4.12.25

G.C.E.O/L-2021(2022), தமிழ்மொழியும் இலக்கியமும், பகுதி 111, கடந்தகால வினாத்தாள்

G.C.E.O/L-2021(2022),

தமிழ்மொழியும் இலக்கியமும்,

பகுதி 111,

கடந்தகால வினாத்தாள்

1. சுருக்கமான விடை தருக.

(i). "வண்டோ கானத்திடையிருந்து

வந்து கமல மதுவுண்ணும்"

() 'கானத்திடை' என்பதைப் பிரித்து எழுதுக?

() கானத்து + இடை / கானம் + அத்து + இடை / கானம் + அது + இடை

() 'கமல மது' என்பது எதனைக் குறிக்கிறது?

() தேன் / தாமரையின் தேன்

(ii) "வாதப்பிரதிவாத மின்னல்கள் முழக்கங்கள் நடக்கின்றன."

() 'பிரதிவாதம்' என்றால் என்ன?

() எதிர்வாதம்

() இதில் இடம்பெற்ற அணி யாது?

() உருவக அணி

(iii). வெங்கட்பிறைக்கும் கரும்பிறைக்கும் மெலிந்தப்பிறைககும

() 'கரும்பிறை' என்பது யாரைக் குறிக்கிறது?

() மன்மதன்

() அவர் அவ்வாறு அழைக்கப்படுவதற்கான காரணம் யாது?

() கரும்பை வில்லாகக் கொண்டவர்

(iv). "கம்பியூட்டருடன் அவர்களது பொழுது முக்காலமும் கழிந்தது. புது கேம்ஸ்களை பண்டமாற்றுச்

செய்து பாவித்தார்கள்."

() 'முக்காலமும் கழிந்தது' என்பதன் மூலம் உணர்த்தப்படுவது யாது?

() முழுநேரமும் கழிந்தது / முழுப்பொழுதும்

() 'பண்டமாற்று' என்றால் என்ன?

() ஒரு பொருளிற்கு ஈடாக இன்னொரு பொருளைப் பெறுதல்

(V). 'முழங்கு திரைப் புனலருவி கழங்கென முத்தாடும்'

() இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விளையாட்டு யாது?

() கழங்கு

() 'முழங்கு திரைப் புனலருவி' என்ற தொடரினை விளக்குக.

() ஆரவாரிக்கின்ற அலைகளோடு கூடிய நீரருவி / சத்தம் செய்கின்ற

(vi) "சினந்தரிவி வெட்டும் இளந்தாரிமாரை

கண்ணூறு படாமற் காரும் ஐயனாரே"

() இங்கு 'இளந்தாரிமார்' எனச் சுட்டப்படுவோர் யாவர்?

() இளைஞர்கள் / வாலிபர்கள்

() 'காரும்' என்ற சொல்லின் பொருளைத் தருக?

() காத்திடும் / காக்க வேண்டும்

(vii). "நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்."

() யாதொன்றும் பேணாமை' என்பதன் மூலம் உணர்த்தப்படுவது யாது?

() பேணவேண்டிய எதையும் பேணி நடவாமை

() 'நாரின்மை' என்பதனை விளக்குக?

() அன்பின்மை

(viii). "அப்ப ஏன்கா நம்மட உம்மா மவுத்தாப் போன அண்டைக்கு இது கத்தல்ல.

() இக்கூற்று யாரால் யாருக்குக் கூறப்பட்டது?

() காசிமால் / பேரனால் மூத்தம்மாவிற்கு கூறப்பட்டது

() 'அண்டைக்கு இது கத்தல்ல' என்பதனை எழுத்துத் தமிழில் திருத்தமாக எழுதுக?

() அன்றைக்கு இது கத்தவில்லை / அன்று இது கத்தவில்லை

(ix). "புழுதிப் படுக்கையில் புதைந்த எம் மக்களைப் போற்றும் இரங்கற் புகழ்மொழி இல்லை"

() இங்கு 'படுக்கை' என்பது எதனைக் குறிக்கிறது?

() இறந்தவரின் உடல்கள் புதைக்கப்பட்ட இடம் / புதைக்குழி / கல்லறை

() 'இரங்கற் புகழ்மொழி' என்பதன் மூலம் உணர்த்தப்படுவது யாது?

() இறந்தவர்கள் பற்றி இரக்கத்தோடு புகழ்ந்து பேசுதல் / அஞ்சலி உரை / இரங்கல் உரை

(x). "தந்தையில்லை.... தந்தையின் தேரில்லை..... பறம்பு மலையை... பறம்பு மலையில் பால் வார்க்கும் நிலவை... சங்கவை, எப்படி எடுத்துச் செல்வது"

() இக்கூற்றில் வெளிப்படும் உணர்ச்சி யாது?

() சோகம் / துன்பம் / கவலை / பிரிவுத் துயரம்

() 'பால்வார்க்கும் நிலவு' என்ற தொடரில் காணப்படும் நயம் யாது?

() ஒளி வீசும் நிலவு ஒளி பாலாக உருவகிக்கப்பட்டுள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக