6.11.25

A/L குயிற்பாட்டு வினாவிடை

 

குயிற்பாட்டு வினாவிடை

1.   மூவகை குறுங்காப்பியம் பாடிய பாரதி தம் நெஞ்சைப் பறி கொடுத்த மூவகை ஒலிகளும் எவை?

இயற்கை வழியாக வரும் ஒலிகள்

கருவி வழியாக வரும் ஒலிகள்

மனிதரது செயற்பாட்டினால் வெளிவரும் ஒலிகள்

2. இயற்கை வழியாக வரும் ஒலிகள் என எவற்றை இச் செய்யுட் பகுதி கூறுகின்றது? .

காற்று வீசும்போது மரத்தினது இலைகள் அசைந்து அசைந்து எழுப்பும் ஒலிகள்

ஆற்றுநீரானது சலசல என்று ஒலியெழுப்பி ஓடும் வேளை

நீல நிறமுடைய கடலானது எந்த நேரமும் இரையும் சத்தம்

3. கருவி வழியாக வரும் ஒலிகள் என எவற்றை இச் செய்யுள் கூறுகின்றது?

புல்லாங்குழல், வீணை முதலிய இசைக்கருவிகளை மனிதர்கள் வாயினதும் கையினதும் தொழிற்பாட்டினால் வெளிப்படும் இனிய இசை. நெல்லிடிக்கும் பெண்களின்

ஆபரணங்களின் ஒலி. கும்மிப்பாடலில் வரும் வளையல்களின் ஒலி.

4. மனிதரது செயற்பாட்டினால் வெளிவரும் ஒலிகள் எவை?

பெண்கள் உடலுருகிப் பாடும் காதற்பாடல்கள்

ஏற்றம் இறைப்பவர்களின் பாடல்கள்

சுண்ணம் இடிப்பவர்கள் சுவைத்துப் பாடும் பாடல்கள்

பண்ணைகளில் வேலை செய்யும் பெண்களின் தொழிற் பாடல்

பெண்கள் கைதட்டி ஒலியெழுப்பும் கும்மிப்பாடல்கள்

5. மனிதர்களின் வாழ்வியல் தொழிற்பாடுகள் தொடர்பாக இச் செய்யுள் பகுதியில் நீர் அறிந்துகொள்ளும் விடயங்கள் எவை?

ஏற்றம் இறைத்தல்

கும்மியடித்தல்

வயல்வேலை செய்தல்

சுண்ணம் இடித்தல்

நெல்லிடித்தல்

இசைக்கருவிகளை இயக்குதல்

6. இச் செய்யுட் பகுதியில் அழகுணர்ச்சியை வெளிப்படுத்து வதற்கு கவிஞர் கையாளும் உத்திகள் எவை?

காட்டில் வசிக்கும் பல்வேறு பறவைகளின் 'கலகல' என்ற ஒலி

காற்று மரங்களிடையே வீசும்போது மரங்கள் அசைவத னால் ஏற்படும் ஒலி

அருவிகளின் 'சலசல' ஒலியும் கடல் இரைச்சலின் ஒலியும் கேட்பதற்கு இனிமையாக இருத்தல்.

ஏற்றம் இறைக்கும் ஒலி, நீரின் ஒலி, பாடுபவர் பாட்டின் ஒலி ஒருங்கே சங்கமிக்கும்போது ஏற்படும் ஒலி.

நெல்லிடிக்கும் மகளிர் பாடல், பண்ணை மடவார் பழகு பாட்டு நாட்டுப்புறப் பெண்களின் கும்பிப்பாடலின்போது

இன்பத்தை ஊட்டுவன. வளைக்கரங்களின் ஒலி கேட்பவர்க்கு தெவிட்டாத

மேற்கூறியவற்றின் ஒலி கேட்பவர்களுக்கு இன்பத்தை ஊட்டி அழகியல் உணர்வை தூண்டுவதற்கேற்ப இனிமையான சந்தமும் கவிதையில் வெளிப்பட பாடியுள்ளார்.

7. 'நாவும் மொழிய நடுக்கமுறும் வார்த்தைகளைப்

பாவி மனம் தானிறுகப் பற்றி விற்பதென்னேயோ'

என்ற பாடல் வரிகளினூடாக கவிஞர் கூறவந்தது என்ன?

இயற்கையிலும், கருவிகளிலும் மனித செயற்பாட்டிலும் வரும் பல்வேறு ஒலிகளிலும் தனது நெஞ்சைப் பறிகொடுத்ததாக கூறும் குயில், இவ்வரிகளினூடாக ஓர் வெறுப்பு, விரக்தி கலந்த மன உணர்வை தெரிவிக்கின்றது. இசைகளை அனுபவித்து இன்புற்ற மனம் இன்று பேதலித்து காதலை வேண்டிக் கரைகின்றேன் இல்லையெனில் சாதலை வேண்டித் தவிக்கின்றேன் என்ற நிலைப்பாட்டிலேயே இவ்வாறு கூறியது. காதலால் வாடும் குயிலுக்கு காதல் நிறைவேறாது போய்விடுமோ என்ற ஆதங்கத்தில் பாவி மனம் ஏனோ இசையை பற்றி நிற்கின்றது என குயில் ஒலிக்கின்றது. இசைமேல் கொண்டிருந்த ஈடுபாடு துன்பமயமான சூழலில் ஓர் வெறுப்புணர்வை ஏற்படுத்தியதே இவ்வரிகள் குறிப்பிடுகின்றன.

8. நாட்டார் பாடல்களின் இசையில் பாரதியார் கொண்ட ஈடுபாடு எவ்வாறு இச்செய்யுட் பகுதியில் இடம்பெற்றுள்ளது என துலக்குக?

நாட்டுப்புற இசை வகைகளையும் இயற்கையின் இசைக் கோலங்களையும் கண்டு, கேட்டுணர்ந்த கவிஞன் குயிற் பெண்ணின் விழியில் பிறந்த கவிதையாக தனது ஈடுபாட்டை எடுத்துக் கூறுகின்றார்.

நாட்டார் இசையினை இயற்கை வழியாகவும் கருவி வழியாகவும் மனித செயற்பாட்டினாலும் என்ற மூவகைப்
பரிமாணங்களில் தான் அனுபவித்ததை இப்பாடற் பகுதியில் வெளிப்படுத்தியுள்ளார். இயற்கையில் உண்டாகும் ஒத்திகை பொருந்திய ஒலிகளினால் பாரதியின் உள்ளம் தூண்டப் பெற்றதை பல பாடல் வரிகளில் காணலாம்.

மானுடப் பெண்கள் உள்ளம் உருகிப் பாடும் பாடல்களை தேன்வாரி என்று கூறுவதனூடாக கவிஞரின் .... உணர்வின் வெளிப்பாட்டை அறியலாம்.

நெல் குற்றும் மகளிர் வெளிப்படுத்தும் தனித்துவமான ஓசையின்பத்தை குக்குவென கொஞ்சும் மொழி என்று கூறுவதிலிருந்து உணரலாம்."

பண்ணைகளில் வேலை செய்யும் மகளிர் காலம் காலமாக பாடிவரும் பழகு தமிழ்ப் பாட்டிலும் கவிஞர் ஈடுபாடு கொண்டிருந்தமையையும் அறியமுடிகின்றது.

கும்மி என்ற நாட்டார் இசைக்கு வளையல் ஓசை பின்னணி இசை வழங்குவதை வளைக் கரங்கள் தாமொலிக்க என சுட்டிக் காட்டியுள்ளார். அப் பாடல்கள் மனதில் ஓர் அழகியல் உணர்வை ஏற்படுத்துவதை கவிஞர் நன்கு உணர்ந்திருந்தமையினால் அதனைக் 'கூட்டமுதப் பாட்டு' என பெருமைப்படுத்துகின்றார்.

நாட்டிலும், காட்டிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் என்று சொல்வதி னூடாக கவிஞர் நாட்டுப்புற இசையில் கொண்டிருந்த ஈடுபாட்டை அறியலாம்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக