11.10.25

பல்லவர் கால இலக்கியப் பண்புகள்

பல்லவர் கால இலக்கியப் பண்புகள்

கி.பி 6ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி 9 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதி பல்லவர் காலமாகும். இக்காலப்பகுதியில் பெருவாரியாக தோன்றிய பக்தி இலக்கியங்களையும் வேறும் பல இலக்கியங்களையும் கொண்டு பல்லவர் காலப்பகுதி இலக்கியங்களின் பணிபினை அறிந்து கொள்ளலாம்.

பல்லவர் காலத்தில் தமிழ் இலக்கியம் வடமொழி இலக்கியத்தைச் சார்ந்ததாக அமைகின்றது. இதனால் வடமொழிச் சொற்கள், கருத்துக்கள், இலக்கணங்கள், யாப்பமைதிகள் தமிழ் மொழியில் இடம்பெறலாயின. தமிழையும், வட மொழியையும் கலந்த மணிப்பிரவான நடை இலக்கியங்கள் உருவாகின. "ஸ்ரீபுராணம்" மணிப்பிரவாள நடையில் சமணர்களால் இயற்றப்பட்ட இலக்கியம் ஆகும்.

தமிழ்மொழிக்கும் வடமொழிக்கும் பொதுவாகவுள்ள விருத்தப்பாவினம் பெருவாரியாக கையாளப்பட்டது. இறைவனிடத்தில் அடியார்கள் கொண்ட பக்தியை வெளிப்படுத்த விருத்தப்பாவை சிறந்ததாக அவர்கள் கருதினர். இசையோடு பாடுவதற்கும் உகந்தது விருத்தப்பா. வரிப்பாடல், பரிப்பாடல் என்பவற்றிலிருந்து வளர்ச்சி பெற்றதுதான் விருத்தப்பா

பல்லவர் கால இலக்கியப் பண்பினை இக்கால பக்தி இலக்கியங்கள் பெருவாரியாக வெளிப்படுத்தி நிற்கின்றன. பக்தி இலக்கியங்களில் வடமொழிப் புராணக் கதைகளும், கருத்துக்களும் துணையாக கையாளப்பட்டுள்ளன. வைணவ ஆழ்வார்கள் பாகவதம், இராமாயணம், மகாபாரதம் போன்ற வடமொழி இலக்கியங்களில் உள்ளவற்றை நன்கு பயன்படுத்தியுள்ளனர்.

பக்தி அனுபவங்களைத் தனித்தனி பதிகங்களிற் பாடுதல், பிரபந்தங்களில் பாடுதல் என இருவகையில் பக்தி இலக்கியங்களில் அமைந்துள்ளன. பதிகங்களிலும், பிரபந்தங்களிலும் அகத்திணை தழுவிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அப்பாடல்கள் அகத்திணை தழுவிய கைக்கிளை, பெருந்திணைகளில் வந்துள்ளன.

தலைவியருக்கிடையில் உள்ள அன்பை வெளிப்படுத்துவதற்கென வகுக்கப்பட்ட அகப்பொருட்துறைகள் யாவும் பல்லவர் காலத்தில் இறைவன்பால் அடியார்கள் கொண்டுள்ள அன்பினை வெளிப்படுத்தக் கையாளப்பட்டுள்ளன. இந்தவகையில் தெய்வானுபவங்களை உலகியல் வாழ்க்கை அனுபவங்களில் அமைத்துக் கூறுதல் பல்லவர் கால இலக்கியப்பண்பு எனலாம். இந்த வகையில் அமைந்ததே மாணிக்கவாசக சுவாமிகளின் திருக்கோவையார்.

பல்லவர் கால அகத்துறைப் பாடல்கள் உள்ளத்தைத் தொடுவன. இதற்குத் தோற்றுவாய் செய்தவர் அப்பர் சுவாமிகள் தான். அவர் பாடிய நிருவாரூர்ப் பதிகத்தில் முன்னம் அவனுடைய நாமம் கேட்டேன்" என்ற பாடலில் இறைவன் மீது கொண்டுள்ள காதலை அழகுற அமைத்துள்ளார்.

இறைவனை குழந்தையாக, காதலனாக, தனியனாக, பக்திப் பாடல்களில் பாடும் மரபு பல்லவர் காலத்திற்கு உரியது. பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாகவும், காதலனாகவும் எண்ணி பாடல்கள் பாடியுள்ளார். ஆண்டாள் கண்ணனைக் காதலனாக வரித்துப் பாகரங்களைப் பாடியுள்ளார். இவர்கள் கண்ணலுடைய அழகை, அவலுடைய லீலைகளைச் சொல்லும் விதம் மிக உயர்வாக அமைந்துள்ளது.

இறைவனைச் சமமாக எண்ணி நகைச்சுவை கலந்து பாடும் மரபு பல்லவர் காலத்திற்குரியது. உம்மையே நம்பியிருப்பவரை மோசம் செய்கின்றீரே!" என இறைவனை உரிமையோடு கேட்கும் சுந்தரரின் பாடலில் இதனைக் காணலாம்.

தூது பல்லவர் கால இலக்கியங்களில் சிறப்பிடம் பெற்றது. கடவுளிடம் தூது அனுப்பும் முறையில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பல பாடல்கள் பாடியுள்ளனர். இவர்கள் புறா, கிவி, வண்டு போன்றவற்றை இறைவனிடம் தூதாக அனுப்பினர். சம்பந்தர் சிறையாரும் மடக்கிளியே இங்கே வா தேனொடு பாலி" என இறைவனிடம் கிளியைத் தூதாக அனுப்புகிறார்.

காரைக்கால் அம்மையாரும் முதலாழ்வார்களும் இறைவனுக்கு உருவம் கொடுத்தது போல பல்லவர் காலத்திலும் நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் இறைவனிற்கு உருவம் கொடுத்து பந்திப் பாடல்கள் பாடப்பட்டு உள்ளன. "குளித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிழ் சிரிப்பு" என்ற பாடல் சிறந்த எடுத்துக்காட்டு

நாட்டு மக்கள் வழங்கி வந்த இலக்கிய வடிவங்களில் பக்திப் பாடல்கள் அமைந்துள்ளன. திருவாசகத்திலுள்ள திருவம்மானை, திருச்சாழல், திருப் பொன்னூஞ்சல் போன்றவற்றையும், பெரியாழ்வார் பாடிய "கண்ணன் குழல் வாரக் காக்கையை அழைத்தல்" என்பதும் இவ்வாறு அமைத்தவையே. வாய்மொழி இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே மாணிக்கவாசகரின் திருவெம்பாவை அமைந்துள்ளது.

இக்காலப்பகுதி பக்தி இலக்கியங்கள் யாவும் சோழர் காலப் பகுதியில் பன்னிரு திருமுறைகளாகவும், நாலாயிரம் திவ்விய பிரபந்தங்களாகவும் தொகுக்கப்பட்டமை பல்லவர் கால இலக்கிய பண்புகளின் சிறப்பினையே எடுத்துக் காட்டுகின்றது.

பல்லவர் காலப்பகுதியில் சமயச் சார்பில்லாத இலக்கியங்கள் தோற்றமடைந்தன. முத்தொள்ளாயிரம், ஸ்ரீபுராணம், கயசிந்தாமணி போன்றவை இதில் அடங்கும். இவற்றினை விட சங்க யாப்பு, பட்டியல் நூல், பெருங்கதை, பாரத வெண்பா என்னும் பல நூல்கள் தொன்றியுள்ளன. திவாகரம். பிங்கலந்தை போன்ற நிகண்டு நூல்கள் தோன்றின.

பல்லவர் காலப்பகுதியில் தான் அந்தாதி மாலை, பதிகம் போன்றவை வளர்ச்சி கண்டன. ஒரு பாடலின் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சொல், சீர் அடி யாதாயினும் ஒன்று அடுத்த பாடலின் முதலில் வரும்படி அமைத்துப் பாடுவது தான் அந்தாதி ஆகும். பொன்வண்ணத்தந்தாதி, நிருவந்தாதி இதில் குறிப்பிக்

அகத்துறைப் பாடல்களைக் கொண்டது கோவை இவை கட்டளைக் கலித்துறையில் அமைந்துள்ளன. பாண்டிக்கோவை, திருகோவையார் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.

பல்லவர் காலப் பகுதியிலே "உலா" என்ற இலக்கியம் தோற்றம் பெற்றது. இவ்வகையில் முதலில் தோன்றியது சேரமான் பெருமாள் பாடிய திருக்கைலாய ஞானவுலா, நாழிசை, துறை, விருத்தம் போன்ற பாவினங்கள் பெருவழக்காகக் கையாளப்பட்டுள்ளன. இப்பாவினங்கள் ஒவ்வொன்றும் பலதிறப்பட்ட ஓசை விகர்ப்பங்கள் கொண்டவை. இவை தமிழிற்குப் புதியனை.

கலம்பகம், மடல், எழுகூற்றறிக்கை, மறம் முதலிய பிரபந்த வகைகள் பல்லவர் கால இலக்கியங்களிலேயே ஆரம்பமாகியுள்ளன.

இறை வழிபாட்டிற்கு சிறப்பாக உரிய தோத்திரப் பாமாலைகள் இக்காலப் பகுதியில் "பதிகம்" முதலிய பிரபந்த முறையில் வெளிவந்தமை பல்லவர் கால இலக்கியப் பண்பினையே எடுத்துக் காட்டுகின்றது. பல்லவர் காலத்தில் நாயன்மார்கள் பாடிய பக்திப் பாடல்களில் பெரும்பாலானவை பதிக அமைப்பினைக் கொண்டவையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக