10.12.25

OL/2024(2025)/48-T-I,- தமிழ் இலக்கிய நயம் கடந்தகால வினாத்தாள்- I

OL/2024(2025)/48-T-I,

 

 

 

தமிழ் இலக்கிய நயம்

கடந்தகால வினாத்தாள்- I

1. (i) தொடக்கம் (v) வரையுள்ள வினாக்களுக்குச் சுருக்கமான விடை எழுதுக.

 

(i). தண்டு உலாவிய தாமரைப் பொய்கையில்

மொண்டு நீரை முகத்தருகு ஏந்தினாள்;

'கெண்டை கெண்டை' யெனக்கரை ஏறினாள்;

கெண்டை காண்கிலள் நின்று தயங்கினாள்.

() தலைவி பதற்றத்தோடு கரையேறியதன் காரணம் யாது?

() கைகளில் நீரை ஏந்தியபோது அதில் கெண்டை மீன் தென்பட்டமை.

(,) அதன் மூலம் கவிஞர் உணர்த்த முற்படும் விடயம் யாது?

(ஆ). தலைவியின் கண்களின் அழகு

 

(ii). "மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ வாடை அது போர்த்துக்

கருங்க யல்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி"

(). காவேரியின் ஓட்டம், இங்கு எவ்வாறு விவரிக்கப்படுகிறது?

() காவேரி என்ற பெண், வண்டுகள் இருபக்கமும் மிகுதியாக ஒலிக்க, அழகிய பூவாகிய ஆடையைப் போர்த்து, கயல் மீன்களாகிய கண்களை விழித்து அசைந்து நடப்பதாக விபரிக்கப்பட்டுள்ளது.

(). இதிற் பயின்றுள்ள உருவகங்களை இனங்கண்டு விளக்குக?

(ஆ). உருவக அணி

பூவாடை : பூ ஆடையாக உருவகிக்கப்பட்டுள்ளது.

கருங்கயல் கண் : கயல் மீன்கள். காவேரியின் கண்களாக உருவகிக்கப்பட்டுள்ளன.

காவேரி : காவேரி பெண்ணாக உருவகிக்கப்பட்டுள்ளது.

 

(iii). "அவன் வளர்ந்து பெரியவனாகிறான்

மரக்குதிரையில் மீண்டும் சவாரி செய்கிறான்

ஒரு சடங்கின் மூலம்

தன் இளமையை அறிவிக்கிறான்

இரவு கழிந்ததும்

குதிரை உருமாறுகிறது"

(). இங்கு 'அவன்' என்னும் சுட்டு யாரைக் குறிக்கிறது? அவனது பொதுவான இயல்பு யாது?

() ஆணை, பெண் மீது ஆதிக்கம் செலுத்துதல்

(). மரக்குதிரை' யாரைச் சுட்டுகின்றது? அக் குறியீடு மூலம் கவிஞர் உணர்த்த முற்படும் விடயம் யாது?

) பெண்ணை , பெண்ணடிமைத்தனம்

 

(iv). "காற்றை யாரோ கடத்திக்கொண்டு போன பிரமையில், மரங்கள் சோகம் சுமக்கின்றன. எதிர்பார்ப்பில்

சிறகு முளைத்த மனித ஈக்கள், என்னை நோக்கி விரைகின்றன. கனவிலும் நினைவிலும்

கடிதக்காரனை ஆராதிப்பதில் ஆசுவதம் காணும் புது யுகமிது."

() காற்றுத் தொடர்பான விபரிப்பால் உணர்த்தப்படுவது யாது? அதை உணர்த்தும் பாங்கில்

வெளிப்படும் நயத்தை விளக்குக?

() - காற்று வீசாத நிலை

காற்றை யாரோ கடத்திக் கொண்ட போய் விட்டதாகக் கூறல்

காற்று இன்மையால் மரங்கள் அசையவில்லை என்பதை மரங்கள் சோகமாக நிற்பதாகக் கூறல்.

() 'மனித ஈக்கள்' என்ற உருவகம், மனிதருடைய எத்தகைய இயல்பினை உணர்த்துகின்றது?

அந்த உருவகத்திற் காணப்படும் பொருத்தப்பாடு யாது?

()- ஆர்வத்தோடு சூழுதல்

தாம் விரும்பும் பொருளை ஈக்கள் விரைந்து சென்ற கூட்டமாக மொய்ப்பது போல மக்களும் தபாற்காரனை எதிர்பார்ப்போடு சூழ்ந்து கொள்கின்றனர் எனக் குறிப்பிடுதல்.

 

(v). மாங்குடி மருதனார் என்ற புலவர் தம்முடைய அரசனுக்குண்டான போர் வெறியைத் தணிக்க 'மதுரைக்

காஞ்சி' என்றதொரு நூலையே (அவ்வளவு பெரிய நூல் அது) இயற்றினார் என்றால், பழந்தமிழர்

போர் வெறி என்ற பாலைவனத்தில் இஃது ஒரு நீர் ஊற்றுப் போன்று காணப்படுகின்றது.

() பழந்தமிழர் போரில் காட்டிய தீவிர ஈடுபாடுமீது ஆசிரியர் கொண்ட வெறுப்பு எவ்வெவ்வாறு

வெளிப்படுகின்றது?

(). போர் வெறி என்று சுட்டுதல். - அதைப் பாலைவனம் என உருவகித்தல்.

(). மதுரைக்காஞ்சி என்ற நூல்மீது ஆசிரியர் கொண்ட மதிப்பு எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றது?

() - பாலைவனத்தின் ஒரு நீரூற்று எனல்- அது ஒரு பெரிய நூல் எனக் குறிப்பிடுதல்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக