பத்தி எழுத்து
1. ஆசிரியர் பற்றிய அறிமுகம்
ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரஹ்மான்
சிறப்புப் பெயர் கவிக்கோ
'ஆலாபனை' என்னும் கவிதைத் தொகுப்புக்கு சாகித்திய அகடமி விருது கிடைத்தது.
கவியரசர் பாரி விழா விருது. கலைஞர் விருது, பாரதிதாசன் விருது. கலைமாமணி விருது, கம்ப நாவலர், கம்ப விருது போன்ற விருதுகளைப் பெற்றுக் கொண்டவர்.
இவர் எழுதிய கவிதை நூல்கள்
பால்வீதி,
நேயர் விருப்பம்,
சுட்டு விரல்,
பூப்படைந்த சபதம்,
கடவுளின் முகவரி.
2. பத்தி எழுத்துக்கள் என்றால் என்ன?
பத்தி எழுத்து என்பது பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கிய பின்னர் தமிழுக்கு கிடைத்த புதியதொரு வடிவமாகும். கட்டுரைகளுக்குரிய மரபுகளை மீறி ஆக்கப்படும் இந்த வடிவம் ஒரு வகையில் படைப்பாக்கமாகவே அமைகின்றது. இவை எடுத்துக்கொண்ட விடயத்தை புதிய நோக்கில், புதிய நடையில், புதிய பாணியில் கூறவல்லன.
3. மரம் மனிதனுக்கு எவ்வாறு முற்றிலும் நன்மை செய்கின்றது?
மனிதனின் குழந்தைப் பருவத்தில் தொட்டிலாகப் பயன்படுகின்றது.
நடை பழகும் பருவத்தில் நடைவண்டியாகவும்
பள்ளிப் பருவத்தில் படிக்கும் ஏடுகளாகவும்
மணப்பருவத்தில் கட்டிலாகவும்
கிழப்பருவத்தில் கோலாகவும் பயன்படுகின்றது.
இறந்தபின் இறந்தவரைக் கொண்டு செல்லும் பாடையாகவும்
இறந்த சிதையின்மேல் உடன்கட்டையாக ஏறியும் அவன் தகனமாகும்போது தானும் அவனுடன் தகனமாகிச் சாம்பலோடு சாம்பலாகி விடுகின்றன.
மனிதனின் தாகத்திற்குப் பானம் தந்தும்
பசிக்கு உணவூட்டி, உடுக்க உடையாகி, வசிக்க வீடாகி, நோய்க்கு மருந்தாகி, செயல்படுகின்றது. மரங்கள் மனிதனுக்காகவே தங்களை முற்றிலும் அர்ப்பணம் செய்கின்றன.
4. சரித்திரச்சாலையில் கவிஞர் கண்ட மரங்கள் எவை?
போதி மரங்கள்
காவல் மரங்கள்,
வசந்த மரங்கள்
கல்லால மரங்கள்
5. மனிதனின் நன்றிகெட்ட செயல் யாது?
தனக்கு பயனைத் தருகின்ற மரத்திலிருந்தே கோடாரிக்கு காம்பு செய்து கொண்டிருக்கின்றான். மரத்தை அழிக்கும் மனிதன் இன்னொரு மரத்தை நடுவதுமில்லை. அது தரும் பயனை நினைத்துப் பார்ப்பதுமில்லை. இதிலேயே அவனது நன்றிகெட்டதனம் தெளிவாகிறது.
6. மனிதனுக்கும் மரத்துக்குமிடையே காணப்படும் வேறுபாடுகள் எவை?
மண் மனிதனுக்கு புதைகுழி மரத்துக்கோ கருவறை.
மண்ணின் மைந்தன் மரம் மனிதன் அல்லன்.
பிறந்த இடத்தில் பற்று வைத்து வரவு வைப்பவை மரங்கள். மனிதன் பிறந்த இடத்தை செலவு செய்கின்றான்.
மரங்கள் சாய்ந்தால் காட்டிலிருந்து வீட்டுக்கு வரும். மனிதன் சாய்ந்தால் வீட்டிலிருந்து காட்டுக்கு போகின்றான்.
மரம் புழுதியில் பூக்களையும் கழிநீரில் கனிகளையும் செய்கிறது. மணிதன் பூக்களில் புழுதியையும் கனிகளில் கழிநீரையும் செய்கிறான்.
மனிதர்களுக்கு ஒரேயொரு சிபி. ஒரேயொரு சீதக்காதி. மரங்களுள் எல்லாம் சிபிகள். எல்லாம் சீதக்காதிகள்.
மரம் கொடுப்பதற்காக கைகளை நீட்டுகின்றது. மனிதன் வாங்குவதற்காக கைகளை நீட்டுகின்றான்.
மரம் வானத்தை நோக்கி வளர்கிறது. மனிதன் புழுதியிலேயே புரளுகிறான்.
7. மனிதன் படைத்த மரங்களாக ஆசிரியர் இனங்காட்டுபவை எவை?
தூக்கு மரங்கள்
சிலுவை மரங்கள்
கழுமரங்கள்
கொடி மரங்கள்
8. மரம் உயர்திணையா? காரணம் தருக?
மனிதனது பிறப்பு தொடங்கி இறப்பு வரை மரங்கள் மனிதனுக்காகவே தன்னை அர்ப்பணிக்கின்றன. ஆனால் மனிதனோ தனது வாழ்வுக்கு ஆதாரமாய் அமையும் மரங்கள் பற்றி எண்ணாதவனாக, நன்றி மறந்தவனாக சுயநல போக்குடன் வாழ்கின்றான். இவற்றில் மனிதனைவிட மரங்களே உயர்ந்து நிற்கின்றன.
உயர்திணையான மனிதன் அஃறிணையான மரம் செய்யும் எந்தச் செயற்பாட்டையும் செய்வதில்லை என்பதனூடாக மரத்தினது இயல்பையும் மனிதனது இயல்பையும் ஒப்பிட்டுக் காட்டுகிறார் பத்தி எழுத்தாளர். இவற்றிலும் மனிதனைவிட மரங்களே விஞ்சி நிற்கின்றன.
மனிதன் கைகளால் படைத்த மரங்களின் இழிநிலையை எடுத்து விளக்கி வள்ளல்களை விட சிறந்த மரங்களின் உயர்ந்த தன்மையை எடுத்துக் காட்டுக்களுடன் விளக்குகின்றார் ஆசிரியர்.
இக்காரணங்களின்மூலம் மரம் உயர்திணை என்பதனை வலியுறுத்திக் கூறுகின்றார் பத்தி எழுத்தாளர்,
9. இங்கு குறிப்பிடப்படும் கொடை வள்ளல்கள் இருவரின் பெயர்களைத் தருக.
சிபிச்சக்கரவர்த்தி
சீதக்காதி வள்ளல்
10. தனது கருத்துக்களை வலுப்படுத்த ஆசிரியர் கையாண்ட உத்திகள் எவை?
v சிறுசிறு வாக்கியங்களைக் கொண்ட வசனநடை
v தனது கருத்துக்களை நியாயப்படுத்த வினாக்களை வினவுதல்
v மனிதனுக்கும் மரத்துக்குமிடையிலான வேறுபாடுகளை இனங்காட்டல்.
v கிண்டலும் நகைச்சுவையும் இழையோடும் மொழிநடை
v வாசகர்களை சிந்திக்க வைக்கும் தர்க்கரீதியான கருத்துக்களை முன்வைத்தல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக