ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கிறது
அத்தியாயம் - 01
சாயந்தரம் மூன்று மணி தாண்டினாலும் இவ்னமும் சூடும் வெக்கையும் தாங்க முடியாமற்தான் இருந்தது. பங்குனி வெய்யிலிற் தாமோதரம் நன் கைப்பெட்டி யுடன் வீட்டையடைந்தான். லீட்டு முற்றத்திலிருந்த மாமரத்தின் கீழ் கற்பன் பாயில் அறிதுயிலிற் கிடந்த மயில்வாகனம் காலடிச் சத்தம் கேட்டு எழுந்து கொண்டார். எழுந்தவர் "சுடிதம் போட்டிருந்தயெண்டாக் கிண்ணியாத்துறையடிக்குச் சைக்கி ளோட தம்பிய அனுப்பியிருப்பள்" என்றவாறு பாயைச் சுருட்டிய படியே "புள்ள தம்பி வத்திற்றான்" என்று குரல் கொடுத்தார்.
"துறையடியில் இருந்து நாள் அம்பலவாணனோட சைக்கிளில தான் வந்தனான்" என்று கூறிக்கொண்டே தாமோதரம் வீட்டிற்குள் நுழைத்தான்.
மகன் வந்தாலென்ன? மகேசனே வந்தாலென்ன? மயில்வாகனத்தால் இன்னும் படுத்திருக்க முடியாது. வீட்டிலே தரிக்கவும் முடியாது. முகத்தைக் கழுவித் தேநீரைக் குடித்ததும் காவுதடியிற் தொங்கும் குடங்களோடு இப்போ நடக்கத் தொடங்கினாற்தான் இருட்டு முன்னே பொன்னாங்காணிப் பட்டிக்குச் செல்லலாம். சுணங்கவே கூடாது. முன்னிருட்டுக்காலம்.
மயில்வாகனம் கிணற்றை நோக்கிச் சென்றார். காய்ச்சப்பட்டுக் கொண்டிருக்கும் எருமைப்பாலின் மணம் வீட்டுக்குள்ளும் வெளியிலும் கமகமத்துக் கொண்டி ருந்தது. வீட்டினுள்ளே சென்று தன் சிறிய கைப்பெட்டியை வைத்த தாமோதரம், அங்கிருந்து வெளியேறித் தனியாக ஒதுங்கியிருந்த அடுக்களைக்குள் நுழைந்தான்.
அங்கே பென்னம் பெரிய மண் மிடாவிற் காய்ச்சிய எருமைப்பாலைப் பாற் பேணிகளிலும் சிறிய போத்தல்களிலும் ஊற்றி உறையிட்டு முடித்த தெய்வானை தன் கைகளைச் சேலைத் தலைப்பிற் துடைத்துக் கொண்டு "ஆறாந்திகதி தானே லீவு என்று எழுதியிருந்தாய். ஒரு கிழமைக்கு முதல் வந்திற்றியே. முதல்ல சாப்பிடு. பஸ்ஸிய வரக்குள்ள சாப்பிட்டிருக்க மாட்டாய்" என்று அடுக்கிலிருந்த மண் பீங்கானை எடுத்தாள்.
"வோணாம்மா, நான் வரக்குள்ள பன்குளத்துக் கடையில் வடிவாச் சாப்பிட்டிற்றன்" என்ற தாமோதரம், "ஏனம்மா என்னைக் கண்டதும் சௌந்தரம் கதைக் காமப் போறாள்" என்று தாயிடம் கேட்டான். "உன்னைக் கண்டதும் அவளுக்கு வெக்கம் வந்திற்று. இன்னமும் அவள் சின்னப்பிள்ளையில்லை" என்ற தெய்வானை, "அதுசரி, ஆறாந்திகதி நானே பள்ளிக் கூடம் எல்லாத்துக்கும் லீவு. நீ என்ன ஒருகிழமைக்கு முன்னாலேயே வந்திற்றா" என்று மகனிடம் மீண்டும் கேட்டாள்.
இதற்குள் கிணற்றடியிலிருந்து உடம்பைத் துடைத்துக் கொண்டே வந்த மயில்வாகனம் அடுக்களைக்குள் நுழைந்து "உன்னோட கதைக்கக்கூட நேரமில்லை மகன். நாளைக் காலையில் பட்டியால வந்தபிறகுதான் நேரங்கிடைக்கும்" என்று அலுத்துக்கொண்டே, "அது சரி. என் ஒரு கிழமை முன்னாலேயே வந்திற்றாய்?" என்று தாய் கேட்ட கேள்வியை, அவரும் கேட்டார்.
"எங்களுக்கு ரெஸ்த் முடிஞ்சிற்று. ஆவணி மாசத்தில ஏ. சோதனை. அந்தர் சோதனை எடுக்கிறவங்களையெல்லாம் நேரத்தோடயே அனுப்பி வருஷங்கழிச்ச அடுத்த நானே வரச் சொல்லியிருக்கார் பிறின்சிப்பல். நான் அடுத்த மாதம் பதினைஞ் சாந் திகதி போகவேணும்" என்று விளக்கினான் தாமோதரம்.
தெய்வானை தந்தைக்கும் மகனுக்கும் தேநீர் கொடுத்தாள். அடுக்களைக் குத்திகளில் அமர்ந்தபடியே இருவரும் தேதிரைப் பருகினர். தேநீரைக் குடித்து முடித்ததும் வெளியே வந்த மயில்வாகளம் அடுக்களைக்கு முன்னாலிருந்த பரணிலே சார்ந்தி வைக்கப்பட்டிருந்த காவுதடியை எடுத்துக் கொண்டார். பரணிலே கழுவப்பட்டுக் காய்ந்து கொண்டிருந்த இரண்டு பென்னம்பெரிய குடங்களையும் எடுத்து அவற்றின் கழுத்துக்களை வளைத்துக் கட்டப்பட்டிருந்த நார் வளையங்களும் காவுதடியைப் புகுத்தித் தரையில் வைத்தபடியே வெற்றிலைப் பையை எடுத்தார். தெய்வானை சீனிச் சுருளையும், வெற்றிலை, பாக்கு, புகையிலை அடங்கிய இன்னொரு சசையையும் கொண்டு வந்து கருனை ஒரு குடத்திலும், மரையை அடுத்த குடத்திலும் வைத்தாள். அவைகள் பட்டிக்காரருக்கு, வெற்றிலை போட்டு முடித்த மயில்வாகனம் தன் காக்கிச் சட்டையையும் போர்வையும் எடுத்துத் தோளிலே போட்டுக் கொண்டார். போட்டுக்கொண்ட தன் வலது தோளின் மேற்காவு தடியைத் தூக்கி வைத்து "நான் போயிற்றுவாரன்" என்றபடி நடக்கத் தொடங்கினார்.
காவுதடியைத் தோளில் வைத்ததுமே எங்கிருந்தோ ஒரு வேகம் வந்து விடுகின்றது. காவுதடியின் அசைவுக்கேற்பத் தாளலயத்துடன் தன் தந்தையார் வேகமாக நடப்பதைப் பார்த்தபடியே நாதோதரன் நின்றான். கோயிலுக்கு முன்னாலிருந்த ஒழுங்கையில் இறங்கிக் கரச்சை வெளியில் நடக்கும் அவர் உருவம் மறையும் வரையில் அவன் பார்த்துக்கொண்டே நின்றான்.
மயில்வாகனத்துக்கு வயது ஐம்பதுதானிருக்கும். காவுதடியைச் சுமந்து காய்த்துப் போள தோள்கள், கட்டுமஸ்தான உடற்கட்டு, ஏற்றே குள்ளமானவர் எனினும், வசம்பு போல மெலிந்து வைரித்திருந்தமையாற் குள்ளம் எடுபடவில்லை. பரந்த நெற்றியில் எப்போதுமே துலாம்பரமாகத்திருநீறு அணிந்திருப்பார்.
எத்தனை ஆண்டுகளாக அவர் இந்தக் காவுதடியைச் சுமக்கிறார் என்பது தாமேதரத்துக்கு தெரியாது. அவனுக்கு அறிவு தெரிந்த நாளிலிருந்து அவர் சுமக்கிறார். அதற்கு முன்னரும் காவுதடியைச் சுமந்தேயிருப்பார்!
இதோ இப்போது காவுதடியைச் சுமந்து செல்லும் அவர் ஆலங்கேணிக் கரைச்சை யைத் தாண்டிப் பூவரசந் தீவுத் திடலில் ஏறி, மீண்டும் கரைச்சையிலிறங்கிக் கண்டற் காட்டுத் துறையைத் தாண்டி வயல் வெளிகளூடே நடந்து மாவலிக் கரையிலுள்ள பொன்னாங்காணிப் பட்டியை அடையும்போது இருட்டிவிடும்.
பட்டியில் நுளம்புகளோடு போராடி இராத்தங்கி, அதிகாலையிற் பாற் குடங்களைத் தூக்கிக் கொண்டு ஊருக்கு வர ஏறத்தாழப் பத்து மணியாகிவிடும். பத்து மணியிலிருந்து நான்கு மணிவரையுமே ஓய்வு அந்த ஓய்வு நேரத்திற் செம்பாதிநேரம் தாமரைத் தீவுக் கள்ளுக்கொட்டிலிற் கழியும் கள்ளுக்கொட்டிலிலிருந்து திரும்பி வீட்டுக்கு வருகிறபோதெல்லாம் அவர் சொல்வார். "என்ர சின்ன மகன் யாழ்ப்பாணத்தில பெரிய படிப்புப் படிக்கிறான். அவன் படிச்சி வந்தப் பிறகுதான் என்ர காவுதடியை கழற்றுவான்"
அவரின் காவுதடி, பாற்குடங்களை மட்டுமல்ல ஓரோர் வேளை பட்டியை அண்மிய காட்டிலே வேட்டையாடப்பட்ட காட்டுமிருகங்களின் இறைச்சியையும் சுமந்திருக்கிறது. ஆவணி மாதத்து அருங்கோடையிற் குளங்கள் வற்றிவிட அந்த குளத்து ஆம்பல்களுக்கிடையே அகப்பட்டவரால், சுங்கான் போன்ற நன்னீர் மீன் களின் புகையூட்டப்பட்ட கருவாட்டையும் சுமந்திருக்கிறது குடும்பச் சுமையயைக் குறைக்கும் கைங்கரியத்தில் அக்காவுநடி காலங்காலமாக அவருக்குக் கைகொடுத் திருக்கிறது!
இப்படியாகத் தனக்குள் எண்ணிக் கொண்ட தாமோதரம் கிண்ற்றடிக்குச் சென்று தண்ணீரை அள்ளி அள்ளித் தலையிற் கொட்டிக் கொண்டான். கிணற்றின் பின்பக்கமாக அடைக்கப்பட்டிருந்த கொல்லைக்குள் கத்தரியும் தக்காளியும் வெண்டையும் காய்த்துக் கொழித்துக் கொண்டிருந்தன. ஒருபக்கத்தில் வேலியோரமாக இருந்த ஒரே ஒரு வற்றாளை வரம்பில் இலைகள் பழுப்படைந்து ஏன் இன்னமும் என்னைக் கல்லாமல் விட்டு வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தது.
ஆலங்கேணிக் கிராமம் முழுமையுமே மணற்பாங்கானதுதான் ஆனால் அந்த மணலிலும் மனித முயற்சியின் காரணமாகப் பசுமை படர்ந்தேயிருந்தது. ஒவ்வொரு வீட்டு வளவுக்குள்ளும் பெண்கள் குடங்குடமாக நீரைச் சுமந்து ஊற்றிக் காய்கறிகளும் கிழங்குகளும் பயிரிட்டிருந்தனர்.
தாமோதரம் குளித்துக் கொண்டிருக்கையில் தெய்வானை கொல்லைப் பட லையைத் திறந்து, கைக்கிண்டியால் வற்றாளை வரம்புகளைக் கிளறிக் கிழங்குகளைப் பிடுங்கிக் கொண்டிருந்தாள். அவள் அருகேயிருந்த ஓலைப் பெட்டியில் செக்கச் சிவந்த சீனி வற்றாளைக் கிழங்குகள் நிறைந்து கொண்டிருந்தன.
தாமோதரம் தன் நீராடலை முடித்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். அது இரண்டு அறைகளும் அறைகளுக்கு முன்னால் விகாலமான பெரிய மண்டபமும் அமைந்த வீடு, சுவர்கள் செங்கல்லாலும் களி மண்ணாலும் ஆனவை. சுவர்களுக்குச் சுண்ணாம்பு பூசப்பட்டிருந்தது. தரைக்குச் சீமெந்துப் பூச்சு. ஆனால் ஒலைக் கூரைதான். வீட்டுக்குள் நுழைந்த தாமோதரம் தன் பெட்டிக்குள்ளிருந்து நாலு முழத் துண்டையும் சேட்டையும் எடுத்துக் கொண்டான். நெல்லியடி மத்திய மகாவித்தியாலத்தில் சர்வகலாசாலைப் புகுமுக வகுப்பிற் படிக்கும் தாமோதரம் பாடசாலையில் நீளக் காற்சட்டையும் சப்பாத்தும் அணிவான். ஆனால் தன் பிறந்த ஊரான ஆலங்கேணியில் அவன் வேட்டியே உடுப்பான். ஆலங்கேணிக் கிராமம் இன்னமும் காற்சட்டை நாகரிகத்துக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ளவில்லை.
உடையணிந்த தாமோதரம் மண்டபத்து நிலையிலே தொங்கிய விபூதிச் சிரட்டையிலிருந்து பாம்பு விரலால் திருநீற்றைத் தொட்டு நெற்றி நடுவில் அழுத்திப் பூசிய போது தம்பி நீ வரட்டும் என்றுதான் ஒரு வற்றாளை வரம்பைப் பிடுங்காம விட்டிருந்தாளான், இதைச் சாப்பிட்டிற்றுப்போ. யாழ்ப்பாணத்தில வற்றாளைக் கிழங்கு இல்லையாம் என்று தட்டை நீட்டினாள் தட்டிலே இருந்த வற்றாளைக் கிழங்குகளிலிருந்து ஆலி பறந்து கொண்டிருந்தது.
தாமோதரம் வற்றாளைக் கிழங்கின் மெல்லிய சிவப்புத் தோலை உரித்து அவற்றை வெள்ளையாக்கிச் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் தெய்வானை கேட்டாள். எங்கே போப்போறாய் மாமா வீட்டயா?' 'இல்லம்மா, முதல்ல நான் பெரிய வாத்தியாரைச் சந்திக்க வேணும்..
ஓமோம், அந்த மனிசன் தானே நீ ஸ்கொலாசிப்பில யாழ்ப்பாணம் போய்ப் படிக்கிறதுக்குக் காரணம். பொயிற்று வாத வழியிலதானே மாமா வீடும் வரக்குள்ள அங்கயும் போய்ற்று வா
தாமோதரம் அதற்கு விடையளிக்காமலே அம்மாவிடம் கேட்டான். அண்ணல் வரவில் லையா அம்மா?!
அவன் இள்ளமும் திருக்கிணாமலையால வரவில்லைப் போல இருக்கு. சிலவேளை அவன் வர இருட்டாயும் போகும். நல்லா இருட்டினப் பிறகு வந்தா னெண்டா இஞ்ச வர மாட்டான். காலையில் தயிர்ப் பேணி எடுக்கத்தான் வருவான்'.
'இப்ப அவரும் குடிக்கிறாராமே!
'அப்படிப் போலத்தான் கிடக்கு. அப்பா கள்ளுக் கொட்டிலில குடிச்சா, மகன் சில் சாராயம் குடிக்கிறான் போல. ஆனாநான் இன்னமும் அவன் குடிச்சதை காணல்ல. தயிர் விக்க நாளாந்தம் திருக்கிணாமலைக்குப் போறான். இங்கே இல்லாத சாராயக்கட அங்கே இருக்கு. வியாபாரத்த முடிச்சிற்று வரக்குள்ள இரண்டு போத்தல் சாராயம் கொண்டு வந்து இஞ்ச விக்கிறானாம். சிலவேளை அவனுங் குடிக்கலாம். உனக்கெப்படித் தெரியும் அவன் குடிக்கிறான் எண்டு??
அண்ணா சாடை மாடையாக் குடிக்கிறதாக மயில்வாகனம் எனக்குக் கடிதம் எழுதியிருந்தான். இந்த வருஷம் மாட்டுப் பொங்கலன்றைக்கு அவனுக்கு நல்ல வெறியாம்
'இந்த ஊரில வெறி வைக்காதவனே பிறக்க மாட்டான் போல இருக்கு' என்று வெறுத்துக் கொண்டே நெய்வானை மீண்டும் அடுக்களைக்குட் சென்று தேநீர்க் கோப்பையுடன் வந்தாள்.
தேநீரைக் குடித்து முடித்த தாமோதரம் 'அம்மா நான் வாத்தியாரிட்டப் போயிற்று வாறன்" என்று தெருவிலிறங்கி நடந்தான். பங்குனி மாதத்தின் இறுக்கம் சற்றுத் தளர்ந்திருந்தது. மெதுவாக அசைந்த கொண்டலில் முற்றத்து மாமரத்தின் தளிர்கள் சோம்பிக் கொண்டே அசைந்தன. தாமோதரம் முற்றத்து மாமரத்தை தாண்டிப் புழுதி படிந்த மணல் ஒழுங்கையினூடே பாடசாலையை நோக்கி நடந்தான்.
தாமோதரம் தந்தையாரைப் போலல்லாது சற்று நெடுத்து வளர்ந்திருந்தான். தாயைப் போல. நிறத்திலும் அவன் நாயையே கொண்டிருந்தான். செம்மைபடர்ந்த அவன் முகத்திலே உதட்டின்மேலே தலைப்புப் பழுந்த கறுத்தச் சீனட்டி நெற்கதிரின் வாக்கில் மீசை அரும்பிக் கொண்டிருந்தது. கணவுகாணும் கண்கள் தலைக்குள் எத்தனையோ சிந்தனைகள். மனதுக்குள் எந்தனையோ ஆசைகள்.
ஒழுங்கை மணலில் கால் புதைத்து அவன் நடந்து செல்கையில் அடுத்த வீட்டுத் தெருவேலியின் கிடுகுக் கண்களினூடாக இரண்டு மனிதக் கண்கள் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தன. அவன் தன் வீட்டிற்குத் தன்னையே தேடி வருகிறான் என்ற எண்ணம் அக் கண்ணுக்குடையாளின் மனத்தில் வெட்கந்தோய்ந்த இன்பக் கிளர்ச்சி களை எழுப்பிக் கொண்டிருந்தது. ஆனால் தாமோதரம் மணல் ஒழுங்கையில் நேராக நடப்பதைக் கண்டு அக்கண்கள் கலங்கின. அதை அறியாதவனாய் தாமோதரம் நடந்து பாடசாலையை அடைந்தான். அவல் தேடிவந்த தலைமை ஆசிரியரும் பாடசாலை வாயிலிலேயே நின்றார்.
தொடரும்....
அத்தியாயம் - 02

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக