G.C.E.O/L,
நாட்டார் பாடல்
கடந்தகால வினாத்தாள்
01.(x) "ஏர் தழைக்கவேணும் தம்பிரானே
எல்லோரும் வாழவேணும் தம்பிரானே"
(அ) ஏர் என்பதற்கு நிகரான பிறிதொரு சொல்லைக் குறிப்பிடுக?
(அ ). ஏர்- மேழி, கலப்பை
(ஆ) 'ஏர் தழைக்க வேணும்' என்ற தொடரால் உணர்த்தப்படுவது யாது?
(ஆ). விவசாயம் /வேளாண்மை சிறக்க வேண்டும்/உழவுத்தொழிலின் சிறப்பு/ கமம்
02. (ii). கைவிடுவேன் என்று எண்ணிக் கவலைப்படாதே கண்ணார்
அல்லாமேல் ஆணை - உன்னை அடையாட்டி காட்டுப் பள்ளி
ஓதிப் படிச்சி ஊர் புகழ வாழ்ந்தாலும்
ஏழைக்குச் செய் தீங்கை - அல்லா எள்ளளவும் ஏற்க மாட்டான்
(அ) காதல்மீது தலைவன் கொண்டுள்ள தீவிரம்
தலைவியை அடையாவிட்டால் இறந்துவிடுவேன் எனல்
(ஆ) அவனது அறவுணர்வு
என்பன வெளிப்படுமாற்றை விளக்குக.
(ஆ). காதலித்த பெண்ணைக் கைவிடக்கூடாதென்ற எண்ணம்
01. (vi) "சினந்தரிவி வெட்டும் இளந்தாரிமாரை
கண்ணூறு படாமற் காரும் ஐயனாரே"
(அ) இங்கு 'இளந்தாரிமார்' எனச் சுட்டப்படுவோர் யாவர்?
(அ) இளைஞர்கள் / வாலிபர்கள்
(ஆ) 'காரும்' என்ற சொல்லின் பொருளைத் தருக?
(ஆ) காத்திடும் / காக்க வேண்டும்
01. (iv) "கண்ணார் அல்லாமேல் ஆணை உன்னை அடையாட்டிக் காட்டுப்பள்ளி"
(அ) இங்கு 'ஆணை' என்பது எதனைக் குறிப்பிடுகிறது?
அ. சத்தியம் செய்தல்
(ஆ) 'அடையாட்டி' என்ற சொல் குறிக்கும் பொருள் யாது?
ஆ. திருமணம் செய்யாதுவிடில்
6. நாட்டார் பாடல்கள் என்ற பகுதியில்,
(அ) உழவரது வேண்டுதல்
பட்டி பெருக வேண்டும்
பாற்பானை பொங்க வேண்டும்
நெற்செய்கை பெருக வேண்டும்
நாடு தழைக்க, நல்ல மழை பெய்ய வேண்டும்
வேளாண்மை சிறக்க வேண்டும்
எல்லோரும் வாழ வேண்டும்
அருவி வெட்டும் இளைஞர்களுக்கு கண்ணூறு, நாவூறு ஏற்படாமல் இறைவன் காக்க வேண்டும்
(ஆ) அரிவி வெட்டுதல் பற்றிய சித்திரிப்பு ஆகியன இடம்பெறுமாற்றை விளக்குக.
வளர்ந்த இளந்தாரிகள் வரிசையாக நின்று அரிவி வெட்டுதல் (ஆற்றுநீர் வருவதுபோல, புள் அதன்
பின் வருவது போல, சேறும் வெள்ளமும் சேர்ந்து வருவது போல, நாரை இனம் மேய்ந்து வருவது
போல)
சினந்து (வேகத்தோடு அரிவி வெட்டுதல்
அரிவி வெட்டும் கருவி
(மட்டுருக்கு அரிவாள், மாவிலங்கம்பிடி, பிடியில் வெள்ளிப்பூணி)
G.C.E.O/L-2019
01. (iv) "மாமி மகளே என்ர மருதங்கிளி வங்கிசமே ஏலங்கிராம்பே"
(அ) 'வங்கிசம்' என்பது எதனைக் குறிக்கிறது?
அ. பரம்பரை / வம்சம் / குடும்பம்
(ஆ) 'கிராம்பே' என்பதை எழுத்து வழக்கில் தருக?
ஆ. கராம்பு/ கிராம்பு
01. (viii) "மண்ண நம்பி ஏலேலோ மரமிருக்க ஐலசா
மரத்த நம்பி ஏலேலோ கிளையிருக்க ஐலசா
கிளைய நம்பி ஏலேலோ இலையிருக்க ஐலசா
இலைய நம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா
பூவ நம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா"
(அ) இந்தப் பாடலைப் பாடும் தொழிலாளர் யாவர்?
அ. மீனவர்
(ஆ) இந்தப் பாடல் வரிகளினூடாகக் கவிஞர் எதனைப் புலப்படுத்த விரும்புகிறார்?
ஆ. ஒன்றில் ஒன்று தங்கியிருத்தல் என்ற நம்பிக்கை
7. "ஆசைக்கிளியே ... " என்று தொடங்கும் நாட்டார் பாடலில்,
(அ) காதலி பற்றிய வருணனை
காதலன் தனது காதலியை பலநிலைகளில் வைத்து வர்ணிக்கிறான்.
ஆசைக்கிளியே, ஓசைக்குரல் உடையவளே
நீலவண்டே
மருதங்கிளி வங்கிசமே
ஏலங்கிராம்பே
சீனத்துச் செப்பே
சிங்காரப் பூ நிலவே
(ஆ) காதலனின் மன உறுதி ஆகியன வெளிப்படுமாற்றை விளக்குக.
உன்னைக் கைவிடமாட்டேன் கவலைப்படாதே என ஆறுதல் கூறுதல்.
அல்லாஹ்வை முன்வைத்து சத்தியம் செய்தல்.
உன்னை அடையாவிட்டால் முடிவு மரணம் என்பதை வெளிப்படுத்துதல்.
சிறப்பாக வாழ்ந்தாலும் ஏழைக்குத் தீங்கு செய்தால் அல்லாஹ் ஏற்கமாட்டான் என்று கூறுவதன் மூலம்
உன்னை ஏமாற்ற மாட்டேன் என நம்பிக்கையை ஏற்படுத்தல்.
G.C.E.O/L-2017
01. (vi) "வளர்ந்தருவி வெட்டும் இளந்தாரிமாரை
நாவூறு வாராமற் காரும் ஐயனாரே."
(அ) இப்பாடல் எத்தொழிலோடு தொடர்புபட்டது?
(அ.) அரிவி வெட்டும் தொழிலோடு / உழவுத் தொழிலோடு / அறுவடை செய்யும் தொழிலோடு
(ஆ) இப்பகுதியில் இடம்பெற்றுள்ள கிராமிய நம்பிக்கை யாது?
(ஆ.) நாவூறு தொடர்பான நம்பிக்கை / ஐயனார் தொடர்பான நம்பிக்கை (கடவுள் நம்பிக்கை)
G.C.E.O/L-2016
01. (v) "சீனத்துச் செப்பே - என்ர சிங்காரப் பூநிலவே
வானத்தைப் பார்த்து - மச்சி வாடுவது என்னத்திற்கோ?"
(அ) இங்கு பயின்றுள்ள அணியை இனங்காண்க?
(அ) உருவக அணி
(ஆ) 'மச்சி' என்ற உறவுமுறைப் பெயரின் திருத்தமான வடிவம் யாது?
மச்சாள் / மைத்துனி / மதினி / நாத்தனார்
02. (ii). "பட்டி பெருகவேணும் தம்பிரானே
பாற்பானை பொங்கவேணும் தம்பிரானே
மேழி பெருகவேணும் தம்பிரானே'
நாடு தழைக்கவேணும் தம்பிரானே
நல்ல மழை பெய்யவேணும் தம்பிரானே
ஏர் தழைக்கவேணும் தம்பிரானே
எல்லோரும் வாழவேணும் தம்பிரானே"
(அ) இப்பாலில் கலப்பையைக் குறிப்பனவாக அமைந்துள்ள இரண்டு சொற்களும் எவை?
(அ) மேழி, ஏர்
(ஆ) விவசாயியின் பரந்த நோக்கு இப்பாடலில் எவ்வாறு புலப்படுகிறது?
(ஆ) நாடு வளர வேண்டும், நல்ல மழை பெய்ய வேண்டும், உழவுத் தொழில் (ஏரி) சிறக்க வேண்டும்.
எல்லோரும் வாழ வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக