3.11.25

இலக்கணம்

இலக்கணம்

தமிழ், இலக்கியமும், இலக்கணமும் அடங்கிய ஒன்றாகும் இலக்கியம் மக்களின் இன்ப துன்பங்கள் அடங்கிய வாழ்க்கையினைச் சொற்களின் மூலமாகச் சுவைபட எடுத்தியம்புவதாகும். சங்கப்பாடல்கள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், இக்காலத்திய நாவல்கள், சிறுகதைகள் ஆகியன இலக்கியத்தின்பாற்பட்டனவாகும்.

இலக்கணம் மேற்கூறிய இலக்கியங்களைச் செம்மையுற ஆக்கவும், மொழி திரிபு அடையாமல் பாதுகாக்கவும், மொழியை மரபு கெடாமல் எழுதவும், கற்கவும் துணை செய்ய வல்ல விதிகளாகும். இவ்விதிகளைக் கொண்ட தொகுப்பு, நூலாகும். மொழியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கருவி எனலாம். தொல்காப்பியம், நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலங்காரிகை, தண்டியலங்காரம் ஆகியன இலக்கணத்தின் பாற்பட்டனவாகும்.

நன்னூல், யாப்பருங்கலங்காரிகை, தண்டியலங்காரம் ஆகியன மொழிக்கு இலக்கணம். நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை ஆகியன வாழ்க்கைக்கு இலக்கணம். தொல்காப்பியம் மொழிக்கும் வாழ்க்கைக்கும் இலக்கணம்.

சுருங்கக்கூறின், மொழி என்பது பெருக்கெடுத்து ஓடிச்செல்லும் ஆற்று வெள்ளம் என்றும், அம்மொழி வெள்ளத்தைப் பல திசைகளில் ஓடவிடாதபடி ஒரே போக்காக ஓடச்செய்யப் பாதுகாப்பாக இருக்கும் கரையே இலக்கணம் என்றும் இயம்பலாம்.

தமிழ் இலக்கணம் ஐந்து வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அவை:-

1.
எழுத்து

2.
சொல்

3.
பொருள்

4.
யாப்பு

5.
அணி என்பனவாகும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக