குறுவினா விடை
1. முதல் எழுத்துக்களை வகைப்படுத்தி விளக்குக?
முதலெழுத்துக்கள் உயிர் எழுத்து, மெய்யெழுத்து என இரு வகைப்படும். தமிழில் 12 உயிர்எழுத்துக்களும் 18 மெய் எழுத்துக்களும் காணப்படுகின்றன. உச்சரிக்கும் கால அளவைப் பொறுத்து உயிர் எழுத்துக்களை,
குறில் அ, இ, உ, எ, ஒ
நெடில் அ. ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என வகைப்படுத்துவர்.
உச்சரிப்பு முறை கருதி மெய்யெழுத்துக்களைப் பிரிக்கும் விதம்.
வல்லினம் க், ச், ட், த், ப், ற்
மெல்லினம் - ங், ஞ், ண், ந், ம், ன்
இடையினம் - ய், ர், ல், வ், ள், ழ் என வகைப்படுத்துவர்.
உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் தனித்தியங்கும் தன்மை உடையன என்பதால் இவற்றை முதலெழுத்துக்கள் எனலாம்.
2. சார்பெழுத்து என்றால் என்ன என்பதற்கு உதாரணம் தந்து சுருக்கமாக விளக்குக?
முதலெழுத்துக்களைச் சார்ந்து நின்று இயங்குபவை சார்பெழுத்துக்களாகும்.
உயிர், மெய்கள், ஆய்தம் என்பன முதலெழுத்துக்களில் சில சொற்களில் அமையும் பொழுது தமக்குரிய ஒலிப்பு அளவில் ஒலிக்காது, சிறிது வேறுபட்டு ஒலிக்கின்றதாக அமைந்தவையும் சார்பெழுத்துக்களாகக் கொள்ளப்படுகின்றன.
சார்பெழுத்துக்கள் பத்து வகைப்படும்
1. உயிரளபெடை
2. ஒற்றளபெடை
3. ஆய்தம்
4. குற்றியலுகரம்
5. குற்றியலிகரம்
6. அகாரக்குறுக்கம்
7. ஔகாரக் குறுக்கம்
8. மகரக் குறுக்கம்
9. ஆய்தக் குறுக்கம்
10. உயிர்மெய்
3. குற்றியலுகரம் பற்றி சுருக்கமாக விளக்குக?
உகரத்துக்குரிய மாத்திரை அளவு ஒன்று. ஆனால் உகரம் சில இடங்களில் தன் மாத்திரை அளவினின்றும் குறைந்தொலிக்கும். அத்தகைய உகரம் குற்றியலுகரம் அ.கும். தனிக்குற்றெழுத்தல்லாத ஏனைய எழுத்துக்களின் பின்னே சொல்லின் இறுதியில் வல்லின மெய்யின் மேல் உகரம் ஏறி வருவது குற்றியலுகரம் என்பர்.
குற்றியலுகரத்தின் அயல் எழுத்தை அடிப்படையாகக் கொண்டு ஆறாக வகைப்படுத்துவர்.
1. வன்தொடர்க் குற்றியலுகரம் - பத்து
2 மென்தொடர்க் குற்றியலுகரம் - பஞ்சு
3. இடைத்தொடர்க் குற்றியலுகரம் - வெய்து
4. நெடிற்றொடர்க் குற்றியலுகரம் - நாடு
5. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் - பசு
6. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் - எஃகு
4. அளபெடை பற்றி விளக்கி, அதன் தற்காலப் பயன்பாடு பற்றிக் குறிப்பிடுக.
அளபெடை என்பது அளபெடுத்தல் ஆகும்.
எழுத்து நீண்டொலித்தல் ஆகும்.
நெட்டெழுத்துக்கள் ஏழும் தமக்குரிய மாத்திரையினின்றும் நீண்டொலித்தல் உயிரளபெடை எனப்படும்.
அளபெடுத்தற்கு அடையாளமாக அதனதன் இனக்குற்றெழுத்து அதனதன் பக்கத்தில் எழுதப்படும்.
சொல்லின் முதல், இடை, இறுதி நிலைகளில் நீண்டொலிக்கும்.
உ-ம் ஓஒதல் வேண்டும்
தெய்வம் தொழாஅ
சொல்லின் முதல்
நசைஇ
சொல்லின் இடை
சொல்லின் இறுதி
செய்யுளில் ஓசை குறையுமிடத்து, மெல்லின எழுத்துக்கள் ஆறும், ஈ, ழ் தவிர்ந்த நான்கு இடையின எழுத்துக்களும் ஆய்த எழுத்துமாகப் பதினொரு எழுத்துக்களும் தமக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டொலித்தல் ஒற்றளபெடை எனப்படும்.
நீண்டொலித்தற்கு அடையாளமாக அதே மெய் அதன் பக்கத்தில் எழுதப்படும்.
உ-ம் : திரள்ள சேனை
. தற்காலத் தமிழில் அளபெடையை யாரும் பயன்படுத்துவதில்லை.
5. இடைநிலை மெய்ம்மயக்கம் பற்றிச் சுருக்கமாக விளக்குக?
மெய்யெழுத்துக்கள் இரட்டித்து அல்லது பிற மெய்களுடன் இணைந்து சொல் இடையில் வருவது இடைநிலை மெய்ம்மயக்கம் ஆகும்.
1. உடநிலை மெய்ம்மயக்கம் சொல்லிடையில் ஒரே மெய் இரட்டித்து வருவது (மன்னன்)
2. வேற்றுநிலை மெய்ம்மயக்கம் வருவது. உ-ம் அன்பு சொல்லிடையில் வெவ்வேறு மெய்கள் இணைந்து ன், ப் உடன் மயங்கும்.
6. தற்காலத்தமிழில் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பற்றி கருத்துரை வழங்குக?
வடமொழிக் கலப்பினால் தமிழில் புகுந்த எழுத்துக்கள் (ஜ. ஜ. ஸ, ஹ, க்ஷ)
தற்காலத் தமிழில் சில கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பிறமொழிப் பெயர்களைத் தமிழில் எழுதுவதற்கு இவ் எழுத்துக்கள் அவசியமாகின்றன.
ஸ்ரீ, ஈக்ஷ ஆகிய கிரந்த எழுத்துக்கள் அரிதாகத் தற்காலத்தில் தமிழில் வழங்கப்படுகின்றன.
7. பகாப்பதம், பகுபதம் பற்றித் தெளிவுபடுத்துக?
பகுதி, விகுதி முதலான உறுப்புக்களாகப் பகுக்க முடியாத சொல் பகாப்பதம் எனப்படும்.
பெயர் இலங்கை
வினை நட
இடை கொல்
உரி நனி என்னும் நால்வகைச் சொற்களிலும் பகாப்பதங்கள் உள்ளன.
பொருள் தரக்கூடிய உறுப்புகளாகப் பிரிக்கக் கூடிய சொற்கள் பகுபதம் எனப்படும்.
பெயர்ப்பகுபதம் அறிஞன்
வினைப்பகுபதம் உண்டான் எனும் இருவகைப் பகுபதங்கள் அமையும்.
ஒரு பகுபதத்தில் குறைந்த பட்சம் இரண்டு கூறுகளாவது இருத்தல் வேண்டும்.
கூடும்:- கூடு + உம்
பகுதி விகுதி
8. பகுபத உறுப்பான பகுதி பற்றி விளக்குக.
பகுபதத்தின் அடிச்சொல்லையே பகுதி என்பர்.
தெரிநிலைப் பகுபதங்களுக்குப் பெரும்பாலும் வினைச்சொற்களும், சிறுபான்மை பெயர்ச்சொல், இடைச்சொல், உரிச்சொற்கள் பகுதியாக வரும்.
படித்தான் பகுதி படி (வினையடி)
சித்திரித்தான் பகுதி சித்திரம் (பெயரடி)
போன்றான் பகுதி -போல்
சான்றாள்
பகுதி - சால்
* தெரிநிலை வினைப்பகுதிகள் எப்போதும் ஏவல் வடிவிலேயே அமையும்.
இரண்டு சொற்களாலான தனிச்சொல்லாக இயங்கும் பகுதிகளை கூட்டுப்பகுதி என்பர். (குருவிக்கூடு)
9. பெயர் இடைநிலை பற்றி விளக்குக?
பெயர் இடைநிலைகள் மிகச் சிறுபான்மை வழக்காகும்.
இவ இடைநிலைகள் காலம் காட்டுவதில்லை
கவிஞன் : கவி பகுதி, ஞ் இடைநிலை, அன் விகுதி
10. வினை இடைநிலைகளின் பயன்பாட்டை விளக்குக?
ஒரு வினைப்பகுபதத்தின் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து காலம் உணர்த்தும் உறுப்பு வினை இடைநிலை எனப்படும்.
இறந்தகால இடைநிலை, நிகழ்கால இடைநிலை, எதிர்கால இடைநிலை என மூன்று வகைப்படும்.
நிகழ்கால இடைநிலைகள் அ.நின்று, கின்று, கிறு
உ-ம்: நடக்கிறான் நட + கிறு+ ஆன்
இறந்தகால இடைநிலைகள் த், ட், ற்,இன், ன், இ
உ-ம் : போ - ன் + ஆன் போனாள்
எதிர்கால இடைநிலைகள் -ப், வ்
நடப்பான். உ-ம் : நட + ப் + ஆன்
வருவான். வா + வ் + ஆன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக