சம்பாஷணை
ஒரு கலை வினாவிடை
1. இக் கட்டுரையினூடாக ஆசிரியர் சொல்லவந்த விடயம் என்ன?
கலை அழகையும் கட்டுப்பாட்டு ஒழுங்கையும் இனிமையையும் கொண்டிருப்பதே நல்ல சம்பாஷணைக்குரிய முக்கிய அம்சம் என்பதே கட்டுரையாசிரியர் சொல்ல வந்த விடய மாகும்.
2. கூறவந்த விடயத்தை கட்டுரையாசிரியர் எவ்வாறு வெளிப் படுத்துகின்றார்?
கிராமிய மக்களிடம் காணப்படும் பேச்சு வழக்கினூடாக எடுத்துரைத்தல்.
வரலாற்றுச் சம்பவங்களை எடுத்துக் காட்டி விளக்குதல்.
உதாரணமாக காந்தி - இர்வான் இடையே நடைபெற்ற சம்பாஷணை.
அறிஞர்கள் பொதுவாக எவ்வாறு என்பதை எடுத்துக்காட்டுதல்.
உ-ம் : பாரதியார். அரவிந்தர், லெனின், பேர்னாட்ஷா போன்றோரின் சம்பாஷணைகள்.
நகைச்சுவை கதைகளினூடாக இடம்பெறும் சம்பாஷணை கள்.
உ-ம் : விகடகவி தென்னாலிராமன் செயல்.
சம்பாஷணை தொடர்பான நூற்கருத்துக்களை முன்வைத்தல்.
பொருத்தமான அணிவகைகளை எடுத்துக்காட்டுதல்.
3. நல்ல சம்பாஷணை ஒன்று எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதற்கு ஆசிரியர் தரும் கருத்துக்கள் எவை?
கலையழகும் கட்டுப்பாட்டு ஒழுங்கும் இருத்தல் வேண்டும்.
இடமறிந்து காலமறிந்து பேசக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
சம்பாஷிக்கும் பேச்சில் அர்த்தமும் ரஷபாவமும் இருத்தல் வேண்டும்.
சம்பாஷிக்கும் விடயத்திற்கேற்ப பொருத்தமான மொழிநடையைக் கையாளுதல் வேண்டும்.
உரையாடும் விடயம் பிறருக்கு புலப்படக்கூடியதாக தெளிவாக இருத்தல் வேண்டும்.
சிந்தித்து பிறரை அவமானப்படுத்தக் கூடியதாக அமையாத வகையில் சம்பாஷணை இருத்தல் வேண்டும்.
சம்பாஷிக்கும்போது பிறர் கேட்டு மகிழ்ச்சி தரும் வகையில் இருத்தல் வேண்டும்.
4. சம்பாஷணையின்போது பயன்படுத்தப்பட வேண்டிய சொல்லாட்சி தொடர்பாக வ.ரா. கூறுவதென்ன என்பதை புலப்படுத்துக?
சந்தர்ப்பத்திற்கு பொருத்தமில்லாத பெரிய சொற்களைப் பயன்படுத்தி பிறரைப் பயமுறுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.
தான் கூறுகின்ற விடயங்கள் பிறரால் அறிந்து கொள்ளக் கூடிய சொற்களைப் பயன்படுத்தல்.
நாம் பயன்படுத்தும் சொல்லின் அதே பொருளை மற்ற வர்களும் புரிந்துகொள்வார்களோ என்பதை தெரிந்து கொண்டு அச் சொல்லைப் பயன்படுத்தவேண்டும்.
யோசிக்காமல் வார்த்தைகளை வெடுவெடு என்று பிரயோகிக்கக் கூடாது.
5. சம்பாஷணை கலையழகு கொண்டதாக இருத்தல் வேண்டும் என வ.ரா. கூறுவதன் ஊடாக நீர் அறிந்துகொள்வது என்ன?
சங்கீதத்தின் கவர்ச்சி போல அமைதல்.
வேதத்தின் உட்பொருள் போல விளங்குதல்.
கவிதையின் கற்பனை ஆற்றல் போல காணல்.
களைக் கூத்தர்களின் ஜாலவித்தையை ஒருங்கே சேர்த்து காண்பிப்பது போல இருத்தல்.
அழகான மொழிநடையில் கருத்துக்களைப் பரிமாறுதல்,
அர்த்தம், ரஸம்,
பாவம், விஷயம் என்பன நிறைந் திருத்தல்.
இதமும் இங்கிதமும் கொண்டிருத்தல். இவை யாவும் கொண்ட சம்பாஷணை கலையழகு நிறைந்தது.
6. இக் கட்டுரையில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவங்களோடு தொடர்புபட்ட உரையாடல்களின் இயல்புகள் எவை?
காந்தி - இர்வின் ஒப்பந்தப் பேச்சு :
விடியற்காலம் மூன்று மணிவரை இப்பேச்சு இடம் பெற்றது. இது அர்த்தமும் ரஸமும் பாவமும் நிறைந் திருக்கவேண்டும். வெறும் கூச்சலாய் இருந்தால் ஐந்து நிமிஷத்துள் முடிந்திருக்கும்.
காந்தி பற்றி வைஷ்ராய் வில்லிங்டன்
நான் காந்தியைக் கண்டு பேசமாட்டேன். நான் சொல்லுவதற்கெல்லாம் அவர் குதர்க்க அர்த்தம் செய்து என்னை எப்படியோ அவர் நினைக்கிற நினைப்பில் மாட்டிக்கொள்ளும்படி செய்துவிடுகின்றார்.
இந்தச் சம்பாஷணையில் இருந்து தெரியவருவது யாதெனில் காந்திக்கு குதர்க்கம் பேசத் தெரியாது. சூதான சொல்லை வீசுபவர்கள் காந்தியின் காது வலையில் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.
பாரதியும் அரவிந்தரும் சம்பாஷணையில் நிகரில்லாதவர் கள்.
☆ லெனின் சம்பாஷணையில் சாமர்த்தியம் காணப்படும்.
☆ பேர்னாட்ஷாவின் சம்பாஷணையில் சிரிப்புக்கு குறைவேயில்லை.
7. அழுதாலும் சுரம் போட்டு அழவேணுமாமே' சம்பாஷணை தொடர்பாக ஆசிரியர் கூறுமாற்றை விளக்குக?
கலை அழகும் கட்டுப்பாட்டு ஒழுங்கும் இல்லாத எதுவும் சாமர்த்தியமானதாகவோ கெட்டித்தனமாகவோ கருதப்பட மாட்டா. சத்தம் வெளியே வரலாம். ஆனால் அது சங்கீதத்தின் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். அதாவது காதுக்கு இனிமையில்லாத ஒலி எதுவும் வெளியே வரக்கூடாது.
8. 'மதியீனமும் மோசமும் கலந்த புளித்த காடி' என்று கட்டுரை ஆசிரியர் கூறுவதென்ன?
சம்பாஷணையில் கூறவந்த விடயத்தை விளக்கமாக தெளிவாக சொல்லத் தெரியாதவர்கள் 'உனக்கு இது புரியாது' என்று பல்லவி பாடுவார்கள். அழகான பாஷையை வைத்துக்கொண்டு உனக்கு புரியாது என்று சொல்பவர்களை கேலி செய்வதற்கே இத்தொடரைப் பயன்படுத்தியுள்ளார்.
9. வ.ரா. வின் மொழிநடைச் சிறப்பினை விளக்குக?
ஓரளவு கற்றவர்களும் படித்துப் பொருள் அறியத்தக்க எளிமையான தமிழில் மொழிநடை அமைந்துள்ளது.
வழக்கிலுள்ள சொற்களையே பயன்படுத்தி பொருட் செறிவுள்ள சிறியதும் பெரியதுமான வாக்கியங்களில் கட்டுரையின் மொழிநடை அமைந்துள்ளது.
சொற்கட்டு வ.ரா.வின் மொழிநடையில் முக்கிய அம்ச மாகும். செறிவில்லா வாக்கியங்கள் இக் கட்டுரையில் எங்கும் இடம்பெறவில்லை.
புதிய கருத்துக்களை கூறமுற்படும்போது பழைய நடையில் எழுதமுடியாது என்பதற்கு இக் கட்டுரை சான்றாக உள்ளது.
கட்டுரை வழக்கில் உள்ள செந்தமிழ் நடையில் எழுதப் பட்டதாயினும் தமிழோடு கலந்துவிட்ட வடசொற்களும் மிகையாக காணப்படுகின்றன.
சம்பாஷணை ஒரு கலை என்பதை விளக்க தர்க்க ரீதியாகவும் எடுத்துக்காட்டுக்களுடன் கூடியதுமான மொழி நடையாக அமைந்துள்ளது.
மொழிநடையில் ஏளனமும் நகைச்சுவையும் கலந்துள் ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக