21.12.25

ஆத்திசூடி

ஆத்திசூடி


இளஞ்சிறார் முதல் பெரியவர் வரை பயன்படுவன நீதிநூல்கள், இவற்றுள் ஆத்திசூடி தமிழ் அகர வரிசையில் மொழி முதலாம் எழுத்துக்களின் வரிசைப்படி அமைந்ததால், அரிச்சுவடி கற்கும் இளம் சிறார்க்கு நல்ல துணை நூலாக அமைகின்றது. பேரறங்களைச் சிறிய தொடர்களால் மிகச் சுருங்கச் சொல்லுமிவை, கற்போருக்கு கற்கும் தோறும் புதுப்புதுக் கருத்துக்களைத் தந்து பயன்படுகின்றன.

கடவுள் வாழ்த்து

ஆத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

பொருள்

:
ஆத்திமாலை சூடிய இனிமை தவழ்பவனாக இருக்கும் சிவபெருமானை பல்கால் புகழ்ந்து நாம் வணங்குவோமாக.

1). அறஞ் செய விரும்பு
பிறருக்கு நன்மை செய்வதற்கு நீ எப்பொழுதும் விருப்பம் கொள்.

2). ஆறுவது சினம்
சினம் கொள்ளாதே

3). இயல்வது கரவேல்
நம்மால் முடிந்ததை உதவி, கொடை, உழைப்பு, தொண்டு, ஆகியவற்றை ஒளியாமல் செய்ய வேண்டும்.

4). ஈவது விலக்கேல்
ஒருவர் ஒருவருக்குக் கொடுப்பதைத் தடுக்காதே.

(5). உடையது விளம்பேல்
உனக்குள்ளவற்றைத் தற்பெருமையாகச் சொல்லாதே

6). ஊக்கமது கைவிடேல்
முயற்சியை விட்டு விடாதே

7). எண் எழுத்து இகழேல்
எண்ணும் எழுத்தும் ஆகிய கல்வியை என்றும் தள்ளிவிடாதே.

8 ). ஏற்பது இகழ்ச்சி
பிறரிடம் ஒன்றை எதிர்பார்ப்பது பழியேயாகும்.

9). ஐயம் இட்டுண்
பசிப்போர்க்கு உணவு தந்து நீயும் உண்ணுக.

(10). ஒப்புரவு ஒழுகு
தனக்கு ஒத்தது பிறருக்கும் ஒத்தாகும் என எண்ணி நட

(11). ஓதுவது ஒழியேல்
கற்பதை விடாதே என்றும் கற்றுக் கொண்டிரு.
ஒழியேல் - நீங்காதே)

12 ). ஒளவியம் பேசேல்
பொறாமைப் பேச்சுப் போசாதே.

(13). அஃகம் சுருக்கேல்
உணவுப் பொருளைக் குறைவாகக் பயிர் செய்யாதே

(14). கண்டு ஒன்று சொல்லேல்
கண்டது ஒன்று: சொன்னது ஒன்று என்று கபடமாகப் பேசாதே.

(15). ஙப்போல் வளை
' என்னும் எழுத்தைப் போல் சுற்றத்தைக் காப்பாற்று.

(16). சனி நீராடு.
ஊற்று நீரில் குளி
(சனித்தல் - தோன்றுதல்)

17). ஞயம்பட உரை
எதையும் கனிவாக, நயமிக்கதாகக் கூறு.

18). இடம்பட வீடு எடெல்
தேவைப்படும் அளவுக்கு மேல் வீட்டைப் பெரிதாகக் கட்டாதே.

19). இணக்கமறிந்து இணங்கு
ஒருவர் பழகும் இயல்பை அறிந்து அவரிடம் நீ பழகு.

20). தந்தை, தாய் பேண்
தந்தையையும், தாயையும் காத்தல் பிறந்தவர் கடமை.

21) நன்றி மறவேல்
பிறர் நலம் செய்யும் நல்லோரை மறவாமல் போற்றுக.

(22). பருவத்தே பயிர் செய்.
எந்த ஒன்றையும் செய்ய வேண்டிய காலத்தில் செய்து விடுக.

23). மன்று பறித்து உண்ணேல்.
பொதுப் பொருளைக் கொள்ளையடித்து வாழாதே.

24). இயல்பலாதன செயேல்
அவரவர் தகுதிக்குத் தக்க செயல்களையே செய்தல் வேண்டும்.
தகுதிக்குத்தக்கது அல்லாதவற்றைச் செய்யக் கூடாது.

25). அரவம் ஆட்டேல்.
பாம்பைப் பிடித்து விளையாட்டுக் காட்டாதே. பாம்புடன் விளையாடினால் கெடுதி ஏற்படும்.

26) இலவம் பஞ்சில் துயில்
மெல்லிய படுக்கையில் படு.

(27). வஞ்சகம் பேசேல்
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாதே

28) . அழகு அலாதன செயேல்
துன்பம் வந்த காலத்தும் இழி செயல்களைச் செய்யக் கூடாது.

29). இளமையில் கல்
நல்லவற்றையெல்லாம் இளமைப் பருவத்திலேயே கற்க வேண்டும்.

30). அறனை மறவேல்
நல்லவற்றை நினைந்து செய்யும் செயலை மறந்து விடாதே. (மறவேல் - மறவாதே)

31) . அனந்தல் ஆடேல்.
அலைமோதும் கடலில்(ஆட) விளையாடாதே.
(அனந்தல் - குறைவற்ற வளமுடைய கடல்)

32). கடிவது மற.
சொல்லக் கூடாதென்று சான்றோர் கூறுவனவற்றை நினைவிலும் கொள்ளாதே. மறந்து விடு. (கடிவது -நீக்குவது)
கோபம் உண்டாகும் சொற்களை மறக்க வேண்டும்)

33). காப்பது (நோன்பு) விரதம்
அவரவர் ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பதே நோன்பு எனப்படும் விரதம் ஆகும்.

34). கிழமைப்பட வாழ்.
உன்னை உறவு உரிமை உடையவன் என்று பிறர் நினைக்க, உறவு உரிமை உடையவனாக வாழ்வாயாக. (கிழமை) - உரிமை)

35). கீழ்மை அகற்று.
இழிவான செயல்களை நீக்க வேண்டும்.

(36). குணமது கைவிடேல்
நல்ல குணங்களை விட்டுவிடாதே

37). கூடிப் பிரியேல்
நல்வருடன் நட்பாய் இருந்து பிறகு
அவரை விட்டு நீங்குதல் கூடாது.

38). கெடுப்பது ஒழி
உனக்கு கேடானதை, பிறர்க்குச் செய்யாமல் விடு,

39). கேள்வி முயல்
கேட்கத் தக்க நல்ல விடயங்களை, கற்றவர் கூறுவனவற்றை கேட்பதற்கு முயற்சி செய்.

40). கைவினை கரவேல்
உனக்குத் தெரிந்த கைத்தொழிலை பிறர்க்கு ஒழிக்காதே

(41).கொள்ளை விரும்பேல்
பிறர் பொருளைக் கொள்ளையிட விரும்புதல் ஆகாது,

(42). கோதாட்டு ஒழி
குற்றத்திற்குரிய விளையாட்டுக்களில் ஈடுபடாதே

43). சக்கர நெறி நில்
அரசனது கட்டளைக்கு அமைந்து நட. (சக்கரம் -ஆணை)

(44). சான்றோர் இனத்திரு
பண்பாலும், அறிவாலும் நிறைந்த பெரியோர்களின் கூட்டத்தில் நீயும் ஒருவனாக இரு.

45). சித்திரம் பேசேல்
இட்டுக்கட்டி ஒருவரைப் புகழ்வதையோ, இகழ்வதையோ செய்யாதே

46). சீர்மை மறவேல்
புகழுக்கு ஏதுவாக இருக்கின்ற செயலை மறந்து நடத்தலாகாது. (சிறப்புத் தருகின்றவற்றைச் செய்வதை மறத்தல் கூடாது)

47). சுளிக்கச் சொல்லேல்
மனம் கசந்து முகம் சுண்டிப் பே குமாறான தீய கொடிய சொற்களைச் சொல்லாதே.

48). சூது விரும்பேல்
சூதாடுதலில் விருப்பம் கொள்ளாதே

(49). செய்வன திருந்தச் செய்
எடுத்துக்
கொண்ட செயலை திருத்தமாகச் செய்து முடிக்க வேண்டும்.

50). சேரியிடம் அறிந்து சேர்.
நன்மையைத் தரும் இடத்தை அறிந்து அங்கு சேர்

51). சை எனத் திரியேல்
பிறர் 'சீ' என்று வெறுக்கும்படி நடக்காதே

52). சொல் சோர்வு படேல்
சொல்லிய சொல்லைச் சொன்னவாறு காப்பாற்ற வேண்டும்.

53). சோம்பித் திரியேல்
எந்தவொரு முயற்சியும் இன்றி சோம்பலாக இராதே.

54). தனக்கோன் எனத் திரி
'இவன் தகுதியானவன்' என்று பாராட்டுமாறு வாழ்வாயாக!

55). தானமதை விரும்பு
பிறருக்கு உதவி செய்து வாழ்வதை விரும்புவாயாக!

(56). திருமாலுக்கு அடிமை செய்.
மாயோனை (திருமாலை) வழிபட்டு உன் கடமையைச் செய்வாயாக.

57). தீவினை அகற்று
தீவினை உண்டாக்கும் செயல்களை நீக்கி விடு.

(58). துன்பத்திற்கு இடம் கொடேல்
உனக்குத் துன்பம் உண்டாக்கும் எதற்கும் நீயே இடம் தந்து விடாமல் எச்சரிக்கையாக இரு.

59). தூக்கி வினை செய்
எச்செயலைச் செய்வதாயினும் ஆராய்ந்து பார்த்துச் செய்

60. ) தெய்வம் இகழேல்
நீ வணங்கத்தக்க தெய்வத்தை இகழாமல் மதித்து நட.

61). தேசத்தோடு ஒத்து வாழ்
நாட்டு நடைமுறை அறிந்து அதற்குத் தக நீயும் ஒத்து வாழ்

62). தையல் சொல் கேளேல்.
கட்டொழுங்கு இல்லாத பெண்களின் சொல்லைக் கேட்டு அவர் வழியில் நடவாதே

63). தொன்மை மறவேல்
பழமையான பண்பாடு, நாகரிகம் என்பவற்றை மறந்து விடாதே.

64). தோற்பன தொடரேல்
தோல்வி எனத் தெரிந்த பின்பும் அச்செயலில் ஈடுபடாதே.

65). நன்மை கடைப்பிடி
நல்லவை எவையோ அவற்றை விடாமல் பற்றிக் கொள்

66). நாடு ஒப்பன செய்
நாடு ஏற்கும் செயல்களையே செய்

67. ) நிலையில் பிரியேல்
நீ கொண்டிருந்த தகுதி நிலையில் இருந்து நீங்கிக் கீழே இறங்கி விடாதே.

68). நீர் விளையாடேல்
வெள்ள நீருள் பாய்ந்து விளையாடாதே

(68). நுண்மை நுகரேல்
இடை இடையே சிற்றுண்டி உண்ணுவதை ஒதுக்குவாயாக.

69. ) நூல் பல கல்
அறிவை வளர்க்கும் நூல்களை அதிகம் கற்க வேண்டும்.

(70). நெற்பயிர் விளை
உணவுப் பயிராகிய நெல்லை அதிகம் விளைவிக்க வேண்டும்.

(71). நேர்பட ஒழுகு.
நீர் நேர்மையானவன் என்பதை நிலைப்படுத்துமாறு எப்பொழுதும் நடந்து கொள்

72). நைவினை அணுகேல்
வருந்தும்படியான செயலை செய்தலை நீ நெருங்காதே

73). நொய்ய உரையேல்
சிறுமைத் தனமான சொற்களைச் சொல்லாதே

(74). நோய்க்கு இடம் கொடேல்
நோய் உண்டாவதற்குரிய வழிவகைகளை நீ உருவாக்காதே.

75). பழிப்பன பகரேல்
பிறர் பழிக்கும் இழி சொற்களைக் கூறுதல் ஆகாது.

76). பாம்போடு பழகேல்
தீமை பயக்கும் (உயிர்களோடு) பாம்புடன் நெருக்கம் கொள்ளுதல் ஆகாது.

77). பிழைபடச் சொல்லேல்
எது பற்றிச் சொன்னாலும் பிழை உண்டாகுமாறு சொல்லாதே.

79). பீடு பெற நில்
பெருமை பெறத்தக்க வழியில் நிலை பெற வாழ்வாயாக!

80). புகழ்ந்தாரைப்போற்றி வாழ்.
போலியாக இல்லாமல் மெய்யாகப் பாராட்டுவோரை நீயும் பாராட்டி வாழ்வாயாக!

81). பூமி திருத்தி உண்
பூமியைப் பயன்படுத்தி பயிர் செய்து உண்ண வேண்டும்.

82) பெரியாரைத் துணைக் கொள்
பெரியவர்கள் கூட்டுறவை எப்பொழுதும் தேடிக் கொள்வாயாக

83). பேதமை அகற்று
அறியாமையை அகற்றி அறிவைப் பெற்றுக் கொள்வாயாக."

84). பையலோடு இணங்கேல்
அறிவிலிகளான சிறுமையாளரோடு சேர்ந்திராதே.

85). பொருள் தனைப் போற்றி வாழ்.
பொருளைத்தக்க வகையில் தேடி நன்றாக பாதுகாத்து வாழவேண்டும்.

86). போர்த்தொழில் புரியேல்
வீணான சண்டை சச்சரவுகளைச் செய்யாதே.

86). மனம் தடுமாறேல்
மனத்தை ஒரு நிலையில் வைத்து உறுதியான வாழ்வு கொள்ளுதல் வேண்டும்.

87). மாற்றானுக்கு இடம் கொடேல்
பகையாளிக்கு இடம் கொடுக்கக் கூடாது

(88). மிகைப்படச் சொல்லேல்
உள்ளதை உள்ளபடி சொல்லாமல் உள்ளதற்கு மிகுதியாகச் சொல்லாதே

89). மீதூண் விரும்பேல்
அளவுக்கு அதிகமாக உண்ண விரும்பேல்

90). முனை முகத்து நில்லேல்
போர் நடக்கும் இடத்தில் போய் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்காதே.

91). மூர்க்கரோடு இணங்கேல்.
சிந்தனை இல்லாமல் செயற்படும் முரடர்களோடு நீ சேர்ந்திராதே.

92). மெல்லினல்லாள் தோள் சேர்
மென்மையாளாகவும் இல்லாளாகவும் நன்மையே நாடிச் செய்பவளாகவும் இருப்பவளோடு பொருந்தி வாழ். (மெல் + இல் + நல் + ஆள் )

93). மேன் மக்கள் சொல் கேள்
செயற்கரிய செய்யும் பெரியவர்கள் கூறும் சொற்களைக் கேட்டு நடப்பாயாக.

94). மைவிழியார் மனை அகல்
ஒழுக்கமற்ற மங்கையர் வீட்டை நெருங்காதே.

(95). மொழிவது அறமொழி
சொல்வதை அறிந்து தெளிவாகச் சொல்.

96). மோகத்தை முனி
மிகுதியான ஆசையை அறவே ஒதுக்கி விடு.

97). வல்லமை பேசேல்
உனது வல்லமையை நீயே புகழாதே

98). வாது முற்கூறேல்
வலியச் சென்று எவரையும் விவாதத்திற்கு அழைக்காதே.

(99). வித்தை விரும்பு
கல்வி முதலான கலைகளை விரும்பிக்கற்றுக் கொள்.

100). வீடு பெற நில்
உலக வாழ்வின் பின்னர் பேரின்பம் பெறத்தக்க பேறு நிலை பெற வாழ்வாயாக.

101). உத்தமனாய் இரு.
மக்களுள் உயர்வுடையவனாக வாழ்.

102). ஊருடன் கூடி வாழ்
நீ தனித்து வாழ வேண்டும் என்று எண்ணாமல் ஊர் உறவுடன் கூடி வாழ்.

103). வெட்டெனப் பேசேல்
உள்ளத்தை உடைக்கும்படியான சொல்லை சொல்லாதே.

104). வேண்டி வினை செயேல்
சதி செய்யாதே, அடுத்துக் கெடுக்காதே.

(105). வைகறைத் துயில் எழு
விடிகாலைப் பொழுது உறக்கம் நீங்கி எழுந்திருப்பாயாக!

106). ஒன்னாரைத் தேறேல்.
பகைப்பட்டு நிற்பவரை நண்பரெனத் தெரிவு செய்யாதே.

107). ஓரம் சொல்லேல்.
ஒரு பக்கம் சார்ந்து நின்று நடுவு நிலைமை தவறிச் சொல்லாதே.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக