1.12.25

G.C.E. O/L- 2024(2025), தொழில்முறைக் கடிதம்- 01

G.C.E. O/L- 2024(2025)

05. தொடர்ந்து பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாலையூர் பிரதேச விவசாய நிலங்கள் பல, பாதிப்புக்குள்ளாயின. அதனால் நட்டமடைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, பாலையூர் விவசாயக் கழகச் செயலாளர் எம். எம். கமால் என உம்மைக் கருதி, அப்பிரதேச இடர் முகாமைத்துவ நிலையப் பணிப்பாளருக்கு 100 சொற்களில் கடிதம் ஒன்று எழுதுக.

செயலாளர்

எம். எம். கமால்,

விவசாயக் கழகம்,

பாலையூர்.

06.04.2025.


இடர் முகாமைத்துவ நிலையப் பணிப்பாளர்,

பாலையூர்.

கனம் ஐயா / அம்மணி,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கோரல்

எமது பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வந்த அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாலையூர் பிரதேசத்தின் விவசாய நிலங்கள் பாரியளவிலான சேதத்திற்கு உள்ளாகி உள்ளதை காணக்கூடியதாக உள்ளது. தொடர் மழையினால் விவசாய நிலங்களில் அறுவடைக்காக சில மாதங்கள் இருந்த நிலையில் நெற்பயிர்கள், அடித்து செல்லப்பட்டமையால் விவசாய பெருங்குடிகள் பாரிய நட்டமடைந்துள்ளனர். இதனால் பிரதேச மக்கள் பாரிய அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதுமட்டுமல்லாது நிலங்களில் இன்னும் நீர் வழிந்தோடாமையால் நிலங்கள் தொடர்ந்தும் சேதத்துக்குள்ளாகி வருகிறது. நீர் வழிந்தோட வழி செய்து தருமாறும் இந்த நிலைமையை சரிசெய்ய தாங்கள் உரிய நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் பிரதேச விவசாயக் கழகச் செயலாளர் என்ற ரீதியில் அதை வலியுறுத்த கடமைப்பட்டிருக்கின்றேன்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் அவரவர் நிலங்களை மதிப்பீடு செய்து நிவாரணம் வழங்குமாறும், விவசாயிகள் எமது நாட்டிற்கு முக்கியம் என்பதை உணர்ந்து, தகுந்த நிவாரண மானியங்களை வழங்கி பெருங்குடிகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். திருத்த பணிகளின்போது எம்மால் முடிந்த ஒத்துழைப்பை தாங்களுக்கு வழங்க காத்திருப்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி

இங்ஙனம்,

செயலாளர்,

எம். எம். கமால்,

விவசாயக் கழகம்,

பாலையூர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக