7.12.25

G.C.E.O/L, தனிப்பாடல், கடந்தகால வினாத்தாள்

தனிப்பாடல்

கடந்தகால வினாத்தாள்

G.C.E.O/L- 2024(2025)

01. (iv)."வெங்கட் பிறைக்கும் கரும்பிறைக்கும்

மெலிந்தப் பிறைக்கும் விழிவேலே"

() பிறையை 'வெங்கட் பிறை' என்று கூறுவதன் காரணம் யாது?

(). வெங்கட்பிறை பிரிந்த காதலர்களுக்கு வருத்தம் ஏற்படுத்துவதால் / தலைவன் இல்லாதது தலைவியை வருத்தல் / துன்பம் தருதல் / அவளை வருத்துகின்றது.

() இதில் இடம்பெற்றுள்ள அணியை இனங்கண்டு விளக்குக?

() உருவக அணி, விழி வேலாக உருவகிக்கப்பட்டுள்ளது.

02.(iii). ஆடிக் குடத்தடையு மாடும்போ தேஇரையும்

மூடித் திறக்கின் முகங்காட்டும் - ஓடிமண்டை

பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்

உற்றிடுபாம் பெள்ளெனவே யோது,

() சிலேடையாக இங்கே ஒப்பிடப்படுவன யாவை?

() பாம்பு, எள்

() இந்த ஒப்பீடு பொருத்தமாக அமையும் தன்மையை விளக்குக.

().01.. பாம்பு ஆடிய பின் குடத்தை அடையும் ஆடுகின்ற போது இரையும்.

செக்கிலிட்டு ஆடியபின் எண்ணையாக குடத்தை அடையும்.

02. ஆடுகின்ற போது இரையும்

செக்கில் ஆட்டப்படும் போது இரைந்து சத்தம் உண்டாகும்

03. கூடையின் மூடியைத் திறக்கும் போது முகத்தைக் காட்டும்

எண்ணை ஊற்றப்பட்ட பாத்திரத்தின் மூடியைத் திறந்தால் பார்ப்பவரின் முகத்தைக் காட்டும்.

04. விஷம் தலைக்கு ஏறும் போது பரபரத்தல்.

தலையில் எண்ணெய் இடும்போது பரபரவென்று குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

05. பிளவுபட்ட நாக்கு காணப்படும்.

எள்ளிலிருந்து எடுத்த எண்ணெய் போக எஞ்சியது பிண்ணாக்காகும்.

G.C.E.O/L- 2023(2024)

02. (i) ஓர் தட்டிலே பொன்னும் ஓர் தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்

கார்தட்டிய பஞ்ச காலத்திலே தங்கள் காரியப்பேர்

ஆர் தட்டினும் தட்டு வாராமலே அன்னதானத்துக்கு

மார்தட்டிய துரை மால் சீதக்காதி வரோதயனே.

() பஞ்சத்தின் கொடுமை

(). நெல்லும் பொன்னும் சமமான மதிப்புடையனவாகக் காணப்படல்

() சீதக்காதியின் கொடைத்திறம்? என்பன எவ்வாறு உணர்த்தப்படுகின்றன?

() ஆர் தட்டினும் தட்டுவராமல் அன்னதானத்திற்கு மார்தட்டிய துரை

G.C.E.O/L- 2022(2023)

01.(ii). "பொதிகை வரையினிற் கால் கொண்டு"

() பொதிகை என்பது யாது?

) ஒரு மலை

() 'கால் கொண்டு' என்பதனை விளக்குக?

) நிலைபெற்று / படிந்து / தவழ்ந்து

G.C.E.O/L- 2021(2022)

01. (iii) "வெங்கட்பிறைக்கும் கரும்பிறைக்கும் மெலிந்தப்பிறைக்கும் விழிவேலே."

() 'கரும்பிறை' என்பது யாரைக் குறிக்கிறது?

மன்மதன்

() அவர் அவ்வாறு அழைக்கப்படுவதற்கான காரணம் யாது?

கரும்பை வில்லாகக் கொண்டவர்.

06. 'தனிப் பாடல்கள்' பகுதியில்,

() ஓர் தட்டிலே...' எனத் தொடங்கும் பாடலில் சீதக்காதியின் கொடைத்திறமும்

நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்பட்ட நிலையிலும் தட்டு நீட்டப்படும் முன்னரே / தட்டப்பட்ட ஓசை வரமுன்னரே /தட்டுப்பாடு வராமலே அன்னதானம் அவர் வீட்டுக் கதவை யார் தட்டினாலும் / கொடுப்பதை சுயநலவாதிகள் யார் தடுத்தாலும் யாசிக்கின்ற வழங்குவதற்கு முன்வந்து மார்தட்டிய வள்ளண்மை பொருந்தியவர்.

() 'கழியும் பிழை...' எனத் தொடங்கும் பாடலில் காளமேகப் புலவரின் கவிச்செருக்கும் வெளிப்படுமாற்றைத் தெளிவுறுத்துக.

கழிக்க வேண்டிய பிழையான விடயங்களை விலக்கி நல்ல நூல்களாகிய கடலிலிருந்து பெறத்தக்கவற்றைப் அழகிய கவிதைகளைப் பாடுகின்ற புலவர்களே பயப்படுமான பொதிவை மலொயி எந்த நேரத்திலும் கவிதை பொழிவேனெனச் செருக்குடன் கூறுதல்.

G.C.E.O/L- 2020

01. (iii). "ஓடி மண்டை பற்றிப் பரபரெனும் பாரில் பிண்ணாக்கு முண்டாம்."

() 'பிண்ணாக்கு' என்ற சொல் இரு பொருள்பட வருமாற்றை விளக்குக.

. பிண்ணாக்கு (எண்ணெய் எடுத்து எஞ்சிய தானியச் சக்கை), பிளவுண்ட நாக்கு

() இதில் இடம்பெற்றுள்ள அணி யாது?

. சிலேடை

02. (ii). பங்கப் பழனத் துழுமுழவர்

பலவின் கனியைப் பறித்ததென்று

சங்கிட் டெறியக் குரங்கிளநீர்

தனைக் கொண்டெறியுந் தமிழ்நாடா

கொங்கர்க் கமராபதியளித்த

கோவே யிராச குலதிலகா

வெங்கட் பிறைக்குங் கரும்பிறைக்கும்

மெலிந்தப் பிறைக்கும் விழிவேலே

(). இங்கு தமிழ்நாடனின் வீரம் எவ்வாறு விபரிக்கப்பட்டுள்ளது?

. கொங்கு தேசத்தவர்களைப் போரில் வென்று அவர்களுக்கு விண்ணுலகம் கொடுத்த (அவர்களை

மாய்த்த) அரசர்க்கெல்லாம் அரசனே எனக் கூறுவதனூடாக

(). தலைவியின் ஆற்றாமை எவ்வாறு சித்திரிக்கப்பட்டுள்ளது?

ஆ.மாலைக்காலத்தில் இளம்பிறைச் சந்திரனைக் கண்டும் (காதல் தெய்வமான) கரும்பு வில்லையுடைய

மன்மதனால் வருத்தப்பட்டும் (காதல் நோயால்) மெலிந்த அவளது கண்கள் நீரைச் (கண்ணீரை)

சொரிந்தன.

G.C.E.O/L- 2019

(ii). கழியும் பிழைபொருட் டள்ளிநன்னூலாங் கடலினுண்டு

வழியும் பொதிகை வரையினிற் கால்கொண்டு வண்கவிதை

மொழியும் புலவர் மனத்தே யிடித்து முழங்கிமின்னிப்

பொழியும் படிக்குக் கவிகாள மேகம் புறப்பட்டதே

() காளமேகப் புலவரது கவிபாடும் திறம் எவ்வாறு விவரிக்கப்படுகிறது ?

. கழிக்க வேண்டிய பிழையான பொருள்களை விலக்கி, நல்ல நூல்களாகிய கடலிலிருந்து

பெறத்தக்கவற்றை பெற்று, தமிழுக்கு இருப்பிடமான பொதிகை மலையிலே நிலைகொண்டு அழகிய

கவிதைகளைப் பாடுகின்ற புலவர்கள் பயப்படும்படியாக ஆரவாரத்தோடு எந்த நேரத்திலும் கவிதை

மழை பொழிபவர்.

() 'நன்னூலாங் கடலினுண்டு' என்ற தொடரில் பயின்றுள்ள அணியை விளக்குக?

. உருவக அணி

நல்ல நூல்கள் கடலாக உருவகிக்கப்பட்டுள்ளன.

G.C.E.O/L- 2018

02. (i). ஓர் தட்டிலே பொன்னும் ஓர் தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்

கார்தட்டிய பஞ்ச காலத்திலே தங்கள் காரியப்பேர்

ஆர் தட்டினும் தட்டுவாராமலே அன்னதானத்துக்கு

மார் தட்டிய துரை மால் சீதக்காதி வரோதயனே

() இங்கு சீதக்காதியின் கொடைச் சிறப்பு எவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?

. நாட்டில் நிலவும் கடுமையான பஞ்சம் ஏற்பட்ட போதும் அவர் வீட்டுக்கதவை யார் தட்டினாலும் /

கொடுப்பதை சுயநலவாதிகள் யார் தடுத்தாலும் (யாசிக்கின்ற) தட்டு வராமலே / தட்டப்பட்ட ஓசை வர

முன்னரே / தட்டுப்பாடு வராமலே அன்னதானம் வழங்குவதற்கு பின்னிற்காத வள்ளண்மை உடையவர்

சீதக்காதி என அவரின் கொடைச்சிறப்புக் கூறப்பட்டுள்ளது.

() பஞ்சம் நிலவும் காலத்து அவலநிலையைக் கவிஞர் விவரிக்குமாற்றை விளக்குக?

.மழை வரண்டு, பஞ்சம் ஏற்பட்ட நிலையில் பொன்னும் நெல்லும் சமமாக தட்டுக்களிலே வைத்து

அளக்கப்பட்ட காலம் எனக் குறிப்பிடுவதினூடாக நெல் கிடைத்தற்கு அரியதாயிருந்த அவலநிலை

சுட்டப்பெறுகின்றது. பஞ்சத்தால் மக்கள் யாசகம் செய்ய வேண்டிய அவலநிலை.

G.C.E.O/L- 2017

01. (iv) "ஆடிக்குடத்தடையு மாடும்போதே இரையும்

மூடித் திறக்கின் முகங்காட்டும் ... "

() இதில் கையாளப்பட்டுள்ள அணி யாது?

(.) சிலேடை

() அந்த அணி மூலம் தொடர்புபடுத்தப்படுபவை எவை?

(.) பாம்பு, எள்

6. பங்கப் பழனத்து ... என்று தொடங்கும் பாடலில்,

() நாட்டுவளம், மன்னனின் ஆற்றல் என்பனவும்

(அ.) நாட்டு வளம்

- நாட்டிலுள்ள நிலவளம், நீர் வளம், தாவர வளம், என்பவற்றின் மூலம் வளத்தைக் காட்டுதல்.

- குரங்குகள் பலாக்கனிகளைப் பறித்து எறிதல்.

- உழவர் சங்குகளால் குரங்குகளுக்கு எறிதல்.

- பதிலுக்கு செவ்விளநீரைப் பிடுங்கி எறிதல்.

(வயல், சங்குகள், கனிகள், செவ்விளநீர் என்பவை

எடுத்துக்காட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.)

மன்னனின் ஆற்றல்

கொங்கு தேசத்தவர்களைப் போரிலே கொன்று அவர்களுக்குச் சொர்க்கத்தை அளித்தவன்

என்பதன் மூலம் மன்னனின் வீரமும், படைத்திறனும் எடுத்துக் காட்டப்படல்.

இராசகுல திலகமாகப் போற்றப்படல்.

() தலைவன்மீது தலைவி கொண்ட காதலும்

விவரிக்கப்படுமாற்றினை எடுத்துக்காட்டுக.

(.) தலைவன் மீது கொண்ட காதல்.

- தலைவனைப் பிரிந்த தலைவி ஒருத்தி மாலை நேரத்தில் அடைகின்ற துன்பம்

- வெம்மை நிறைந்த சந்திரன் காதலைத் தூண்டி வருத்துதல்.

- மன்மதன் கணைகள் காதலை ஏற்படுத்தி வருத்துதல்.

- உடல் மெலிதல், கண்ணீர் சொரிதல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக