24.11.25

பொருள் மயக்கம் கடந்த கால வினாக்கள்

பொருள் மயக்கம் கடந்த கால வினாக்கள்


G.C E O/L- 2016
பகுதி ii
1.
(vii). பின்வரும் வாக்கியத்திலுள்ள மயக்கத்தை நீக்கி எழுதுக.


"நாற்பது வயதைக் கடந்த அந்த வீட்டின் பெண்மணி கூண்டினைத் தொட்டுப் பார்த்தாள்.
இவ்வாக்கியத்தில் நாற்பது என்பது வீட்டையா? அல்லது பெண்மணியை யா? என்பது மயக்கத்தை ஏற்படுத்துகின்றது.
திருத்தம்
நாற்பது வயதைக் கடந்த அந்த வீட்டின் பெண்மணி கூண்டினைத் தொட்டுப் பார்த்தாள்.

G.C E O/L- 2015
பகுதி ii

(x) "
சரணாலயத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட மக்களைத் தாக்கிய காட்டுயானை"

மேலே காண்பது பத்திரிகைச் செய்தி ஒன்றின் தலைப்பு. அத்தலைப்பில் உள்ள மயக்கத்தைத் தவிர்த்து தெளிவான முறையில் அதனைத் திருத்தி எழுதுக.

இங்கு சரணாலயத்திற்கு கொண்டு சென்றது மக்களையா? காட்டு யானையையா? என்பது மயக்கத்தை ஏற்படுத்துகின்றது.
திருத்தம்
மக்களைத் தாக்கிய காட்டு யானை சரணாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
அல்லது
சரணாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்ட காட்டு யானை மக்களை தாக்கியது

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக