முதனிலை எழுத்து
மொழிக்கு முதலில் நிற்கும் எழுத்துகள் முதனிலை எழுத்துக்கள் எனப்படும்.
பன்னிரண்டு உயிரெழுத்துகளும், உயிரேறிய க, ச, த, ந, ப, ம, ய, வ, ஞ என்னும் ஒன்பது மெய்யெழுத்துகளும், மற்றவை மொழிக்கு முதலில் வரும்.
01. உயிரெழுத்துக்கள் மொழிக்கு முதலில் வருதல்
உ+ம் -
அணி, ஆடை, இலை, ஈட்டி, உரல்,
ஊர்தி, எழு, ஏணி, ஐயம்,
ஒளி, ஓடு, ஒளவை.
க வரியில்
உ+ம் - கனி, காளி,
கிளி, கீரை,
குளிர், கூடு,
கெண்டை, கேள்வி, கை, கொண்டு, கோடை,
கௌமாரம்.
ச வரியில்
உ+ம் - சட்டி, சாந்து, சினம், சீர்,
சுக்கு, சூரை,
செக்கு, சேவல், சைவம், சொத்து, சோறு,
த வரியில்
உ+ம் - தடி, தார்,
திரை, தீமை,
துளை, தூசு,
தெளிவு, தேடல், தையல், தொண்டு, தோடு,
தௌவை.
ந வரியில்
உ+ம் - நஞ்சு, நாரி,
நிலம், நீறு,
நுகம், நூல்,
நெல், நேர்மை, நைதல், நொண்டி, நோய்,
நௌவி.
ப வரியில்
உ+ம் - பந்து, பால்,
பிட்டு, பீடு,
புள், பூண்டு, பை, பெருமை, பேடு,
பௌத்தம் .
ம வரியில்
உ+ம் - மனை, மாடு,
மின்னல், மீன்,
முள், மூட்டை, மெய்மை, மேடு,
மையல், மொட்டு, மோனை,
மௌனம்
வகரமெய்
வகரமெய் அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள என்னும் எட்டுயிரோடு, மொழிக்கு முதலாகி வரும்.
உ+ம்- வளி, வாளி, விளி, வீடு, வெண்மை, வேலை, வையம், வெளவால்.
யகரமெய்
யகரமெய் ஆகாரத்தை கொண்டே பெரும்பாலும் முதலாகி வரும்.
உ+ம் - யாழ், யாறு, யாது, யாக்கை, யானை.
ஆயினும் யகரமெய், அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள என்னும் ஆறுயிரோடு, மொழிக்கு முதலாகிவரும் என்பது நன்னூல்.
ஞகரமெய்
ஞகரமெய், அ, ஆ, எ, ஒ, என்னும் நான்குயிரோடு மொழிக்கு முதலாகி வரும்.
உ+ம் - ஞமலி, ஞாலம், ஞெகிழி, ஞொள்கல்.
தற்காலத்தில் மொழிக்கு முதலில் வராது எனக்கூறிய எழுத்துக்கள்,மொழிக்கு முதலில் வருவதை காணலாம்.
டவரியில்
டச்சுக்காரர், டாம்பீகம், டில்லி, டீசல், டுமீல், டூப்பு, டை, டோபி
ற,வரியில்
றக்கு, றாத்தல், றேடியோ, றைவர், றோட்டு(இலங்கை வழக்கு)
ர, வரியில்
ரசம், ரசிகன், ராகம், ரீங்காரம், ருசி
ல வரியில்
லட்டு, லாம்பு, லிங்கம், லீலை,
லுங்கி, லூர்த்து, லைலா,
லொத்தர், லோபி,
லௌகீகம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக