25.11.25

G.E.C O/L, மூத்தம்மா கடந்தகால வினாக்கள்

 

மூத்தம்மா

கடந்தகால வினாக்கள்

G.C.E O/L- 2023(2024)

(v). "என்னத்துக்கு இந்த வண்டிலுக்கு குடிலப் போல ஓல கட்டினிங்க

இக் கூற்று,

() யாரால்

() யாருக்குக் கூறப்பட்டது?

() காசிமால்

() மூத்தவாப்பாவுக்கு

04. மூத்தம்மா என்ற சிறுகதையில்

() மூத்தம்மாவின் ஆளுமைத் திறன்

() அந்த ஆளுமை காசிமில் செல்வாக்குச் செலுத்திய விதம் ஆகியன சித்திரிக்கப்படுமாற்றினை விளக்குக.

() மூத்தம்மாவின் ஆளுமைத்திறன்

கண்ணியத்துக்குரிய தோற்றம்

முதுமைநிலையிலும் குன்றாத உற்சாகமும் மனோதைரியமும்

வறுமைநிலையிலும் தாய், தந்தையற்ற தன் பேரப்பிள்ளைகளை அக்கறையுடன் வளர்க்கும் பொறுப்புணர்ச்சி

கணவனுடனான அன்னியோன்னியமான உறவு நிலை

ஊரவர்களுக்கு உதவும் மனப்பான்மை

ஊரார் மதித்து முதன்மையளிக்கும் வகையிலான வாழ்க்கை முறை (முடிசூடா ராணி)

நோய்நொடியால் முடங்கிவிடாது தானே பரிகாரம் செய்யும் தேர்ச்சி

சுயபொருளாதார முயற்சிகளால் குடும்பத்தை நடத்தும் தெம்பு

கிராமியப் பாரம்பரியங்களுடன் கூடிய வாழ்க்கைமுறை

இயல்பான நகைச்சுவை உணர்வு

() ஆளுமை காசிமில் செல்வாக்குச் செலுத்திய விதம்

புராணகாலத்து அரசிகள், இராசவம்சத்துப் பெண்கள் பற்றிய கதைகளைக் கேட்கும்போது காசிமுக்கு மூத்தம்மாவின் நினைவு வருதலும், அவளை ஓர் அரசியாகக் கற்பனை செய்தலும்

தன்னிடம் இயல்பாக இருந்த பயத்தை உதறித்தள்ளிவிட்டு தன்னையும் ஓர் இளவரசனாகக் கற்பனை செய்தல்

மூத்தம்மா என்ற மகாராணியின் கீழ் இருப்பதில் மிகுந்த பெருமை கொள்ளுதல்.

மூத்தம்மாவின் திடீர் மரணத்தால் வருத்தமடைதலும் அதனைத் தைரியத்துடன் எதிர்கொள்ளலும்

மூத்தம்மாவின் இழப்பின் பின் தன் தங்கையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்புணர்ச்சி முனைப்புறுதல்

G.C.E O/L- 2022(2023)

(v). "தங்கச்சியை வாரிக்கொண்டா. அவட கண்கள் இரண்டும் ததும்பிப் பீறின"

) 'தங்கச்சியை வாரிக்கொண்டா' என்பதன் மூலம் வெளிப்படும் உணர்ச்சி யாது?

() தங்கச்சியை வாரிக்கொண்டது யார்?

() அன்பு / பாசம் / இரக்கம்

() மூத்தம்மா

G.C.E O/L- 2021(2022)

(viii) "அப்ப ஏன்கா நம்மட உம்மா மவுத்தாப் போன அண்டைக்கு இது கத்தல்ல.

() இக்கூற்று யாரால் யாருக்குக் கூறப்பட்டது?

() 'அண்டைக்கு இது கத்தல்ல' என்பதனை எழுத்துத் தமிழில் திருத்தமாக எழுதுக.

() காசிமால் / பேரனால் மூத்தம்மாவிற்கு கூறப்பட்டது

() அன்றைக்கு இது கத்தவில்லை / அன்று இது கத்தவில்லை

04. 'மூத்தம்மா' என்ற சிறுகதையில்,

() கிராமிய வாழ்வியல்

() ஆசிரியரின் வர்ணனைத்திறன்

என்பன வெளிப்படுமாற்றைத் தெளிவுபடுத்துக.

() கிராமிய வாழ்வியல்

குடிசை வீடு

மாட்டு வண்டி உபயோகம்

விலங்கு வளர்ப்பு (பசு, கோழி)

சுற்றுச் சூழலிலிருந்து சுயதேவைகளைப் பூர்த்தி செய்தல்.

கைவினைப் பொருட் பாவனை

உணவுக்கான மூலப் பொருட்களை அன்றாடம் சுயமாகத் தயாரித்தல்.

எண்ணெய், கைமருந்து முதலானவற்றைப் பக்குவமாகத் தயாரித்தல், கைவைத்தியம் செய்தல்.

நேர்த்திக் கடன் முதலான நம்பிக்கைகள்

பாரம்பரிய ஆடை அலங்காரங்கள்

() ஆசிரியரின் வர்ணனைத் திறன்

சூழல் பற்றிய வர்ணனை

கடற்கரையோரக் கிராமம் பற்றிய விவரிப்பு

இயற்கைக் காட்சிகள் (வானம், நிலவு, மரங்கள் முதலானவை)

வீட்டுச் சூழல் பற்றிய விவரிப்பு

பாடசாலைச் சூழல் பற்றிய விவரிப்பு

சம்பவ வர்ணனை

காசிம் ஊஞ்சல் ஆடுதல்

பக்குல் கத்துதல் நாய்கள் ஊளையிடல்

பெக்டெரி விசில் சத்தம் ஒலித்தல்

மரண வீட்டுச் சம்பவங்கள்

பாத்திர வர்ணனை

மூத்தம்மாவின் தோற்றம், செயற்பாடுகள்

வெள்ளைக் கொக்கு என்ற வர்ணனை......

காசிமின் செயற்பாடுகள்

வால் வண்டியில் இருப்பதில் எனக்கு குஷி......

மூத்தவாப்பாவின் தோற்றம், செயற்பாடுகள்

அவரது தலையை, "சூப்பின பனங்கொட்ட மாதிரி" எனல்

தங்கையின் செயற்பாடுகள்

தங்கச்சி விரல் சூப்பிக்கொண்டு அங்குமிங்கும் ஓடித்திரிந்தது.

G.C.E O/L- 2020

(v) "மூத்தம்மா என்ற மகாராணியின்கீழ் இருப்பதில் என்றுமில்லாத கர்வம் சுரந்தது. எனது சிரசில் சௌந்தர்ய கிரீடம் சூடியதான மிதப்பு. விலாவிரண்டிலும் சிறகுகள் முளைத்து காற்றினிலே எம்பத் தொடங்கி விட்டேன். என் மிதமிஞ்சிய 'பயந்தாங்கொள்ளி' பட்டத்தை நான் எரித்தாயிற்று. நெஞ்சினுள் கலர் கலராய் வண்ணப் பூக்கள் காடாய் அடர்ந்தன."

() இதைக் கூறுபவரின் குதூகல உணர்வு எவ்வாறு சித்தரிக்கப்படுகிறது?

() மூத்தம்மாவின் ஆளுமை இங்கு எவ்வாறு வெளிப்படுத்தப்படுகின்றது?

() - மூத்தம்மாவோடு இருப்பதில் கர்வம் சுரந்தது.

சிரசில் சௌந்தர்ய கிரீடம் சூடியதான மதிப்பு

விலாவிரண்டிலும் சிறகுகள் முளைத்து காற்றிலே எழும்புவதாக உணர்தல்.

நெஞ்சினுள் கலர் கலராய் வண்ணப்பூக்கள் காடாய் அடர்தல்.

(ஆ) - பயந்தாங்கொள்ளியாக இருந்த காசிம், மூத்தம்மாவின்கீழ் இருந்ததால் 'பயந்தாங்கொள்ளி

என்ற தனது பட்டத்தை எரித்ததாகக் கூறுவதனூடாக

மூத்தம்மாவை 'மகாராணி' யாகக் கருதுவதனூடாக

G.C.E O/L- 2019

(vii) "அங்கப்பாரு மனே உன்ட மூத்த வாப்பா தலய, சூப்பின பனங்கொட்ட மாதிரி"

() 'மூத்த வாப்பா' எனக் குறிக்கும் உறவுப் பெயருக்குச் சமனான வேறு பெயர் யாது?

() இதில் இடம்பெற்ற அணி யாது?

(அ) பாட்டன் / தாத்தா / பேரன் / அம்மப்பா / உம்மப்பா / மூத்தப்பா

(ஆ) உவமையணி

04. மூத்தம்மா என்ற சிறுகதையில்

() காசிம்

() மூத்த வாப்பா

ஆகிய பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளவாற்றை விளக்குக

) காசிம்

கதை சொல்லியாக விளங்கும் முக்கியமான பாத்திரம்.

மூத்தம்மா. மூத்தவாப்பா. தங்கை ஆகியோரிடத்தில் பாசம் கொண்டவன்.

கிராமத்து பழைய நம்பிக்கைகளை அப்படியே நம்பும் சிறுபருவத்தவன்.

தனது தாயார் இறந்த போது பக்குல் கத்தவில்லை என்றும் அப்படி கத்தியிருந்தா உம்மாவை வீட்டுக்குள் சாகவிடாது காப்பாற்றி இருக்கலாமென்றும் நம்பியமை.

இறந்து போன தாயாரின் நினைவினால் துயருறுபவன்.

மூத்தம்மாவின் செயல்களை ஆச்சரியத்தோடும் அக்கறையோடும் கவனித்துப் பெருமை கொள்பவன்.

அவளது தோற்றத்தையும் நடத்தையையும் ஆளுமையையும் பார்த்து அவளை ஓர் அரசியாகக் கற்பனை செய்பவன்

அச்சப்படுபவனான காசிம் மூத்தம்மாவைப் போலவே தானும் துணிவுடன் இருக்கப் பழகியவன்.

() மூத்தவாப்பா

மூத்தம்மாவின் கணவன்

மூத்தவாப்பாவின் பழக்கவழக்கங்கள்

கூட்டுக் கரத்தையில் படுத்துறங்குதல்.

கரத்தையில் விறகு பொறுக்க செல்லுதல்

சுருட்டு புகைத்தல். வெற்றிலை போடுதல்

மூத்தம்மா மீது அன்பு கொண்டவர்

காசிம், "என்னத்துக்கு இந்த வண்டிலுக்கு குடிலப்போல ஓல கட்டினிங்க" என கேட்டதற்கு "மழ வெயில்ல நனையாம அவவ கொண்டு போக வேண்டு" என்று கூறியமை

பேரப்பிள்ளைகளில் அன்பு கொண்டவர்

"காசிமை வாவெண்பா மனெ" என தனக்கு அருகில் கூப்பிடுதல்

விறகு பொறுக்கச் செல்லும்போது காசிமை கூட்டிச் செல்லுதல்

முத்தம்மாவுடன் அன்னியோன்னியமாக வாழ்பவர்

மூத்தம்மா "அங்கபாரு மனெ உண்ட மூத்தவாப்பா தலைய "சூப்பின பனங்கொட்டை மாதிரி" என கிழவனை சீண்டி கொடுப்பினுள் சிரித்துக் கொள்வார் என்பதன் மூலம்

மூத்தம்மா இறந்த பின் காசிமை கூட்டிவர பாடசாலைக்குச் சென்ற மூத்தவாப்பா என்றும் இல்லாதவாறு தளர்ந்து போய் நிற்றல்.

G.C.E O/L- 2018

(iv). கைராசிக்காரி நீங்கள்தான் மாமி என்ர தலப்புள்ளய ஏந்தணும்"

() இங்கு 'கைராசிக்காரி' எனக் குறிப்பிடப்படுபவரின் பெயர் யாது?

() 'தலப்புள்ள' எனக் குறிப்பிடப்படுவது யாது?

() மூத்தம்மா

() மூத்தபிள்ளை / தலைப்பிள்ளை / முதற்பிள்ளை / தலைச்சன்பிள்ளை

(v). நானும் மூத்தம்மாவைப் போல் சுயமாய் ஓர் இளவரசனாய் இயங்க விழைந்தேன். உன்னிப்பாக அவவைப் பார்க்கத் தொடங்கினேன். எந்தக் காரிருளையும் கிழித்துக் கொண்டு குடுகுடுவென நடக்கும் மனோ தைரியம் அவவுக்கு. நானும் அப்படி நடந்து பார்த்தேன். இரத்தம் உறைந்து போய் கால்கள் மரத்துவிடவில்லை. பயம் என்னைப் பீடிக்கவில்லை. மஞ்சோனா மரத்தின் கீழ் தனியே இருக்கப் பழகினேன். கரு மேகத்தைப் பார்த்து கரும்பூதமாய் உள்ளுக்குள் ஓடத்தோன்றுவதில்லை. மூத்திரம் முடுத்தால் மூத்தம்மாவை எழுப்பிக் கொண்டு சிணுங்குவதில்லை. இந்த ராஜ்யத்தின் அரசியைப் போல், நானுமொரு இளவரசனானேன்.

() மூத்தம்மாவின் ஆளுமைப் பண்புகளாக இங்கு சுட்டப்பெறுபவை யாவை?

() "இந்த ராஜ்யத்தின் அரசியைப் போல், நானுமொரு இளவரசனானேன்." என்பதன் மூலம் கதாசிரியர் எதை உணர்த்த விழைகிறார்?

() சுயமாய் இயங்குதல், மனோதைரியம். பயமின்மை

() மூத்தம்மாவின் குணப்பண்புகள் இந்தக் கதாப்பாத்திரத்தினுள் உள்வாங்கப்பட்டு இயங்கும் தனமை ஏற்பட்டுவிட்டது என்பதையே உணர்த்த விழைகிறார்.

G.C.E O/L- 2017

04. மூத்தம்மா என்ற சிறுகதையில்,

() கதைக்கள வர்ணனை

() மூத்தம்மா என்ற பாத்திரப்படைப்பு

என்பன அமைந்திருக்கும் விதத்தை விளக்குக.

() கதைக்கள வர்ணனை

மூத்தம்மா என்ற சிறுகதையில் ஒரு கடற்கரையோரக் கிராமம் களமாக அமைந்துள்ளது. அக்கிராமம்

தொடர்பாகக் கதை ஆசிரியர் விபரிப்பது.

இயற்கைக் காட்சிகள்

(மேகங்கள் நிலவை மூடி ஆலிங்கனம் செய்தல் ....)

கிராமத்தின் இயல்பான காட்சிகள். நடவடிக்கைகள். (மஞ்சோனா மரத்தில் பக்குல் கத்துதல்....)

() மூத்தம்மா என்ற பாத்திரப் படைப்பு

மூத்தம்மா என்ற பெயரின் பொருத்தப்பாடு (தலைமைத்துவம்)

அவளின் கிராமியம் சார்ந்த நாளாந்த நடவடிக்கைகள் (குடும்பப் பெண்)

பேரப் பிள்ளைகளிடம் காட்டும் பரிவின் தொடர்ச்சி (பரிவுடைய பெண்)

பேரப்பிள்ளைகள் அவளிடம் காட்டும் அன்பு

ஊர்க்காரர் அவளிடம் கொண்ட மதிப்பு (நன் மதிப்புடைய பெண்)

பேரப்பிள்ளையிடம் அவளின் செல்வாக்கு (தனது நடவடிக்கைகள் ஊடாக புதிய தலைமுறையிடம் ஆளுமையை விதைத்துச் செல்லல்)

G.C.E O/L- 2016

(vi) "மஞ்சோனா மரத்திலிருந்து இப்போதுதான் பக்குல் பறந்து போனது"

() "மஞ்சோனா மரம்" என்பதன் திருத்தமான வடிவம் யாது?

() "பக்குல்" எனும் பறவையைக் குறிக்கும் வேறு பெயர் ஒன்று தருக.

() மஞ்சள் வண்ண மரம் / மஞ்ச வண்ணா மரம் / மஞ்ச முண்ணா மரம் / மஞ்சமுணா

() ஆந்தை / கோட்டான் / நத்து / கூகை

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக