G.C.E O/L- 2024(2025)
அறிக்கை
கடந்த வாரம் அறிவொளி மகாவித்தியாலயத்தில் கல்விக் கண்காட்சி ஒன்று இடம்பெற்றது. பல துறைகளும் கடந்து இடம்பெற்ற இக்கண்காட்சியின் ஒழுங்கமைப்புக் குழுவின் செயலாளர்
ச.பூங்கோதை என உம்மைக் கருதி, சாடசாலை அதிபருக்கு, பின்வரும் விடயங்களை உள்ளடக்கியதாக 100 சொற்களில் அறிக்கை ஒன்று எழுதுக.
காலம், இடம்
பிரதம விருந்தினர் வருகை
வெவ்வேறு துறைகளும் காட்சிப்பொருட்களும்
அறிவொளி மகாவித்தியாலயத்தின் கல்விக் கண்காட்சி அறிக்கை
2025
கடந்த 2025.03.24 ஆந் திகதியன்று அறிவொளி மகா வித்தியாலயத்தின் பல்வேறு துறைகளுக்கு இடையிலான இடம்பெற்ற கல்விக் கண்காட்சி தொடர்பாக அறிக்கையை ஒழுங்கமைப்பு குழுவின் செயலாளர் ச. பூங்கோதை ஆகிய நான் முன்வைக்க கடமைப்பட்டுள்ளேன்.
இடம் :- அறிவொளி மகா வித்தியாலய பிரதான மண்டபம்
காலம் :- 2025.03.24
நேரம் : மு.ப, 8.30 - பி.ப,06.00
பிரதான மண்டபத்தில் கல்விக் கண்காட்சி காலை 08.30 மணியளவில் முக்கிய பிரதம மற்றும் சிறப்பு விருந்தினர்களின் வருகையின் பிறகு அவர்களினால் மங்கள விளக்கேற்றப்பட்டு கண்காட்சி சிறப்பாக ஆரம்பமாகியது. பின்னர் வரவேற்புரை, தலைமையுரையினைத் தொடர்ந்து மாணவர்களின் திறமைமிக்க ஆக்கங்கள் பார்வையாளர்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டன. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பங்கள், வரலாறு, அழகியல், கைப்பணி, ஓவியங்கள் என பாகுபடுத்தப்பட்டிருந்தன.
கண்காட்சி விழாவில் பங்குபற்றிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பிரமுகர்கள் மற்றும் அதிபர் ஆசிரியர்களால் வழங்கி வைக்கப்பட்டன. விருந்தினர் கௌரவிப்புடன் விழா ஒழுங்கமைப்பு செயலாளரால் நலன் விரும்பிகள் மற்றும் உதவி வழங்கிய பெற்றோர் பிரதேசவாசிகளும் மற்றும் அனைவருக்கும் நன்றியுரை ஆற்றப்பட்டது. விழா இனிதே நிறைவடைந்தது.
கண்காட்சி செயலாளர்,
ச. பூங்கோதை,
அறிவொளி மகா வித்தியாலயம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக