச் சித்திரித்த பின் வாதம் தடம் மாறியபோது நாவலர் எழுந்த காட்சியையும் நடந்து சென்ற காட்சியையும் கம்பராமாயணக் காட்சியுடன் ஒப்பிட்டு எழுதியமை.

நாவலர் எழுகின்ற காட்சியைச் சீதையின் சுயம்வரத்தில் வில் முறிக்க இராமன் எழுந்த காட்சியுடன் ஒப்பிடுதல்.

+ம்: "பொழிந்த நெய் யாகுதி வாய்வழி பொங்கி எழுந்த கொழுங்கன லென்ன எழுந்தான்"

- நாவலர் நடந்து சென்ற காட்சியை இராமன் வில்முறிக்க நடந்து சென்ற காட்சியுடன் ஒப்பிடுதல்.

+ம்: "மாக மடங்காலும் மால்விடையும் பொன்

னாகமும் நாகமும் நாண நடந்தார்"

அவரது காசநோயை அருணந்தி சிவாச்சாரியரது வயிற்று வலியுடன் ஒப்பிட்டு எழுதுதல்.

நாவலரது ஆளுமைப் பண்பை வெளிப்படுத்த அவர் பேசியதாகக் கூறும் தொடர்களுக்கு அழுத்தம் கொடுத்தல்

"விலகுபிள்ளை ..

"அதுகிடக்க எடுத்துக்கொண்டு வா தந்தி தபால் கட்டுக்களை"

G.C.E.O/L- 2017

02. (iv). கைவேல் - எறிகிறவேல் - இறகுள்ள அம்பு - இல்லாத அம்பு - வாள் - சக்கரம் - இவற்றிற்கு மேலே தெய்வப்

படைகளிலுங் கைவைக்கின்ற சமயம்; அந்தச் சமயம் பிறிற்றோ கட்சிக்குப் பேச வந்தவர்கள் எல்லோரும்

யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் உள்ள பிரபல வழக்கறிஞர்கள், வாதம் இல்லா இடத்திலும் வாதம்

வருவிக்கக்கூடியவர்கள், நாவலர் அவர்களின் காசம் அவர்களுக்கு எதிர்பாராத அனுகூலம் அளித்தது.

பிறிற்றோவை ஆகாசத்திலே தூக்கிக்கொண்டு போய் வைத்துவிட்டார்கள் அவர்கள். இராமநாதன் கட்சி சோர்ந்து

போய்விட்டது.

() வாதம் உச்சக்கட்டம் அடைந்துவிட்டதை ஆசிரியர் எவ்வாறு விவரிக்கிறார் ?

() வார்த்தைப் பிரயோகங்களை ஆயுதங்களுக்கு (கைவேல், எறிகிற வேல், இறகுள்ள அம்பு, வாள். , சக்கரம்) ஒப்பிட்டு இவற்றுக்கு மேலே தெய்வப் படைகளிலும் கைவைக்கிற சமயம் என விவரிக்கிறார். பிரிற்றோவின் கட்சியின் வாதங்கள் உச்சத்துக்கு வந்துவிட்டதாகவும், இராமநாதன் கட்சி சோர்ந்து போய்விட்டது என்றும் குறிப்பிடுவதன் மூலம்.

() 'வாதம் இல்லா இடத்திலும் வாதம் வருவிக்கக்கூடியவர்கள்' என்பதன் மூலம் உணர்த்தப்படுவது யாது ?
விவாதிக்கக் கூடிய விடயம் இல்லாவிட்டாலும் அதனை ஒரு விவாதமாக வாதிடுவார்கள்.\ வாதத்தில் வல்லவர்கள்,வாதம் இல்லாத இடத்திலும் வாதிப்பவர்.

G.C.E.O/L- 2016

01. (i) "விலகு பிள்ளை ... அது கிடக்க எடுத்துக் கொண்டு வா, தந்தி தபாற் கட்டுகளை."

() இக்கூற்றைக் கூறியவர் யார் ?

ஆறுமுகநாவலர்\ நாவலர்

() 'பிள்ளை' என்று இங்கே குறிப்பிடப்படுபவரின் முழுப்பெயர் யாது ?

விஸ்வநாதபிள்ளை

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக