10.12.25

G.C.E.O/L-2019, தமிழ்மொழியும் இலக்கியமும், கடந்தகால வினாத்தாள் பகுதி 111,

 

 

 

G.C.E.O/L-2019,

தமிழ்மொழியும் இலக்கியமும்,

கடந்தகால வினாத்தாள்

பகுதி 111,

 

 

1. சுருக்கமான விடை தருக.

(i). "கணக்காயரில்லாதவூரும் பிணக்கறுக்கு மூத்தோரையில்லா வவைக் களனும்"

() இங்கே 'மூத்தோர்' என்போர் யார் ?

. அறிவுடையோர் / அறிவும் அனுபவமும் உடையோர் / அறிஞர்

() 'அவைக்களன்' என்பதன் பொருள் யாது ?

. சபை / சபை கூடும் இடம் / அவை

 

(ii). "வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்" - இங்கு

(). வானரம் என்பது யாது?

. ஆண் குரங்கு

 () மந்தி என்பது யாது ?

. பெண் குரங்கு

 

(iii). "இன்பப்பயன் காணச் செய்கின்ற இலட்சியம், சமூகமாகிய உடலுக்கு உயிராக அமைந்துள்ளது."

() இங்கு இடம்பெற்றுள்ள அணி யாது?

. உருவக அணி

() இங்கு உடலாகவும் உயிராகவும் கருதப்படுபவை யாவை ?

.1. சமூகம்

       2. இலட்சியம்

 

(iv). "மாமி மகளே என்ர மருதங்கிளி வங்கிசமே ஏலங்கிராம்பே"

() 'வங்கிசம்' என்பது எதனைக் குறிக்கிறது?

. பரம்பரை / வம்சம் / குடும்பம்

() 'கிராம்பே' என்பதை எழுத்து வழக்கில் தருக?

. கராம்பு/ கிராம்பு

 

(v). "கொற்றத்தார்க் குரிசில் இவர் யார்?"

() இவ்வாறு வினவியவர் யார்?

. குகன்

() 'கொற்றத்தார்க் குரிசில்' எனக் குறிப்பிடப்படுபவர் யார்?

. பரதன்

 

(vi).  "திணிமணற் செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇ"

() இங்கு குறிப்பிடப்படும் விளையாட்டு யாது?

. பாவை விளையாட்டு / வண்டற்பாவை விளையாட்டு

() இங்கு குறிப்பிடப்படும் பாவை எதனால் ஆக்கப்படுகிறது?

. மணல் / மண் / வண்டல்

 

(vii). "அங்கப்பாரு மனே உன்ட மூத்த வாப்பா தலய, சூப்பின பனங்கொட்ட மாதிரி"

() 'மூத்த வாப்பா' எனக் குறிக்கும் உறவுப் பெயருக்குச் சமனான வேறு பெயர் யாது?

.. பாட்டன் / தாத்தா / பேரன்

() இதில் இடம்பெற்ற அணி யாது ?

  . உவமையணி

 

(viii).  "நெஞ்சகத்தை நிறைத்திருக்கும் நிர்மலமாம் வானில்

நிறைமதி தன் துணைவியர்கள் சூழவரும் கோலம்"

() இங்கு களங்கமின்மையை உணர்த்தும் சொல் யாது?

. நிர்மலம்

() 'துணைவியர்கள்' என்று குறிப்பிடப்படுபவை யாவை?

 . நட்சத்திரங்கள்

 

(ix). "நண்பர் 486 கம்பியூட்டர், 486 கம்பியூட்டர் என்று உச்சாடனம் செய்தவாறே அதன் வீரப்பிரதாபங்களைப்

பற்றி ஒரு பரணி பாடினார்"

() இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பிரபந்தம் யாது?

. பரணி

() உச்சாடனம் செய்தல் என்பதன்மூலம் உணர்த்தப்படுவது யாது?

  . மீண்டும் மீண்டும் கூறல்

தொடர்ந்து கூறல்

 

(x). "முந்து ஊர் வெம் பணிக்கொடியோன் மூதூரில்"

() இங்கு 'பணிக்கொடி' என்பது எதனைக் குறிக்கிறது?

. பாம்புக் கொடி

() இங்கு 'மூதூர்' எனக் குறிப்பிடப்படுவது யாது?

 .அஸ்தினாபுரம் / குருநாடு

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக