பேராசிரியர் க.கணபதிப்பிள்ளையின் தமிழ்ப் பணிகள்
குறிப்புக்கள் :
1. முன்னுரை
2. பேராசிரியரின் கல்விச் சிறப்புக்கள்
3. தலைசிறந்த மொழியியலாளர்
4. புலமை மை மிக்க கவிஞர்
5. புனைகதை ஆசிரியர்
6. நாடக ஆசிரியர்
7. மனிதாபிமானம் மிக்கவர்
8. முடிவுரை
தலைசிறந்த மொழியியலாளனாக, கவிஞராக, புனைகதை ஆசிரியராக, நாடக ஆசிரியராக, கல்வெட்டாய்வாளராக, பன்மொழிப் புலமையாளராக விளங்கிய பெருமைக்குரியவர் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை. இலங்கைப் பல்கலைக் கழக வரலாற்றில் தமிழ்ப் பேராசிரியர் பலரை உருவாக்கிய பெருந்தகை. இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஆறு ஆண்டுகளும் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இருபத்து மூன்று ஆண்டுகளும் பலவகைகளிற் பணியாற்றியவர். அவரது தமிழ்ப்பணிகள் பன்முகப்பட்டவை. காலவெள்ளத்தால் அழியாத, மறக்க வொண்ணாதவை.
கீழைத்தேய, மேலைத் தேயக் கல்வியினை நன்கு பயின்று அவற்றின் வழிப்பட்ட ஆய்வு நெறிகளை ஆற்றலோடு தம்மாணவர்க்குப் புகட்டிய நல்லாசான் பேராசிரியர் கணபதிப்பிள்ளை என்றாலது மிகையல்ல.
02.03.1903இல் ஆயுர் வேத வைத்தியர் க.கந்தசாமிப் பிள்ளையின் ஏக புதல்வனாகத் துன்னாலையிற் பிறந்த கணபதிப்பிள்ளை, வடமொழி, தமிழ்மொழி வல்லுனரான முத்துக் குமாரசாமிக் குருக்களிடம் தமிழையும் வடமொழியையும் நன்கு கற்றார். தமிழிலும் வடமொழியிலும் நன்கு தேர்ச்சி பெற்றார். தமிழிலக்கியம், தமிழிலக்கணம் ஆகியவற்றின் மீது கொண்ட ஆர்வமும் பற்றும் அவரிடத்தே வளரலாயிற்று.
1927ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியிற் சேர்ந்தார். தமிழ்மொழி, வடமொழி, பாளி ஆகியனவற்றைக் கற்றார். 1930 ஆம் ஆண்டில் கலைமாணி (B.A) ப் பட்டத்தினை முதற்பிரிவில் பெற்றார். கீழைத் தேய மொழியாராச்சிக்கான பரிசிலையும் பெற்றார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலே வித்துவான் பாடநெறியிற் சேர்ந்து விபுலாநந்த அடிகளிடமும் சோழவந்தான் கந்தசாமி, போன்றோரிடமும் பயின்று வித்துவான் பட்டம் பெற்றார்.
பின்னர் இலண்டன் பல்கலைக்கழகம் சென்ற கணபதிப்பிள்ளை அங்கு பேராசிரியர் ரேணர் (TURNER) மேற்பார்வையின் கீழ் ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த தமிழ்க் கல்வெட்டுக்களின் மொழிநடை குறித்து ஆய்வு நிகழ்த்தினார். இவ்வாய்வு குறித்த ஆய்வேட்டுக்காகக் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார். சமஸ்கிருதம், பாளி,
ஆங்கிலம், பிரெஞ்சு, சேர்மனிய மொழிகளை அறிந்திருந்த கணபதிப்பிள்ளை ஈரானிய, மலையாள, கன்னட மொழிகளையும் கற்றிருந்தார். பன்மொழிப்புலமை மிக்கவராக 1936ஆம் ஆண்டு ஜுலையில் திரும்பிய கலாநிதி கணபதிப்பிள்ளை இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாளராக நியமனம் பெற்றார்.
1942இல் இலங்கைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டபோது அதன் தமிழ்த்துறைத் தலைவரானார். 1947இல் பேராசிரியராகப் பணியாற்றிய சுவாமி விபுலாநந்தர் மறைவின் பின் பேராசிரியராக நியமனம் பெற்ற கணபதிப்பிள்ளை 1962வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அனைவரதும் நன்மதிப்புக்கும் அன்புக்கும் உரியவராக விளங்கினார். இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனைக்கு மாற்றப்பட்டபோது அங்கு தமிழ்த் துறைத் தலைவராக மட்டுமன்றி கீழைத்தேய மொழிப் பீடத்தின் தலைவராகவும் பணியாற்றினார். அவ்வேளையில் துணைவேந்தர் சேர்.நிக்கலஸ் அட்டிகலை வெளிநாடு சென்றபோது பேராசிரியர் கணபதிப்பிள்ளை பதில் துணைவேந்தராகவும் பணியாற்றினார். இங்கிலாந்தில் நடைபெற்ற பொது நலவமைப்பு நாடுகளின் துணை வேந்தர் மாநாட்டிலும் பங்குபற்றினார். இவை எல்லாம் பேராசிரியர் பெற்ற கல்விச் சிறப்புக்கள் எனலாம். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தினைத் தோற்றுவித்தவர்களுள் பேராசிரியர் கணபதிப்பிள்ளையும் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மொழியாய்வுத்துறையில் மிக்க நாட்டம் கொண்ட இவரது கலாநிதிப்பட்ட ஆய்வு சாசனவியல் தொடர்பாகவே அமைந்திருந்தது. இவரது மொழியியல் புலமை யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழையும் மட்டக்களப்புப் பேச்சுத் தமிழையும் நன்கு ஆராய்வதற்கு வழிவகுத்தது. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க வெளியீடான "இளங்கதிர்" இதழில் இவர் எழுதிய "ஊருக்கொரு பேச்சு" என்னும் கட்டுரை இதற்கு ஏற்ற சான்றாகும்.
மொழியியல், இலக்கியம், சாசனவியல், வரலாறு, சமூகவியல் முதலிய எழுதியுள்ளார். இலங்கைப் பல்கலைக்கழகத்திலே தமிழைச் சிறப்புப் துறைகள் சார்ந்த பல கட்டுரைகளை இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பாடமாகப் பயில்வோருக்கு கல்வெட்டியல் கட்டாய பாட நெறியாக விளங்கினார். ஈழநாட்டிலே கல்வெட்டியல் ஆய்விலே ஈடுபட்ட முதல் அமைந்திருந்தது. இப்பாடத்தைக் கற்பிப்பவராகப் பேராசிரியரே வாழ் தமிழர்வரலாறு' என்னும் சிறிய நூல்
('சங்கிலி' என்னும் அவரது தமிழ் அறிஞர் என்ற பெருமையும் இவருக்குண்டு. இவர் எழுதிய, 'இலங்கை நாடக நூலுடன் இணைந்தது) ஈழத் தமிழர் தம் வரலாற்றை அனைவரும் உணர்ந்திட உதவியது.
பேராசிரியர் கணபதிப்பிள்ளை மொழியாய்வாளராக மட்டுமன்றிச் சிறந்த வழக்கிலேயே படைத்தார். அவரது 'தூவுதும் மலரே'
என்னும் கவிதைத் தொகுதி இதற்குச் சான்றாகும். பழந்தமிழ் மரபைப் பின்பற்றி இவர் படைத்த மற்றொரு நூல் காதலியாற்றுப் படை என்பதாகும். யாழ்ப்பாண மண்வாசனை தவழும் இலக்கியமாக இது திகழ்கிறது. பருத்தித்துறையில் உள்ள காதலன் ஒருவனிடம் யாழ்ப்பாணத்தில் உள்ள காதலியை ஆற்றுப்படுத்துவதாக காதலியாற்றுப்படை அமைந்துள்ளது.
கவிதைகளை ஆக்குவதிலும் அவற்றை இரசிப்பதிலும் பெருவிருப்புடையவர் பேராசிரியர். இதனை அவரது பின்வரும் கூற்றுக்களே நமக்கு உணர்த்துகின்றன. "இக்காலத்தில் நாவல், சிறுகதை முதலியவற்றின் மூலம் சமுதாய ஊழல்களையும் ஒழுக்க நெறியையும் எழுத்தாளர் உலகத்தார்க்குத் துலக்கிக் காட்டுவது போல நானும் சமுதாயத்திற் காணும் உயரிய பண்புகளையும் மட்டுமன்றித் தாழ்ந்த நிலைகளையும் இன்பதுன்பங்களையும் பாட்டிலே தீட்டிக்காட்டுவதில் உள நிறைவு கண்டேன். பாட்டின் மூலம் அழலாம். சிரிப்பிலும் பார்க்க அழுதலே கூடிய சுவையைக் கொடுக்கும். என்வாழ்வில் நகையும் அழுகையும் அதிகமாய் எழுந்த காலங்களில் தீட்டி வைத்தவையே இப்பாடல்கள். இவை எனக்கு இன்பத்தை ஊட்டின. இன்றும் ஊட்டுகின்றன."
பேராசிரியர் கவிஞராக மட்டுமன்றிச் சிறந்த புனைகதை ஆசிரியராகவும் மிளிர்ந்துள்ளார். இவர் எழுதிய பூஞ்சோலை, வாழ்க்கையின் விநோதங்கள், நீரரமகளிர் என்னும் நூல்கள் இதற்குச் சான்றாகும். தமிழ் நாடக வரலாற்றிலே பேராசிரியருக்குத் தனியிடம் உண்டென்றால் அது மிகையல்ல. ஈழத்து நாடக வளர்ச்சியை எண்ணிப் பார்ப்போர் பேராசிரியரை என்றுமே நினைவு கூர்வர். நாடகத் தமிழ் வளர்ச்சிக்கு இவராற்றிய சேவை மகத்தானது.
நானாடகம், இருநாடகம், சங்கிலி, மாணிக்கமாலை என்பன பேராசிரியர் எழுதிய நாடக நூல்களாகும். முதலிரு நூல்களும் இலங்கைத் தமிழர் தம் சமுதாய நிலையைச் சித்திரிக்கும் வகையில் அமைந்தன. 'சங்கிலி' நாடகம் யாழ்ப்பாண அரசை ஆண்ட செகராசசேகரன் என்னும் சங்கிலி மன்னனைக் கதாநாயகனாகக் கொண்டு ஆக்கப்பெற்றதாகும்' மாணிக்கமாலை வடமொழியில் உள்ள
'ரத்னாவளி என்னும் நாடகத்தின் மொழிபெயர்ப்பாகும். பேராசிரியர் சமூக நாடகம், வரலாற்று நாடகம், மொழி பெயர்ப்பு நாடகம் என மூவகைப் பகுதிகளுக்கும் ஏற்றதாக இந் நாடகங்களை ஆக்கியுள்ளார். மாணிக்கமாலை தவிர்ந்த ஏனைய நாடகங்களில் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழையே அவர் பெரிதும் பயன்படுத்தியுள்ளார்.
"பல்கலக்கழக ஆசிரியர் என்றமுறையிலே பரந்த நோக்கினையும் உரத்த சிந்தனையையும் அவர் என்றும் தூண்டுபவராக விளங்கினார். பாடங்களைக் கற்பிப்பதோடும் விளக்குவதோடும் நின்றுவிடாது புதிய வினாக்களை எழுப்பி அவற்றுக்கு விடைதேடத் தூண்டுபவராகவும் புதிய கருத்து வெளியீடுகளின் பால் மாணவரை ஆற்றுப் படுத்துபவராகவும் திகழ்ந்தார்" எனப் பேராசிரியர் எஸ்.தில்லைநாதன் குறிப்பிட்டுள்ளமை பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் கற்பித்தற் திறனுக்குச் சான்றாக அமைகிறது.
சுருங்கக் கூறின் பேராசிரியர் கணபதிப்பிள்ளை மொழியியலாளராகவும், சிறந்த சாசனவியலாளராகவும், கவிஞராகவும், புனைகதை ஆசிரியராகவும், நாடகாசிரியராகவும், நல்வழிகாட்டியாகவும் விளங்கினார். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு சிறந்த மனிதாபிமானியாகவும் திகழ்ந்தார். அவரிடம் கற்ற மாணவர்களால் என்றும் மறக்கவொண்ணா மாமனிதராக விளங்கினார். அவரது தமிழ்ப்பணிகள் அவர் உருவாக்கிய பேராசிரியர்கள், மாணவர்கள் மூலம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது திண்ணம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக