7.11.25

அணி இலக்கணம் அறிமுகம்

அணி

அணி என்பது அலங்காரம் அழகு செய்வதே அணியாகும்.

அணிகள் என்பவை செய்யுள்களுக்கு அழகு சேர்ப்பதற்கான உத்திகள் ஆகும். அவை சொல்லாலும் பொருளாலும் செய்யுளுக்கு அழகு சேர்த்து, அதனை சுவை மிக்கதாக மாற்றுகின்றன

தொல்காப்பியத்தை அடுத்து அணி இலக்கணம் பயிலப் பெரிதும் பயன்படுவது தண்டியலங்காரம் ஆகும். இது தொல்காப்பியத்தையும், வடமொழி காவியா தரிசத்தையும் அடியொற்றி எழுதப்பட்டது. இக்கருத்தை,

பன்னிரு புலவரில் முன்னவன் பகர்ந்த

தொல்காப் பியநெறி பல்காப் பியத்தும்

அணிபெறும் இலக்கணம் அரிதினில் தெரிந்து

வடநூல் வழிமுறை மரபினில் வழாது

எனவரும் தண்டியலங்காரச் சிறப்புப் பாயிரத்தால் அறியலாம்.

நன்னூல் அணியிலக்கணத்தைப் பற்றி நேரடியாகக் குறிப்பிடவில்லை. நன்னூல், தமிழில் ஐந்து இலக்கணங்களில் ஒன்று எனக் கூறி, எழுத்து, சொல் இலக்கணங்களை விளக்குகிறது. அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம் ஆகும், மேலும் வீரசோழியம், இலக்கண விளக்கம் போன்ற பிற நூல்களும் அணியிலக்கணத்தைப் பற்றி விரிவாகக் கூறுகின்றன.

நன்னூல், எழுத்து, சொல், யாப்பு, அணி, பொருள் என ஐந்து இலக்கணப் பிரிவுகளைக் குறிப்பிடுகிறது. ஆனால், இந்த ஐந்து பிரிவுகளில் எழுத்து, சொல் இலக்கணங்களை மட்டுமே இந்நூலில் விரிவாகப் பவணந்தி முனிவர் விளக்குகிறார்.

அணிலக்கண நூல்கள்:

தண்டியலங்காரம் அணியிலக்கணத்தை விரிவாகக் கூறும் தொன்மையான நூலாகும். வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம் போன்ற பிற நூல்களும் அணியிலக்கணம் பற்றிக் கூறுகின்றன.

அந்த வகையில் அணி இரண்டு வகைப்படும்.

சொல்லணி

பொருளணி என்பனவாகும்.

 

சொல்லணி

எழுத்தும் சொல்லும் பற்றி வருவது சொல்லணி ஆகும். அதாவது சொல்லால் அழகு பெறச்செய்வது சொல்லணி எனக் கூறுவர்.. சொல்லனி எழுத்துத் தொடர்பாகவும் சொல் தொடர்பாகவும் கையாளப்படும் அணியாகும். இது ஐந்து வகைப்படும்.

எதுகை

மோனை

மடக்கு

சிலேடை

பின்வரு நிலை

 

பொருளணி

பொருளால் அழகு பெறச் செய்வது பொருளணியாகும். அது,

உவமை

உருவகம்

தற்குறிப்பேற்றம்

தன்மை நவிற்சி

உயர்வு நவிற்சி

இழிவு நவிற்சி

வேற்றுமை அணி

வேற்றுப்பொருள் வைப்பணி

வஞ்சப்புகழ்ச்சி அணி

சுவை அணி

முரண் அணி எனப் பலவகைப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக