1.12.25

A/L, இலக்கணம் சுருக்க வினாவிடை - 10

இலக்கணம்

சுருக்க வினாவிடை - 10

01. செய்வினை, செயப்பாட்டு வினைகளுக்கு உதாரணம் தந்து விளக்குக?

எழுவாயைக் கருத்தாவாகக் கொண்ட வினைகள் செய்வினைகள ஆகும். அதாவது எழுவாய் வேற்றுமையாகவுள்ள பெயர்ச் சொல் ஒரு வாக்கியத்தின் வினைச் சொல்லுக்குரிய கருத்தாவாக அமைவது செய்வினை ஆகும்.

+ம் :- அவன் புத்தகம் வாசித்தான்.

செயப்படுபொருளை எழுவாயாகக் கொண்ட வினைகள் செயப்பாட்டு வினைகள் ஆகும். அதாவது வாக்கியத்தின் எழுவாயும் அவ் வாக்கியத்தின் வினைமுற்றால் உணர்த்தப்படும் செயலின் கருத்தாவும் வேறுவேறாக அமைவது செயப்பாட்டு வினை ஆகும்.

+ம் :- திருக்குறள் திருவள்ளுவரால் எழுதப்பட்டது.

 

02. காரணப்பெயர், காரணஇடுகுறிப்பெயர்களை உதாரணம் தந்து விளக்குக?

யாதாயினும் ஒரு காரணங்கருதிப் பொருளை உணர்த்தி வருவது காரணப்பெயர் ஆகும்.

+ம் :- அணி

காரணங்கருதிய பொழுது காரணப் பெயராகவும் அக் காரணங்கருதாத பொழுது இடுகுறிப் பெயராகவும் நின்று பொருளை உணர்த்தி வருவது காரணஇடுகுறிப்பெயர் ஆகும்.

+ம் :- நாற்காலி

 

03.தற்பவம், தற்சமம் என்பவற்றை உதாரணம் தந்து விளக்குக?

ஆரிய மொழிக்குச் சிறப்பான எழுத்துக்களை உடைய சொற்கள், தமிழ் ஒலி மரபுக்கு ஏற்றவாறு விகாரம் பெற்று வழங்கி வருவது தற்பவம் ஆகும்.

+ம் நாகரிகம், பாவம், சூது

ஆரியச் சொற்கள் ஒலி மாறுபாடின்றித் தமிழில் வழங்கி வருவது தற்சமம் ஆகும்.

உ+ம் :- கமலம், குங்குமம், காரணம்.

 

04. சார்பெழுத்துக்கள் என்றால் என்ன?

சார்பெழுத்துக்களானவை தனித்தனியாகவன்றி முதல் எழுத்துக்களைச் சார்ந்து நின்று இயங்குபவை. இவை பத்து வகைப்படும். அவை: உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம். இவற்றின் தொகை 369 ஆகும்.

 

05. அளபெடை என்றால் என்ன? உதாரணம் தந்து விளக்குக?

எழுத்துக்கள் தமது மாத்திரையில் நின்றும் நீண்டு ஒலிப்பது அளபெடை ஆகும். இது இரு வகைப்படும்.

1. உயிரளபெடை :உயிரெழுத்துக்களில், நெட்டெழுத்துக்கள் ஏழும்

தமக்குரிய மாத்திரையினின்றும் நீண்டொலிப்பது உயிரளபெடை ஆகும். அளபெடுப்பதற்கு அடையாளமாக அவ்வெழுத்தின் இனக்குற்றெழுத்து அதன் அருகில் எழுதப்படும். இதன் மாத்திரை குறைந்தது 3 ஆகும். இவை சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் அளபெடுக்கும்.

உ+ம் :- ஓஒதல் வேண்டும் சொல்லின் முதல்

தொழாஅள் சொல்லின் இடை

தழீஇ சொல்லின் இறுதி

உலகியல் வழக்கில் புலம்புதல், கூவியழைத்தல், பாடுதல் முதலான செயற்பாடுகளின் போதும், செய்யுளின் ஓசை குறைந்தவிடத்து அதனை நிறைவு செய்யும் பொருட்டும் இவை நீண்டொலிக்கும்.

2. ஒற்றளபெடை:- மெய்யெழுத்துக்களில் மெல்லின எழுத்துக்கள் ஆறும், ர்,ழ் தவிர்ந்த இடையின எழுத்துக்கள் நான்கும், ஆய்த எழுத்துமாகிய பதினொரு எழுத்துக்களும் தமக்குரிய மாத்திரையினின்றும் நீண்டு ஒலிப்பது ஒற்றளபெடை ஆகும். அளபெடுப்பதற்கு அடையாளமாக அதே ஒற்றெழுத்து அதன் அருகில் எழுதபப்படும். இதன் மாத்திரை 1 ஆகும். இவை சொல்லின் இடையிலும், இறுதியிலும் அளபெடுக்கும்.

உ+ம் - இலங்ங்கு சொல்லின் இடை திரள்ள் சொல்லின் இறுதி

 

06. குற்றியலுகரம் என்றால் என்ன? அவற்றின் வகைக்கு உதாரணம் தருக?

தனிக்குற்றல்லாத ஏனைய எழுத்துக்களின் பின்னே வல்லின மெய்களில் ஏறி வரும் உகரம் குற்றியலுகரம் ஆகும். உகரம் தன்னுடைய ஒரு மாத்திரையினின்று அரையளவு குறைந்தொலித்தலாகும். இதன் மாத்திரை அரை ஆகும். இது 6 வகைப்படும்.

1. வன்றொடர்க் குற்றியலுகரம்

உ+ம் :- பாக்கு, வாத்து

2. மென்றொடர்க் குற்றியலுகரம்

உ + ம் :- நண்டு, அன்பு

3. இடைத்தொடர்க் குற்றியலுகரம்

உ+ ம் :- சால்பு, கொய்து

4. நெடிற்றொடர்க் குற்றியலுகரம்

உ+ம் :- ஆடு, காது

5. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

a + w = mog * 4 பலாசு

6. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

உ + ம் :- எஃகு, அஃது

 

07. ஐகாரக் குறுக்கம், ஒளகாரக்குறுக்கம் என்பவற்றை உதாரணம் தந்து விளக்குக?

ஐகாரம் தனக் குரிய மாத் திரையினின்றும் குறைந்தொலிப்பது ஐகாரக் குறுக்கம் ஆகும். இதன் மாத்திரை 1 ஆகும். ஐகாரம் தனியெழுத்தாகவோ ஓரெழுத்தொரு மொழியாகவோ வரும் போது குறுகாது. இது சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் வரும்.

உ+ம் :-

ஐயர் சொல்லின் முதல்

கலைஞர் சொல்லின் இடை

பனை சொல்லின் இறுதி

ஒளகாரம் தன் மாத்திரையினின்றம் அரையளவு குறைந்தொலிப்பது ஔகாரக்குறுக்கம் ஆகும். இதற்குரிய மாத்திரை ஒன்று ஆகும். ஒளகாரம் தனித்தொலிக்கும் போது குறுகாது. இது சொல்லின் முதலில் வரும்.

உ+ம் :- வெளவால் சொல்லின் முதல்

 

08. மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பவற்றை உதாரணம் தந்து விளக்குக?

மகரம் தனக்குரிய மாத்திரையினின்றும் அரையளவு குறைந்தொலிப்பது மகரக்குறுக்கம் ஆகும். இதன் மாத்திரை 1/4 ஆகும். இது சொல்லின் இடை, இறுதியாகிய இடங்களில் வரும்.

உ+ ம் :- மருணம்

சொல்லின் இறுதி

தரும்வளவன் சொல்லின் இடை

ஆயுதம் தனக்குரிய மாத்திரையினின்றும் அரையளவு குறைந்தொலிப்பது ஆய்தக்குறுக்கம் ஆகும். இதன் மாத்திரை 1/4 ஆகும். சொற்புணர்ச்சியின் போது லகர, ளகர ஈற்றுச் சொற்களின் முன் தகரம் வரின் லகர, ளகர ஈறுகள் ஆய்தமாகத் திரியும். அவ்வாறு திரியும் போது அவை தம் மாத்திரையினின்றும் குறுகியொலிக்கும். இவை சொல்லின் இடையில் வரும்.

உ+ம் :-

அல் + திணை = அஃறிணை

 

09. முதனிலை, இறுதிநிலை எழுத்துக்களை விளக்குக?

சொல்லின் முதலில் வரும் எழுத்துக்கள் முதனிலை எழுத்துக்கள் ஆகும்.

12 உயிர் எழுத்துக்களும் சொல்லின் முதலில் வரும்.

உ+ம் :- அம்மா, ஆடு, இலை..

வல்லின மெய்களில் க்,ச்,த்,ப் எனும் 4 மெய்களும் 12 உயிர்களுடன் சேர்ந்து சொல்லின் முதலில் வரும்.

+ம் :-

கல்வி, கால், கிளி....

சட்டை, சாதம், சிலை..

தடி, தாளம், திரி..

பட்டம், பாடம், பிடி.

மெல்லின மெய்களில் ந்ம் ஆகிய இரண்டும் 12 உயிர்களுடன் சேர்ந்து சொல்லின் முதலில் வரும்.

+ ம்

:- நன்றி, நாள், நிலம்..............

மதம், மாதம் , மிளகு...

இடையின மெய்களில் ய் ஆகிய நான்கும் தவிர்ந்த உயிர்களுடன் சேர்ந்து மொழி முதலில் வரும்.

+ ம் :- யவனர், யாது, யுகம்............

சொல்லின் இறுதியில் வரும் எழுத்துக்கள் இறுதிநிலை எழுத்துக்கள் ஆகும்.

உயிர் எழுத்துக்களில் எகரம் தவிர்ந்த 11 எழுத்துக்களும் சொல்லின் இறுதியில்வரும்.

+ ம் :- பல, பலா, கிளி

மெய் எழுத்துக்களில் ஞ்,ண்,ந்,ம்,ன்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள் ஆகிய 11 எழுத்துக்களும் மொழிக்கு இறுதியில் வரும்.

+ம் உரிஞ், மண், வெரிந்

 

10. இடைநிலை மெய்ம்மயக்கம் என்றால் என்ன? உதாரணம் தந்து விளக்குக?

சொற்களின் இடையில் வரும் மெய் எழுத்துக்கள் தம்மொடு தாமும் தம்மொடு பிறவும் மயங்கி வருதல் இடைநிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.

தம்மொடு தாம் மயங்கி வருவது உடனிலை மெய்ம்மயக்கமாக வரும்.

+ ம் :- பக்கம், சத்தம், அச்சம், கப்பம்

தம்மொடு பிற மெய்கள் மயங்கி வருதல் வேற்றுநிலை மெய்ம்மயக்கம் ஆக வரும்.

+ம் :- சோர்வு, காழ்ப்பு

க்,ச்,த்,ப்,ர்,ழ் தவிர்ந்த ஏனைய 12 மெய்களும் உடனிலை மெயம்மயக்கமாகவும் வேற்றுநிலை மெய்ம்மயக்கமாகவும் வரும்.

+ம் :- பெண்மை, தண்ணீர்

பொய்மை, பொய்யன்

தெவ்வர், தெவ்யாது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக