1.10.25

இந்து நாகரிகம், இந்துப் பண்பாடு

இந்து நாகரிகம், இந்துப் பண்பாடு

இந்துப் பண்பாடும் நாகரிகமும் இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்குப் பழைமை வாய்ந்தவையாகும். இதன் பழமைக்குச் சிந்துவெளி நாகரிகம் சான்றாகிறது. இப்பண்பாடும் நாகரிகமும் இன்றுவரையில் இந்து மக்கள் ஒருமைப்பாட்டுடனும் ஒற்றுமை உணர்வுடனும் வாழ்வதற்கு வழிவகுப்பனவாக விளங்குகின்றன. உலகிலுள்ள பல்வேறு மக்களின் அருமை பெருமைகளையும் சிறப்புக்களையும் அளவிட்டு எடைபோட்டுப் பார்ப்பதற்கு இரண்டு அளவைகளை வைத்துள்ளனர். அவற்றில் ஒன்று பண்பாடு (Culture) மற்றது நாகரிகம் (Civilization)

பண்பாடு

பண்பாடு என்பது பரந்த பொருளுடன் பயன்படுத்தும் ஒரு சொல். இது 'Culture' என ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது. இவ்வாங்கிலச் சொல்லுக்குச் சமமானதாகவே'பண்பாடு' எனும் தமிழ்ச் சொல் சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியிலே உருவானது. இதனை தமிழுக்குத் தந்தவர் ரசிகமணி. D.K.சிதம்பரநாதன்' அவர்கள். ஆனாலும் பண்பாடு என்பது தமிழுக்குப் புதிய சொல்லன்று. இது தொன்று தொட்டு வழங்கிவரும் சொல். இதனை சங்க இலக்கியங்கள் "சால்பு" என்ற பதத்தால் சுட்டுகின்றன. மேலும், பண்பு, பண்புடைமை, சான்றாண்மை முதலிய சொற்களாலும் பண்பாடு என்பது தமிழர் மரபில் கட்டப்பட்டு வந்துள்ளதை அறிய முடிகிறது. இச்சொற்கள் வெவ்வேறு இடங்களில் வேறு சில பொருள்களைக் குறித்தாலும், பல இடங்களில் பண்பாட்டையே கருதுகிறது.

"பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகுதல்" (கலித்தொகை),

"பண்புடையார் பட்டுண்டு உலகம்"- (திருக்குறள்)

என வருவதாற் காணலாம்.

'Culture' எனும் ஆங்கிலச் சொல்லில் வரும் cult' என்பது வழிபாடு என்றும் அருத்தப்படும். இதன்படி வழிபாடே பண்பாட்டின் மூலம் என்பர். மற்றுமொரு வகையில், culture' என்ற ஆங்கிலச் சொல் 'Cultura Agri' என்ற இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து பிறந்தது என்பர். இதன் அருத்தம் நிலத்தைப் பண்படுத்தல்" என்பதாகும். இதன்படி பண்பாடு என்பது "மனதையும் மக்களையும் பண்படுத்துவது" எனக் கொள்ளலாம்.

'பண்பாடு' எனும் தமிழ்ச் சொல் அமைந்திருக்கும் முறையின்படி நோக்கினால்,"பண்" என்ற வினையடியையும் "பாடு" என்ற தொழிற்பெயர் விகுதியையும் கொண்டு உருவான சொல்லே இது, "பண்ணு" என்பது செய்தல் என்பதைக் குறிக்கும். இவ்வழி,"குறித்த ஓர் இனமோ சமுதாயமோ தனது அறிவாலும் அனுபவத்தாலும் சிந்தனைத் திறத்தாலும் தனக்கென வகுத்துப் பேணிவரும் செயற்பாடே பண்பாடு" எனலாம்.

'Agriculture'என்ற ஆங்கிலப் பதத்தின் ஊடாக உருவான ஒரு சொல்லே culture/பண்பாடு. அதாவது, மண்ணைப் பண்படுத்தல் விவசாயம் எனப்படுவது போல் மனிதனைப் பண்படுத்துவது பண்பாடு. மண்ணை விவசாயத்துக்கு ஏற்றதாகப் பண்படுத்தல் போன்று வாழ்வியலுக்கு மனிதனைப் பண்படுத்துவது பண்பாடு எனவும் கூறப்படுகிறது.

நாகரிகம்

நாகரிகம் என்பது ஆங்கிலத்தில் 'Civilization' எனப்படுகிறது. இது Civitas'எனும் இலத்தீன் சொல்லில் இருந்து தோன்றியது. இது நகரம் எனும் பொருள் கொண்டது. Ga civil(civilis).city(civitas), citizen(civis) போன்ற சொற்களுடன் தொடர்பு கொண்டது. இதன்படி நாகரிகம் என்பது நகரத்தை அடிப்படையாகக் கொண்டது எனலாம்.

'நாகரிகம்' எனும் தமிழ்ச் சொல், நகர்+அகம் எனப் பகுத்துப் பொருள் கொள்ளத்தக்கது. இதன்படி, "நகரத்தோடு தொடர்புடையது" எனப் பொருள் கொள்ளப்படுகிறது. அதன்படிநாகரிகம் என்பது நகர மக்களின் திருந்திய வாழ்க்கை எனப்படுகிறது. நகரிகம் என்ற சொல் 'நகரம்' என்ற சொல்லின் திரிபு. நகர் அகம் நகரம் என்றும் நகரிகம் என்றும் நாகரிகம் எனவும் திரிபடைந்து வந்ததாக அறிஞர் பாவாணர் குறிப்பிட்டுள்ளார். இவரின் கருத்துப்படி, எல்லா நாட்டிலும் மாந்தர் முதன்முதலில் நகர நிலையிலேயே நாகரிகம் அடைந்துள்ளனர். இதனால், நகரப் பெயரில் இருந்து நாகரிகப் பெயர் தோன்றியுள்ளது என்கிறார்.

நாகரிகம் என்பது தமிழுக்குப் புதிய சொல்லன்று. இது ஏறக்குறைய 2000 ஆண்டுகள் பழைமையுடையது. சங்க இலக்கியமான நற்றிணையில் 'நாகரிகம்' எனும் சொல் காணப்படுகின்றது. இதனை, முன்னை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் கனி நாகரிகர்" என வருவதால் அறியலாம். இக்கருத்தினை பின் வந்த வள்ளுவரும், "பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டுவர்" (குறள்-580) என நாகரிகம் பற்றிக் குறிப்பிட்டுள்ளமை எடுத்துக்காட்டத்தக்கது.

பண்பாடு என்பது யாது?

பண்பாடு என்பது குறித்த இனம் அல்லது சமுதாயம் தனக்கென வகுத்துப் பேணிவரும் செயற்பாடு. இதனடிப்படையில் இதன் பரிணாம வளர்ச்சியாக; சமயநெறி. தத்துவநோக்கு, அழகியல் உணர்வு, குறிக்கோள் என்ற பலவும் வெளித் தோன்றுகின்றன. இவற்றை அவதானிப்போர் குறித்த இனமோ சமுதாயமோ உயர்ந்த பண்பாடு உடையது என்ற முடிவுக்கு வருகின்றனர்.

பண்பாடு என்பது மனிதனின் அக உணர்வு வளர்ச்சியின் சீர்மையைக் குறிக்கிறது. அதாவது, மனிதன் தன் சிந்தனை அறிவுத் திறத்தாலும் உள் உணர்வுத் திறத்தாலும் உள்ளத்தைப் பண்படுத்தி, அன்புடையவன், அருள் உடையவன், இரக்கம் உடையவன், வீரம் உடையவன். மனம் உடையவன், ஊக்கம் உடையவன், மரியாதை உடையவன், பிறர் நலம் பேணுபவன். பணிவுடையவன் எனப் பெயர் எடுப்பது என்பன இதிலடங்கும் அதாவது, அகத் தோற்றப்பாட்டின் பண்பினை உணர்த்தும் செயற்பாடுகள் அனைத்தும் பண்பாட்டின் பாற்பட்டவை. இவை மனித உள்ளுணர்வால் புரிந்து கொள்ளத்தக்கனவன்றி, காட்சியாகக் காணத்தக்கன அன்று. பிறிதொரு வகையில், பண்பாடு என்பது சமய நிகழ்ச்சிகள். ஆசாரங்கள் சாதனைகள் என்பவற்றிலிருந்து தோன்றியதாகக் கருத முடியும். இந்துசமய வரலாற்றிலும் பண்பாட்டு வரலாறே ஏனைய வரலாறுகளையும்விட மேலோங்கி நிற்பதனைக் காணலாம். பண்பாடு என்பதனை விளங்கிக் கொள்ள பொதுவாக மூன்று மூலகங்கள் துணைபுரிகின்றன. அவை.

பெறுமானம் (எண்ணங்கள்) -வாழ்வில் முக்கியமானது எது என்பது பற்றிய எண்ணங்களே பெறுமானம். அவை பண்பாட்டின் ஏனைய அம்சங்களை வழி நடத்துகின்றன.

நெறிமுறைகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இது. ஒவ்வொரு பண்பாட்டுக் குழுவும் இப்பொது வழக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கொண்டுள்ளன.

பொருள் - பண்பாட்டின் பெறுமானம்"."நெறிமுறை" என்பவற்றில் இருந்து இது பெறப்படுகிறது என்பன.

 

பண்பாடு என்பது யாது? என்பது தொடர்பில் திட்டமான வரைவிலக்கணத்தை முன்வைப்பது கடினம் மாறும் நிலையுடைய மனிதனை அடிப்படையாகக் கொண்டது பண்பாடு என்பதால், திட்டமான வரைவிலக்கணத்தை முன்வைப்பதில் சிக்கல் நிலவுகிறது. ஆயினும் அறிஞர் பெருமக்கள் தம் அறிவு நிலைக்கு ஏற்ப பண்பாடு என்பதற்குப் பல வரைவிலக்கணங்களை முன்வைத்துள்ளனர். அவற்றின் அடிப்படையில் பண்பாடு எனும் எண்ணக்கருவை நாம் ஒருவாறு புரிந்து கொள்ள முடியும்.

சமூக அறிஞர்களின் (Social Scientists) கருத்துப்படி,"பண்பாடு என்பது வாழ்க்கை

(1" (way of life)

S.வையாபுரிப்பிள்ளை வழங்கப்படுகிறது. என்றார் ஒன்று culture என்பது ஆங்கிலத்தில் இரண்டு பொருள்களில்

மக்களின் ஆதி வரலற்றில் ஒவ்வொரு காலத்திலும் அவர்கள் இயற்றிக் கொண்ட கருவிகள், அவர்கள் வாழ்ந்த சமுதாயத்தின் பழக்கவழக்கங்கள். நம்பிக்கைகள் முதலியன வெளிப்படுத்தும் அறிவு நிலை. மற்றயது Culture என்பது ஒரு பொதுப் பொருள். மக்களின் அறிவு நலம், கருத்து நலம், குண நலம். ஒழுக்க நலம் முதலியன மென்மேலும் திருந்துகின்ற

E.P. Tylor-குறித்த ஓர் இனமக்களின் அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்கம், சட்டம். நடத்தைகள் என்பவற்றை உள்ளடக்கியதே பண்பாடு.

Malinowsky பண்பாடு என்பது ஓர் இனத்தின் பாரம்பரியமான பயன்பாட்டுக் கருவிகள், பொருள்கள், தொழில்நுட்பத் திறன்கள் என்பவற்றின் கூட்டு மொத்தமே ஆகும். இது மக்களால் ஆக்கப்பட்ட கருவி எனக் குறிப்பிடுகிறார்.

வள்ளுவர் - பிறர் மேல் அன்புடைமை, உலகத்தோடு இணைந்த குடியிலே பிறத்தல் ஆகிய இவ்விரண்டும் ஒத்து வருதலே பண்புடைமை என உலகத்தார் சொல்லுவர்

என்கிறார்.

"அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு" (குறள்-)

தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் "பெரும்பாலும் சிறந்த வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகின்ற உளப்பாங்கின் வெளிப்பாடே பண்பாடு ஆகும்."என்றார்.

எட்வாட் பர்னாட் டைலர் - "பண்பாடு என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்க நெறிகள், சட்டம், வழக்கம் முதலானவையும் மனிதன் சமூகத்தில் ஓர் உறுப்பினராக

இருந்து கற்கும் பிற திறமைகளும் பழக்க வழக்கங்களும் அடங்கிய முழுத்

தொகுதியாகும்." என்கிறார்.

இவற்றின் அடிப்படையில் பண்பாடு என்பது ஒரு சமூகத்தில் கற்று அறியப்படும் நடவடிக்கைகள் அனைத்தையும் உள்ளடக்குகின்றது. அகத் தோற்றப்பாட்டின் பண்பினை வளர்க்கும் செயற்பாடுகள் அனைத்தும் பண்பாடு எனும் எண்ணக்கருக்குள்ளேயே அடங்குகின்றன எனலாம்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக