11.9.25

A/L சங்க கால அகத்திணை பண்பு

சங்க கால அகத்திணை இலக்கியங்களில் தனித்துவமான பண்புகளைக் குறிப்பிடுக?

 

  மனமொத்த காதலர் இருவர் தமக்குள் துய்த்த இன்பம் இத்தன்மையானது என வெளிப்படுத்த முடியாத அகவயமான உணர்வு அகம் எனப்படும்.

  அது ஏழு வகையான இயல்புடையது.

  அன்பின் ஐந்திணை - அன்புடைக் காமமாகிய தூய காதலொழுக்கம்.

  கைக்கிளை - ஒரு தலைக்காதல்

  பெருந்திணை - பொருந்தாக் காமம்

  "மக்கள் நுதலிய அகனைந்திணையும் சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார்" என்ற வரையறைக் கட்டுப்பாட்டினை உடையது.

  முதல், கரு, உரி என்ற புலநெறி வழக்கு பின்பற்றப்பட்டது.

  நாடக வழக்கினையும் உலகியல் வழக்கினையும் அடிப்படையாகக் கொண்டிருந்தமையால் பாத்திரக் கூற்றுக்காளாக அமைந்திருந்தன.

  குறிப்பாகப் பொருள் உணர்த்தும் உள்ளுறை உவமம் இறைச்சிப் பொருளைக் கொண்டிருந்தன.

  ஓர் ஒழுக்கம் ஒரு தனிச் செய்யுளில் கூறப்பட்டிருக்கும்.

  அகத்திணைப் பாடல்கள் யாவும் அகவற்பாவினால் ஆக்கப்பட்டன.

  பிறமொழிக் கலப்பற்ற தூய தமிழ்ச் சொற்களினாலான இறுக்கமான மொழிநடையில் அமைந்துள்ளது.

  சுருங்கிய சொல்லினால் விரிந்த பொருளை உரைக்கும் இயல்பு காணப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக