G.C.E O/L- 2024(2025)
மேடைப்பேச்சு
(iii). ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல் உரிய காலத்தில் இடம்பெறுவது இன்றியமையாதது ஆகும். தேர்தல் மூலம் மக்களது ஜனநாயக உரிமை பாதுகாக்கப்படுகின்றது; அரசாங்கம் பற்றிய மக்களது அபிப்பிராயம் வெளிப்படுத்தப்படுகின்றது; பொருத்தமான புதியதொரு அரசைத் தெரிவுசெய்ய முடிகிறது. தேர்தலின் முக்கியத்துவம், அதனாலேற்படும் நன்மைகள் போன்றவற்றை வலியுறுத்தி, பாடசாலை மாணவர் மன்றத்தில் நீர் நிகழ்த்தும் ஒரு மேடைப்பேச்சு.
(iil). மேடைப்பேச்சு- 01
G.C.E O/L- 2024(2025)
தலைப்பு - தேர்தலின் அவசியம் / தேசத்தின் எதிர்காலம் தேர்தலில் / தேர்தல் ஒரு ஜனநாயக உரிமை (இவை போன்றன)
தேர்தல் பற்றிய விளக்கம்
தேர்தல் ஜனநாயக உரிமைக்கான அடிப்படை
தேர்தலின் இன்றியமையாமை
தேர்தல் உரிய காலத்தில் இடம்பெறவேண்டியதன் அவசியம்
தேர்தலால் ஏற்படும் நன்மைகள்
தேர்தல் ஒரு ஜனநாயக உரிமை
படைத்த இறைவனுக்கும், கற்ற தமிழுக்கும், அவையோருக்கும் என் இனிய வணக்கங்கள்.
கடந்த காலங்களில் நடந்தேறியவற்றை எடுத்து நோக்குகையில் பேச வேண்டிய தலைப்பு என்னவென்றால் தேர்தல்.
தேர்தல் என்பது யாதெனில் ஒரு நாட்டின் குடிமக்கள் தங்களுக்கு விருப்பமான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க பயன்படும் ஒரு செயல்முறையாகும் குறிப்பிட்ட பகுதியில் உள்ள வாக்காளர்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வாக்களிக்கிறார்கள். அவையோரே! இதில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கலாம், உள்ளூராட்சி பிரதிநிதிகளாக இருக்கலாம், அல்லது ஜனாதிபதியாக கூட இருக்கலாம் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். வாக்களிப்பதைவிட தேர்தலின் முக்கியத்துவத்தை அறிந்து வாக்களிப்பது அதைவிட முக்கியம்.
ஜனநாயகத்தின் அடிப்படை, அதாவது தேர்தல் என்பது ஜனநாயகத்தின் மிக முக்கியமான அம்சமாகும். இது மக்களுக்கும் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்குகின்றது. மக்கள் தங்கள் கருத்துக்களையும் விருப்பங்களையும் அரசாங்கத்திடம் தெரிவிக்கலாம், தேர்தலானது அரசாங்கம் மக்களுக்கு பொறுப்புக் கூற வைக்கின்றது. தேர்தலானது சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட உதவுகின்றது. அடுத்த மிகப்பெரிய விடயம் தேர்தல்கள் சமூக மாற்றத்தை கொண்டுவர உதவும் ஒரு கருவியாகும். ஏனெனில் மக்கள் தங்கள் விருப்பப்படி ஆட்சியை மாற்ற முடியும்.
ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலமே தேர்தலாகும். இது அறிந்து வாக்காளர்களும் வேட்பாளர்களும் செயல்பட வேண்டியது அவசியம். உரிய காலத்தில் தேர்தல் நடாத்தி ஆட்சியை முன்னெடுத்தல் ஒவ்வொரு அரசாங்கத்தினதும் கடமை. இலங்கை சோசலிச குடியரசானது ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்துவிட கூடாது. ஒருவரை ஆட்சியில் அமர்த்தவும் அவரையே வீட்டிலே அமர்த்தவும் மக்களால் முடியும். இதுவே ஜனநாயக சக்தி.
அவையோரே தேர்தலின் நன்மைகளை நோக்குவோமானால், பிரதிநிதித்துவம் அதாவது மக்களின் குரல் அரசாங்கத்திடம் செல்ல மக்களுக்கு பிரதிநிதிகள் வேண்டும். மக்கள் வாக்களித்து ஆட்சியமைக்கும் ஒவ்வொரு அரசாங்கமும் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். அரசாங்கத்தின் சட்டப்பூர்வ தன்மையை தேர்தல்கள் அதிகரிக்கின்றன. அதனால் மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஒரு நாட்டின் அமைதியான ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும். சமூக ஒருமைப்பாட்டை பதிவுசெய்ய வாய்ப்பு ஏற்படுகின்றது. அரசியலின் ஸ்த்திரத்தன்மையை மேலும் நிலைநிறுத்த உதவுகின்றன .
இறுதியாக நாட்டின் வளர்ச்சி, எதிர்காலம் மற்றும் திறமையான மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒரு நாடானது பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியில் வளர செல்வாக்கு செலுத்துகின்றது.
அவையோரே! தேர்தலின் இன்றியமையாமையை விளக்க வேண்டிய பொறுப்புகளை சிறப்பாக
செய்த திருப்தியோடு,
"தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்"
என வள்ளுவனின் வாக்கை கூறி விடைபெறுகிறேன் நன்றி..
வணக்கம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக