1.12.25

G.C.E.O/L-2022(2023), தமிழ்மொழியும் இலக்கியமும், பகுதி 111, கடந்தகால வினாத்தாள்

G.C.E.O/L-2022(2023)

தமிழ்மொழியும் இலக்கியமும், பகுதி 111

01.  சுருக்கமான விடை தருக.

(i) "எட்டுணையானும் இரவாது தான் ஈதல் எத்துணையும் ஆற்றல் இனிது"

(
). எட்டுணை என்பதைப் பிரித்து எழுதுக?

() எண் + துணை

(). எத்துணை என்பதன் பொருள் யாது?

() எவ்வளவு / எல்லா வகையிலும்

 

(ii). "பொதிகை வரையினிற் கால் கொண்டு"

(
) பொதிகை என்பது யாது?

() ஒரு மலை / மலை / குன்று / கிரி / பருவதம்

() 'கால் கொண்டு' என்பதனை விளக்குக?

() நிலைபெற்று / படிந்து / தவழ்ந்து /துணை கொண்டு

 

(iii) "காவற்பரணில் கண்ணுறங்கும் வேளையிலே கண்ணான மச்சி வந்தென் காலூன்றக் கண்டேனே"

(
) தலைவியின் முக்கியத்துவத்தை தலைவன் எச்சொல்லால் வெளிப்படுத்துகின்றான்?

() கண்ணான / கண் / கண் போன்ற / கண்ணான மச்சி

() இங்கு 'காலூன்றல்' என்பதன் பொருள் யாது?

() காலைப் பற்றுதல் / கால்களில் கையை ஊன்றுதல் / காலை வருடுதல்.

 

(iv) "சினிமா மொழி, மொழிபெயர்க்க முடியாத ஒன்று. அது மனித குலத்துக்கே பொதுவானது"

(
) சினிமா மொழிக்கும் ஏனைய மொழிகளுக்கும் இடையிலான வேறுபாடு யாது?

() ஏனைய மொழிகளை மொழிபெயர்க்கலாம்; சினிமா மொழியை மொழிபெயர்க்க முடியாது.

() சினிமா மொழி எந்த மொழி பேசுவோராலும் விளங்கிக் கொள்ளத்தக்கது என்பதை உணர்த்தும் தொடர் யாது?

() அது மனித குலத்துக்கே பொதுவானது.

 

(v) "தங்கச்சியை வாரிக்கொண்டா. அவட கண்கள் இரண்டும் ததும்பிப் பீறின"

(
) தங்கச்சியை வாரிக்கொண்டா' என்பதன் மூலம் வெளிப்படும் உணர்ச்சி யாது?

() அன்பு / பாசம் / இரக்கம்

() தங்கச்சியை வாரிக்கொண்டது யார்?

() மூத்தம்மா

 

(vi) குணக்குன்றாய் உழைத்துண்ணும் குலவிளக்காம் மனிதன்"

(
) இங்கு மனிதனின் சிறந்த செயலாகக் கூறப்படுவது யாது?

() உழைத்துண்ணல்

() 'குணக்குன்று' என்பது என்ன அணி?

() உருவகம்

 

(vii) மூடருக்கும் பேடருக்கும் முதியோர் மெலியோர்க்குந் தேடருநல் இரத்தினம் போற் தெரிவையரைச் சேர்த்துவரோ?"

(
) 'பேடர்' எனப்படுபவர் யாவர்?

() துணிவற்றவர் / ஆண்மையற்றவர் / பேதைமை உடையவர் / வீரமற்றவர் / பேதைமை

() இங்கு பெண்கள் எவ்வாறு சிறப்பிக்கப்படுகின்றனர்?

() கிடைத்தற்கரிய இரத்தினம் போன்றவர்கள் / இரத்தினம் போன்றவர்

 

(viii) "மடப்பாவை தன்வரமும் என்வரமும் வழுவா வண்ணம் கோடுகின்ற மொழியவன்பால் எனைத் தூது விடுக."

(
) இக்கூற்று யாரால் யாருக்குக் கூறப்பட்டது?

() வீமனால் தருமனுக்கு

() கோடுகின்ற மொழியவன் யார்?

() துரியோதனன் / திருதராட்டினன்

 

(ix) "நெறி திறம்பாத் தன்மெய்யை நிற்பதாக்கி இறந்தான் தன் இளந்தேவி"

(
) 'இளந்தேவி' எனப்படுபவள் யார்?

() சுமித்திரை

() இங்கு தசரதனுடைய எச்சிறப்பு உணர்த்தப்படுகின்றது?

() வாய்மை தவறாமை / சத்தியம் தவறாமை / நீதிநெறி

 

(x) யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் யாதானும் நாடாமால் ஊராமால் என்றும் கூறுவதற்கு இம் மனப்பான்மை ஊக்கமளித்தது."

(
) இங்கு சுட்டப்படும் மனப்பான்மை எது?

() பரந்த உலக மனப்பான்மை / ஓருலக மனப்பான்மை / உலக மனப்பான்மை

() 'யாதானும் நாடாமால் ஊராமால்' என்ற தொடரை விளக்குக?

() எல்லா நாடும் நமது நாடாகும். எல்லா ஊரும் நமது ஊராகும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக