7.11.25

கடல்புறா பாகம் - 01 அத்தியாயம் - 05

கடல்புறா

அத்தியாயம் 5

சமரின் முரசொலி!

கச்சையில் செருகியிருந்த சுருக்குப் பட்டுப் பையி லிருந்து கருணாகர பல்லவன் எடுத்துக் கொடுத்த ஓலை யைப் படித்த மாத்திரத்தில் பெரும் பிரமிப்புக்கும் திகைப்புக்கும் உள்ளான தந்தையும் மகளும் நீண்ட நேரம் ஏதும் பேசாமல் உள்ளத்தில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் எழுந்தோட ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே நின்றிருந்தார்கள். ஓலையைக் கண்டதால் அந்த இருவர் உள்ளத்திலும் ஏற்பட்ட திகிலையும் குழப்பத்தையும் நன்கு அறிந்துகொண்ட கருணாகரபல்லவன், அவர்கள் உணர்ச்சி களின் கொந்தளிப்பு தானாகவே அடங்கட்டும் என்ற நினைப்பால் ஏதும் பேசாமல் அவர்கள் மௌனத்தில் தானும் பங்கு கொண்டானாகையால், அந்த அறையில் பயங்கரமான அமைதியே நிலவிக் கிடந்தது. சதா அலை மோதும் மனித வாழ்க்கையில் அமைதிக்கோ மௌனத் துக்கோ எத்தனை நேரம்தான் இடமிருக்க முடியும்? ஆகவே பல நிமிஷங்கள் உணர்ச்சி வசப்பட்டு நின்ற தந்தையும் மகளும் கடைசியாக விளக்கடியிலிருந்து திரும்பி, ஏதேதோ சந்தேகங்கள் பாய்ந்து நின்ற தங்கள் கண்களை இளைய பல்லவன்மீது செலுத்தினார்கள். குணவர்மனின் கண்களை ஒரு வினாடியே சந்தித்த இளைய பல்லவனின் கண்கள் காஞ்சனா தேவியின் அஞ்சன விழிகளை மட்டும் நீண்ட நேரம் கவர்ந்து நின்றதன்றி, அத்தனைக் குழப்பத்திலும் சந்தேகத்திலும் சஞ்சலத்திலும் கூட அந்த விழிகளின் ஒளி சிறிதும் குன்றாதிருந்ததை அவன் மனம் எண்ணிப் பார்த்து எல்லையற்ற மகிழ்ச்சி யையும் வியப்பையும் அடைந்தது. குழப்பத்தின் விளை வாகப் பெரும் குருதி பாய்ந்து சிவந்து நின்ற வழவழத்த அவள் கபோலங்களின் அழகையும் காணத் தவறாத கருணாகர பல்லவன் 'திகைப்பிலும் குழப்பத்திலும் முகம் விகாரப்படுவது இயற்கை. ஆனால் இயற்கையின் அந்த நியதியையும் மீறும் இவள் அழகு எத்தனை சிறந்தது?' என்று தனக்குள்ளேயே ஆச்சரியப்பட்டுக் கொண்டான். தான் கொண்டுவந்த ஓலை அளித்த பயங்கரச் செய்தியைக் கேட்ட பின்பு சற்றே துவண்ட தேகத்தின் விளைவாக அவள் நுண்ணிய இடை ஒரு பக்கம் சாய்ந்து வளைந்த தால் அவள் நின்ற நிலையில் எத்தனை ஒய்யாரம் ஏற்பட்டது என்பதையும் கவனித்த கருணாகர பல்லவன், 'வாளேந்திய வீராங்கனையின் நிமிர்ந்த உருவத்துக்கும், இடை வளைந்து நிற்கும் இந்த மோகன பிம்பத்திற்கும் எத்தனை வித்தியாசம்! ஒவ்வொரு மாற்றமும் இவளுக்கு எத்தனை விதவிதமான அழகை அள்ளிச் சொரிகிறது!' என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

காஞ்சனாதேவி அந்தப் பார்வை அம்புகளால் பெரிதும் அவஸ்தைப்பட்டுச் சற்றே நெளிந்தாளானாலும், தந்தை பக்கத்திலிருந்ததால் அந்த வாலிபன் பார்வையை அவரும் கவனித்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தின் விளைவாக மேலும் தாமதம் செய்யாமல் பேச்சைத் துவங்கி, "இந்த ஓலை உங்களிடம் எப்படிக் கிடைத்தது?" என்று மெள்ள வினவினாள்.

கருணாகர பல்லவனின் கண்கள் காஞ்சனா தேவி யின் பக்கத்திலிருந்த குணவர்மனை ஒருமுறை ஏறெடுத்து நோக்கிவிட்டுப் பிறகு காஞ்சனாதேவியைச் சற்று உற்றுப் பார்த்தன. "தேவி! இந்த ஓலையைச் சோழ சாம்ராஜ்யாதிபதி வீரராசேந்திரரே என்னிடம் நேரிடையாகக் கொடுத்தார். உங்களிருவரையும் எப்படியும் கண்டு பிடித்துக் காப்பாற்றிச் சோழ நாடு அழைத்து வரும் படியும் உத்தரவிட்டார். ஓலையில் கண்டிருந்த விஷயத் தைக் கவனித்தீர்களா இல்லையா?" என்று பாதி விளக்க மும் பாதி கேள்வியும் தொனித்த சொற்களும் அவன் உதடுகளிலிருந்து உதிர்ந்தன.

இதற்குக் காஞ்சனாதேவி பதிலேதும் சொல்லாவிட் டாலும் திகில் நிரம்பிய குரலில் குணவர்மனே சொன் னான்: நன்றாகக் கவனித்தோம் இளைய பல்லவரே! என்னையும் கலிங்கத்தைத் தாண்டுமுன்பு கொன்று விடும்படி இந்த ஓலையில் உத்தரவிருக்கிறது.

"
உங்களுக்கு உங்கள் நாட்டில் நிரம்ப விரோதிகள் இருக்க வேண்டும் குணவர்மரே!" என்று கூறிய இளைய பல்லவன் சற்று நிதானித்துவிட்டு, "ஆமாம், உங்கள் உயிருக்கே உலை வைக்க முயலும் இத்தனைக் கொடிய விரோதிகள் உங்களுக்கு ஏற்பட என்ன காரணம்." என்றும் விசாரித்தான்.

குணவர்மன் முகத்தில் அதுவரை இருந்த குழப்பமும் திகிலும் சரேலென மறைந்து அவற்றின் இடத்தைக் கம்பீரத் தின் சாயை ஆக்ரமித்துக் கொண்டது. அந்தக் கம்பீரம் குரலிலும் தாண்டவமாடப் பேச முற்பட்ட குணவர்மன், "விரோதிகள் என்று பன்மையில் பேச வேண்டாம் இளையபல்லவரே! என் நாட்டு மக்கள் அனைவரும் என்னை நேசிக்கிறார்கள். அந்த நேசம்தான் என் வாழ்வின் நாசத்தில் வந்து முடிந்தது. எனக்கு விரோதிகள் இல்லை இருப்பது ஒரே ஒரு விரோதிதான். அவன் பெயர்தான் இந்த ஓலையில் கையொப்பமாகப் பொறிக்கப்பட்டி ருக்கிறது" என்று உணர்ச்சி பொங்கப் பதில் சொன்னான்.

அதுவரை கோழை போலிருந்த குணவர்மன் திடீரென நிமிர்ந்து நின்றதையும் அரச தோரணையில் பேச முற்பட்டதையும் கண்ட கருணாகர பல்லவன், கடாரத்து இளவரசனிடம் பெருமதிப்புக் கொண்டதன்றி அனுதாபத்துடனும் பேசத் தொடங்கி, "அந்த ஓலையில் கையொப்ப மிட்டிருப்பவனா! என்று வினவினான்.

"
ஆம், அவனேதான். ஜெயவர்மன் ஒருவர்தான் என் நாட்டில் எனக்கு விரோதி," என்றான் குணவர்மன், வருத்தம் தோய்ந்த குரலில்.

என்றான் கருணாகர "யாரிந்த ஜெயவர்மன்?" பல்லவன், விஷயத்தைத் தெளிவாக அறிந்துகொள்ளும் நோக்கத்துடன்.

"
என் மாற்றாந்தாயின் மகன்."

அதாவது...

"
என் சகோதரன்!"

"
அப்படியானால் உங்கள் தந்தைக்கு மனைவியர் இருவரா?"

"
கடாரத்தின் மன்னர் உங்கள் சகோதரரா?"

கடாரத்தின் மன்னன் என ஜெயவர்மனை இளைய பல்லவன் குறிப்பிட்டதை ரசிக்காத குணவர்மனின் முகம் லேசாகச் சுளித்தது.

"
தற்சமயம் அவன்தான் அரசாள்கிறான் என்று வெறுப்புடன் பதில் சொன்னான் குணவர்மன்."

"
மன்னரை 'அவன்' என்று சொல்கிறீர்களே?" என்று கேட்டான் இளையபல்லவன்.

"
எனக்கு நான்கு வயது சிறியவன் அவன்."

இருந்தாலும் அரியணையில் அமர்ந்திருக்கும் மன்ன ரல்லவா?"

உண்மைதான். ஆனால் சைலேந்திரர்களின் அரி யணையில் அமரவேண்டியவன் அவனல்ல, நான்தான்."

விந்தையாயிருக்கிறதே!

"
விந்தையேதுமில்லை இளையபல்லவரே! என் தாய் தான் என் தந்தையின் பட்டமகிஷி நான்தான் முடி சூட என் தந்தையால் தேர்ந்தெடுக்கப்பட்ட இளவரசன். கடாரத்தில் நான் தற்சமயம் இளவரசனாயிருப்பதற்கும் தந்தை இருக்கும்போது கிடைத்த பதவிதான் காரணம்"

"
அப்படியா!" என்ற கருணாகர பல்லவனின் எண் ணங்கள் கடார மன்னர்களின் குழம்பிய அரச பரம்பரைச் சிக்கல்களில் புகுந்தது. கடாரத்தின் சைலேந்திர மன்னர்கள் சில காலம் விரோதம் பாராட்டியதையும், இளையபல்ல வன் நன்கு அறிந்தான். சமீபத்தில் கடாரத்திலும் சொர்ணத் தீவிலும்*, சாவகத்திலும் அரசியல் குழப்பங்கள் அதிகமாகி விட்டதையும் கருணாகர பல்லவன் உணர்த்திருந்தானா னாலும் இத்தகைய ஓர் அரியணைப் போட்டி நடக்கிற தென்பதை அறிய வாய்ப்பில்லாதிருந்ததாகையால், குண வர்மன் குறிப்பிட்ட விஷயங்களைப் பூரணமாகக் கிரகிக்கச் சக்தியற்றவனானான். ஆகவே சில நிமிடங்கள் யோசித்த பிறகு, "குணவர்மரே! உங்கள் குடும்பக் கதையில் கலகமும் போட்டியும், ஏன் கொலை முயற்சியும்கூடக் கலந் திருக்கிறது. அவற்றை விவரித்துச் சொன்னால்தான் நான் உள்ள நிலைமையைச் சரிவா உணர முடியும்" என்றான்.

சைலேந்திர ராஜா பரம்பரைச் சிக்கலை அறிந்து கொள்ளக் கருணாகர பல்லவன் ஆவலுடன் இருந்தானா னாலும் அந்த ஆவலை உடனே பூர்த்தி செய்யக் குணவர் மன் முனையவில்லை. "இளையபல்லவரே! கடாரத்தின் கதை மகத்தானது... அதை நிதானமாகத்தான் சொல்ல வேண்டும். நீங்கள் எங்களைச் சந்தித்த முறையின் விசித்திரத்தை எண்ணிப் பார்க்கும் போது ஏதோ நல்லதொரு விதிதான் நம்மைப் பிணைத்திருக்கிறதென்று நினைக்கிறேன். இரவு ஆரம்பித்து ஐந்து நாழிகைகள்தான் ஆகியிருக்கின்றன. சற்று முன்பு நீங்கள் பட்ட அவதிக்குப் பின்பு உங்களுக்கும் சற்று அமைதி தேவை. ஆகவே நீராடி விட்டு வாருங்கள். உணவு அருந்தியபிறகு பேசுவோம். விளக்கமாக விஷயத்தைக் கேட்டபின்பு அடுத்தபடி என்ன செய்தால் இந்தப் பாலூர்ப் பெருந்துறையிலிருந்து தப்ப முடியும் என்பதை நிர்ணயிப்போம்," என்று கூறிய குணவர்மன் தன் மகளை நோக்கி, காஞ்சனா! இளைய பல்லவரை நீராடும் இடத்திற்கு அழைத்துச் செல். ஏவலாட்களை விட்டு அவருக்குச் சகல வசதிகளையும் செய்து கொடு" என்று சொல்லிக் கொண்டு போனவன், வாயிற்படிக்கருகில் திடீரெனத் திரும்பிய இளைய பல்லவனை ஏற இறங்கப் பார்த்து, "இவரும் நானும் கிட்டத்தட்ட ஒரே உயரப் பருமன்தான். ஆகவே என் உடைகளில் சிலவற்றை இவர் அணிந்து கொள்ளலாம்" என்றும் மகளுக்கு உணர்த்திவிட்டு அறையிலிருந்து வெளியே நடந்தான்.

அவன் சென்றதும் கருணாகர பல்லவனை நோக்கிப் புன்முறுவல் செய்தாள் காஞ்சனாதேவி. ஏன், வரலாமே இளையவல்லவரே! தந்தை உத்திரவிட்டு விட்டார். பணிப் பெண் காத்திருக்கிறேன் என்று விஷமமாகப் பேசவும் பேசினாள்.

பதிலுக்குக் கருணாகர பல்லவன் சற்று இரைந்தே நகைத்தான். அவன் சிரிப்பின் காரணத்தை அறியாத காஞ்சனாதேவி, ஏன் நகைக்கிறீர்கள்" என்று வினவினாள்.

"
உங்களைப் பணிப் பெண்ணாகப் பெற்றால் என் கதி என்ன ஆகும் என்று நினைத்தேன். சிரிப்பு வந்தது" என்றான் கருணாகர பல்லவன்.

"
ஏன் என்ன ஆகும்? நான் பணிப் பெண்ணாக வந்தால் பணிவிடைகளில் குறைவிருக்குமா?"

"
இருக்காது இருக்காது. இந்த அறைக்குள் வந்ததும் அதைப் புரிந்துகொண்டேன்.""

"
என்ன புரிந்துகொண்டீர்கள்?"

"
வாள் முனையில் பணிவிடைகள் கிடைக்கு மென் பதை."

இதைக் கேட்டதும் காஞ்சனாதேவியும் கலகலவென நகைத்தாள். "பேச்சில் வல்லவர் என்று நான் முன்னம் சொன்னதே சரியாகிவிட்டது. சரி சரி, வாருங்கள்" என்று சற்றுப் பொய் அதட்டலும் போட்டு அவனை அந்த அறையைவிட்டு அழைத்துச் சென்றாள் அரசகுமாரி.'

குணவர்மனுக்குக் கோடிக்கரைக் கூலவாணிகன் அமர்த்தியிருந்த மாளிகை மிகப் பெரிதாகவே இருந்ததைக் கவனித்த இளையபல்லவன், அதன் அமைப்பைப் பார்த் துக் கொண்டே அரசகுமாரியைப் பின்தொடர்ந்தான். அந்த அறைகள் இருந்த முறையும், பெருங் கதவுகள் இரும்புத் தாழ்ப்பாள்களுடன் பொருத்தப்பட்டிருப்பதையும் கண்ட அந்த வாலிப வீரன் அவசியமானபோது அந்த மாளிகை சிறு கோட்டையாகவும் மாறக்கூடும் என்று தீர்மானித் தான். ஒருவேளை அந்த வீடு கலிங்கத்தின் காவல் வீரர்களால் முற்றுகையிடப்பட்டாலும் பத்துப் பதினைந்து வீரரும் அவசியமான உணவுமிருந்தால் எதிரிகளை ஒரு வாரத்துக்கு மேல் எதிர்த்து நிற்க முடியும் என்றும் திட்டம் போட்டான் கருணாகர பல்லவன். இப்படி எதிரிகளைச் சமாளிக்கும் வழியையும், பாலூர்ப் பெருந்துறையிலிருந்து குணவர்மனையும் காஞ்சனாதேவியையும் தப்ப வைத்து அழைத்துச் செல்லும் மார்க்கத்தையுமே திரும்பத் திரும்ப மனத்தில் எண்ணிக்கொண்டு அரசகுமாரியைப் பின் தொடர்ந்த இளையபல்லவன், பணியாட்களின் உதவியால் நீராட்டத்தை முடித்துக்கொண்டு குணவர்மனது உடை களை அணிந்துகொண்டதும் போஜன அறைக்குள் நுழைந்தான். அவன் நுழைந்தபோது அந்த அறையில் குணவர்மன் இல்லை. காஞ்சனாதேவி மட்டுமே அவனை எதிர்கொண்டாள். முன்பு அறையின் மங்கலான வெளிச் சத்தில் பார்த்ததைவிடப் பன்மடங்கு அழகுற துலங்கினாள் காஞ்சனாதேவி. அரைகுறை ஆடையுடனும், ஆபரண மில்லாமலும் அப்பொழுது அவளைப் பார்த்த கருணா கரனுக்கு, குறைவற்ற ஆடைகளுடனும் அணிமணிகளுட னும் அவள் நின்றிருந்த தோற்றம் பெரும் பிரமிப்பை அளித்தது. சேலையை மிக அழகாக அணிந்ததால் இடையி லிருந்த பட்டை கால்களுக்கிடையில் அழகாக ஓடிப் பாதங்களின் மேற்புறங்களைத் தடவ, இறுக்கிக் கட்டப் பட்ட இடை சற்று இருந்தும் இல்லை போல் தோற்ற மளிக்க நின்றிருந்தாள் காஞ்சனாதேவி. அவள் முகத் தாமரை மந்தகாசத்தால் விரிந்து கிடந்தது. ரவிக்கைக்கு மேலே தெரிந்த வெளேரென்ற சருமத்தில் நவரத்தினங்கள் பதிந்த சிறிது ஆபரணமொன்று பலப்பல நிறங்களை விளக் கொளியில் கிளப்பி, இரட்டை வண்ணச் சேலையின் வர்ண ஜாலங்களுடன் போட்டி போட்டுக் கொண்டிருந்தது. இளைய பல்லவனைக் கண்டதும் அவள் முகத்தில் வெட்கம் விரிந்தது. ஆனால் அரச தோரணை மாறாத தால், கம்பீரமும் வெட்கமும் இணைந்து முகத்தின் பொலி வைப் பன்மடங்கு உயர்த்தியதைப் புரிந்துகொண்டான், அந்த வாலிப வீரன்.

அவனை வரவேற்ற காஞ்சனாதேவிகூட நீராட்டத் தாலும் புதுஉடை புனைந்ததாலும் இளைய பல்லவனது தோற்றத்தில் ஏற்பட்ட அற்புத மாற்றத்தைக் கண்டு பெரிதும் வியந்தாள். துவட்டிய பின்பும் அவன் சுருட்டை மயிர்கள் நீரை ஓரிரு இடங்களில் மணிகள்போல் சொட்டிக் கொண்டிருந்ததையும், அப்படிச் சொட்டிய நீரும் அவன் முகத்துக்குப் பெரும் கம்பீரத்தை அளித்ததை யும், 'அழகாக இருந்த இளமீசை அவன் வீரத்துக்குச் சான்று கூறியதையும் காஞ்சனாதேவி கவனித்தாள்.

குணவர்மனின் அரச உடை அவனுக்கு எத்தனைப் பொருத்தமாக இருந்தது என்பதையும், கன்னத்திலிருந்த காயத்தின் கீறல் வடுகூட அவனுக்கு இணையற்ற அழகை அளித்ததையும், அவன் கைகள் முழந்தாளைத் தொடும் அளவுக்கு நீண்டு கிடந்ததையும் கண்ட காஞ்சனாதேவி தான் பாரதத்தின் சிறந்த வீரன் ஒருவனுக்கு முன்பு நிற்பதை அறிந்தாள். அறிந்ததன் விளைவோ, என்னவோ, "வீரரே! வருக வருக!" என்று அழைப்பும் விடுத்தாள்.

அவள் அப்படி அழைத்ததால் புன்முறுவல் கொண்ட கருணாகர பல்லவன், ஏது, வரவேற்பு பலமாயிருக்கிறது? என்று கேட்டுக்கொண்டே அவளை அணுகி வந்தான்.

விருந்தினர்களை வரவேற்பதும் உபசரிப்பதும் எங்கள் நாட்டுப் பழக்கம் என்று கூறிய காஞ்சனாதேவி, இதோ தந்தையும் வந்துவிடுவார் என்று குணவர்மன் வராத தற்கு மன்னிப்புக் கேட்கும் பாவனையில் வார்த்தைகளை உதிர்த்தாள். குணவர்மன் வரவைப்பற்றிக் கருணாகர பல்லவன் கவலைப்படவில்லை. காஞ்சனா தேவியுடன் தனித்திருப்பதே அவனுக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுத்த தால், "வரட்டும். நிதானமாக வரட்டும். எனக்கொன்றும் அவசரமில்லை" என்றான்.

அந்த வாலிபனின் சொற்களில் புதைந்து கிடந்த எண் ணத்தைப் புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளாதது போலவே நடித்தாள் காஞ்சனாதேவி. "உங்களைக் காக்க வைக்க இஷ்டமில்லை. இருப்பினும் தந்தை நீராடச் சற்று அதிக நேரமாகும். என்ன செய்வது?" என்று உள்ள எண் ணத்துக்கும் உதட்டுச் சொற்களுக்கும் சம்பந்தமில்லாமல் பேசினாள் காஞ்சனாதேவி. அத்தகைய சம்பாஷணை எத்தனை நேரம் நடந்தாலும் அந்த இருவருக்கும் திருப்தி யாகவே இருந்திருக்கும். ஆனால் அந்தத் திருப்திக்கு இடைஞ்சலாகச் சீக்கிரமே உள்ளே நுழைந்த குணவர்மன், "உணவருந்தலாம் வாருங்கள் என்று அழைத்தான்.

தங்கக் கலங்களில் பலப்பல விதமான உணவுகளும் கனிகளும் பரிமாறப்பட்ட போதிலும் மூவரும் அதிகமாக உண்ணவேயில்லை. மூவர் புத்தியிலும் அலைமோதிக் கொண்டிருந்த எண்ணங்கள் பசியைப் பெரிதும் தடை செய்திருந்தனவாகையால், அரை நாழிகைக்குள் உண வருந்திய அம்மூவரும் கைகழுவிவிட்டுப் பணியாட்கள் கொடுத்த பட்டுத் துணிகளில் கைகளைத் துடைத்துக் கொண்டு மாளிகையின் மாடியறையொன்றை அடைந் தனர். அந்த அறையிலிருந்த விசாலத்தையும் அதிலிருந்த மஞ்சங்களையும் பார்த்த கருணாகர பல்லவன் அவர் களுக்குத் தகுந்த ஏற்பாடுகளையே கோடிக்கரைக் கூல வாணிகள் செய்திருக்கிறானென்பதை உணர்ந்து அவனைப் பெரிதும் மனத்திற்குள் பாராட்டிக் கொண்டும், அந்த அறையைத் தன் கண்களால் அளவெடுத்துக் கொண்டும் மஞ்சமொன்றில் உட்கார்ந்ததன்றி, மற்ற இருவரையும் உட்காரும்படியும் சைகை காட்டினான். அவன் சைகைப் படி காஞ்சனாதேவி எதிரேயிருந்த மஞ்சமொன்றில் அமர்ந் தாளானாலும், குணவர்மன் உட்காராமல் சற்று எட்ட விலகி அவ்விருவரையும் சிறிது நேரம் பார்த்துக் கொண்டு ஏதும் பேசாமல் மௌனமாக நின்றான். கடைசியில் மௌனத்தைக் கலைத்துக் கொண்டு, "இளைய பல்லவரே! நான் கேட்பதற்கு மன்னிக்க வேண்டும். நீங்கள் இளைய பல்லவர் என்பதற்கு நீங்கள் கூறிய வார்த்தையைவிட வேறு சான்றுகள் இல்லை. ஆகவே தாங்கள்தான் இளைய பல்லவர் என்பதற்கு ஏதாவதொரு ஆதாரம் இருந்தால் நாம் பேசலாம்" என்று கூறினான்.

குணவர்மனின் நிலைமையைப் பூரணமாக அறிந்து கொண்டதால் அவன் காட்டிய எச்சரிக்கையைக் கண்டு சிறிதும் கோபம் கொள்ளாத இளைய பல்லவன், தன் கையை நீட்டி, பல்லவ ராஜ முத்திரையுடன் கூடிய மோதிரத்தைக் காட்டி, "இது போதுமா குணவர்மரே?" என்று வினவினான்.

குணவர்மன் திருப்தியுடன் தலையை அசைத்தான். "போதும் இளைய பல்லவரே, போதும். நான் சந்தேகப் படுவதைப் பற்றிக் கோபம் வேண்டாம். நான் அடைந் துள்ள தொல்லைகள், ஏமாற்றங்கள் என்னை அவநம்பிக் கையுள்ளவனாக அடித்திருக்கின்றன. மன்னித்துவிடுங்கள். இனி நாம் மனம் விட்டுப் பேசுவோம் என்ற குணவர்மன், "இளைய பல்லவரே! சிறிது நேரத்தில் ஸ்ரீவிஜய சாம்ராஜ் யத்தின் அதாவது சைலேந்திரர்கள் பேரரசின் - நீங்கள் பொதுவாக அழைக்கும் கடாரத்தின்-விந்தைக் கதையைச் சொல்கிறேன். அதற்குமுன்பு நீங்கள் சொல்லுங்கள் உங்கள் கதையை. நீங்கள் எதற்கு இந்தப் பாலூர் வந்தீர்கள்?" என்று மெல்லக் கேட்கவும் செய்தான்.

கருணாகர பல்லவனின் கூரிய கண்கள் குணவர் மனை ஊடுருவிப் பார்த்தன. "நான் சொல்வதற்கு அதிகம் எதுவுமில்லை குணவர்மரே! பூம்புகாரின் சுங்கக் காவல ரிடம் உங்கள் நாட்டு ஒற்றன் ஒருவன் பிடிபட்டான். அவ னிடம் உங்களைக் கொல்லப் பணித்த அந்த ஓலையிருந்தது. ஆகவே உங்களை எப்படியும் காப்பாற்றிப் புகாருக்கு அழைத்து வரும்படி வீரராஜேந்திர சோழ தேவர் எனக்குப் பணித்தார். நிலமார்க்கமாக வந்தால் நாளாகுமென்பதால் கடல் மார்க்கமாகச் செல்லவும் ஆணையிட்டார். ஆகவே புரவியுடன் மரக்கலத்திலே வந்து இந்தத் துறைமுகத்தில் இறங்கினேன். அங்குதான் சில விபரீத விவரங்களைக் கேள்விப்பட்டேன். அதுவும் ஒரு சுங்க அதிகாரி மூலமாக" என்று பேசிச் சற்று நிறுத்தினான் இளையபல்லவன்.

"
என்ன விபரீதச் செய்திகள் இளைய பல்லவரே?" என்று வினவினான் குணவர்மன், குரலில் கவலையொலி துலங்க.

"
முதலில் தமிழர்கள் சிறை செய்யப்படுவதாகக் கேள்விப் பட்டேன். அது மட்டுமல்ல, வேங்கி நாட்டு மன்னன் ராஜ ராஜேந்திரனுக்கும், சோழர் குலச் செல்வி அங்கம்மா
என நாங்கள் தேவிக்கும் அவதரித்த, ராஜேந்திரன் சோழர் இங்கு சிறைப்பட் அழைக்கும், அநபாய டிருப்பதாகவும் அறிந்தேன் என்றான் இளைய பல்லவன். "என்ன! அநபாயச் சோழரா? தங்கள் நண்பரா? இத்தனைத் துணிவா, கலிங்க மன்னனுக்கு! என்று தந்தை மகள் இருவரும் ஏகோபித்துக் கேட்டார்கள்.

கருணாகர பல்லவன் இளமுறுவல் செய்துவிட்டு, "நீங்கள் சொன்ன அந்த வார்த்தைகளைச் சொன்னதால் தான் என்னை வீரர்கள் துரத்தினார்கள். அவர்களிடமிருந்து தப்பித்தான் உங்கள் அறையில் குதித்தேன் என்றான்.

அப்படியா? என்றான் குணவர்மன்.

"
ஆமாம், குணவர்மரே! ஏற்கெனவே சிதைந்து கிடக் கும் சோழ, கலிங்க உறவைச் சீர்படுத்தவும், அமைதியைத் தென்னகத்தில் நிலைக்கச் செய்யவும், சமாதான ஆக்ஞா பத்திரமொன்றையும் வீரராஜேந்திரர் கொடுத்திருக்கிறார். அதுவும் இனி செல்லாது. இரண்டு நாட்டுக்கும் மேலும் பகையும் போரும்தான் என நினைக்கிறேன். சமாதானத் தூதனாக வந்தேன். இனி சமரின் தூதனாகத் திரும்பப் போகிறேன். சமரின் முரசொலி இப்பொழுதே என் காதில் கேட்கிறது" என்றான் இளையபல்லவன்.

குணவர்மன் பதிலேதும் சொல்லாமல் அவனை வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றான். "இதிலும் விசித் திரமிருக்கிறது இளைய பல்லவரே! கலிங்கத்தின் பகை கடாரத்துக்கு நன்மை பயக்கிறது என்று சற்று குதூகலத் துடனேயே கூறிய குணவர்மன், இப்பொழுது கேளும் இளையபல்லவரே, கடாரத்தின் விந்தைக் கதையைச் சொல்லுகிறேன். சீருடன் இருக்க வேண்டிய ஒரு சாம்ராஜ்யம் சீாழியும் பாதையில் இறங்கிச் செல்லும் சோகக் கதையைச் சொல்லுகிறேன். அதன் கதைதான் என் கதையும் என்று தனது கதையை விவரிக்கத் தொடங்கினான்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக