க.பொ.த (சாதாரண தரப்) பரீட்சை - தமிழ் மொழியும் இலக்கியமும் -2024(2025)
பகுதி:- ii
(ii) உரையாடல் - 01
தலைப்பு வளமான தொழில்வாய்ப்பு உள்நாட்டிலா? வெளிநாட்டிலா? / வெளிநாட்டு மோகமும்
உள்நாட்டு உழைப்பும் (இவை போன்றன)
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் பற்றிய கருத்துக்கள்
வெளிநாட்டு வேலை வாய்ப்பில் கூடிய வருமானம் ஈட்டுதல்.
அந்நியச் செலாவணி நாட்டுக்குக் கிடைத்தல்.
உள்நாட்டில் தொழில் வாய்ப்பின்மை
வசதியான வாழ்க்கை வாய்ப்பு
சமூக அந்தஸ்து உயர்தல்.
தாய்நாட்டு வேலை வாய்ப்புக்கள் பற்றிய குறிப்புக்கள்
உள்நாட்டிலும் கௌரவமான தொழில்கள் உள்ளமை.
உதாரணம்: சுயதொழில், அரச வேலைவாய்ப்புக்கள்
உள்நாட்டு வேலை வாய்ப்பால் குடும்ப, சமூக உறவுகள் பேணப்படுதல்.
நாம் கற்ற கல்வியால் நமது நாட்டை விருத்தி செய்வது சிறந்தது.
வெளிநாட்டு மோகமும் உள்நாட்டு உழைப்பும்
(ராஜ் அரச குடிவரவு குடியகல்வு திணைக்களம் சென்று விட்டு வீடு திரும்புகையில் தனது பள்ளி நண்பன் சிவாவை புகையிரத நிலையத்தில் சந்திக்கிறான். அப்போது....)
சிவா : நண்பா! எங்கே இந்த பக்கம்?
ராஜ் : கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்து விட்டு வீடு திரும்புகிறேன். நீ வேலைக்கு சென்று வருகிறாயா?
சிவா : ஆம் நண்பா! இன்னும் ஐந்து நிமிடத்தில் புகையிரதம் வந்துவிடும். நீயும் என்னுடன் வருகிறாயா? உனது வேலை முடிந்துவிட்டதல்லவா?
ராஜ் : ஆம், மத்திய நாடு ஒன்றிற்கு வேலைவாய்ப்பிற்காக செல்ல எண்ணியுள்ளேன். இங்கு கிடைக்கும் வருமானம் போதாது. அங்கே சென்றால் கூடிய வருமானம் கிடைக்கும் அல்லவா!
சிவா : ஆ.... இப்போதுள்ள விலைவாசி ஏற்றத்தால் வாழ்வாதாரத்தை சமாளிப்பது கடினம் தானடா. அதனால்தான் நானும் சுய தொழிலொன்றையும் செய்து வருகிறேன்.
ராஜ் : வெளிநாட்டு வேலைவாய்ப்பில் வசதியான வாழ்க்கையையும் பெறலாம். சமூகத்தில் நல்ல அந்தஸ்த்து மற்றும் சொத்துக்களையும் ஈட்டிக்கொள்ளலாம். அந்நிய செலாவணி
வருகையால் எமது நாட்டுக்கும் நன்மை தானே.
சிவா :
அதென்னமோ உண்மைதான். ஆனால் குடும்ப உறவுகளை இங்கே விட்டு பணத்துக்காக அங்கே நீ தனியாக வருந்துவாய் என்றுதான் எனக்கு கவலையாக உள்ளது. அது
மட்டுமல்லாது அங்கே வேறு ஒரு சமூகம், மொழி, இனம் என உனக்கு சமாளிக்க நீண்ட காலம் செல்லும்.
ராஜ் :
எமது நாட்டில் உள்ள வருமான தொகைக்கு இங்கு கஷ்டப்பட இயலாது நண்பா! எமது தொழில் வாய்ப்பு சிறப்பாக அமைந்தால்தான் குடும்ப உறவுகளையும் சிறந்த பாதையில்
வழிநடத்த முடியும். என் வீட்டிலோ நானே மூத்தப்பிள்ளை, எனது சகோதரர்களின் கல்வி செயற்பாடுகளையும் இதர செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும். அது.
மட்டுமல்லாது அரச ஊக்குவிப்புகளும் சில கிடைக்கும் என எண்ணுகின்றேன்
சிவா :
உனது கஷ்டம் எனக்கு புரிகிறது நண்பா! உள்நாட்டிலும் நல்ல அரச தொழில் வாய்ப்புகள் உள்ளது. நீ சரியான வழியில் விண்ணப்பித்து பார் நண்பா அல்லது உனக்கு சிறப்பான ஒரு
சுய தொழிலை செய்து அதில் முன்னேறி உனது சகோதரர்களிற்கும் முன்னுதாரணமாக இரு. அதுமட்டுமல்லாது, நீ உனது சகோதரர்களையும் இங்கு இருந்தே வழி நடத்தி செல்லலாம். வெளிநாட்டில் இருந்து பணம் மட்டும் அனுப்புவதால் உனது பொறுப்பும் கடமையும் முடிந்துவிடாது. அருகில் இருந்து உனது பெற்றோருக்கு உதவியாக குடும்ப சுமையை பகிர்ந்துக் கொண்டு முன்னேறு.
ராஜ் : சரி நண்பா! நீ சொல்வதிலும் உண்மை உண்டு. நான் யோசிக்கிறேன். (அப்போது புகையிரதம் வந்து விடவே இருவரும் உரையாடல் முடித்து விட்டு புகையிரதத்தை நோக்கி செல்கின்றனர்.)
சிவா : நான் சென்று வருகிறேன். பிறகு சந்திக்கலாம் நண்பா! வேலை வாய்ப்பு எதுவும் வந்தால் தெரிவிக்கிறேன். (இருவரும் விடைபெற்று திரும்புகின்றனர்.)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக