2.11.25

தமிழ் முறைப்படி திருநாண் பூட்டியதும் பாட வேண்டிய திருக்குறட் பாக்கள்

தமிழ் முறைப்படி திருநாண் பூட்டியதும் பாட வேண்டிய

1.
திருக்குறட் பாக்கள்

இருவருக்கும்


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது



வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய

வாழ்வாரே வாழாதவர்



இழுக்கல் உடையுழி ஊன்றுகோல் அற்றே

ஒழுக்கமுடையார் வாய்ச்சொல்



வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர் தம்

உள்ளத்தனையது உயர்வு



இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு



தோன்றிற் புகழோடு தோன்றுக, அஃதிலார்

தோன்றலில் தோன்றாமை நன்று.



ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு



அரம் பொருதப் பொன்போலத் தேயும் உரம் பொருது

உட்பகை கொண்ட குடி


துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் பெறும்.


மணமகனுக்கு

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை

ஒருமை மகளிரே போலப் பெருமையும்

தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோரக்கு

அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு


மணமகளுக்கு

தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்

மனைத்தக்க மாண்புடையவள் ஆகித் தற்கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத்துணை

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக