G.C.E.O/L-2020
தமிழ்மொழியும் இலக்கியமும்,
பகுதி 111,
கடந்தகால வினாத்தாள்
1. சுருக்கமான விடை தருக.
(i). "தண்டாமரையுடன் பிறந்தும் தண்டேன்
நுகரா மண்டுகம்"
(அ) 'தண்டேன்' என்பதைப் பிரித்து எழுதுக.
அ. தண் + தேன் / தண்மை + தேன்
(ஆ) இங்கு 'மண்டுகம்' எனக் குறிப்பிடப்படுவது யாது?
ஆ. தவளை / நுணல்
(ii). "அது கிடக்க எடுத்துக்கொண்டு வா தபாற்தந்திக் கட்டுக்களை"
(அ) இவ்வாறு கூறியவர் யார்?
நாவலர்
(ஆ) அதனை அவர் யாருக்குக் கூறினார்?
விசுவநாதபிள்ளை / வை. விசுவநாதபிள்ளை
(iii). "ஓடி மண்டை பற்றிப் பரபரெனும் பாரில் பிண்ணாக்கு முண்டாம்."
(அ) 'பிண்ணாக்கு' என்ற சொல் இரு பொருள்பட வருமாற்றை விளக்குக.?
பிண்ணாக்கு (எண்ணெய் எடுத்து எஞ்சிய தானியச் சக்கை), பிளவுண்ட நாக்கு
(ஆ) இதில் இடம்பெற்றுள்ள அணி யாது?
சிலேடை
(iv). "கண்ணார் அல்லாமேல் ஆணை உன்னை அடையாட்டிக் காட்டுப்பள்ளி"
(அ) இங்கு 'ஆணை' என்பது எதனைக் குறிப்பிடுகிறது?
சத்தியம் செய்தல்
(ஆ) 'அடையாட்டி' என்ற சொல் குறிக்கும் பொருள் யாது?
திருமணம் செய்யாதுவிடில்
(v). "அறந்தானே என்கின்ற அயல் நின்றாள்தனை நோக்கி,
ஐய அன்பின் நிறைந்தாளை உரை"
(அ) 'அயல் நின்றாள்' எனக் குறிப்பிடப்படுபவள் யார்?
சுமித்திரை
(ஆ) 'ஐய' என விளிக்கப்படுபவன் யார்?
. பரதன்
(vi). "தனித்து நின்றும் சத்தியத்தால் தலை நிமிரும் மனிதன்.
தற்பெருமை கொள்ளாது தலை தாழும் அறிஞன்."
(அ) மனிதன் தலை நிமிர்வது எதனால்?
சத்தியத்தால்
(ஆ) 'தலை தாழும்' என்பதன் உட்கருத்து யாது?
பணிதல்
(vii). "பார்ப்பனர், மொழிபெயர் தேயத்தார், யவனர், புலம்பெயர் மக்கள் தமிழ் மக்களோடு இனிதாக வாழ்ந்து
வந்தார்கள்."
(அ) இதனூடாக வெளிப்படும் தமிழ்மக்களுடைய மனப்பான்மை யாது?
உலக மனப்பான்மை
(ஆ) 'மொழிபெயர் தேயத்தார்' என்ற தொடர் யாரைக் குறிக்கிறது?
வேற்றுமொழி பேசுகின்ற நாட்டவர்
(viii). "பூத்தஜோதி வதனம் திரும்புமேல் புலனழிந்தொரு புத்துயிரெய்துவேன்."
(அ) காதலியின் முக அழகு எவ்வாறு விபரிக்கப்படுகிறது?
மலர்ந்த ஒளி பொருந்திய முகம் (பூத்த ஜோதி வதனம்)
(ஆ) காதலியின் பார்வையால் கவிஞர் தான் அடைந்த மகிழ்ச்சியை எவ்வாறு விபரிக்கிறார்?
புத்துயிரெய்தியதாகக் கூறுதல்
(புலன் அழிந்து ஒரு புத்துயிர் எய்தினேன் / புத்துயிர் எய்தினேன்)
(ix). "வயிரம் எனும் சுடுநெருப்பை மிகமூட்டி வளர்க்கின் உயர் வரைக்காடு என்ன
செயிர் அமரில் வெகுளிபொர சேர இரு திறத்தேமும் சென்று மாள்வோம்."
(அ) இங்கு 'வரை' எனப்படுவது யாது?
வரை - மூங்கில்
(ஆ) 'இருதிறத்தேமும்' எனச் சுட்டப்படும் இரு பகுதியினரும் யாவர்?
பாண்டவர், கௌரவர்
(x). "அரவ நெடுங்கடல் ஆடை அவனி எல்லாம்."
(அ) இங்கு 'அரவம்' என்பதன் பொருள் யாது?
ஓசை / ஒலி
(ஆ) பூமி எதனை ஆடையாக அணிந்துள்ளது?
கடல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக