சிறுகதை 01
G.C.E O/L- 2024(2025)
02. பின்வருவனவற்றுள் ஒன்றைத் தெரிவுசெய்து, ஏறத்தாழ 250 சொற்களில் அமையுமாறு விடை எழுதுக. நீங்கள் தெரிவுசெய்த விடயத்துக்குப் பொருத்தமான தலையங்கம் இடுக.
(iv). குமரனும் விமலனும் மாணவப் பருவத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்கள். பாடசாலை வாழ்க்கை முடிந்த பின்னரும் அவர்கள் நட்புத் தொடர்ந்தது. ஆனால், சமூக வலைத்தளப் பதிவு ஒன்றினால் ஏற்பட்ட தவறான புரிதல் காரணமாக இருவரும் பல ஆண்டுகளாகப் பேசிக்கொள்ளாத நிலை ஒன்று ஏற்பட்டது. இப்போது நடைபெற ஏற்பாடாகியுள்ள 'மீண்டும் பள்ளிக்கு...நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இவற்றை அடிப்படையாகக் கொண்டு, நட்பின் வலிமையை வெளிப்படுத்தும் வகையிலான ஒரு சிறுகதை.
சிறுகதை
தலைப்பு பிரிந்தவர் கூடினால் / இருள் விலகியது / நட்பின் வலிமை (இவை போன்றன)
சிறுகதைக்குரிய அமைப்புக் காணப்படல்
வழங்கப்பட்ட கருப்பொருளுக்கமைய கற்பனைச் செறிவுடன் எழுதுதல்.
கதையை சுவைபடவும் விறுவிறுப்பாகவும் யதார்த்தப்போக்கிலும் நகர்த்திச் செல்லுதல்.
கதைக்குப் பொருத்தமான மொழிநடையைக் கையாளுதல்
முரண்பாடுகளுக்கு ஏதாவது சமூக வலைத்தளப் பதிவு காரணமாதல் அனுமதி பெறாது புகைப்படங்களைப் பதிவேற்றல்
நண்பர் ஒருவர் பற்றி பொய்யான தகவலை சமூகஊ மூலம் அறிதல்.
நட்பின் வலிமையை எடுத்துக்காட்டுவதான படிப்பினையை வெளிக்காட்டல்
பொருத்தமான முடிவு
பிரிந்தவர் கூடினால்
பல வருடங்களுக்கு பிறகு, கிராமத்து மண்வாசனை அதிலும் தான் பிறந்து வளர்ந்த கிராமத்து எழில் விமலனுக்கு உள்ளூர ஏதோ சிலுசிலுப்பை ஏற்படுத்தியது. தான் ஓடியாடி விளையாடி திரிந்த அந்த மண் பாதை,
பச்சைபசேலென கண்களை கவர்ந்தது. எத்தனை வருடங்களாகியும்| அந்த எழில் மங்காமல இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. இயற்கை அழகை ரசித்தபடியே விமலன் தனது வாகனத்தை தனது பாட்டி வீட்டிற்கு செலுத்தினான்.
அன்றையதினம் தான் கல்விபயின்ற பள்ளியில் "மீண்டும் பள்ளிக்கு என்ற நிகழ்வில் கலந்துகொள்ள பழைய மாணவர்களுக்கு அழைப்பு வந்திருந்தது. அந்தவகையில் விமலனுக்கும் அழைப்பு வரவே தனது பழைய நண்பர்களை பார்க்கும் ஆர்வத்தில் விமலனும் வந்து சேர்ந்தான். தனது பாட்டியிடம் சற்று உரையாடி விட்டு பயணக் களைப்பால் சற்று இளைப்பாறி விட்டு பாடசாலைக்கு சிறப்பாக தயாராகிச் சென்றான், பத்து மணியளவில் நிகழ்வு ஆரம்பிக்க இருந்த நிலையில் தனது பள்ளித்தோழர் ஒவ்வொருவராக வந்து சேரவே, ஒவ்வொருவருடனும் பழைய அனுபவங்களை பேசி பேசி விழா கலைகட்டியது. அந்தவகையில் தனது நண்பன் குமரன் வாகனத்திலிருந்து வந்து இறங்கியதை பார்க்க விமலனுக்கு கண்ணே கலங்கி விட்டது.
பல ஆண்டுகளுக்கு முன்பு அதாவது தான் உயர்தரம் பயின்று கொண்டிருந்த காலத்தில் குமரனும் விமலனுக்கு இணைபிரியா தோழர்கள். எல்லா வகுப்புகளுக்கும் மற்றும் விளையாட்டுக்களுக்கும் கூட சேர்ந்தே செல்வார்கள். இவர்கள் சேர்ந்து விளையாடி பல பரிசில்களையும் கூட பள்ளிக்கு வென்று கொடுத்துள்ளனர். அவ்வாறே சிறப்பாக நாட்கள் நகர்ந்த வேளையில் இருவரும் உயர்தரத்தில் கல்வி பயின்று முடித்தனர்.
அப்போது ஒருநாள் விமலன் தான் வியாபாரம் பற்றி குமரனிடம் பகிர்ந்துகொண்டான். குமரன் எளிதில் யாரிடம் எதுவும் பகிர மாட்டான். ஆனால் விமலனே தனது நண்பன்தானே என வியாபார நுணுக்கங்களை பகிரவே, அதனை அடுத்தநாள் குமரன் சமூக வலைத்தளத்தில் விமலன் கூறிய வியாபார நுணுக்கங்களையும் தான் எங்கும் பகிர வேண்டாமென கூறிய படங்கள் கூட வலைத்தளங்களில் பதிவேற்றினான். சற்றும் எதிர்பார்க்காத விமலனுக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டது. சுயநலவாதியாக குமரன் இவ்வாறு ஒரு செயல் செய்வான் என விமலன் எதிர்பார்க்கவே இல்லை. இதனை விமலனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. குமரனை பார்க்கவே அருவருப்பாக இருந்தது. தனது தோழன் தனக்கு நல்ல பாடத்தை புகட்டியதாக எண்ணி, விமலன் குமரனுடன் பேசுவதை புறக்கணித்தான். யாராக இருந்தாலும் இரகசியம் காக்க வேண்டிய இடத்தில் தான் வியாபாரம் பற்றி கூறி தவறிழைத்தாக எண்ணி நொந்துகொண்டான். இவ்வாறே பல வருடங்களாக இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
மீண்டும் பள்ளிக்கு நிகழ்ச்சியில் குமரனை விமலன் பார்த்தவுடன் தன்னையே அறியாமல் தோழர்கள் இருவரும் பழைய நிகழ்வுகளை மறந்து ஆரத்தழுவிக் கொண்டனர். குமரன், "நண்பா என்னை மன்னிச்சிடுடா.. நான் அப்டி செஞ்சிருக்க கூடாது. அந்த தப்பை நெனச்சி நான் நிறைய தடவை கவலை பட்டிருக்கேன்டா..." "நான் ஒரு நிருபராக முயற்சி பண்ணிட்டு இருந்தேன். அப்போதான் நீ வியாபாரத்தை பற்றி சொன்ன, எனக்கு அப்போ இருந்த தொழில் மேல உள்ள ஆசைல அத வச்சி வாய்ப்பு தேட அப்டி பண்ணிட்டேன்."
"சரிடா.. அத விடு, நான் இங்க உன்னை பார்த்த நிமிஷத்துல எல்லாம் மறந்துடே" "எம்மேலயும் தப்பு இருக்கு, உம்மேல ரொம்ப கோப்பட்டுடேன்", என விமலன் கூற பிரிந்தவர் இருவரும் ஒன்றுகூடி நிகழ்வை இன்னும் சுவாரஸ்யப்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக