சங்க கால அகத்திணை இலக்கியத்தில் முதல், கரு, உரிப் பொருள் விளக்கம்.
முதற்பொருள்.
இலக்கியத்தின் களமும் காலமும் முதற்பொருள் எனப்படும். களம் (நிலம் ) இயற்கைத் தன்மைக்கேற்ப நிலம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
i. மலையும் மலைசார்ந்த இடம் - குறிஞ்சி
ii. காடும்காடு சார்ந்த இடம் - முல்லை
iii. வயலும் வயல்சார்ந்த இடம் - மருதம்
iv. கடலும் கடல்சார்ந்த இடம் - நெய்தல்
V. மணலும் மணல் சார்ந்த இடம் - பாலை.
காலம் :
பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்.
பெரும்பொழுது :
பருவ மாறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு ஒரு வருடத்தை ஆறு
பருவங்களாக வகுத்தனர்.
கூதிர் காலம்
கார் காலம்
முன் பனிக்காலம்
பின் பனிக்காலம்
இளவேனிற் காலம்
முதுவேனிற் காலம்
சிறு பொழுது :
ஒரு நாளினை ஆறாக வகுத்தமை.
மாலை,
சாமம்,
வைகறை,
காலை,
நண்பகல்,
ஏற்பாடு.
ஒவ்வொரு திணைக்கும் பெரும்பொழுது எது சிறுபொழுது எது என வகுக்கப்பட்டிருந்தது.
உ + ம் : முல்லைக்கு பெரும்பொழுது- கார்காலம், சிறுபொழுது -மாலை
கருப்பொருள் :
நிலங்களுக்குரிய இயற்கைச் சூழல், தெய்வம், பறவை, விலங்குகள், ஊர், பூ, மரம், உணவு, யாழ், பறவை இவை போன்ற பதினான்குமாகும்.
உரிப்பொருள் :
இலக்கியத்திற்கு உயிரான பொருளான ஐவகைக் காதல் ஒழுக்கங் களாகும். அவை:
குறிஞ்சி - புணர்தல்,
முல்லை - இருத்தல்,
மருதம் ஊடல்,
நெய்தல் இரங்கல்,
பாலை பிரிதல் / உடன்போக்கு.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக