நீதிப்பாடல்
கடந்தகால வினாத்தாள்களும் விடையும் தொகுப்பு
G.C.E O/L 2024(2025)
சுருக்கமான விடை தருக.
(i). "தெண்ணீர்க் கயத்துட் சிறுமீன் சினையினும் நுண்ணிதே"
(அ) சினை
(ஆ) நுண்ணிது ஆகியவற்றின் பொருளைத் தருக.
(அ) சினை முட்டை
(ஆ) நுண்ணியது, சிறியது, மிகச் சிறியது.
06.(அ) "கணக்காயரில்லாத..." என்னும் 'திரிகடுகம்' பாடலில், நன்மை
பயவாதன என்றும்
(ஆ) கற்றார்முன்..." என்னும் 'இனியவை நாற்பது' பாடலில், இனிமை
பயப்பன என்றும் கூறப்படும் விடயங்களைத் தெளிவுறுத்துக.
அ) அறிவு நூல்களைக் கற்றுத் தரும் ஆசிரியர் இல்லாத ஊர்.
மனிதர்களுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்க்கும் மூத்தோர் இல்லாத சபை.
ஏனையவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து உணவு உண்ணும் குணம் இல்லாதவர்கள் அயலில் இருத்தல்
(ஆ)
கற்றறிந்தோர் முன்னால் தாம் கற்ற கல்வியை உரைத்தல்.
அறிவிற் சிறந்தோரைச் சேர்ந்திருத்தல்.
எள்ளளவும் பிறரிடம் இரவாது தான் பிறருக்குக் கொடுத்தல்.
G.C.E O/L 2023(2024)
01. சுருக்கமான விடை தருக.
(i) "மடைத்
தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு
(அ) மடைத்தலை
(ஆ) உறுமீன்
என்பவற்றின் பொருளைத் தருக.
(அ) வாய்க்கால், நீரோடும் வாய்க்கால், / சிறிய நீரோடை
(ஆ) பெரியமீன், ஏற்றமீன் / பொருத்தமான மீன்
G.C.E O/L 2022(2023)
(i) "எட்டுணையானும் இரவாது தான் ஈதல் எத்துணையும் ஆற்றல் இனிது"
(அ) எட்டுணை என்பதைப் பிரித்து எழுதுக.
(ஆ) எத்துணை என்பதன் பொருள் யாது?
(அ) எண் + துணை
(ஆ) எவ்வளவு / எல்லா வகையிலும்
(i)
யானை அனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.
(அ) எத்தகையவருடைய நட்பைப் பேணக்
கூடாது? ஏன்?
(ஆ) நாயின் நன்றி
உணர்வு வெளிப்படுத்தப்படும் விதத்தை விளக்குக.
(அ) யானையைப் போன்ற குணமுடையவர்களின் நட்பை
யானை நன்மை செய்தவர்களுக்கும் தீமை செய்யக்கூடியது / பழிதீர்க்கும் குணமுடையவர்கள்
(ஆ) எஜமானால் ஏவப்பட்ட ஆயுதம் தன் உடம்பில் தைத்திருந்த நிலையிலும் நாய் நன்றியுடையதாய் வாலை ஆட்டி நிற்கும்
05. 'தண்டாமரையினுடன் பிறந்தும்...' எனத் தொடங்கும் விவேக
சிந்தாமணிப் பாடலை
அடிப்படையாகக் கொண்டு பின்வருவனவற்றை விளக்குக.
(அ) புல்லர், நல்லோர் ஆகியோருக்கிடையிலான வேறுபாடு
(ஆ) அந்த வேறுபாட்டை உணர்த்துவதற்கு கவிஞர் கையாண்ட உவமையின் பொருத்தப்பாடு
(அ) புல்லர், நல்லோர் ஆகியோருக்கிடையிலான வேறுபாடு
அறிவில்லாதவர்கள், நல்லவர்களை நன்கு அறிந்திருந்தாலும் அவர்களோடு பழகிப் பயன்பெற மாட்டார்கள்.
அறிவுள்ளவர்கள், நல்லவர்களைக் கண்டவுடனேயே அவர்களது நற்குணங்களைத் தெரிந்துகொண்டு அவர்களை நாடி வந்து உறவாடி மகிழ்வர்.
(ஆ) கவிஞர் கையாண்ட உவமையின் பொருத்தப்பாடு
புல்லர் குளத்தில் வாழும் தவளைகள் போன்றவர்கள், தவளை தாமரைக் குளத்தில் வாழ்ந்தாலும் அதற்குத் தாமரையின் சிறப்புத் தெரியாது.
நல்லோர், காட்டிலிருந்து வந்து தாமரையின் தேன் உண்ணும் வண்டு போன்றவர்கள். அவர்கள் வண்டு தூர இருப்பினும் தாமரையில் தேனைத் தேடி வந்து உண்பது போல நல்லோரைத்/கற்றோரைத் தேடியறிந்து உறவாடி மகிழ்வர்.
G.C.E O/L 2021(2022)
01. சுருக்கமான விடை தருக.
"வண்டோ
கானத்திடையிருந்து வந்து
கமல மதுவுண்ணும்"
(அ) 'கானத்திடை' என்பதைப் பிரித்து எழுதுக.
(ஆ) 'கமல மது' என்பது எதனைக் குறிக்கிறது?
(அ) கானத்து + இடை / கானம் + அத்து + இடை / கானம் + அது + இடை
(ஆ) தேன்
/ தாமரையின் தேன்
(i). கற்றார்முன் கல்வி உரைத்தல் மிக இனிதே
மிக்காரைச் சேர்தல் மிகமாண முன் இனிதே
எட்டுணை யானும் இரவாது தான் ஈதல்
எத்துணையும் ஆற்றல் இனிது.
(அ) இப்பாடலில் இனிது
எனக் கூறப்படுவனவற்றை உமது சொந்த மொழிநடையில் எழுதுக.
(ஆ) 'எட்டுணை யானும் இரவாது தான் ஈதல்' - இத்தொடரில் குறிப்பிடப்படும் ஈகையின் சிறப்பியல்பு யாது?
(அ). கற்றவர் முன் தான் கற்றவற்றை எடுத்துரைத்தல்
அறிவிற் சிறந்தவரோடு சேர்ந்திருத்தல்
பிறரிடம் இரக்காது தான் பிறருக்கு ஈதல்
(ஆ) மிகச் சிறிய அளவேனும் பிறரிடம் எதனையும் இரக்காது தான் பிறருக்குக் கொடுத்தல்-மான உணர்வும் இரக்க உணர்வும் கூடிய கொடை.
G.C.E O/L 2020
01. சுருக்கமான விடை தருக.
"தண்டாமரையுடன் பிறந்தும் தண்டேன்
நுகரா மண்டுகம் "
(அ) 'தண்டேன்' என்பதைப் பிரித்து எழுதுக.?
(ஆ) இங்கு
'மண்டுகம்' எனக் குறிப்பிடப்படுவது யாது?
(அ) தண் + தேன் / தண்மை + தேன்
(ஆ) தவளை
/ நுணல்
(i) அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா மடைத்தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு
(அ) இப்பாடல் உணர்த்தும் நீதி யாது?
(ஆ) புலவர் தாம் கூற விரும்பிய கருத்தைப் புலப்படுத்த கையாண்ட உதாரணத்தை விளக்குக.
(அ) அடங்கியிருத்தல் அறிஞரது இயல்பு. ஆதலால், அடக்கமுடையவரை அறிவில்லாதவர் எனக் கருதி அவரை வெல்வதற்கு நினைக்க வேண்டாம்.
(ஆ) வாய்க்காலில் மீன்பிடிக்கக் காத்திருக்கும் கொக்கு, பெருமீன் கிடைக்கும் வரை, சிறுமீன்களைக் கவராது (பிடிக்காது) அவற்றை ஓடவிட்டு, அடக்கமாக / அமைதியாகக் காத்திருக்கும். அதுபோலவே அடக்கமுடையார் அடங்கி இருப்பார். ஆயின், உரிய நேரத்தில் தம் அறிவை, ஆற்றலை வெளிப்படுத்துவர்.
G.C.E O/L 2019
சுருக்கமான விடை தருக.
(i) "கணக்காயரில்லாதவூரும் பிணக்கறுக்கு மூத்தோரையில்லா வவைக்
களனும்
(அ) இங்கே
மூத்தோர்' என்போர் யார்?
(ஆ) அவைக்களன்' என்பதன் பொருள் யாது?
(அ) அறிவுடையோர் / அறிவும் அனுபவமும் உடையோர் / அறிஞர்
(ஆ) சபை / சபை கூடும் இடம்
/ அவை
(i). உப்பிலாக் கஞ்சியினை யுண்ணு மறுசுவைபோல்
தப்பிய கந்தைபீ தாம்பரம்போல் -ஒப்பும்
பனையோலைப் பாயிற் படுத்துறங்கும் வாழ்வார்
மனங்கொண் டதுமா
ளிகை
(அ) இப்பாடலில் இடம்பெற்றுள்ள முதுமொழி வலியுறுத்தும் உண்மை
யாது?
(ஆ) அதை வலியுறுத்துவதற்கு கவிஞர் தரும்
எடுத்துக்காட்டுகள் யாவை?
(அ). மனநிறைவு / மனத்திருப்தி / திருப்தி
(ஆ). உப்பில்லாக் கஞ்சியை அறுசுவை போல உண்ணல்.
தப்பிய கந்தையை பட்டாடை போல அணிதல்.
பனையோலைப் பாயினை மேலான படுக்கையாக எண்ணி உறங்குதல்.
G.C.E O/L 2018
(iii) யானை அனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல் வேண்டும் - யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.
(அ) நல்ல நண்பர்க்கு உவமையாக நாய் குறிப்பிடப்பட்டிருப்பதன் பொருத்தப்பாட்டினை விளக்குக.
( ஆ) யானை அனையவர் நட்பை
நீக்க வேண்டுமென கவிஞர் ஏன் கருதுகிறார்?
(iii) (அ) எசமானால் நாயின் மீது பாய்ச்சப்பட்ட ஆயுதம் உடம்பில் தைத்து இருந்த நிலையிலும் நாய் நன்றியுடையதாய் எசமானின் முன் வாலை ஆட்டி நிற்கும். இதனால் நன்றியுடைய நாய் நல்ல நண்பர்க்கு உவமிக்கப்பட்டது.
(ஆ) யானை,
தனக்கு நல்லது செய்த யானைப் பாகனையே கொல்லுமளவிற்கு நன்றி மறநத பிராணியாகும். எனவே தான் யானை போன்று நன்றி மறந்தவரது நட்பை விலக்க வேண்டுமென்று கவிஞர் கருதுகின்றார்
G.C.E O/L 2017
(iii) "மடைத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு."
(அ) மடைத்தலை என்பது யாது?
(ஆ) வாடியிருக்கும் கொக்கு யாருக்கு உவமையாகக் கூறப்படுகிறது?
(iii) (அ) வாய்க்கால் / நீரோடும் வாய்க்கால் / மதகு
(ஆ) அடக்கமுடையவர்களுக்கு/தங்களது தருணம் வரும்வரை காத்திருப்பவர்களுக்கு
(i). தேம்படு பனையின் றிரள்பழத் தொருவிதை
வானுற
வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவற் கிருக்க நிழலாகாதே
தெள்ளிய வாலின் சிறுபழத் தொருவிதை
தெண்ணீர் கயத்துட் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி யாட்பெரும் படையொடு
மன்னர்க் கிருக்க நிழலா கும்மே
அதனால்
பெரியோ ரெல்லாம் பெரியரு மல்லர்
சிறியோ ரெல்லாம்
சிறியரு மல்லர்.
(அ) இப்பாடலில் குறிப்பிடப்படும் நாற்படைகளும் எவை?
(M). இப்பாடல் உணர்த்தும் உண்மை யாது?
(அ) யானைப்படை,, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட் படை
(ஆ) உருவத்தால் பெரியோரெல்லாம் அறிவில், பயனில், குணத்தில், தகுதியில் பெரியவர்களாகமாட்டார்கள். உருவத்தால் சிறியோரெல்லாம் அறிவில், பயனில், குணத்தில் தகுதியில் சிறியவர்களாக மாட்டார்கள். பெரியோரெல்லாம் பெரியரும் அல்ல.
சிறியோர் எல்லாம் சிறியோரும் இல்லை.
G.C.E O/L 2016
(ix) "கணக்காய ரில்லாத வூரும் பிணக்கறுக்கு மூத்தோரை யில்லா வவைக்களனும்...."
(அ) "கணக்காயர் என்று
குறிப்பிடப்படுபவர் யார்?
(ஆ) "பிணக்கறுத்தல்" என்பதனால் விளங்கிக் கொள்வது யாது?
(அ) ஆசிரியர் / ஒதுவிப்பவர்
(ஆ) முரண்பாடுகளை நீக்குதல் / பிரச்சினைகளைத் தீர்த்தல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக