15.10.25

மஹாகவி (து. உருத்திரமூர்த்தி)

மஹாகவி

ஈழத்திரு நாட்டின் புகழ் பெற்ற கவிஞர்களுள் ஒருவரான மஹாகவி யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தமது மாணவப் பருவத்திலேயே கவிபாடும் ஆற்றல் மிக்கவராகத் திகழ்ந்தவர். இவரது இயற் பெயர் து.உருத்திரமூர்த்தி என்பதாகும்.

மஹாகவி கவிதை, ஓவியம், பா நாடகம், ஹைக்கூ ஆதியாம் பலதுறைகளில் முத்திரை பொறித்தவர். இவரது கவிதை நடை தனித்துவமானது. கண்மணியாள் காதை (வில்லுப்பாட்டு), வள்ளி (கவிதை), கோடை (நாடகம்), குறும்பா (கிண்டலும் நகைச்சுவையும் கொண்ட குறும்பாக்களாலானது), வீடும் வெளியும் (கவிதை), புதியதொரு வீடு, மஹா கவியின் மூன்று நாடகங்கள், மஹாகவியின் ஆறு காவியங்கள் என்பன இவரது படைப்புக்களாகும். இவரது காலம் 1927 1974 ஆகும்.

தமது கவிதைகளின் மூலம் மக்கள் மனதில் அழியா இடம் பெற்றுள்ள மஹாகவியின் கவித்திறனுக்கு அவரது காவியங்களே சான்று பகருகின்றன. இவரது கவிதைகளில் யாழ்ப்பாணத்தின் மண்வாசனை தவழ்வதைக் காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக