பத்திரிகைக்கு கடிதம் எழுதுதல்
தரம்:-10 &11
உமது பாடசாலையின் விளையாட்டுக் குழுவின் செயலாளராக உம்மைக் கருதிக் கொண்டு. உமது பாடசாலையில் நடைபெறவிருக்கும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி தொடர்பான செய்திகளைப் பிரசுரிப்பதற்காகப் பின்வரும் அம்சங்களைக் கருத்திற் கொண்டு 100 சொற்களில் பத்திரிகைச் செய்தி ஒன்று எழுதுக.
* பாடசாலையின் பெயர்
இல்லங்கள் பற்றிய விபரங்கள்
காலமும் நேரமும்
பிரதம அதிதி, சிறப்பு அதிதிகள்
நிகழ்ச்சிகள்
அனுசரணையாளர்கள் (15 புள்ளிகள்)
பத்திரிகைச் செய்தி
அமைப்பு
கவர்ச்சியான தலைப்பு
விடயத் தொடர்ச்சி
பந்தியமைப்பு
முடிப்பு
உள்ளடக்கம்
பாடசாலையின் பெயர்
காலமும் நேரமும்
பிரதம அதிதி, சிறப்பு அதிதிகள்
அனுசரணையாளர்கள்
மொழிநடை
பொருத்தமான மொழிநடை
வழுக்கள் இன்மை
இல்லங்கள் பற்றிய விபரங்கள்
தலைமை
நிகழ்ச்சிகள்
நிறுத்தக்குறிப் பிரயோகம்
சுட்டிப்பாகக் கூறுதல்
க.பொ.த (சாதாரண தரப்) பரீட்சை தமிழ் மொழியும் இலக்கியமும் 2016
சி.குமரன்
விளையாட்டுக் குழு செயலாளர்,
தமிழ் மகா வித்தியாலயம்,
திருநகர்.
10.12.2016.
பிரதம ஆசிரியர்,
மணிக்குரல் பத்திரிகை,
கொழும்பு.
திருநகர் தமிழ் மஹா வித்தியாலயத்தில் நடைபெறவிருக்கும் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
எமது பாடசாலையான திருநகர் தமிழ் மஹா வித்தியாலயத்தில் எதிர்வரும் 30ம் திகதி தை மாதம் 2017ல் பிற்பகல் 4.00 மணியளவில் வருடாந்த இல்ல விளையாட்டுபோட்டிகள் நடைபெறவுள்ளன. இதன் போது பிரதம அதிதியாக ப.கதிரேசன் (விளையாட்டுத்துறை அமைச்சர்) அவர்களும், சிறப்பு அதிதியாக சி.பார்த்தசாரதி (திருநகர் தமிழ் மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபர்) அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். இவ்விளையாட்டுப் போட்டியில் செவ்வரத்தை, மல்லிகை, முல்லை மற்றும் ரோசா ஆகிய இல்லங்கள் பங்குபற்றவுள்ளன. விளையாட்டுப் போட்டியில் முதலாவதாக அணிநடையும் பின்னர் ஓட்டப்போட்டிகள், சட்டவேலியோட்டம் என்பனவும் நடைபெறவுள்ளன. இவ் விளையாட்டுப் போட்டிக்கு திருநகர் புத்தகசாலை, கலைமகள் தொலைக்காட்சி நிறுவனம், மணிக்குரல் பத்திரிகை என்பன அனுசரணையாளர்களாகத் திகழ்கின்றனர்.
நன்றி
இங்ஙனம்
செயலாளர் விளையாட்டுக் குழு.
திருநகர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக