10.9.25

A/L கட்டுரை வெகுஜன ஊடகங்களில் பெண்கள்

வெகுசன ஊடகங்களில் பெண்கள்


இன்று உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுவரும் ஊடகமாக வெகுசன ஊடகம் விளங்குகின்றது. ஊடகங்களில் வெற்றிக்கும் மக்கள் மனம் கவரக்கூடியதாகவும் அவ்வூடகம் வளர வேண்டும். ஆயின் அதற்கு அதில் பணிபுரிவோர் முக்கிய அம்சம் ஆகும். இந்த வகையில் வெகுசன ஊடகங்களில் அண்மைக் காலங்களில் பெண்களின் பங்களிப்பு முக்கிய இடம்பெற்று வருகின்றது. வெகுசன ஊடகம் எனும் போது இன்று அச்சூடகம் என்ற வகையில் பத்திரிகை, சஞ்சிகை போன்றனவும் இலத்திரனியல் ஊடகம் என்ற வகையில் வானொலி, தொலைக்காட்சி, சினிமா போன்ற துறைகளையும் குறிப்பிடலாம்.

இன்றைய வெகுசன ஊடகங்களில் இன்று பெண்களை தமது ஊடகங்களில் எவ்வாறு பயன்படுத்துகின்றன என நோக்கும்போது அறிவியல் ரீதியான நிகழ்ச்சிகள் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரங்களில் பெண்கள் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. இதனால் வெகுசனங்களால் மக்களை கவரக்கூடியதாகவும் பலர் விரும்பி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும், அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்காகவும் இவ்வாறு ஊடகங்களில் பெண்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

வெகுசன பெண் ஊடகங்களில் காட்சிப்படுத்தப்படும் பற்றிய சித்தரிப்புக்களைப் பற்றி நோக்கும் போது ஆண்கள் பார்வையில் பெண்கள் ஒரு கவர்ச்சிப் பொருளாக நோக்குவதற்கும் அதிகளவில் தமது ரசிகர்களை கவர்வதற்காகவும் ஆண்களை பெருமளவில் கவர்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். தொழில் ரீதியாகவும் கல்வி வீட்டு வேலை, வீட்டுப் பராமரிப்பு போன்ற பணிகளிலும் பெண்கள் பயன்படும் முறை பற்றியும் ஊடகம் அதிகமாக முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதனை அவதானிக்கலாம்
வெகுசன ஊடகங்களால் பெண்களுக்கு அதிக நன்மைகள் கிடைப்பதாக கூற முடியாவிட்டாலும் ஓரளவு நன்மைகள் கிடைப்பதனை அவதானிக்கலாம். இன்றைய பெண்கள் அறிவுப் பெருக்கம் பெறுவதற்கும் தமது பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கும், விழிப்புணர்ச்சிகள் ஏற்படுவதற்கும் பெண்களுக்கு வெகுசன ஊடகங்கள் அமைகின்றன. வெகுசன ஊடகங்களால் பெண்கள் பல தீமைகளையும் எதிர்கொள்பவர்களாக விளங்குகின்றனர். இந்தவகையில் தமிழர் பண்பாட்டுச் சீரழிவுகளுக்கு காரணமாகின்றனர். இவர்கள் அணியும் உடை, நடை, பாவனைகளை குறிப்பிடலாம். மற்றும் உளச் சிதைவுகளையும் இவர்கள் எதிர் நோக்குபவர்களாக விளங்குகின்றனர். அத்துடன் மூளைச் சலவைக்கு ஆட்படுதல் மற்றும் தனிமைப்பட்டுப் போதல் போன்ற தீமைகளையும் அனுபவிப்பவர்களாக இருக்கின்றனர்.

இன்றைய வெகுசன ஊடகங்கள் பெண்களை பெண்களாக மதிப்பதுடன் அவர்களின் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அத்துடன் பெண்களை அவர்களது பண்பாட்டுக் கலாசாரங்களுக்கு அமைவாக மதித்து நடத்த வேண்டியதும் இன்றியமையாதது ஆகும். அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு ஊடகங்கள் பெண்களை பயன்படுத்தினாலும் பெண்களும் தாம் பணியாற்றுகின்ற ஊடகங்களை தக்கவகையில் பயன்படுத்தி தமது அறிவு, ஆற்றல் என்பவற்றை வளர்ப்பதுடன் நாட்டின் வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் முன்னின்று உழைக்க வேண்டும் தமது பொருளாதார நலனில் மட்டும் அக்கறை செலுத்தாது தனி மனித தேவைகளையும் சமூக அந்தஸ்துக்களையும் கருத்தில் எடுத்து பணியாற்ற வேண்டும்.

 

 

 




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக