10.9.25

A/L கட்டுரை பேராசிரியர் கா. சிவத்தம்பியின் பங்களிப்பு

தமிழிலக்கிய விமர்சன வளர்ச்சிக்குப் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் பங்களிப்பு

"தோன்றில் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றிலில் தோன்றாமை நன்று"
என்ற வள்ளுவரின் கூற்றுக்கு இணங்க 10.05.1932 ஆம் ஆண்டு கார்த்திகேசு வள்ளியம் மகனாக பிறந்தார். தனது ஆரம்பக் கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயத்திலும். கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரியிலும் கற்ற இவர் பின்னர் தம்பதியர்க்கு உயர்கல்வியை கொழும்பு சாஹிரா கல்லூரியில் கற்று பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்ட இவர் லண்டன் பேர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் "பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் நாடகம்" எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து கலாநிதிப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார். இவரது தமிழ்ப் பணிகள் பல்துறை ஆற்றல் மிக்கனவாகும் அவற்றில் குறிப்பாக இவருடைய விமர்சன(திறனாய்வுப் பணி முக்கியமானதாகும் அப்பணி குறித்து அலசி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

இவர் ஈடுபாடு கொண்ட ஆய்வுத் துறைகளாக சங்ககால இலக்கியங்கள் தொடக்கம் நவீன இலக்கியங்கள் வரை; நாடகத்துறை, நுண்கலைகள் வெகுஜன ஊடகங்கள். நாட்டாரியல், ஈழத்து இலக்கியம். விமர்சனம் போன்றவை குறிப்பிடத்தக்கனவாகும் இவருக்கு பேராசிரியர் கைலாசபதி தொம்சன் ஆகிய அறிஞர்களுடனான தொடர்பு பேராசிரியர் சிவத்தம்பி அவர்களை சிறந்த விமர்சகராக உலகறியச் செய்ய துணைபுரிந்தது. இவர் மார்க்சிய விமர்சகராக விளங்கினார். பொன்னம்பலம், கந்தையா போன்ற மார்க்சிய வாதிகளின் தொடர்பு இவரை மார்க்சியவாதியாக உருவாக்கியது.

"பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் நாடகம்" என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்ற இவர் பேராசிரியர் தொம்சனின் மூலம் மார்ச்சிய அறிவை வளர்த்துக் கொண்டார். மரபு இலக்கியம், தமிழ் இலக்கியம் என்ற இரு நிலைப்பட்ட இலக்கிய போராட்டத்தில் சிவத்தம்பியின் விமர்சனப் பார்வை அமைந்தது. இதனால் நவீன இலக்கிய எழுச்சிக்குப் பக்கதுணையாக அமைந்தது.

இவருடைய விமர்சனப் பார்வை பண்டைய இலக்கியம், நவீன இலக்கியம், இலக்கண இலக்கியம், நாடக இலக்கியம், திரைப்பட இலக்கியம் என பல்துறை சார்ந்ததாக அமைந்திருந்தன. இவர் விமர்சனம் தொடர்பாக பல நூல்களை எழுதியுள்ளார் அவற்றுள் "பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம், இலக்கணமும் சமூக உறவுகளும், ஈழத்தில் தமிழ் இலக்கியம், தமிழ் கற்பித்தலில் உன்னதம் போன்றவை குறிப்பிடத்தக்கன. இவர் பல்வேறு விமர்சன கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தொல்காப்பியக் கவிதையில், பண்டைத் தமிழ் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி, தமிழில் நவீனத்துவம் பின் நவீனத்துவம், இலக்கியமும் சமூக உறவுகளும், என்பன குறிப்பிடத்தக்கன. பேராசிரியர் அவர்கள் ஈழத்து தமிழிலக்கியத்துக்கு மட்டுமல்ல தமிழுக்குச் செய்திருக்கும் கொடுப்பனவுகள் பல, மார்க்சியரான பேராசிரியரின் சமூக நோக்கு வெகு ஆழமும் அகலமும் உடையது. இவர் தமிழ் இலக்கியம் பற்றிய நுண்மையான திறனாய்வு பார்வையை இவருடைய தமிழில் இலக்கிய வரலாறு எனும் நூல் படம் போட்டுக் காட்டுகிறது. ஒரு நாட்டின் சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டு கூறுகளை ஆய்வு செய்வதாக இந்நூல் அமைகிறது. இவரது விமர்சனக் கட்டுரைகள் பல சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. இந்த வகையில் "இளங்கதிர்", "தமிழோசை", "புலம்", "உயிர்மை", "மல்லிகை", "ஞானம்" போன்றவை குறிப்பிடத்தக்கன. இவர் நாவல், சிறுகதை, கவிதை நாடகம் போன்ற பல்துறை சார்ந்த திறனாய்வுக் கட்டுரைகளுள் நூல்களும் முக்கியமானவையாக விளங்குகின்றன. இவர் நாவல் பற்றிய விமர்சன நூலாக "நாவலும் வாழ்க்கையும்" அமைகிறது. இவரது சிறுகதை பற்றிய விமர்சன நூலாக "தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்" அமைகிறது இவரது பழந்தமிழ் இலக்கியம் பற்றிய விமர்சனமாக திணைக்கோட்பாடு, (ஆய்வுக்கட்டுரை) எனும் கட்டுரை அமைகிறது. "பழந்தமிழ்ச் சமூகத்தில் நாடகம்" எனும் நூல்கள் அமைகிறது. இவரது பக்தி இலக்கியங்கள் பற்றிய விமர்சனங்களாக "மதமும் மானிடமும்", "மதமும் கவிதையும்" போன்ற நூல்கள் அமைகின்றன.

இலக்கியத்தைப் பொழுதுபோக்கு சாதனமாக பார்க்காது மனித வாழ்க்கையை உணர்வை வெளிப்படுத்தும் படைப்பாக அமைந்து அவர்களது இன்னல்களையும், உழைப்புக்களையும், வலிகளையும் பதிவு செய்ய வேண்டும் என்ற நிலையில் இலக்கியம் அமைய வேண்டுமெனக் கருத்துக் கூறியவர். தமிழ் இலக்கிய ( வரலாற்று நூல்கள் இன்றுவரை எழுதப்பட்டமுறைமை பற்றிய விமர்சனம் அமைகிறது. இலக்கிய விமர்சன ஆய்வுகளை இலக்கியம் தவிர்ந்த ஏனைய துறைகளுடன் (சமூகம், வரலாறு, தத்துவம், கலைகள், நாட்டாரியல், அரசியல், பொருளாதாரம் முதலியவை) தொடர்புபடுத்தி அணுகியமை குறிப்பிடத்தக்கது.

தமிழில் நாடகத்துறையினர் தொன்மையையும் சிறப்பையும் ஆராய்ந்து வரலாற்றில் மறைந்து கிடந்த உண்மைகளை வெளிக் கொணர்ந்த பேராசிரியர்களில் சிவத்தம்பியும் முக்கியமானவர் ஆவர். இன்றைய திறனாய்வாளர் வரிசையில் பேராசிரியர் கைலாசபதி போல் பேராசிரியர் சிவத்தம்பியும் நின்று நிலைப்பார் என்பது திண்ணம். இவர் 06.07.2011 அன்று இறைவனடிச் சேர்ந்தார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக