டெங்குக் காய்ச்சல்
மூளைக் காய்ச்சலைப் போன்று நுளம்புகளால் (கொசுக்களால்) பரவும் மற்றொரு காய்ச்சல் டெங்குக் காய்ச்சல் ஆகும்.
இது குழந்தைகள், சிறுவர்கள் ஆகியோருக்கே அதிகம் ஏற்படுகின்றது.
டெங்கு (Dengue) என்ற வைரஸ் கிருமிகள் குழந்தைகளைப் பாதிக்கும்போது டெங்குக் காய்ச்சல் வருகின்றது.
ஏதாவது ஒரு வகை வைரஸ் மனிதனைத் தாக்கினாலே டெங்குக் காய்ச்சல் பரவிவிடும்.
டெங்கு கிருமிகள் ஏடிஸ் இஜிப்டி (Aedes aegypti) என்ற நுளம்புகள் மூலமே பரவுகின்றன.
டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் நுளம்புகள் உருவாகும், வாழும் இடங்களாக தண்ணீர்த் தொட்டிகள், குளியலறை, உடைந்த ஓடுகள், சட்டிகள், தகரப் பேணிகள், தேங்காய்ச் சிரட்டைகள், டயர்கள் போன்றவற்றில் மிகுதியாகக் குடியிருக்கின்றன.
இந்நுளம்புகள் பகலில் மட்டுமே மனிதனைக் கடிக்கும்.
டெங்குக் காய்ச்சலின் அறிகுறியாக பின்வருவனதென்படும்.
1. திடீரென்று 104 F வரை காய்ச்சல் கொதிக்கும்.
2. நெற்றியில் பொறுக்கமுடியாத வலி, தலைவலி, மூட்டுவலி ஏற்படும்.
3. உடல்வலி பொறுக்கமுடியாதிருக்கும்.
4. உடலில் சிவப்புநிறத் தடிப்புகள் தென்படும்.
5. பல் ஈறுகளில் இரத்தம் கசியும். மூக்கிலிருந்து இரத்தம் கொட்டும். வாந்தி, மலம், சிறுநீர் என்பவற்றில் இரத்தம் கலந்து வெளியேறும்.
இந்த அறிகுறிகள் தென்பட்டால் சீக்கிரத்தில் மரணம் ஏற்படும்.
* சிலரிற்கு எந்த அறிகுறியும் தெரியாமல் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு திடீரென்று ஓர் அதிர்ச்சிநிலை தோன்றி கை, கால் குளிர்ந்துவிடும். மூச்சிறைப்பு ஏற்படும். இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, வெகுவாகக் குறைந்து சுயநினைவை இழந்துவிடும். மரணத்தையும் தழுவும்.
டெங்குக் காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான முறைகள்
1. நுளம்புக் கடியைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்தல் வேண்டும்.
2. வீட்டிலும் சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
3. நுளம்பு மருந்து தெளித்தல், உறங்கும்போது குழந்தையின் உடம்பு முழுவதும் உடைகளால் மூடி விடுதல்வேண்டும்.
4. நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக வைத்தியரை நாடவேண்டும்.
5. சுற்றுப் புறச் சூழலுக்கு மருந்து தெளிக்கவேண்டும். செடிகொடிகளுக்கு மத்தியில், கானுக்குள், பூச்சாடி, நீர்தேங்கி நிற்குமிடம்
* நுளம்பைக் கட்டுப்படுத்தும் முறைகள்
* நீரை நிரப்புவதன் மூலமும் நீரை வடிய விடுவதன் மூலமும் நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அகற்றலாம்.
தேவையற்ற தகரங்கள், டயர்கள், வெற்றுப்பேணிகள் மழைநீர் தேங்குபவற்றை அகற்றல்.
மழைநீர் வடிவதற்கு சிறந்த வாய்க்கால் வரைகளை அமைத்தலும் அவற்றை பராமரித்தலும்.
- பூச்சாடிகளைச் சுத்தம்செய்து நீரை மாற்றுதல்.
நீர்நிலைகளில் ஆலோசனைகளுக்கேற்ப இரசாயனப் பொருட்களைப் பாவித்தல்.
சுகாதாரப் பகுதியினரின் ஆலோசனைகளை நாடல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக