கடிதம் எழுதுதல் -01
க.பொ.த (சாதாரண தரப்) பரீட்சை தமிழ் மொழியும் இலக்கியமும் G.C.E O/L- 2016/11/5
உமது கிராமத்தில் பெரும்பாலானவர்கள் வறியவர்கள். பாடசாலை நேரம் தவிர பிள்ளைகள் படிப்பதற்கு வீடுகளில் வசதியான சூழல் இல்லை. வறிய மாணவர்கள் சுயமாகக் கற்பதற்கு வாய்ப்பான படிப்பகம் ஒன்றை உமது ஊரில் நிறுவுவது நல்லதென்று கருதுகிறீர். அதை நிறுவித் தருமாறு கேட்டு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் தலைவருக்கு 100 சொற்களின் ஒரு கடிதம் எழுதுக.
அமைப்பு
முகவரி உள் முகவரி
விளிப்பு - தலைப்பு
முடிப்பு - ஒப்பம்
உள்ளடக்கம்:
குறைபாடுகள்
கிராமத்தின் வறிய நிலைமை
வீட்டில் கற்பதற்கேற்ற சூழல் இல்லாமை
கற்பதற்கான பொது வசதிகள் எங்கும் இல்லாமை
குறைபாட்டுக்கான தீர்வு
படிப்பகம் ஒன்றை கிராமத்திற்குப் பொதுவாக அமைத்தல்
மொழிநடை:
பொருத்தமான மொழிநடை
சுட்டிப்பாகக் கூறுதல்
வழுக்கள் இன்மை
கடிதம் எழுதுதல் புள்ளித்திட்டம்
அமைப்பு - 05
(முகவரி -01, உள் முகவரி -01, விளிப்பு 01, தலைப்பு 01, பதவி, ஒப்பம் 01)
உள்ளடக்கம் - 07
மொழிநடை - 03

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக