குறுந்தொகை
225 ஆம் செய்யுள்
ஆசிரியர் : கபிலர்
இவர் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். குறிஞ்சிப் பாடல்களைப் பாடுவதில் புகழ்பெற்றவர். ஒளவையார்> பரணர்> இடைக்காடர் முதலானோரின் சமகாலத்தவர். பாரி. பேகள் போன்ற குறுநில மன்னர்களுடன் நட்போடு விளங்கியவர். 'வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்' என்றும் 'பொய்யா நாவிற் கபிலன்' என்றும் புலவர்களால் பாராட்டப் பெற்றவர். ஐங்குறுநூறில் மூன்றாம் நூறும், பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தும் இவரால் பாடப்பட்டவை. இவை தவிர, நற்றிணையில் 20 செய்யுள்களும் குறுந்தொகையில் 34 செய்யுள்களும் அகநானூற்றில் 17 செய்யுள்களும் கலித்தொகையில் 27 செய்யுள்களும் புறநானூற்றில் 28 செய்யுள்களும் இவரால் பாடப்பட்டவை. குறிஞ்சிப் பாட்டு இவரால் இயற்றப்பட்டது.
கன்றுதன் பயமுலை மாந்த முன்றிற்
றினைபிடி யுண்ணும் பெருங்கள் dhட
கெட்டிடத் துவந்த உதவி கட்டில்
வீறுபெற்று மறந்த மன்னன் போல
நன்றிமறந் தமையா யாயின் மென்rPh;f;
கலிமயிற் கலாவத் தன்னவிவள்
ஒலிமென் கூந்த லரியயா நினக்Nf
கன்று தன் பயமுலை மாந்த மூன்றில்
திளைப்பிடி உண்ணூம் பெருங்கல் நாட
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில்
வீறு பெற்று மறந்த மன்னன் போல
நன்றி மறந்து அமையாய் ஆயின், மென்சீர்க்
கலிமயிற் கலாவத்து அன்ன இவள்
ஒலிமென் கூந்தல் உரியவால் நினக்கே
பேசுபொருள்:
தலைவியோடு கொண்ட உறவை மறவாது. அவளை விரைந்து மணஞ்செய்து கொள்ளுமாறு தோழி, தலைவனை வற்புறுத்தல்.
பொருள்:
யானைக்கன்று, தன் தாய்மடியில் பால் அருந்திக் கொண்டிருக்கும்போதே. வீட்டின் முற்றத்தில் வினைந்த நினையினை உண்ணுதற்கு இடமாகிய பெரிய மலைநாட்டின் தலைவனே, கேடு வந்துற்றபோது விருப்புடன் ஒருவர் செய்த உதவியை, அரசு கட்டிலில் அமரும் சிறப்பு பெற்றபின் மறந்த அரசனைப் போல, (களவுக் காலத்தில்) உணக்கு நாம் செய்த நன்மையை / உதவியை மறவாது ஒழுகுவாய் ஆயின், தலைவியினுடைய, மெல்லிய மயிலிறகு போன்ற கூத்தல் உளக்கே உரிமையுடையதாகும்.
திணை :- குறிஞ்சி
துறை :- திருமணத்தின் அவசியத்தை வலியுறுத்தல் (வரைவிடை வைத்துப் பிரிவாற்குத் தோழி கூறியது.)
இது வரைவு கடாவுதல், தலைவியைத் திருமணம் செய்யும்படி, தலைவனை வற்புறுத்துவதாக அமைகின்றது.
தலைவியின் மதிநுட்பம்:
தலைவனின் ஆற்றலை உள்ளுறை / இறைச்சியூடாக விளக்குதல்.
உவமையூடாகத் தலைவன் நன்றி மறக்காது. தdக்குரிய கடமையைச் செய்யவேண்டுமென்று வற்புறுத்தல்
தனது கருத்தை வலியுறுத்துவதற்காக தோழி உவமை. இறைச்சி என்பவற்றைக் கையாண்டு
1) பெண்யானை முற்றத்துத் jpனையைத் நின்றபடியே தன் கன்றுக்குப் பாலூட்டுகின்றது. அங்ஙனமே நீயும் பொருள் தேடும் உன் கடமையை நிறைவேற்றுவதோடு, இவளது. நலனையும் பேண வேண்டும். (இவ்வாறு குறிப்புத் தோன்றலினால் இது இறைச்சி அணியாகும்)
2) தலைவனே, நீ இதுவரை தலைவியிடம் அனுபவித்த நலங்களை மறந்தவளாக, அவளை விட்டுச் சென்றுவிடாமல், அவளை மணமுடித்து இல்லறம் நடத்துவாய் எனின், அவன் மகிழ்வாள், அழகோடு துலங்குவாள். அவளது அழகு உனக்கு உரியதாய் அமையும். (நீ பிரியின் அவள் துன்புறுவாள், அழகிழப்பாள், அவளது அழகு உனக்கு உரியதல்லாததாக ஆகிவிடும் என்பது உட்கருத்து)
3) தான் பலமிழந்து இருந்த காலத்தில் பிறரின் உதவியைப்பெற்று அரசுகட்டில் ஏறியபின், jனக்கு முன்பு உதவிசெய்தவர்களை மறந்துவிடும் மன்னன் போல நன்றி மறந்தவனாக நீ அமையவில்லையெனில், தலைவியின் நலமெல்லாம் உனக்கு உரியநாகும் என்னும் தோழியின் அறிவுரையில் தலைவன் தலைவியை விட்டுப் பிரிவது அறம் அன்று என்ற கருத்துத் தொனிக்கிறது.
இதன் மூலமும் "விரைவாக மzஞ்செய்து கொள்ள வேண்டும்" என்பது வலியுறுத்தப்படுகின்றது.
தோழியின் மதிநுட்பம்:
தலைவனது செயலை யானையின் செயலுக்கு உவமித்து, குறிப்பின் மூலம் அவன் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை வலியுறுந்துதல்.
நன்றி மறந்தவரது செயற்பாட்டை எடுத்துக்கூறி, தலைவனது தற்போதைய நிலையை எடுத்துக்காட்டல்.
இவற்றின் மூலம் தலைவனது கடமையையும் பொறுப்பையும் எடுத்து விளக்குதல்,
அரும்பதங்கள்
v கன்று யானைக்கன்று
v முன்றில் முற்றம்
v கெட்டித்து - கேடு நேர்ந்த இடத்து
v gpb - பெண் யானை
v பெருங்கல்நாடு - பெரிய மலை நாடு
v கலிமயில் - ஆரவாரம் மிக்க மயில்
v கலாபம் தோகை / பீலி
v கட்டில் - அரசு கட்டில் / அரியணை
