குற்றாலக்குறவஞ்சி
கடந்தகால வினாத்தாள்
G.C.E.O/L- 2024(2025)
2.(i). நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்
நெருங்கக் காண்பது கன்னலிற் செந்நெல்
தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து
சுழலக் காண்பது பூந்தயிர் மத்து
வீங்கக் காண்பன மங்கையர் கொங்கை
வெடிக்கக் காண்பது கொல்லையின் முல்லை
யேங்கக் காண்பது மங்கலபேரி
யீச ராரிய நாடெங்கள் நாடே.
(அ) ஆரிய நாட்டின் வளம்
(அ). மாம்பழங்கள் தொங்குதல்.
தயிர் கடையும் மத்துக்கள் சுழலல்.
வயல்களில் கரும்பும் செந்நெல்லும் காணப்படல்.
முல்லை அரும்புகள் விரிதல்.
(ஆ) அந்நாடு ஒரு புண்ணிய தலம்
என்பன எவ்வாறு உணர்த்தப்படுகின்றன?
(ஆ) அங்கு சேர்ந்தவர்களின் பாவம் நீங்குதல்.
01. (x). (அ) 'கூனலிளம் பிறைமுடித்த வேணி அலங்காரர்'
எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
(அ). சிவன் / குற்றாலநாதர்
(ஆ) 'கூனல் இளம்பிறை' என்பதை விளக்குக?
(ஆ). வளைந்த இளம்பிறை
3. குற்றாலக் குறவஞ்சியில்,
(அ) திரிகூட மலையின் உயர்ச்சி
.குற்றாலமலையில் உள்ள குரங்குகள் சிந்தும் கனிகளுக்காக வானவர்கள் கையேந்துகிறார்கள்
என்பதன் மூலம் தேவலோகத்தைவிட குற்றாலமலை உயர்ந்தது என்பது உணர்த்தப்படுகிறது
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர் என்பதன் மூலம் தேவலோகமும் குற்றாலமலையும்
அருகருகே இருப்பது உணர்த்தப்படுகிறது.
குற்றால அருவியின் அலை வான் வழியாக ஒழுகுகின்றது. அந்த நீரில் வான்வழிச் செல்லும் தேரின்
சக்கரங்களும் குதிரைகளின் கால்களும் வழுக்குகின்றன என்பதன் மூலம் வானத்தை விட குற்றாலமலை
உயர்ந்தது என்பது உணர்த்தப்படல்.
தேனலர் சண்பகவாசம் வானுலகில் வெடிக்கும் என்பதன் மூலம் மலைக்கு அண்மையில்
தேவலோகம் இருப்பது கூறப்படல்.
கவனசித்தர் வந்து காயசித்தி விளைத்தல்
குற்றாலநாதர் வீற்றிருத்தல்
(ஆ) அதன் வளம்
ஆகியனவற்றை வெளிப்படுத்துவதில் ஆசிரியர் காட்டும் திறனைத் தெளிவுபடுத்துக.
.நீர்வளம் (முழங்குதிரைப் புனலருவி கழங்கென முத்தாடும், முற்றமெங்கும் பரந்து பெண்கள்
சிற்றிலைக் கொண்டோடும்)
இயற்கை உணவு வளம் - (கிழங்கு கிள்ளித் தேன் எடுத்து வளம்பாடி நடிப்போம் செழுங்குரங்கு
தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்)
செய்கை பண்ணப்பட்ட உணவு - தினை
பெறுமதிமிக்க யானைத் தந்தத்தால் தினை குற்றுதல்
சண்பக மலர்வாசம் வானுலகுவரைச் செல்லல்
G.C.E.O/L- 2021(2022)
01. (v). 'முழங்கு திரைப் புனலருவி கழங்கென முத்தாடும்'
(அ) இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விளையாட்டு யாது?
கழங்கு
(ஆ) 'முழங்கு திரைப் புனலருவி' என்ற தொடரினை விளக்குக?
ஆரவாரிக்கின்ற அலைகளோடு கூடிய நீரருவி / சத்தம் செய்கின்ற
02. (ii). நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்
நெருங்கக் காண்பது கன்னலிற் செந்நெல்
தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து
சுழலக் காண்பது பூந்தயிர் மத்து
வீங்கக் காண்பன மங்கையர் கொங்கை
வெடிக்கக் காண்பது கொல்லையின் முல்லை
யேங்கக் காண்பது மங்கல பேரி
யீச ராரிய நாடெங்கள் நாடே.
(அ) குற்றாலமலையின் இயற்கை வளம் எடுத்துரைக்கப்படுமாற்றை விளக்குக?
(அ). கரும்பும் செந்நெல்லும் நெருங்கிக் காணப்படுதல்
மாம்பழங்கள் கொத்துக் கொத்தாய்த் தூங்கிக் கிடத்தல்.
வீடுகளில் தயிர்கடையும் மத்துகள் சுழலுதல்.
கொல்லையில் முல்லையரும்புகள் விரிதல்
(ஆ) 'நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்' என்பதன் மூலம் உணர்த்தப்படுவது யாது?
(ஆ) குற்றாலத் தலத்தின் அருட் சிறப்பு (வந்து சேர்ந்தோரின் / வழிபட்டோரின் பாவங்கள் தீரும் என்பதன் மூலம்
குற்றாலக் குறவஞ்சியில்,
G.C.E.O/L- 2020
03. குற்றாலக் குறவஞ்சி யில்,
(அ) மலைச் சிறப்பு
மலைச் சிறப்பு
விலங்குகள் இன்பமாக வாழ்தல்
கானவரும் வானவரும் தொடர்புகொள்ளும் அளவுக்கு, வீழும் அருவியால் செங்கதிரோனது
தேர்க்காலும் பரிக்காலும் வழுக்கும் அளவுக்கு செண்பக மலரின் வாசம் வானுலகில் பரவும்
அளவிற்கு மலை உயரமாக இருத்தல்
கவனசித்தர் காயசித்தி விளைத்தல்
அருவி கழங்கென முத்துக்களைச் சொரிதல், பெண்கள் இயற்றிய சிற்றிலை அழித்துச்செல்லுதல்
செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்
குறும்பலவீசர் குடியிருப்பது.
தேனெடுத்து வளம்பாடி நடித்தல்.
கிம்புரியின் கொம்பொடித்து வெம்புதினை இடித்தல்.
(ஆ) நாட்டுச் சிறப்பு
ஆகியன விபரிக்கப்படுமாற்றை விளக்குக.
எருமைகள் தாமாவே தொடர்ந்து பால் சொரிதல்
வாழை, பலா, தாழை மரங்கள் காணப்படுதல்
மாதம் மும்மாரி பொழிதல்
வருடம் மூன்று விளைவுள்ளமை
சமயநெறி முறைகள் பிழையாது நடத்தல்
மூவுலகால் வலஞ் செய்யப்படுதல்
அங்கு பிறந்தவர், வாழ்பவர், இறப்பவர் அனைவருக்கும் புண்ணியம் கிடைத்தல்
செந்நெல், கன்னல், மாம்பழம், தயிர், மலர், பேரிகை ஆகியவற்றால் சிறப்படையும் நாடு
குற்றால நாதர் குடியிருக்கும் நாடு
01. (ii). "வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்" - இங்கு
(அ) வானரம் என்பது யாது?
ஆண் குரங்கு
(ஆ) மந்தி என்பது யாது?
ஆ. பெண் குரங்கு
02. (iii). முழங்கு திரைப் புனலருவி கழங்கெனமுத்தாடும்
முற்றமெங்கும் பரந்து பெண்கள் சிற்றிலைக் கொண்டோடும்
கிழங்குகிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடிப்போம்
கிம்புரியின் கொம்பெடுத்து வெம்புதினை யிடிப்போம்
செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்
தேனலர் சண்பகவாசம் வானுலகில் வெடிக்கும்
வழங்குகொடை மகராசர் குறும்பலவி னீசர்
வளம் பெருகும் திரிகூட மலையெங்கள் மலையே.
(அ). குற்றால மலையின் நீர்வளம் எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?
அ. - முழக்கமிடும் அலைகளையுடைய அருவியானது கழங்கு விளையாடுவது போல முத்துக்களை வாரிக் கொண்டு செல்லுதல்
அருவி நீர் பெருகி குறவர் இல்லங்களின் முற்றம் தோறும், பரந்து, பெண்கள் மண்ணினால் செய்த சிறு வீடுகளை அடித்துச் செல்லுதல்
(ஆ). 'தேனலர் சண்பகவாசம் வானுலகில் வெடிக்கும்' - என்பதனூடாக உணர்த்தப்படுவது யாது?
ஆ. மலையினுடைய உயர்ச்சி / சண்பக மலர் வாசனையின் சிறப்பு
G.C.E.O/L- 2018
01. (ii). "மாத மூன்று மழையுள்ள நாடு
வருஷ மூன்று விளைவுள்ள நாடு"
(அ) இங்கு குறிப்பிடப்படும் நாடு யாது?
அ.திருக்குற்றாலம் / குற்றால மலை / குற்றால நாடு
(ஆ) விளைவு என்பது எதனைக் குறிப்பிடுகிறது?
ஆ. விளைச்சல்
01. (v). "கிழங்கு கிள்ளித் தேனெடுத்து வளம்பாடி நடிப்போம்
கிம்புரியின் கொம்பெடுத்து வெம்புதினை யிடிப்போம்"
(அ) மேற்குறித்த செயல்களைச் செய்பவர்கள் யார்?
(அ.) குறத்தியர் / குறத்திப் பெண்கள்
(ஆ) இங்கு 'கிம்புரியின் கொம்பு' என்பது எதனைக் குறிக்கிறது?
(ஆ.) யானையின் பூணணியப்பட்ட தந்தத்தை / யானையின் தந்தத்தை
02. (ii). சூழ மேதி யிறங்குந் துறையிற்
சொரியும் பாலைப் பருகிய வாளை
கூழை வாசப் பலாவினிற் பாயக்
கொழும்ப லாக்கனி வாழையிற் சாய
வாழை சாய்ந்தொரு தாழையிற் றாக்க
வருவி ருந்துக் குபசரிப் பார்போல்
தாழை சோறிட வாழை குருத்திடுஞ்
சந்திர சூடர்தென் னாரிய நாடே.
(அ) இப்பாடலில் நாட்டு வளத்தை விவரிப்பதற்கு எடுத்தாளப்பட்டுள்ள விடயங்கள் யாவை ?
(அ.) நீர்நிலைகள்
பால் சொரியும் பசுக்கள்
பயன் தரும் மரங்கள்
(ஆ) இப்பாடலில் இடம்பெற்றுள்ள உவமையின் பொருத்தப்பாட்டினை விளக்குக?
(ஆ.) உவமை
"வரு விருந்துக் குபசரிப்பார் போல் தாழை சோறிட வாழை குருத்திடும்"
உவமையின் பொருத்தப்பாடு
விருந்தினர்களை உபசரிப்பவர்கள் போல தாழையானது பூக்களைச் சோறு போலச் சொரிய,
வாழையானது அதனைப் பெறுவதற்காகத் தனது குருத்து இலையை விரிக்கிறது.
G.C.E.O/L- 2016
3. திருக்குற்றாலக் குறவஞ்சி என்ற பாடப்பகுதியில்,
(அ) நாட்டு வளம்
கரும்பும் செந்நெல்லும் நெருங்கிக் காணப்படுதல்
மாம்பழக் கொத்துக்கள் தூங்கிக் கிடத்தல்
வீடுகளில் தயிர்கடையும் மத்துக்கள் சுழலுதல்
(ஆ) திரிகூடநாதரின் சிறப்பு
என்பன விபரிக்கப்படுமாற்றினை விளக்குக?
வளைந்த இளம்பிறைச் சந்திரனைச் சடாமுடியில் அணிந்த அழகர்
அடியவர்களுக்கு அருளுகின்ற கொடைத் தன்மை உடையவர்
நாத தத்துவத்தின் மெய்ப்பொருளாக அரி, அயன், அரன் என மூன்றுவகையாக விளங்குபவர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக