தேர் சிறுகதை வினாவிடை - 01
எஸ்.பொன்னுத்துரையின் 'தேர்'சிறுகதை அவரது சிறுகதைத் தொகுப்பில் (1996) இடம்பெற்றுள்ளதாகும். ஏற்கனவே இச் சிறுகதை முதலில் 'சுதந்திரன்' பத்திரிகையில் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ்ப்பாணத்துச் சராசரி குடும்பம் ஒன்றில், புதுவருடத் தினத்தன்று குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் கூடி மகிழ்கின்ற, கலந்துறவாடுகின்ற நிகழ்ச்சியை அக் குடும்பத்தின் தலைவராக விளங்கும் கதாபாத்திரத்தின் மனவோட்டங்களின் மூலமாக பொருண்மையும் கலைத்துவமும் மிக்கதாகச் சித்திரித்துக் காட்டுவதுதான் 'தேர்' சிறுகதையாகும்.
இச் சிறுகதையின் கதைசொல்லியாகக் கதாசிரியரே விளங்குகிறார்.சிறுகதையின் நிகழ்களமாக முகத்தாரின் வீடு அமைந்துள்ளது. அந்த இடம் நல்லூர் கோயிலின் மணியோசை கேட்கக் கூடிய இடமாகக் காணப்படுவதும் கருதத்தக்கதாகும்.
ஆறுமுகம் (குடும்பத் தலைவன் முகத்தார்). அவரது மூத்த மகன் சுப்பிரமணியம், அவனது மனைவி கமலா.மகள் ஹம்சத்வனி, மகன் அசோகன், முகத்தார் தம்பதியரின் இவ்வொரு மகள் பரிமளம். அவளது கணவன் சதாசிவம், வேறொரு மகன் சவுந்தரம், அவளது கணவன் தங்கராசா, அவர்களின் பிள்ளைகள், முகத்தாரின் இன்னொரு மகன் குமரசாமி, அவன் மனைவி, பிள்ளைகள், இளைய மகன், மனோகரவி, இளைய மகள் பத்மா ஆகியோர் குடும்ப உறுப்பினர்க்கான கதாபாத்திரங்களாகும். இவர்கள் தவிர சந்திக் கடைப் பசுபதி. ஐயம்பிள்ளை, முகத்தாரின் பேரப்பிள்ளைகளில் முகுந்தன், அசோகன் ஆகியோரும் துணைக் கதாபாத்திரங்களாகத் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் முகத்தாரின் பின்னோக்கிய சிந்தனையோட்டத்தில் இடைக்கிடை மறைந்து போய்விட்ட அவரின மனைவி பார்வதிப்பிள்ளையும் வந்து செல்வதைக் கதையில் தரிசிக்க முடிகிறது.
தேரொன்று பல பாகங்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. அதன் இயக்கத்தின் ஆதாரமாக விளங்குவது அச்சாணி ஆகும். "அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது" என்பது பழமொழி. அதுபோல குடும்பமாகிய தேரும் பல உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றது. ஆனால் அதன் இயங்கு சக்தி அச்சாணியாக இக் கதையில் குடும்பத் தலைவராகிய முகத்தார் விளங்குகிறார்.எனவே அவரைச் சுற்றியே கதை நிகழ்கிறது.
தேர்' சிறுகதையின் சிறப்பம்சங்கள்:
தேர்' சிறுகதையின் அச்சாணியான கதாபாத்திரம் ஆறுமுகம், அவரது நினைவுகளுக்கு ஏற்றதாகவும், மனவோட்டங்களுக்குத் தக்கதாகவும் கதை நகர்ந்து செல்கிறது. அவரது இயங்கு திசைக்கேற்ப கதையைச் செலுத்திச் செல்வது சிறுகதையில் புதுவகை உத்தியாக விளங்குகிறது.
முகத்தார் அழைக்கப்படும் ஆறுமுகத்தின் குடும்ப விடயங்கள் அனைத்தும் அவரது மனவோட்டங்கள் மூலமே தரிசிக்கப்படுவதும், முன்னோக்கு. பின்னோக்கு உத்திகளைப் பயன்படுத்திக் கதை கூறுவதும், குடும்பத்தின் அத்தனை கதாபாத்திரங்களையும் இணைக்கின்ற, தாங்கி நிற்கின்ற ஆதாரசக்தியாகப் பிரதான கதாபாத்திரம் விளங்குவதும். கதைத் தலைப்புக்கு மிகவும் பொருத்தமாகக் காணப்படுகிறது.
சிறுகதையின் தொடக்கம், முகத்தார் துயிலெழும் காட்சி வர்ணனைகளுடன் ஆரம்பமாகி, அவரது ஒவ்வொரு செயற்பாடுகளும், ஒவ்வொரு நினைவும் மாறி மாறிச் சங்கமிக்கும் நீரோடையாகத் தெளிவுடன் கதை நகர்ந்து சென்று, முகத்தார் இரண்டாவது மகள் கொண்டு வந்த இஞ்சி விசுக்கோத்தொன்றினைப் பற்களுக்கிடையில் வைத்து மெல்லுவதாகக் கதை முடிகையில் முகத்தாருடன், வாசகர்களும் சேர்ந்து பயணிக்கும் பலம் கிட்டுவதான சிறப்பு அமைந்துள்ளது.
யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழை இலாவகமாகக் கையாண்டு படைக்கப்பட்டுள்ள இச் சிறுகதை. யாழ்ப்பாண மக்களின் வாழ்வியலது பொதுமைப்படுத்தப்பட்ட வெட்டு முகத் தோற்றமாகும்.
இச் சிறுகதையில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களும் யதார்த்தமாகப் படைக்கப்பட்டிருப்பதுடன், சுதையின் தொடக்கம் முதல் இறுதி வரை முகத்தாரே நிறைந்து நிற்பதும், கதையின் மிகப் பெரிய பலமாக அமைகின்றது.
மனைவியை இழந்த துன்பம், மகளுக்கு இன்னமும் மணமுடித்து வைக்காத கவலை. இரண்டாவது மகளின் செயலால் ஊரவர்கள் அவனை இழிவாகப் பேசியதுடன், தனது வீட்டுக்கும் அதிகம் வராமற் போன ஆதங்கம், குமாரசாமி, தங்கள் குடும்பத்தவருடன் ஓட்டாமல் விலகி நிற்கும் மிகப் பெரிய துன்பம். அவனது சில நடத்தைகள் ஏற்படுத்தும் மனச்சங்கடம் முதலான பல மனவோட்டங்கள் இயல்பான சித்தரிப்புக்களுடன் இக்கதையில் ஒளிவிடுகின்றன.
அதேபோன்று வருடப் பிறப்பன்று குடும்பத்தவர் அனைவரும் கூடி மகிழும் இன்பம், அவர்களுக்குத் தன் கையால் கைவியளம் கொடுக்கும் மனத் திருப்தி, பிள்ளைகள் வருகைக்காக முச்சந்தி வரை சென்று இறைச்சி, மரக்கறி வாங்குவதில் ஆனந்தம் விசேச நாளுக்கு நண்பன் ஐயம்பிள்ளை தந்த சாராயத்தைக் குடித்த மகிழ்ச்சி. கும்பம் வைக்கும் பெருமை. பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்னைகள் யாவருடனும் உரையாடி மகிழும் திருப்தி. குமாரசாமியின் விருப்பப்படி நாடகம் பார்க்கப்போகும் ஆவல், அவன் மீது கொண்ட அதீத அன்பின் நிமித்தம் நிலத்தில் கிடந்த, அவன் வாங்கி வந்த விசுக்கோத்தை எடுத்து உண்ணும் பாசப் பிணைப்பு ஆகியன சிறுகதையின் செல்நெறியில் இடம்பெற்று உணர்ச்சியும், உணர்வும் மிக்கனவாகச் சிறப்படைகின்றன.
யதார்த்தமான கதைக்கரு, இயல்பான பாத்திர வார்ப்புக்கள், சிறப்பான கதைக்குரிய கட்டுக்கோப்பு, பொருத்தமான பேச்சு வழக்கு மொழிக் கையாளுகை. ஆற்றொழுக்குப் போன்ற உரையாடல் திறன். மிகச் சிறப்பான கதை சொல்லும் பாங்கு. வியப்பான கதை முடிவு ஆகியவற்றால் இச் சிறுகதை உயர்வான தரத்துடன் விளங்குகிறது.சற்று நீளமான சிறுகதையானாலும், எவ்விடத்திலும் தொய்வு ஏற்படாத வண்ணம் அமைந்த சிறப்பாயுள்ளது.
"இலங்கைத் தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சிக்கு ஓர் எடுத்துக் காட்டாகத் 'தேர்' நிகழ்கிறது. இப்படைப்பு எஸ்.பொ.வின் சிறந்த படைப்பாற்றலை மிக நேர்த்தியாக இனம் காட்டுகிறது. 'தேர்'. எஸ்.பொ.வின் சிறந்த படைப்புக்களுள் ஒன்று மாத்திரமல்ல, தமிழின் சிறந்த சிறுகதைப் படைப்புக்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. தேர் எஸ்.பொ.வின் பெயரை நிலைத்திருக்கச் செய்யும். அதேபோன்று, தமிழ்ச் சிறுகதையின் பெயரையும் இப்படைப்புப் பாதுகாக்கும் என்பது நிச்சயம்' எனப் பேராசிரிய) துரைமனோகரன் 'ஞானம்' எஸ்.பொ. சிறப்பு மலர் டிசம்பர் 2009) கூறியிருப்பது இங்கு நோக்கத்தக்கது.
லா.ச.ரா.வின் பாற்கடல், ஜெயகாந்தனின் யுகசந்தி, ரீ.செல்வராசவின் யுகசங்கமம் ஆகியனவும் தேர் கொண்டுள்ள கருவைச் சுற்றியுள்ளன. அவற்றிலே காண முடியாத கலை முழுமைத்துவத்தை 'தேர்" கொண்டுள்ளது. இந்த நல்லதோர் சிறுகதையைத் தமிழன்னைக்குச் சமர்ப்பித்ததற்காக எஸ்.பொ. வுக்கு என மனமார்த்த வாழ்த்துக்கள் (பேராசிரியர் சாலை இளந்திரையன் "வி' முன்னுரையில் இரசிகமணி கனக செந்திநாதன் எடுத்துக் காட்டியதுர்
ஆசிரியர் வெளிப்படுத்த விளைந்த விடயங்கள்
கிராமத்து வயோதிபர் ஒருவரின் குடும்பத்தின், கிராமியப் பண்டிகையில் புதுவருடப்பிறப்பன்று இடம்பெறும் மகிழ்ச்சிநிகழ்ச்சிகளையும், பாத்திரங்களின் மனவோட்டங்களையும் பல்வகை இயல்புகளையும் எதிர்பார்ப்புக்களையும் குடும்பத்தின் மீதான ஈடுபாட்டையும் பாசவுணர்வையும் பிரதானமாக வெளிப்படுத்துகின்றது. கூட்டுக் குடும்பவாழ்க்கையின்
தேர் சிறுகதை. சென்ற நூற்றாண்டில் ஏறத்தாழ எழுபதுகள் வரையான காலத்தில் யாழ்ப்பாண மத்தியதர வர்க்கக் குடும்பமொன்றின் வாழ்க்கை முறையின் குறுக்கு வெட்டு முகமாக நுண்மைாயான படப்பிடிப்பாக பன்முகத் தன்மைகளை வெகுசிறப்பான முறையில் வெளிப்படுத்துவதாக விளங்குகின்றது.
எஸ்.பொ.வின் முதலாம் நிலைப் பாத்திரங்கள் பற்றிய சித்திரிப்புக்கள்
(அ) முகத்தார் எனும் ஆறுமுகத்தார்
அறிமுகம்: முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி தேர் சிறுகதைக்கு உயிரோட்டத்தை வழங்கினார் முகத்தார்.இச் சிறுகதையின் மையப் பாத்திரமாகவும் முக்கிய பாத்திரமாகவும் முகத்தார் எனப்படும் ஆறுமுகம் விளங்குகிறார். அறுபது வயதைத் தாண்டியவர், மனைவியை இழந்த ஒருவர்.மூன்று ஆண், மூன்று பெர் பிள்ளைகளின் தந்தை.வாதக்குணம், குந்தியெழும்பக கஷ்டம் என்றாலும், மற்றவர்களுக்குத் தெரியாமல் சமாளிக்கும் போக்கு என்பன அவரோடு இணைந்தவை.
தோற்றம்: முதுமையான தோற்றம்.சுருட்டை முடி,முன்பு சுறுசுறுப்பானவராக காணப்பட்டாலும் தற்போது சுறுசுறுப்பு இல்லாத நிலை,தனர்ந்துபோன பற்கள், உழைப்பால் தளர்ந்த உடல்கண்பார்வை மங்கிய நிலை.
கதாசியரி! முகத்தாரை இவ்வாறு அறிமுகப்படுத்துகின்றார். "முகத்தார் என்றழைக்கப்படும் ஆறுமுகம் துயிலெழுவது ஒரு திருக்காட்சி தலையணையையும் போர்வையையும் உட்திணித்துப் பாயைப் பக்கவமாகச் சுருட்டி வைப்பது ஒரு கலை. கொட்டாவியை மறைபொருளெதுவுமின்றி வளைவிட்டு. கைகளை நீட்டி மடக்கி உடலை உலுப்பிச் சோம்பலை முறித்தால், துயிலெழு படலத்தின் ஓரம்சம். நிறைவுறும்.
தலைமாட்டில் நெருப்புப் பெட்டியும் தாவடிப் புகையிலைச் சுத்தும் எப்பொழுதும் தயாராக இருக்கும். 'சுத்தை' நேர்த்தியாகப் பற்றவைத்தால் கால்கள் தம் இச்சையாகவே கொல்லைப் பக்கம் நடக்கத் தொடங்கும் எப்பொழுது தொடக்கம் வைகறை துயிலெழும் வழக்கத்தை வாலாயப்படுத்திக் கொண்டார் என்பது அவருக்கே ஞாபகமில்லாத சங்கதி"
ஆறுமுகத்தாரின் குணப்பண்புகள்:
வைகறையில் துயிலெழும் பழக்கம் உள்ளவர்.
ஆண்கள் மூன்றும் பெண்கள் மூன்றுமாய் ஆறு பிள்ளைகளுக்குத் தந்தை. கடைசி மகன் மனோகரனும் கடைசி மகள் பத்மாவும் இன்னும் மணம் முடிக்கவில்லை. கடைசி மகளின் விசயத்தை இன்னும் ஒப்பேற்றாத கவலை அவருக்குண்டு. மகலுக்கு தனது மனைவியின் அண்ணன் மகளைச் செய்து வைக்கும் எண்ணமும் உண்டு.
இப்போது முதுமை. வாதக்குணம், குந்தியெழும்பக் கஷ்டம், ஆகியவற்றால் சிரமப்பட்டாலும், மற்றவர்களுக்குத் தெரியாமல் சமாளிக்கும் திறமை உள்ளவர்.
தனது எல்லாப் பிள்ளைகளிலும் மிகுந்த பாசமுடையவர். இருந்தாலும் வீட்டாரோடு, அதிகம் ஓட்டாமற் போய்விட்டவனும் தனது இஷ்டப்படி வேதக்காரப் பெண்ணொருத்தியை மணந்து, குழந்தைகளுக்குத் தந்தையானவனும், சமூக முன்னேற்றத்துக்காகக் கலை இலக்கிய சமூகப் பணிகளில் ஈடுபட்டுழைக்கும் முற்போக்கு வாதியுமான இரண்டாவது மகன் குமாரசாமி மீது அதிகமான கரிசனை உடையவர். குமாரசாமி தலைமை தாங்கும் நாடகம் பார்க்கப் போகும் ஆவலுடன் இருப்பவர். குமாரசாமி மீது கொண்டுள்ள வெளிக்காட்டவியலாத பாசத்தின் காரணமாக அவன் வாங்கி வந்த இஞ்சி விசுக்கோத்தொன்றை எடுத்து வாயினும் வைத்துச் சுவைத்துப் பார்த்தவர்.
தனது மகன் குமாரசாமியைப் பற்றி ஏனையவர்கள் புகழ்ந்து கூறுவதைக் கேட்டுப் பெருமிதம் கொள்பவர்.
வருடப்பிறப்புக்கு வீட்டில் வந்து கூடும் தனது பிள்ளைகளும் அவர் தம் குடும்பத்தினரும் மனங் கோணாதபடி நடக்க விரும்புபவர். அனைவரையும் நன்கு உபசரிக்க வேண்டுமென்ற ஆவலுடையவர்.
விஷேச நாட்களில் சற்று மதுபானம் அருந்துபவர். புகைத்தலுக்காகத் தாவடிப் புகையிலைச் சுத்தைப் பாவிப்பவர்.
இடையிடையே இறந்து போன தனது மனைவியின் நினைவுகளிலும் மூழ்குபவர்:
வருடப் பிறப்பன்று தனது கையால் பிள்ளைகள், மருமக்கள், பேரப் பிள்ளைகள் யாவருக்கும் கைவியளம் கொடுப்பதில் மகிழ்ச்சி அடைபவர்.
தனது குடும்பத்தினர் மனம் கோணாதபடி நடக்க விரும்புபவர்: உபசரிக்க வேண்டும் என்ற ஆவல்
(உணவு வாங்கி வருகிறார்).முழுகிவிட்டு எந்த உடுப்பைப் போடுவது என்பதில் குழப்பம்.
சொந்தத்தை விட்டுக் கொடுக்காதவர்: மனோகரனுக்கு தனது மனைவியின் அண்ணன் மகளுக்கு மணம் முடித்துக் கொடுக்க எண்ணுகிறார்.
கிராமத்துப் பண்புகளைக் கொண்டவர்: விபூதி தரித்தல் பாயில் படுத்தல்.சுருட்டு பிடித்தல்,உமிக்கரியினால் பற் தீட்டுதல், கொல்லைக்குச் செல்லல்.சங்கில் திருநீறு வைத்திருத்தல், கொட்டாவியை மறைபொருள்Bஏதுமின்றி ஊளையிட்டு விடுதல் தனது கஷ்டங்களை பிறருக்கு தெரியாமல் மறைப்பவர்:"கீழ விழுந்தாலும் மீசையில் ஓட்டல.வாதக் குணம்.திடீரென குந்தி எழும்ப முடியாத நிலை
ஓரளவு போதைப் பழக்கம் உடையவர்:புகையிலை சுத்து.மது அருந்துபவர் (விசேட தினங்களில்)
பிறர் மனம் கோணதபடி நடந்து கொள்பவர்: ஐயம்பிள்ளையுடன் சாராயம் குடிக்கச் செல்லும் சந்தர்ப்பம்.
குழந்தைத் தனமான சுபாவம்: நாற்பது வயது நாய்க்குணம் அறுபது வயது சேய்க்குணம்' குமாரசாமி வாங்கி வந்த இஞ்சு விசுக்கோத்தை மறைத்து வைத்து சாப்பிடுதல், முழுகிவிட்டு எந்த புத்தாடையைப் போடுவது என்ற குழப்பம்.
கலை உணர்வு கொண்டவர்:மகள் தலைமை தாங்கியது.நாடகத்தின் மீதுள்ள ஈடுபாடு
யதார்த்தவாதி: குமாரசாமி திருமணம் செய்து பிரிந்து சென்றாலும் ஊர்சனம் உறவினர் பழித்து வெறுத்து ஒதுக்கினாலும் அதை யதார்த்தமாக பார்க்கிறார்.
குடும்பத்தை சமாளித்து நடப்பவர்; திருமணத்தின் மூலம் அனைத்து பிள்ளைகளும் பிரிந்து இருந்தாலும் ஒவ்வொரு பிரச்சினையையும் குடும்ப உறவினரையும் சமாளித்து நடக்கிறார்.
பிற்போக்கு சிந்தனை, மூட நம்பிக்கை: சாத்திரம் பார்ப்பது,பத்மாவை மேற்படிப்பு படிக்க தேவையில்லை
என்ற சிந்தனை,வருடப் பிறப்பன்று எல்லா காரியங்களையும் விக்கினமின்றி நிறைவேற்றி விட்டால் வருடம் முழுவதும் அவ்வாறே நிகழும் என்று எண்ணுவது.
அதிகாலையில் எழுந்து தமது கடமைகளை முறையாகச் செய்பவர்.
கால்கள் தம் இச்சையாகவே கொல்லைப் பக்கம் நடக்கத் தொடங்கும்
எப்பொழுது தொடக்கம் வைகறை துயிலெழும் வழக்கத்தை வாலாயப்படுத்திக் கொண்டார் என்பது அவருக்கே ஞாபகம் இல்லாத சங்கதி
நல்லூர் கந்தவி இடம்பெறும். உசாக்கால பூசை மணி கேட்கும். அதிகாலை 4.00 மணியளவில் பூசை
சிறந்த பக்தர், குறிப்பாக முருக பக்தர்:கதிர்காமத்து விபூதியை சிவ... சிவா என்று பூசிக் கொண்டு
உச்சரிப்பவர் ஆண்டவன் அனந்தபடி நடக்குது எனல் நல்லூராண்ட புண்ணியத்துல் என்பது.அப்பனே முருகா என்பது.சுப்பிரமணியம் என தன்மகளுக்கு பெயர் வைத்தது.நல்லூர் கந்தவின் உசத்கால பூசை வழிபாடு. பிற மதத்தை நேசிக்கத் தெரியாதவன் தன் மதத்தை நேசிக்கத் தகுதியற்றவன என்பது. குமாரசாமி வேற்றுமத பெண்ணை திருமணம் செய்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளுகிறார்.
தனது மனைவி மீது அன்பு கொண்டவர். தனது மனைவியின் நினைவுகளுடன் வாழும் ஓர் உத்தமர்.
சரியா பார்வதிப் பிள்னையை உரிச்சு வச்ச மாதிரி இருக்கான்
பிடிவாதக்காரி
அவள் புண்ணியவதி எல்லாப் பாரத்தையும் எண்ட தலையில் சுமத்திட்டு போயிட்டான்
பார்வதிப் பிள்ளையை திருமணம் செய்த முதல் வருடம் வந்த வருடப்பிறப்பு
தனது பிள்ளைகள் மீது அன்பு கொண்டவர்.
தாயைஇழந்த தனது ஆறுகுழந்தைகள் மீதும் அக்கறை உள்ளவராக இருக்கிறார்.
கடைசி மகளான பத்மாவிற்கு திருமணம் முடித்து வைக்க வேண்டுமே என்ற கவலையுடன் காணப்படுகிறார்.
குமாரசாமி வேற்றுமதப் பெண்ணை திருமணம் செய்திருந்தாலும் தனது மகள் மேல் கொண்ட
பாசத்தால் ஏற்றுக் கொள்கிறார்
வருடப் பிறப்பன்று முகத்தாரின் எண்ணங்கள் குடும்பத்தை சுற்றியே திகழ்கின்றன.
ஊரும் தனது சொந்தங்களும் குமாரசாமியை வெறுத்து ஒதுக்கினாலும் முகத்தார் வெறுக்காமல் இருக்கிறார்.
வழமையாக ஆண் பிள்ளைகள் மீது தாய்க்குத்தான் பாசம் அதிகமாக காணப்படும். தனது பின்னை கொலைகாரன் என்றாலும் விட்டுக் கொடுக்க மாட்டாள்'அனால் முகத்தார், ஒரு தந்தையாக மாத்திரமல்ல தாயாகவும் நோக்கப்படுகிறார். பட்டாள் அனால் முகத்
சாதாரண தந்தைக்குரிய குண இயல்புகளை கொண்டவர். இவருடைய மகன் என்பதைவிட
இவனுடைய அப்பா இவன் என்று சொல்வதில் தான் அனைத்து தந்தைகளுக்கும் பெருமை இதனை முகத்தாரும் ஏற்றுக் கொள்கிறார்.
தனது மகன் தலைமை தாங்கும் நாடகத்தை பார்க்க விரும்புதல்,
முகத்தார் பஸ்சில் போகும்பொழுது இருக்க இடம் கொடுத்த சம்பவம்
குமாரசாமி மீது அதீத பாசம் கொண்டவர்.
* நகைச்சுவையாக பேசும் குணமுடையவர்.யசுபதியிடம் கைவியளத்தை உடனே கொடுத்தாலும் பாதகமில்லை எனக் கூறுதல்.
கதை நகர்வில் முகத்தாரின் முக்கியத்துவம்
கிராமத்து வயோதிபர் ஒருவரின் குடும்பத்தின் மீதான ஈடுபாட்டையும் பாச உணர்வையும். கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் மகிழ்வு, கிராமிய பண்டிகை என்பவற்றினை மையமாகக் கொண்டதுதான் தேர்.
எனவே தேர் அசைய அச்சாணி தேவை. 'அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது' என்பதற்கேற்ப தேர் சிறுகதையின் அச்சாணியாக கதையின் ஆதாரமாக கதை நகர்வுக்கு பங்காளராக ஆறுமுகத்தார் காணப்படுகிறார்.
யாழ்ப்பாணத்து கிராமிய மொழியினை கதை ஆசிரியர் சிறப்பாக கையாண்டு இருந்தாலும் கிராமிய மொழியினை கையாள்வதற்கு முகத்தார் என்ற பாத்திரத்தையே சிறப்பாக பயன்படுத்தியமை.
முகத்தாரின் மனோவோட்டத்தின் மூலமே கதை நகர்த்தப்படுகின்றது: "அவன் பொடிச்சிதான் பாவம் தாயத்தின்னியாப் போயிடிச்சி.அவன்ரை மூளைக்கு அவன் உப்பிடியே இருக்க வேணும்.பாவம் ஆண்டவன் அதுகளுக்கு ஒண்டும் குறைவு வைக்கேல்லை"
கதையின் அத்தனை கதாபாத்திரங்களையும் இணைக்கின்ற முக்கிய கதாபாத்திரமாக முகத்தார் காணப்படுகிறார்.கடைக்குட்டி மகளைப் பற்றிதான் கொஞ்சம் கவலை,கொக்கா பரிமளம் இன்னும் எழும்பேல்லயா
கதையின் ஆரம்பம் இருந்து முடிவு வரை முகத்தாரே நிறைந்து நிற்கிறார்.அவர் தயிலெழும் திருக்காட்சியில் ஆரம்பமாகி இஞ்சி விசுக்கோத்தை பொறுக்கி நொறுக்கும் போது முடிவடைகிறது.
மனைவியை இழந்த துன்பம்,மகளிற்கு மணம் முடித்து வைக்காத கவலை.மகள் பரிமளத்திற்கு குழந்தை இல்லை.குமாரசாமியை ஊரார் இழிவாக பேசுதல் என்ற பல விடயங்களை முகத்தார் மூலமே ஆசிரியர் காட்டுகிறார்.
நீளமான சிறுகதையாக இருந்தாலும் ஆசிரியர் தானே கருத்துக்களை கூறாமல் பாத்திர மைய கதாபாத்திரத்தை பேசவிட்டு கதையை நகர்த்துவதற்கு ஆறுமுகத்தார் என்ற பாத்திரம் பிரதானமானது.
(ஆ) முகத்தாரின் இரண்டாவது மகன் குமாரசாமி
அறிமுகம் ஆறுமுகத்தாரின் இரண்டாவது மகன் மூன்று பிள்ளைகளின் தந்தை. கொழும்பில் வசிப்பவன்.ஐந்து சகோதரர்களை கொண்டவன் சிறந்த மகனாக, கணவனாக சித்தரிக்கப்படாவிட்டாலும் சிறந்த காதலனாக சித்திரிக்கப்பட்டவன். தமையன் மற்றும் இரண்டு குமருகள் வீட்டிலிருக்கையில் தான் விரும்பிய கிறிஸ்தவப் பெண்ணை மணம் முடித்துக் கொண்டு வீட்டாரோடும் அதிகம் ஒட்டாமல் போய்விட்டவன்.
தோற்றம்: பயித்தங்காய் போல உடம்பு.சுருட்டை முடிக்காரன், வெண்கலக்கடை யானையின்ற குரல் போன்றது.
படிப்பில் கெட்டிக்காரனாக சிறந்து விளங்கியவன சிறுவயதில் படித்து முன்னுக்கு வந்தவன்.சீமையிலே படிப்பெல்லாமல் முடித்து இரண்டு மூன்று கார். நாலு ஐந்து வங்களா வச்சி வாழ வேண்டியவன் என முகத்தார் நினைக்காரு.அவன்ட மூளைக்கு அவன் உப்பிடியே இருக்க வேனும்.ஆங்கில மொழியறிவும் உள்ளவன்.தென் யூ வில் ஒல்சோபிக்கம் கெவுண்மென்ட் சேவண்ட?
அவனது படிப்பு கெட்டித்தனத்தால் ஊர் மத்தியில் உயர்வாக மதிக்கப்பட்டவன்.ஊரில் நடக்கும் நாடகத்துக்கு தலைமை தாங்குகிறான்.
ஊர் மக்கள் பேச்சிற்கும் மற்றவர்களின் புறங் கூறுதலுக்கும் தலை சாய்க்காதவன்பின்சில பழுத்தவன் வீட்டில் தமயன் இரண்டு குமருகள் இருக்கும்போது அவருக்கு கல்யாணம் கேட்குதாம்,கல்யாண பைத்தியம் என்று உயர்வாக பேசிய சமூகம் தாழ்வாக பேசினாலும் பொருட்படுத்தாதவன்.
பெரியோர்களை மதிப்பவன்யார் என்வ சொன்னாலும் தலை கவண்டுதான் கேட்பான் என்று அவனுடைய தந்தையே சான்று கூறுவதன் மூலமாக...
தான் நினைத்ததை செய்து முடிப்பதில் உறுதியான மனம் கொண்டவன்.காதலித்த பெண்ணை திருமணம் செய்தல்,முகத்தார் மதியச் சாப்பாட்டிற்கு அழைத்த போதும் அதனை மறுத்து விட்டுச் செல்லல்
பிடிவாத குணம் உடையவன் உடம்பு மட்டும்தான் பயித்தங்காய் மாதிரி ஆனால் உடும்பைப் போல பிடிவாதக்காரன்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கோயில் குளம் போகாதவன்.விபூதி பூசாதவன்,தன் மனைவியையும் கோவில் குளம் அனுப்பாதவன்
காசு பணத்தை விட அன்பு, மனித தன்மையினை மதிப்பவன் பல எதிர்ப்புக்கள் மத்தியில் வேற்றுமத பெண்ணை மணம் முடித்தல்.அவன் பொடிச்சி புழை இல்லை குணவதிதான். குடும்பத்தினரிடம் விடை பெற்று செல்கின்ற பொழுதும் பத்மா "சின்னண்ணா கோப்பி" என்று கொடுத்த பொழுது மறுக்காமல் வாங்கி குடிக்கிறான்.
சாதிமத வேற்றுமை பார்க்காதவன் வேற்றுமத பெண்ணை திருமணம் செய்தல்
சமூகசேவை செய்வதில் ஈடுபாடு கொண்டவன்மற்றவர்களை வீட்டுக்காக பெத்தன் இவனை ஊருக்காகபெத்தன் என்று முகத்தார் மெச்சுவதனூடாக
ஆர்வம் மிக்கவன்முத்தமிழ் மன்றம் நடத்துகின்ற மேடை நாடகங்களுக்கு தலைமை தாங்குகிறான்.
*படித்தாலும் பழமைவாதியாக காணப்படுகின்றான்யட்டணத்தில் வாழ்ந்தாலும் தன் மனைவியை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்
* அன்பானவன் தனது அன்பை மற்றவர்களிடம் வெளிக்காட்டாதவன்நாடகத்திற்கு தலைமை தாங்க வருகின்ற சாட்டாக தனது கும்பத்தைப் பார்க்க வருதல்.
தந்தையின் மனதைக் கவர்ந்தவன்.மனோகரன் வந்ததைக் கண்டு குமாரசாமி என நினைத்தல்.தப்பு செய்தாலும் மன்னிக்கப்படுகிறான்.முகத்தார் குமாரசாமி பற்றியே அதிகமாக சிந்திப்பதாக காட்டுவதன் மூலம்
யதார்த்தமாக வாழ விரும்பியவன். பொய் சொல்லி நல்ல பேரு வாங்குவதை விட உண்மையை சொல்லி கெட்ட பேருடன் வாழிவதே மேல்" என்ற பண்புடன் வாழ்பவள்.
தாய் தனது தந்தை மீது பாசம் மிக்கவன்.தனது தாயின் திவசத்திற்கு மகலுடன் வருதல்,குடும்பத்தினரிடம் விடை பெற்று செல்கின்ற போதும் ஒரு கணம் நின்று முகத்தாரை நாடகத்திற்கு வருமாறு அழைத்தல்.
* வெளியூரில் வாழ்ந்தாலும் தன்குடும்பத்து செயற்பாடுகளையும் நிலைகளையும் அறிதிருப்பவன்.
*தனது சிரிப்பின் மூலம் மற்றவர்களைக் கவர்ந்தவன்.எவ்வளவு கோபமானவர்களையும் அவனின் சிரிப்பின் மூலம் அவர்களை கவர்த்திடுவான்.
தந்தைக்கு பெருமை சேர்த்தவன் தெல்லிபழைக்கு போகையிலே ஒரு பொடியன் பஸ்ஸிலே நீங்கள் குமாரசாமியின் அப்பா தானே என்று கேட்டு இடம் கொடுத்தார்.
* தலைமைத்துவப்பண்புடையவன். மேடை நாடக கலை நிகழ்வுக்கு தலைமை தாங்குவது.
* தந்தையை புரிந்து கொள்ளாதவன். ஆறுமுகத்தாரை வேதனைக்கு உள்ளாக்கியவன். குமாரசாமியின் திருமணத்தினால் யாருமே முகத்தார் வீட்டுப் படலையைத் திறக்க முகஞ் சுழித்துக் கூசினார்கள். இதன் மூலம் வெளிக்காட்டப்படுகின்றது.
*தமது மனைவியின் அண்ணன் மகளுக்கு அவனை முடித்து வைக்க முகத்தாருக்குரிய விருப்பம் பற்றி எதுவும் கூறாதவன்.
குறிப்பிட்ட காலம் வேலை இல்லாமல் இருந்தவன்
* வேலை, சம்பளம் பற்றி தகப்பன் திருப்தி அடையக் கூடிய வகையில் இருப்பவலி
குடும்ப பாசம். புதுவருடப் பிறப்புக்கெனத் தகப்பனுக்கு "பீஸ் வேட்டி"எடுத்துக் கொடுத்தவன். தமையனின் பிள்ளைகளுக்காக ஐஸ்கிறீம் வாங்கிக் கொடுத்தவன். முதல் சம்பவத்தில் தங்கை பத்மாவுக்குச் சேலை எடுத்துக் கொடுத்தவன்.
அவ நம்பிக்கை உடையவன். மனோகரன் வேலை பார்க்கும் கம்பனியை விரைவில் அரசாங்கம் எடுக்கவிருப்பதால் நீயும் அரசு ஊழியனாகப் போகிறாய் என்று குமாரசாமி கூறியதற்கு."அப்பிடி நடக்காது" என அவநம்பிக்கையுடன் கூறியவன்.
வருடப் பிறப்பன்றே கொழும்பு திரும்பிவிட எண்ணியவன்.இளையவளாய் பிறந்ததையிட்டு கவலை கொள்பவன்.
சிகரட் பிடிப்பவன்.
சுப்பிரமணியத்தின் பிள்ளைகளால் "சீனிச் சித்தப்பா" என்று அழைக்கப்படுபவன்.
* முகத்தாரின் பாசத்துக் குரியவன்
தனது மனைவியுடன் தாய்வழி உறவு முடிந்து விடக்கூடாது என்பதற்காக மனோகரன் மூலம் அவ் உறவை புதுப்பித்துக் கட்டியெழுப்ப நினைக்கிறார் முகத்தார்
இக் கதையின் முதல்வராகத் திகழும் முகத்தாருக்கு வலுச் சேர்க்கும் வகையில் கதையை நகர்த்திச் செல்லும் பாத்திரமாகவும் இப்பாத்திரம் காணப்படுகிறது.
கதை தொடங்கி சில நேரம் தொடக்கம் கதை முடிவடையும் வரை இப்பாத்திரம் உலாவுவதாகக் காணப்படுகிறது C
(ஈ) முகத்தாரின் மூத்த மகன் சுப்பிரமணியம்
* கொழும்பில் வேலையின் நிமித்தம் மனைவி, மகள், மகன் ஆகியோருடன் வசிப்பவன். வருடப் பிறப்புக்குக் குடும்பமாய் யாழ்ப்பாணத்துக்கு வந்து தகப்பன், சகோதரங்களைக் கண்டு உறவாடிச் செல்வதில் விருப்பமுடையவன்."நான் எங்கடை வீட்டுக்கு வாறதுக்கு ஆரும் வழிகாட்டத்
தேவையில்லை" என்ற மனப்பாங்கு உடையவன்.
தசரதலுடைய கடமையை இராமன் எவ்வாறு நிறைவேற்றுகின்றானோ அதே போன்று தேர் கதையில் வரும் முகத்தாரின் கடமைகளை சுப்பிரமணியம் நிறைவேற்றும் தகுதி உடையவன்.
*தோற்றம் முகத்தார் என்றழைக்கப்படும் ஆறுமுகத்திற்கும் பார்வதிப் பிள்ளைக்கும் மூத்த மகனாக பிறந்தவர் தான் சுப்பிரமணியம், மனைவி கமலா, மகன் அசோகன், மகள் அம்சதொனி என குடும்பமாக வாழ்பவன் முகத்தாருக்கு பெரும் ஆறுதலாக இருந்தவன்.
எல்லோரையும் சமமாக பார்ப்பவன் புது வருடத்திற்காக எல்லாப் பிள்ளைகளுக்கும் ஒரு நிறத்திலேயே உடுப்புக்கள் எடுத்துக் கொடுத்தவன் தந்தையிடம் கைவியனம் வாங்குவதில் நம்பிக்கையில்லாத தம்பி குமாரசாமியை நோக்கி "ஆவது அறிவது அறிவல்ல வீட்டில் வைத்து அறிவது தான் அறிவு" என்று பேசியவன்.
* சாஸ்திர சம்பிரதாயங்களை மதிப்பவனாக காணப்படுகின்றான்."மருத்து நீர் அந்த கிணற்றடியில் இருக்கிறது முழுகித்து வாங்கோ அப்பு" என்று கூறுவதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நம்பிக்கை உணர்வு உள்ளவன் புத்தகப் படிப்பை நம்பாமல் வாழ்க்கையை வாழ்ந்து கற்பதை விரும்புவான்:"ஆவது அறிவது அறிவல்ல வீட்டிலை வேவது அறிவது தான் அறிவு ஊரோட ஒத்து வாழ்வதுதான் படிப்பு" என்பதன் மூலம் அவனுடைய வாழ்வில் அவன் கற்ற பாடத்தினை கூற முனைகின்றான்.
தந்தையை அலைக் கழிக்காமல் இருப்பவன்.நான் எங்கடை வீட்டுக்கு வாரதுக்கு ஆரும் வழிகாட்ட தேவையில்லை என கூறுவதன் மூலம் தெரிய வருகிறது.
* அதிகம் பேசாமல் அமைதி பேணுபவன்!"அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணி கடக்க கருதவும் வேண்டாம்"அதாவது அடக்கம் உடையவர்கள் அறிவற்றவர்கள் என நினைக்கக்கூடாது அவர்கள் தக்க நேரம் வரும்போது அவர்களின் திறமையைக் காட்டுவார்கள் அது போன்ற குணவம்சத்தை கொண்டவர்தான் முகத்தாரின் முத்த மகனான சுப்பிரமணியம்
முகத்தாருக்கு சிறந்த மகனாக இருப்பவன்புதுவருடம் மாலையில் நாடகம் பார்க்க போவதற்கு சுப்பிரமணியம் வாங்கி கொடுத்த ஆடையையும் அணிய வேண்டும் எனக் கூறுவதன் மூலம் தெரிகிறது.
* மனைவி கமலாவின் சொற்களை கேட்டு நடப்பவன்.வாயை பொத்தும்படி கமலா சைகை காட்டுவதன் மூலமும்,கமலா கதுப்பிடியஜலை கூட்டியந்திடுவாள் என முகத்தார் கூறுதல்,
* அனைத்து பாத்திரங்களாலும் விரும்பப்படுகின்றவன் அவன் வராமல் வருசம் பிறக்குமோ அவன் வருவாள் என நம்பிக்கையுணர்வில் மற்றவர்கள் மத்தியில் உள்ளவன்.
முக்கியத்துவம்
* கதைக்கு அச்சாணியாக இருக்கும் முகத்தாருக்கு வலுச் சேர்க்கும் வகையிலும் கதையை நகர்த்தி செல்லும் பாத்திரமாகவும் இவ் பாத்திரம் காணப்படுகின்றது.
* மேலும் கதை தொடங்கி சில நேரம் தொடக்கம் கதை முடியும் வரை இப்பாத்திரம் உலாவுவதாகவும் காணப்படுகின்றது.
* கதையை நகர்த்திச் செல்வதற்கும் கதை வளர்ச்சியடைவதற்கும் முகத்தாருக்கு அடுத்ததாக இப் பாத்திரம் வினங்குகின்றது.
தான் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பவன் மற்றவர்கள் அவனுக்கு வழிகாட்ட தேவையில்லை என நினைப்பவன்.
முகத்தார் ஒரு முருக பக்தர் ஆகையால் அவரது மூத்த மகனுக்கு சுப்பிரமணியன் எனப்பெய) சூட்டினார்.
(உ) முகத்தாரின் கடைசி மகள் பத்மா:
அறிமுகம்:முகத்தாரின் கடைசி மகதாயத்தின்னியாப் பிறந்தவன்.படிப்பு முடிச்சித்து மூலையில் இருக்காள்.ஐந்து சகோதரங்களைக் கொண்டவன். கதையின் பிரதான பாத்திரமான முகத்தாரின் மன ஓட்டத்திலே கதைக்குள் கொண்டு வரப்படுகிறான்."கடைக்குட்டி மகளைப் பற்றித்தான் கொஞ்சம் கவலை"
தோற்றம்:அம்மாவைப்போல சாயல் கொண்டவன்."பார்வதிப் பிள்ளையை உரிச்சி வைச்ச மாதிரி இருக்கிறான்" என்று முகத்தார் சொல்லுகிறார். அழகானவள்:பருவமடைந்தவள் இதனால்,"சேலை கட்டியதால் மிகவும் அழகானவளாக காட்சியளிக்கப்படுகிறாள்"
தாயார் இறந்தபின் தந்தையைக் கவனிப்பதும், வீட்டைக் கவனிப்பதும் அவளது பொறுப்பு. இன்னும் மணமாகவில்லை.
படிப்பு முடிந்ததும் ஆறுமுகத்தார் அவளை மேலே படிக்க அனுப்பவில்லை. வருடப் பிறப்பன்று சகோதர சகோதரிகள் குடும்பத்தாருடன் வருவதை எதிர்பார்த்து அதிகாலையிலேயே முற்றங்கூட்டி, சாணந் தெவித்து. சட்டி பானை கழுவி, வேலை செய்தவள்.
தந்தைக்கு முட்டைக் கோப்பி அடித்துக் கொடுத்தவன். அக்காமார், அண்ணி. மருமகள் ஆகியோருடன் சமையல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டவள். "அகப்பை பிடிக்கும் கைக்கு படிப்பெதற்கு" அதாவது பெண் படிக்க தேவையில்லை என்ற கருத்தை இரண்டு வகையாக பார்க்கலாம்.யதார்த்தம் எவ்வளவுதான் பெண் படிச்சி பெரிய வேலையில் இருந்தாலும் கடைசியில் பெண் சமயலறைக்கு போகத்தான் வேண்டும் என்ற கருத்து பிற்போக்கு பெண்கள் படிக்கவே தேவை இல்ல என்ற கருத்து காணப்படுகின்றது. இந்த இரண்டு சமூக கட்டுப்பாட்டுக்கு அமைவாகத்தான் தேர் சிறுகதையில் பாத்திரமாக வரும் பத்மா படைக்கப்பட்டிருக்கிறாள்.
தனது வீட்டு வேலைகளை முறையாகச் செய்பவன். வீட்டு முற்றத்தை கூட்டுதல்,சாணகத் தண்ணீர் தெளித்தல், பாத்திரங்களைக் கழுவுதல், தேத்தண்ணிக்கு உலை வைத்தல்,போன்ற வேலைகளை யாருடைய தூண்டுதலும் இன்றி தானாக முன்வந்து செய்கின்ற ஒரு பாத்திரமாக காட்டப்படுகிறாள்.
தந்தையின் சொல்லக்குக் கட்டுப்பட்டவள் முகத்தார் மேல் படிப்பு படிக்க தேவையில்லை என்று சொல்லியபோது அதனை ஏற்றுக் கொள்கிறான். அவள் நினைத்திருந்தான் தனது தந்தையுடன் சண்டை போட்டு நான் படிக்க போகிறேன் என்று கூறியிருக்கலாம். ஆனால் அவன் அப்படி செய்யவில்லை.
தந்தை மீது அன்பும் அக்கறையும் கொண்டவன்: முட்டைக்கோப்பி அடிச்சுக் கொடுக்கிறாள்.தனது தந்தைக்காக முட்டை பொரிச்சு வைத்திருக்கிறாள்.அப்பு காலைச் சாப்பாடு இல்லாமல் போனவர் என்று கவலைப்படுகிறான். புள்ளை பதமா" என்று முகத்தார் கூப்பிடும் பொழுது அவள் செய்து கொண்டிருந்த கை வேலையை விட்டு விட்டு செல்கிறான். "என்ற மடிசஞ்சயும், சால்வையையும் எடுத்துத் தா புள்ள" என தனது தந்தை கேட்கும் பொழுது இவ்வளவு நேரத்தோட கடைக்கு போகப் போறியவே' எனக் கேட்பதனூடாக இவள் தனது தந்தை மீது கொண்டிருந்த அன்பு. அக்கறை என்பவற்றை கதையாசிரியர் எஸ்.பொ, மெக்கு தெளிவாகக் காட்டுகிறார்.
சகோதரப் பாசமும் தன் சகோதரம் மீது உரிமை எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கினை உடையவன். என்ன அப்பு... இண்டைக்கு காலமைக் கோச்சியிலை மூத்தண்ணா வருவாரப்பே என்று சுப்பிரமணியத்தை கேட்கிறான்.சினைண்ணை இஞ்ச கோப்பி கொண்டத்துட்டன் குடியுங்கோவன் என்று குமாரசாமியை உபசரிக்கிறான். சந்தனக் கலர் சேலை மனோகரவிடம் வாங்கி வரச் சொல்லுதல்.
தனது தந்தையை நன்றாக புரிந்து கொண்ட ஒரு மகள் திண்ணையில் சிந்தனையில் இருந்த முகத்தாரை கதையினை விட்டு அவருடைய சிந்தனையை மாற்றுகிறான். "என்ன அப்பு இன்றைக்கு காலமைக் கோச்சியில் சின்னண்ணே வருவாரல்லே" முழுகிட்டு உடுப்பினைப் போட்ட முகத்தார் அனைவரும் மௌனமாக இருப்பதைப் பார்த்து மனக் குழப்பம் அடைகிறார். அச்சமயத்தில் தந்தையின் உள்ளத்தை புரிந்து கொண்டு அப்பாவுக்கு இது வடிவாத்தான் இருக்குது' என்று சொல்லி அனைவருடைய மெனைத்தையும் கலைக்கிறான்.
குடும்ப பொறுப்பு மிக்க ஒரு தலைமைத்துவ பண்பினைக் கொண்டவன் குடும்பத்தில் மூத்தவர்கள் எத்தனை Gu) இருந்தும் குடும்பப் பொறுப்பு தலைமைத்துவம் பத்மாவிடமே கொடுக்கப்படுகின்றது. உதாரணம் குமாரசாமி வாங்கி வந்த இஞ்சு விசுக்கொத்துவை பாத்மாவிடமே பகிரந்தளிக்குமாறு கொடுக்கிறார்.
வீட்டிலி கடைக்குட்டியான பத்மா எல்லாருடைய அன்பையும் பெற்றவள்:கடைக்குட்டி.குட்டி. செல்லம். புள்ள போன்ற சொற்கள் எல்லாம் அன்பின் மிகுதியாய் வெளிப்படுவடை
தந்தையின் மனம் கவர்ந்தவனாகவும் தந்தையால் அதிக அக்கரை கொண்ட மகனாகவும் காட்டப்படுகிறாள்.கடைக்குட்டி மகளைப்பற்றித்தான் கொஞ்சம் கவலை.அவன் பொடிச்சிதான் பாவம் தாயத்தின்னியாப் போயிட்டாள்,படிப்பு முடிச்சிட்டு மூலையில் கிடந்து பெருமுச்சு விடுது.போன்ற முகத்தாரின் கூற்றுக்கள் மூலம் இதனை எம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது.
கிராமத்து பணிபாட்டைக் கொண்டவன்.நேரத்துக்கு எழும்பி தனது வேலைகளை செய்தல்;நன்றாக சமையல் செய்தல் போன்றன கிராமத்து பண்பாட்டினை உள்ளடக்கிய ஒரு பெண்ணால்தான் முடியும்.
எளிதாகப் பிறந்தாலும் இளையதாக பிறக்கக்கூடாது என்று சொல்லுவாங்க
கதை வளர்ச்சியிலும் நகர்விலும் பெறும் முக்கியத்துவம்:
பெண்களின் நிலையை வெளிப்படுத்துபவனாக கல்வி செய்தல்,அடங்கியிருத்தல். மறுக்கப்படுதல்,வீட்டில் வேலை
வெளிக்காட்டுபவனாக பெரும்பாலும் குடும்பத்தில் கடைசியாக பிறக்கின்ற மகளின் நிலையை கடைசியாக பிறக்கின்ற பிள்ளைகள் அம்மாட சாயல் அச்சு அசலாக இருக்கும் என்று சொல்லுவாங்க தன்னுடைய அம்மா இறந்த பின்னும் இவன் ஒரு தாயாக தன்னுடைய தந்தையை பார்த்துக் கொள்கின்ற யதார்த்தமான பண்பின் மூலம் அறியப்படுத்தலாம்.
ஒரு கிராமத்து பெண்ணின் யதார்த்தமான நிலையை எடுத்துக் காட்டுபவளாக சின்ன வயதில் வேலைக்கு பழகுதல்,வீட்டு வேலைகளைக் கவனித்தல்,படிப்பினை பாதியில் விடல்.
ஒரு பெண்ணின் கிராமத்துப் பண்பாட்டு அம்சங்களை வெளிக்கொண்டிருக்கின்ற பாத்திரமாகவாசல் தெவித்து கோலம் போடுதல்,தந்தையைப் பராமரித்தல்
முகத்தாரின் மனைவி பார்வதிப்பிள்ளையை கதையில் உலாவுவதற்கு இடமளிக்கின்ற பாத்திரமாக காட்டபடுகிறாள். கடைக்குட்டி மகளைப் பற்றித்தான் கொஞ்சம் கவலை. சரியா பார்வதிப்பிள்ளையை உரிச்சி வைச்ச மாதிரி
(ஊ) முகத்தாரின் மகள் பரிமளம்
* பரிமளம் பற்றிய அறிமுகம்: முகத்தாரின் மகளான பரிமளமும், கணவன் சதாசிவமும் கொழும்பில் வசிப்பவர்கள். பரிமளத்தின் கணவனுக்குக் கொழும்பில் வேலை தைப்பொங்கலுக்குத் தகப்பனிடம் வந்த பரிமனம், இன்னும் திரும்பவில்லை. சதாசிவமும் யாழ்தேவியில் வருடப் பிறப்புக்காக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்துவிட்டான. பாவம், அவர்களுக்குக் குழந்தையில்லை. டாக்டர்மார்களிடம் காட்டியும் இதுவரை பலன் கிட்டவில்லை. பின்னடிச் சந்ததி விருத்தி என்று சாதகத்திலே கிடக்குதெண்டு கூறி முகத்தார் மனதைத் தேற்றிக் கொள்வார். புது வீடு கட்டி வைகாசியில் குடிபுகக கருதியுள்ளனர். காரும் வாங்கியிருக்கிறார்கள், வசதியான வாழ்க்கை.
எஸ்.பொ என்கின்ற கதாசிரியரால் எழுதப்பட்ட சிறுகதைகளில் ஒன்றான தேர் சிறுகதையில் வரும் முகத்தாரின் மகளான பரிமனத்தை பற்றிய சில குறிப்புக்கள் வருமாறு.
முகத்தாரின் பிள்னைகளில் ஒருவரான பரிமனம் தனது கணவனான சதாசிவத்தோடு திருமணத்தின் பின் கொழும்பில் வசிப்பதாக கதாசிரியர் முகத்தாரின் மூலம் வெளிப்படுத்துகிறார்.
பொங்கலுக்கு தன்ட தகப்பனிடம் வந்த பரிமனம் திரும்ப செல்லவில்லை.
புதிய வீடு கட்டி வைகாசியில் குடிபுக கருதியுள்ளார். காரும் வாங்கியிருக்கிறார்கள். நல்ல வசதியான வாழ்க்கை
பரிமளத்தின் கணவன் கொழும்பில் வேலை செய்பவர். இதன் மூலம் அவனது கணவன் வசதி வாய்ப்பு உடையவனாக காணப்படுவான் எனக் குறிப்பிடலாம். ஏனென்றால் இக்கதையானது 1966 காலப் பகுதியில் எழுதப்பட்டதால் கொழும்பில் வேலை செய்வது என்பது பெரிதாக கருதப்பட்டிருக்கலாம்.
*பரிமளம் நல்ல காசுக்காரி;நம்மட ஊர்ல எல்லாம் தனக்கு அதிக வருமானமோ அதிக சொத்துக்களே இருந்தா ஒரு பெரிய வீடு கட்டுவாங்க மற்றும் ஏதும் ஒரு வாகனம் வாங்குவாங்க அதைப்போல தான்
* நானாந்த கடமைகள் செய்பவள்.செனந்தரம் பெரிய குடும்பக்காரி.தனிக்குடும்பம் ஆகி உள்ளனர்.
* சௌந்தரம் கஷ்டத்தின் மத்தியில் ஆறு பின்னைகளையும் ஒரு குறையும் இல்லாமல் படிப்பிக்கின்றாள்.
* சௌந்தரத்தின் குடும்பம் இரண்டு செலவுகளை கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள்.
நலல குடும்ப பின்னணியைக் கொண்டவள் தனது கணவன் மீது பாசம் உடையவன.
குடும்ப சுமையை தாங்கும் வல்லமை உடையவள்.
கதை வளர்ச்சியில் சௌந்தரத்தின் முக்கியத்துவம்
வருடப்பிறப்பன்று சௌந்தரம் தனது தந்தையிடம் கைவியளம் வேண்டாமல் தனது மகளான முகுந்தனை அனுப்புகிறாள் இதன் மூலம் ஒரு பெண்ணின் குடும்ப தியாகம் காட்டப்படுகிறது.
சௌந்தரம் உள்ளூரில் இருந்துகொண்டு தன தந்தை வீட்டிற்கு செல்லமுடியாத பொறுப்புடையவள்.
(ஏ) ஐயம் பிள்ளை
அறிமுகம் :முகத்தாரின் நண்பர், மனைவிக்கு பயந்த ஒரு குடிகாரன்,வயதானவர்.
*கதைக்குள் அறிமுகமாகும் விதம் "என்ன முகத்தார் பொடியன் எல்லாம் வந்திட்டினமோ' என்று படலையில் நின்று குரல் கொடுப்பதனூடாக அறிமுகப்படுத்தப்படுகிறார்.
* செயற்பாடு, பண்பு
*ஆறுமுகத்தாருக்கு பிடித்த ஒருவர் ஆறுமுகத்தாருக்கு குடிக்க விருப்பம் இல்லாவிட்டாலும் ஐயம் பிள்ளைக்காகவே குடிக்கிறார்.
மனைவிக்குப் பயந்த ஒருவர்.கடைக்குப் போறதுக்கு முந்தி கொஞ்சம் பாவிச்சிட்டு போகலாமெண்டால்....
என்ட மனிஷியப் பற்றி தெரியாதே? என்பதன் மூலம்
மது அருந்துவதில் ஈடுபாடு கொண்டவர். "கடைக்குப் போறதுக்கு முந்தி கொஞ்சம் பாவிச்சிட்டு போகலாமெண்டால்" எனல், வருசம் என்றால் சாராயம் குடிக்கலும் என்ற எண்ணம் முகத்தாருடன் சேர்ந்து குடிக்கவேணும் என்ற சிந்தனை" தான் பெற்ற இலிபம் பெறுக இவ் வையகம்" என்பது.நான் குடிக்கிறதும் இல்லாம தனது நண்பரையும் குடிக்க வைக்கின்ற ஒருவராகக் காட்டப்படுகின்றார். தனியா குடிச்சா வீட்டில் திட்டுவிழும் என்று முகத்தாரையும் கூட்டிச் செல்பவராகவும் பார்க்கலாம்.
*தன் நண்பரான முகத்தாரின் குடும்பத்தில் அக்கறை கொண்டவர்:"என்ன முகத்தார்? என்ன பொடியன் எல்லாம் வந்திட்டினமோ?''மனோகரனும் வாரானாமோ' என்று நலம் விசாரிப்பதில் இருந்து அறிய முடிகிறது.
*கிராமப்புற பண்பாட்டினை உள்ளடக்கியவர்.வருச நாட்களில் மது அருந்துதல்நல்லது கெட்டதுன்னா மது அருந்துதல், கூடி மது அருந்துதல்,பொதுவாக கிராமப்புறங்களில் காணப்படுகின்ற பண்பாகும்.
இந்த தன்வசப்படுத்த கூடியவர்.முதலில் முகத்தாரின் குடும்ப நலன் விசாரித்தல். 'உன்னோட வருசத்த துவங்க வேணும்" என்று கூறுதல் 'நம்ம என்ன ஒவ்வொரு நாளுமே முகத்தார்' என மதுஅருந்த தூண்டுதல், என்பவைகளுடாக அறிந்து கொள்ள முடியும்.
*நகைச்சுவையான ஒருவராகவும் தன்னுடன் இருப்பவரை சந்தோசமாக வைத்திருப்பவராகவும் காணப்படுகிறார்.ஐயம் பின்னையுடன் முன்பாதி பண்ணியதாக கூறப்படுகிறது. ஐயம் பிள்ளையுடன் முஸ்பாத்தி பண்ணியதால் நேரம் போனதே தெரியல' என்ற முகத்தாருடைய பேச்சின் மூலமும் அறிய முடிகிறது.
முக்கியத்துவம்
முகத்தாரின் சில இயல்புகளை வெளிக்காட்டுபவராக காட்டப்படுகிறார். மது அருந்துதல் இந்த ஐயம் பிள்ளை எனும் பாத்திரத்தின் மூலமே முகத்தார் மது அருந்துபவர் என்பது வாசகர்களுக்கு தெரிய வருகிறது. நண்பரோட முஸ்பாதி பண்ணுதல்'
கதை வளர்ச்சியில் இவருடைய பங்கு முக்கியத்துவமாக அமையாவிட்டாலும் கதையை நகர்த்துவதற்கு ஒரு முக்கியமான கருவியாக, உந்துகோலாக காணப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக