நீலாவணன்
கிழக்கு இலங்கையைச் சேர்ந்த வளமிகும் பெரிய நீலாவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.கே.சின்னத்துரை என்னும் தமிழாசிரியர் தம் ஊரின் மீது கொண்ட பெரும் பற்றின் காரணமாகத் தமது புனைபெயரை நீலாவணன் என வைத்துக் கொண்டார். இப்புனை பெயரில் ஏராளமான கவிதைகளையும், கட்டுரைகளையும், நாடகங்களையும் எழுதியுள்ளார். அவையெல்லாம் தொகுக்கப் பெற்றுத் தற்போது நூல் வடிவம் பெற்றுள்ளன. அவற்றுள் வேளாண்மை, வழி, ஒத்திகை, மழைக்கை என்பன குறிப்பிடத்தக்கனவாகும்.
-இவரது வழி என்னும் கவிதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினைப் பெற்றது. இவரது காலம் 1931 1975 ஆகும். எளிய நடையில் உவமை நயம் ஒளிரும் பாடல்கள் பல படைத்த நீலாவணன் தமது கவிதைகள் மூலம் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பாரென்பது திண்ணம். ஈழத்தின் முன்னணிக் கவிஞராகத் திகழ்ந்த இவரது அடியொற்றிக் கிழக்கிலங்கையில் இளங் கவிஞர்கள் பலர் இன்று முகிழ்த்துள்ளனரென்றால் அது மிகையல்ல.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக