6.12.25

G.C.E.O/L, தமிழ்ப்பண்பாடு கடந்தகால வினாத்தாள்

தமிழ்ப்பண்பாடு

கடந்தகால வினாத்தாள்

G.C.E.O/L- 2022(2023)

01. (x). "யாதும் ஊரே யாவரும் கேவிர் என்றும் யாதானும் நாடாமால் ஊராமால் என்றும் கூறுவதற்கு இம்மனப்பான்மை ஊக்கமளித்தது."

() இங்கு சுட்டப்படும் மனப்பான்மை எது?

) பரந்த உலக மனப்பான்மை / ஒருலக மனப்பான்மை / உலக மனப்பான்மை

() 'யாதானும் நாடாமால் ஊராமால்' என்ற தொடரை விளக்குக?
) எல்லா நாடும் நமது நாடாகும்; எல்லா ஊரும் நமது ஊராகும்.

06. தமிழ்ப் பண்பாடு என்ற கட்டுரையில்

(
) பழந்தமிழ்ப் புலவர்கள்

தமிழ்நாட்டிற்கு அப்பால் இருந்து வந்த சமயங்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்குள் வந்து தமது சமய தத்துவங்களைப் போதித்தபோதும் அவற்றிலிருந்து கருத்துக்களைத் தழுவிக் கொண்டு பொது நிலையில் இலக்கியம் செய்தமை.

பழந்தமிழ்ப் புலவராகிய இளங்கோ சமணராக இருந்தபோதும் தமிழர் தழுவிய பழக்கவழக்கங்களையும் வழிபாட்டு முறைகளையும் சிலப்பதிகாரத்தில் கூறியுள்ளமை.

சமணம், பௌத்தம் வெறுத்து ஒதுக்கிய இசை, நடனத்துறைகளை இளங்கோவடிகளும் திருத்தக்கதேவரும் நன்று என விபரித்தமை.

வள்ளுவர் சமணர் எனக் கருதப்பட்டாலும் காமத்துப்பாலையும் இல்லறத்தையும் போற்றி எழுதியமை.

சைவராகிய நச்சினார்க்கினியர் சமண நூலாகிய சீவகசிந்தாமணிக்கும் சமணராகிய இளம்பூரணர் அகத்திணையியலுக்கும் உரை எழுதியமை.

() பிற்கால அறிஞர்கள்

பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை முதலானோர் பிற சமய இலக்கியங்களைப் பாராட்டி எழுதியமை.

திரு. வி.கல்யாணசுந்தர முதலியார். கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை முதலானோர் பிற மத

தெய்வங்களையும் அடியார்களையும் போற்றி இலக்கியம் படைத்தமை.

சமய சமரச கீர்த்தனைகள் இயற்றப்பட்டமை.

பிற்காலத்தில் பல நாடுகளிலிருந்து வந்த சமய குரவர்கள் தமிழ்ப் பண்பாட்டின்படி கண்ணோட்டத்துடன் இலக்கியங்களை யாத்தமை. (போப்பையர், வீரமாமுனிவர், கால்டுவெல் ஐயர்)

ஆகியோரிடத்து கண்ணோட்டம் எனும் மனப்பான்மை காணப்பட்டமை எடுத்துரைக்கப்படுமாற்றைத் தெளிவுபடுத்துக?

G.C.E.O/L- 2021(2022)

07. 'தமிழர் பண்பாடு' என்ற கட்டுரையில் பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தில் நிலவிய,

() உலக மனப்பான்மை

மேற்றிசை நாடுகளோடும் கீழ்த்திசை நாடுகளோடும் இந்தியாவின் வடபாகத்தோடும் பண்டமாற்று வணிகத்தில் ஈடுபட்டமை.

யாதும் ஊரே யாவரும் கேளிர் (புறநானூறு)

யாதேனும் நாடாமல் ஊராமல் (திருக்குறள்)

இம் மனப்பான்மையை வளர்த்தல்.

சமணம், பௌத்தம் முதலிய சமயங்கள் தமிழ்நாட்டில் வரவேற்கப்பட்டமை.

பார்ப்பனர், மொழிபெயர்தேயத்தார், யவனர், புலம்பெயர் மக்கள் தமிழ் மக்களோடு இனிதாக வாழ்ந்து வந்தமை.

() மக்கள் நலக் கொள்கை

மனிதனை என்றும் பேணவேண்டும் எனும் கொள்கை.

ஒரு செயலால் வரும் பிறநலன்களைக் கருதாமல் நன்மையை நன்மைக்காகவே செய்தல்.

வாழ்க்கையின் நோக்கங்கள் மக்களோடு இன்புற்று வாழ்வதும் இல்லற நலன்களைக் காண்பதும்.

அமிழ்தம் எனினும் தனித்து உண்ணார்.

நன்மை தரும் விடயங்களிற்கு உயிரையும் கொடுப்பர்.

பழிதரும் செயல்களை ஒருபோதும் செய்யமாட்டார்.

ஆகியன எடுத்துரைக்கப்படுமாற்றினை விளக்குக.

G.C.E.O/L- 2020

01.(vii) "பார்ப்பனர், மொழிபெயர் தேயத்தார், யவனர், புலம்பெயர் மக்கள் தமிழ் மக்களோடு இனிதாக வாழ்ந்து

வந்தார்கள்."

(). இதனூடாக வெளிப்படும் தமிழ்மக்களுடைய மனப்பான்மை யாது?

. உலக மனப்பான்மை

() 'மொழிபெயர் தேயத்தார்' என்ற தொடர் யாரைக் குறிக்கிறது?
ஆ. வேற்றுமொழி பேசுகின்ற நாட்டவர்

G.C.E.O/L- 2019

6. தமிழ்ப் பண்பாடு என்ற கட்டுரையில்,

() பக்தி

தமிழ் பக்தியின் மொழி

தமிழில் உள்ள அளவு போல், வேறு எந்த மொழியிலும் பக்தி இலக்கியம் இல்லை

பரிபாடல் முதல் விபுலானந்தர் ஈறாகப் பக்தி பாடல்களைப் பாடிய புலவர்கள் ஏராளமானவர்கள்

தமிழில் பக்தியை உணர்த்தவென உள்ள சொற்கள் பல

பக்திப் பாடல்களை பாடி இன்புறாத தமிழ் மக்கள் இல்லை

சங்ககால அகத்திணை இலக்கியம் பக்தி இலக்கியத்திற்குத் துணையாக அமைந்தமை.

சமயப் பொருளற்ற பிற நூல்களுக்கும் பக்தி இலக்கியம் துணையாக அமைதல்

நாயன்மார்கள், ஆழ்வார்கள், சேக்கிழார், கம்பர் போன்றவர்களின் பக்திப் பண்பு உலகிலே நிகரற்றது.

கோயில் கட்டிடம், சிற்பம், இசை, நாட்டியம் முதலான தமிழர்தம் பிற கலைகளும் பக்தியால் வளர்ச்சியுற்றவை

தமிழரின் பக்தி கடல் கடந்த நாடுகளிலும் பரவியமை

உலகம் போற்றும் நடராச வடிவம் தமிழரின் பக்தியின் பயனே.

() ஒழுக்கம்

என்பன எவ்வாறு விளக்கப்பட்டுள்ளன என்பதைத் தெளிவுபடுத்துக?

தமிழர் பண்பாட்டில் நீதி / ஒழுக்கம் முக்கியத்துவம் பெறுகின்றமை.

திருக்குறளுக்கு இணையான நீதிநூல் உலகில் எங்கும் இல்லை என அல்பேட் சுவைட்சர் முதலான மேலைத்தேயத்தவர்களும் ஒத்துக்கொள்ளல்.

தமிழில் ஈடுபட்ட மேனாட்டவர்கள் முதலில் தமிழ் நீதிநூல்களையே மொழிபெயர்த்தார்கள்.

தமிழ் பெருந்தொகையான நீதிநூல்களைக் கொண்டது

இம்மொழியை பேசும் மக்களுக்கு கடவுளின் அருள்,சிறப்பாக இருந்திருக்க வேண்டும் என போப்பையர்கூறுதல்

oதமிழ் மக்கள் வேறுவேறு நாடுகளில் வாழ்ந்து செழித்து ஓங்குவதற்கும் அவர்களது அரசியல்

வாழ்க்கைக்கும் ஒழுக்கமே துணையாக அமைந்தமை

G.C.E.O/L- 2018

02. (iv). கீழ்த்திசை நாடுகட்குச் செல்ல வேண்டிய மேற்றிசைப் பண்டம், தமிழ்நாட்டில் இறக்கப்பெற்று வேறு

மரக்கலங்களில் கீழ்த்திசை நாடுகட்கு அனுப்பப்பட்டது. மேற்றிசை நூல்களே சங்க இலக்கியத்தைப்

போல் இவ்வணிகத்துக்குச் சான்று தருகின்றன. எனவே இத்தாலிய நாட்டில் வாழ்ந்த ஸ்டொயிக்

(stoic) வாதிகள் உரோமப் பேரரசு காலத்தில் எவ்வாறு ஓர் உலக மனப்பான்மையை வளர்த்தார்களோ

அவ்வாறே சங்க காலத்திற்கு முற்பட்ட காலம் தொடங்கி ஓர் உலக மனப்பான்மை தமிழ்நாட்டில்

பரவியுள்ளது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் யாதானும் நாடாமால் ஊராமால் என்றும்

கூறுவதற்கு இம்மனப்பான்மை ஊக்கமளித்தது.

() தமிழரின் உலக மனப்பான்மை எவ்வாறு வளர்ந்தது எனக் கட்டுரையாசிரியர் விளக்குகிறார்?

(அ).. தமிழ்நாடு கீழ்த்திசை, மேற்றிசை நாடுகளினிடேயேயான வணிகத்தின் மையப் புள்ளியாக இருந்தமை.

தமிழ்நாடு அந்நாடுகளுடன் செய்த வணிகம் காரணமாக தமிழரின் உலக மனப்பான்மை வளர்ந்தது

எனக் கட்டுரையாசிரியர் குறிப்பிடுகின்றார்.

() 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் கூற்றினூடாக உலக மனப்பான்மை வெளிப்படுமாற்றை

விபரிக்குக?

(ஆ).எல்லா ஊர்களும் நமது ஊர்களாகும். உலக மக்கள் அனைவரும் நமது உறவினர்கள் ஆவார்கள்

என்ற இக்கூற்று உலகம் தழுவிய மனப்பான்மையை வெளிப்படுத்துகின்றது.

G.C.E.O/L- 2017

7. தமிழ்ப் பண்பாடு என்ற கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு,

() தமிழர் பண்பாட்டின் குறிக்கோள்கள் யாவை எனக் குறிப்பிடுக?

தமிழர் பண்பாட்டின் குறிக்கோள்கள்

பரந்த உலக மனப்பான்மை

விருந்தோம்பல்

பிறரன்பு

ஈகை, தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்.

என்கடன் பணி செய்து கிடப்பதே.

மானமென்றால் உயிரையும் கொடுத்துக் காப்பாற்றும் வேட்கை.

மனத்தூய்மை, விடா முயற்சி

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற மனநிலை

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.

() அவற்றுள் உலக மனப்பான்மை என்ற பண்பாடு பற்றி விவரிக்குக?

மேற்றிசை நாடுகளோடும் கீழ்த்திசை நாடுகளோடும் இந்தியாவின் வட பாகத்தோடும் பண்டமாற்று

வணிகத்தில் ஈடுபட்டமை.

சங்க இலக்கியங்கள் காட்டும் வணிகச் செய்திகளுடாக 'யாதும் ஊரே யாவரும் கேளிர் ....... '

என்ற மனப்பான்மையை வளர்த்தெடுத்தல்.

சமணம், பௌத்தம் முதலிய சமயங்களை தமிழ்நாட்டில் வரவேற்றமை.

பிற மக்களின் நலத்தைக் கருதும் பண்பு, தமக்கென வாழா பிறர்க்குரியாளன் என்னும்

கோட்பாட்டை வளர்த்தமை.

G.C.E.O/L- 2016

01. (x) "தொல்காப்பியர் கருப்பொருளில் பண்பாட்டுத் துறைகள் சிலவற்றைக் கூறுகிறார். அவற்றுள் வழிபாடும் இசையும்

இசைக்கருவிகளும் சில."

() கருப்பொருள் என்றால் என்ன?

() குறித்த ஒரு நிலத்தின் பண்பாட்டுக் கூறுகள் (தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, யாழ், தொழில் முதலியன)

() கருப்பொருள் பற்றிக் கூறும் இலக்கண நூல் யாது ?

() தொல்காப்பியம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக