5.11.25

கடல் புறா பாகம் - 01 அத்தியாயம் - 4

கடல் புறா

அத்தியாயம் 4

பயங்கர ஓலை!

அறை விளக்கின் மங்கலான தங்க ஒளியிலும் மங்காத தங்கமெனத் திகழ்ந்த தேக லாவண்யத்துடன் தேவதை போல் நின்று அந்த எழிலரசியைக் கண்டதும் அரை மயக்கத்துக்குள்ளான இளைய பல்லவன், அவள் பேசப் பேசச் சுயநிலையை அடைந்தானானாலும், அவள் தந்தையின் பெயரை உச்சரித்ததுமே பெரும் அதிர்ச்சியை யும் விவரிக்க இயலாத வியப்பையுமடைந்தவனாய், என்ன செய்கிறோமென்பதை அறியாமல், "யார்! யார்! இன் னொருமுறை சொல்!" என்று கூவிக்கொண்டு தனக்கும் அவளுக்குமிருந்த இடைவெளியை இரண்டே வினாடி களில் கடந்து, அவள் இரு கைகளையும் தன் கைகளால் இறுகப் பிடித்துக்கொண்டதன்றி அவளைக் கூர்ந்து நோக்க வும் செய்தான். எதிர்பாராத விதமாக அந்த வாலிபன் திடீரெனத் தன் கையைப் பிடித்ததைக் கண்டு அவள் அஞ்சவுமில்லை. திமிறிக் கைகளை விடுவித்துக் கொள்ளவு மில்லை. அவள் விழிகள் நன்றாக உயர்ந்து மிகுந்த கோபத் துடன் அவன் விழிகளுடன் விநாடி நேரம் உறவாடின. பவள இதழ்கள் முதலில் வெறுப்புடன் மடிந்து, பிறகு சற்றே விரிந்து சொற்களை உதிர்த்தன. "என் தந்தை யின் பெயரை இன்னொரு முறை கேட்க என் அருகே வர அவசியமில்லை. கைகளைப் பற்றி நெறிக்கவும் தேவை யில்லை! என்றாள் அந்த அழகி, சொல் ஒவ்வொன்றிலும் அனல் வீச.

கனலை வாரித் தெளித்த, வெறுப்பை அள்ளி வீசிய அந்தச் சொற்களுக்குக்கூட கருணாகர பல்லவனைச் சுயநிலைக்குக் கொண்டு வரும் சக்தி இல்லை. அந்த ஆரம்ப இரவின் சம்பவங்கள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அவன் சிந்தனையில் வலம் வந்ததால், அந்த இரவு தன்னைக் குழப்புவதற்கும் தன்னைத் திரும்பத்திரும்ப வியப்பின் வசப்படுத்துவதற்குமே ஏற்பட்டதோ
என்ற நினைப்பிலேயே அவன் மனம் ஆழ்ந்து கிடந்தது. 'வீரராஜேந்திர சோழ தேவர் அளித்த சமாதானப் பத்திரத்துடன் கலிங்கம் வந்தேன். சுங்கச் சாவடியிலே சண்டை மூண்டது. வீரர்களுக்குத் தப்பி ஓர் அறையில் குதிக்கிறேன். யாரைக் காணவும், காக்கவும் மன்னர் உத்தரவிட்டாரோ, அவர் மகள் வாள் முனையில் என்னை வரவேற்கிறாள். இந்த விந்தைகள் கதைகளில் நிகழ்வதுண்டு. வாழ்க்கையில் விளைவதுண்டா?" என்று திரும்பத் திரும்ப எண்ணிப்பார்த்து, பிடித்த கைகளை விடுவிக்காமலே சில விநாடிகள் மௌனமாக நின்றுவிட்ட கருணாகர பல்லவனை அவள் சொற்கள் மீண்டும் தாக்கின. "தமிழர் பண்பாடு விசித்திரமாயிருக்கிறது இளைய பல்லவரே! முன்பின் அறியாத பெண்களின் கைகளைப் பிடிக்கும் படிப்பினைதான் தமிழக வாலிபர்களுக்குக் கற்பிக்கப்படுகிறதோ?' என்று சுடச்சுட அவள் சொற்களை உதிர்த்ததன்றிச் சற்றே திமிறவும் செய்தாள்.

அப்படி அவள் சொற்களைச் சுடச்சுட உதிர்த்தாலும், கைகளைத் திமிறியதாலும் ஓரளவு சுயநிலையை அடைந் ததன் விளைவாகத் திடீரென அவள் கைகளை விட்டு விட்டு இளைய பல்லவன், "மன்னிக்க வேண்டும்! உணர்ச்சி வேகத்தில் முறை தவறி நடந்துவிட்டேன், என்று குழம்பிக் குழம்பிச் சொற்களை உதிர்த்த வண்ணம் அவளிடமிருந்தும் திடீரெனத் திரும்பி, கையில் அப் பொழுதும் உருவிப் பிடித்திருந்த வாளை உறையில் போட் டுக் கொண்டு, தன்னை நிதானத்துக்குக் கொண்டுவரச் சாளரத்துக்காகச் சென்று வெளியே தலை நீட்டி, கீழிருந்த வீதியைக் கவனித்தான். வீதியில் அப்பொழுதும் வீரர்கள் நடமாட்டம் இருந்தது. தன்னைத் துரத்தி வந்த காவலாட் களுடன் குதிரை வீரர்களும் சேர்ந்துகொண்டு விட்டதை யும், எதிரும், புதிருமாக வீடுகளின் கதவுகளைத் தட்டி வீரர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்ததையும் கண்ட அந்த வாலிபன், சோதனை தொடர்ந்து நடந்தால் தான் பிடிபட அதிக நேரமாகாது எனத் தீர்மானித்துக் கொண்டு, மீண்டும் அறையின் உட்புறத்தை நோக்கித் திரும்பினான். அந்தச் சமயத்திலும் அந்த அழகி இருந்த இடத்தைவிட்டு அசையாமலும் கையில் உருவிப் பிடித்த வாளைச் சுவரின் ஆணியில் மாட்டாமலும் நின்றிருப்பதைக் கண்டதும் மெள்ளப் புன்முறுவல் செய்த இளைய பல்லவன், "இன்னும் வாள் தேவையா? என்னை யாரென்றுதான் தாங்கள் புரிந்துகொண்டு விட்டீர்களே? என்றான், நிலைமையைச் சற்றுச் சீர்திருத்த முயன்று.

அவள் கருவிழிகள் அவனை மறுபடியும் நன்றாக ஏற இறங்கப் பார்த்தன. "புரிந்துகொண்டதால்தான் வாள் தேவையாயிருக்கிறது என்றாள் அவள் இதழ்களில் இகழ்ச்சி நகைகூட்டி.

என்ன, புரிந்துகொண்டதால் வாள் தேவையாயிருக் கிறதா!" சற்று ஆச்சரியத்துடனேயே கருணாகர பல்லவன்.
ஆம்.

"
நான் கருணாகர பல்லவன் என்பதை அறிந்த பின்புமா இந்த வாளின் உதவி தேவை?"

"
பெயரைக் கேட்டதும் தேவையில்லை என்றுதான் எண்ணினேன். ஆனால்...!" என்று சொல்லி வாசகத்தை முடிக்காமல் விட்ட அந்த அழகி, சிறிது சங்கடத்துக்கும் உள்ளானதைக் கவனித்த இளைய பல்லவன், "ஆனால் என்ன? தைரியமாகச் சொல்லுங்கள் என்று வினவினான்.

பெண்மையின் சங்கடத்தின் விளைவாக நிலத்தில் தாழ்த்திய விழிகளை அங்கிருந்து அகற்றாமலே அவள் பதில் சொன்னாள்: "கருணாகர பல்லவர் என்ற பெயரைக் கேட்டதும் சற்றுத் துணிவுதான் கொண்டேன். தமிழகத் தின் பெரும் வீரர் இருக்கும்போது, பெண்களுக்கு எந்த ஆபத்தும் நேரிடக் காரணமில்லையென்று நினைத்தேன். ஆனால் முன்பின்னறியாத பெண்ணின் கையைப் பற்றும் பண்பாடு இளைய பல்லவருக்கு உண்டு என்பதை அறிந்த பின்புதான், எதற்கும் வாள் கையிலிருப்பது நல்லது எனத் தீர்மானித்தேன்.

அவள் வார்த்தைகள் உதிர உதிர அவளை விடப் பன்மடங்கு சங்கடத்தையும் வெட்கத்தையும் அடைந்த கருணாகர பல்லவன், செய்தது தவறுதான். ஆனால் நினைத்துச் செய்த தவறல்ல. இந்த ஊரில் நான் கால் வைத்த விநாடி முதல் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள் தூண்டிய உணர்ச்சி வேகத்தில் நடந்த தவறு என்று தட்டுத் தடுமாறிச் சமாதானம் சொன்னான்.

பல வீரர்களிடம் தன்னந்தனியே போரிட்டுப் பாலூர்க் கோட்டைக் காவலையும் மீறி வந்திருக்கும் அந்த வாலிப வீரன் தன்னெதிரில் குழந்தைபோல் நிற்பதையும் தட்டுத் தடுமாறிச் சமாதானம் சொல்வதையும் கண்ட அவள் இதயத்தில் அவனைப்பற்றி ஏற்பட்ட ஆரம்ப சந்தேகம் மறைந்து அனுதாபம் உதயமானாலும், அதை வெளிக்குக் காட்டாமல் கடுமையாகவே பேச முற்பட்ட அந்த அழகி, உணர்ச்சிகளை அடக்குவதுதான் வீரர்களுக்கு அழகு. இல்லையா? இளைய பல்லவரே? என்று வினவினாள்.

உணர்ச்சிகளை அடக்கத்தான் வேண்டும். ஆனால் இரண்டு சமயங்களில் உணர்ச்சிகளை அடக்குவது வீரர் களுக்கு அழகுமல்ல, விவேகமுமல்ல என்றான் இளைய பல்லவன்.

எந்தச் சமயங்கள் அவை? என்று கேட்டாள் அவள் வியப்புடன்.

ஒன்று, போரிடும் சமயம். அந்தச் சமயத்தில் வீர உணர்ச்சிக்கு இடம் கொடுக்காதவன் வெற்றியடையவ தில்லை. அடுத்தது... திடீரென்று பேச்சை நிறுத்தினான் இளையபல்லவன், அடுத்தது காதல் என்று சொல்ல முற்பட்டவன் தன் யுக்தியையும் தத்துவத்தையும் அளவுக்கு மீறிக் காட்டினால் மேலும் அந்தப் பெண்ணின் இகழ்ச்சிக் கும் கோபத்துக்கும் இலக்காக நேரிடும் என்ற எண்ணத் தால் சம்பாஷணையை வேறு திசையில் மாற்றி, எதற்கு வீண் விவாதம்? உங்களை எதிர்பாராத விதமாகச் சந்தித் தேன். உங்கள் தந்தையின் பெயரைக் கேட்டதும் அதிர்ச்சி யடைந்தேன். அதனால் உணர்ச்சிப் பெருக்கெடுக்கவே உங்கள் கைகளைப் பிடித்துவிட்டேன். தவறுக்கு வருந்து கிறேன் அரசகுமாரி! வருந்தி மன்னிப்புக் கேட்பவர்களுக்கு மன்னிப்பளிப்பது மன்னர் குலத்தார் பண்பாடு. அந்தப் பண்பாட்டிலிருந்து தாங்கள் பிறழ்வது முறையாகாது" என்றான் ஏதோ தத்துவத்தை எடுத்துச் சொல்பவன் போல.

வீரர்கள் உணர்ச்சிகளை இழக்கக்கூடிய இரண்டா வது சம்பவத்தைக் குறிப்பிடப் போய், சரேலென அந்த வாலிபன் பேச்சை மாற்றியதை அந்த அழகி கவனிக்கத் தவறவில்லை. அவன் என்ன சொல்ல முயன்றான் என்பதையும் அவன் அடைந்த சங்கடத்திலிருந்தே அவள் புரிந்து கொண்டாளாதலால், அவள் முகத்தில் அதுவரை விரிந்து கிடந்த கோபச்சாயை அகன்று வெட்கம் கலந்த சிரிப்பின் சாயை மெள்ளப் படர்ந்தது. சிவந்த புஷ்பம் போல் மெள்ளமெள்ள விகசித்த இதழ்களில் மகிழ்ச்சியைத் தோற்றுவித்த இளநகை விரிந்தது. அந்த மங்கையின் செங்கமல விழிகளும் மகிழ்ச்சியால் துள்ளி விளையாட முற்பட்டன. அந்தக் கருமணிகளில் பிரதிபலித்த அறை விளக்கின் பொன்னிற ஒளி அந்த விழிகளுக்குப் பெரும் விஷமத்தைக் கற்பித்தன. இளைய பல்லவர் வாள் வீச்சில் வல்லவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பேச்சி லும் வல்லவர் என்று இன்றுதான் அறிந்தேன் என்றாள் அந்த அழகி 'களுக்'கென்று சிரிப்பை உதிரவிட்டு. உதிர விட்ட அந்தச் சிரிப்பைத் தொடர்ந்து கையிலிருந்த வாளையும் பக்கத்திலிருந்த மஞ்சத்தின்மீது எறிந்தாள்.

அவள் முகத்தில் கோபம் அகன்றதையும், அவள் இதழ்கள் மகிழ்ச்சி நகை கூட்டியதையும் கண்ட இளைய பல்லவனின் மனமும் பெரிதும் சாந்தப்பட்டதால் அவன் நிதானமாகப் பேச முற்பட்டு, "என் நிலைமை உங்களுக்குப் புரிந்திருக்கிறது, அரசகுமாரி. கோட்டைக் காவலரிட மிருந்து தப்பிக் கடாரத்தின் இளவரசர் தங்கியிருக்கும் மாளிகைக்குள் வந்து குதிப்பேனென்பதை நாம் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? அதுவும் அவர் அழகிய மகளின் வாள் முனையில் நிற்பேனென்பதைத்தான் நான் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? அப்படி எதிர்பாராத காரணத்தால்தான் நான் சற்றுத் தவறாக நடந்துவிட்டேன். உண்மையில் உங்கள் தந்தை இன்னார் என்று நீங்கள் தெரிவித்ததும் திக்பிரமையே அடைந்தேன் என்றான்.

அரசகுமாரி ஒரு விநாடி யோசித்துவிட்டுக் கேட்டாள். "திக்பிரமை அடைய அதில் என்ன இருக்கிறது? என் தந்தையின் பெயர் குணவர்மன் என்றேன். கடாரத்தின் இளவரசர் ஒருவருக்குத்தான் அந்தப் பெயர் இருக்க வேண்டுமா?

"
இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இத்தகைய பெரும் மாளிகைகள் பாலூரில் மூன்று வீதிகளில்தான் உண்டு. ராஜவீதி, வணிகர் வீதி, வெளிநாட்டுப் பிரமுகர்கள் தங்கும் வீதி ஆகிய இம்மூன்று வீதிகளைத் தவிர இந்தக் கோட்டைக்குள் பெரும் மாளிகைகள் எங்கும் கிடையாது. 'வர்மர்' என்ற பிற்பகுதியுடைய பெயர்கள் கலிங்க அரச பரம்பரைக்கு உண்டு. கடலுக்கப்பாலுள்ள உங்கள் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யத்தின் சைலேந்திர பரம் பரைக்கும் உண்டு. ஆகையால் கலிங்கத்தின் பீமவர்மன், அனந்தவர்மன் என்ற பெயர்களையும், சொர்ணம் கொழிக் கும் தீவுகளை ஆளும் சைலேந்திர பரம்பரையில் சூடா மணிவர்மன் ஸ்ரீமார விஜயதுங்கவர்மன் என்ற பெயர் களையும் கேட்கிறோம். அரசியலில் பழக்கமுடையவர் களுக்கு உங்கள் தந்தை யாரென்பதை நிர்ணயிப்பது கஷ்ட மல்ல. நீங்கள் தங்கியிருப்பது வெளிநாட்டுப் பிரமுகர் தங்கும் வீதி. உங்கள் தந்தையின் பெயர் குணவர்மர். இரண்டையும் இணைத்துப் பாருங்கள் என்று விளக்கி னான் கருணாகர பல்லவன்.

அதனால் அவர் கடாரத்தின் இளவரசராயிருக்க தீர்மானித்துவிட்டீர்களா? வேண்டுமென்று கேட்டாள் அரசகுமாரி. என்று

"
அதனால் மட்டுமல்ல, அரசகுமாரி. நீங்கள் என்னை வரவேற்ற தோரணை, வாளைப் பிடித்த முறை, இவற்றி லிருந்து நீங்கள் ஏதோ ஓர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் களென்று தீர்மானித்தேன். உங்கள் தந்தை பெயரைக் கேட்டதும் என் கற்பனை நிச்சயப்பட்டது என்றான் இளைய பல்லவன்.

இதற்கு அரசகுமாரி பதிலேதும் சொல்லவில்லை. சற்று நேரம் மௌனமே சாதித்தாள். பிறகு, "என்ன விசித்திரமான இரவு இது, இளைய பல்லவரே! உங்கள் உதவியை நாடி நாங்கள் கலிங்கம் வருகிறோம். எங்களை நாடி நீங்களும் வருகிறீர்கள். இப்படி எதிர்பாராத வித மாகத் திடீரென இந்த இரவில் இந்த அறையில் சந்திக்கிறோம். அதுமட்டுமல்ல, ஒருவரையொருவர் சந்திக்க வந்த நாமிருவரும் பெரும் ஆபத்திலும் சிக்கியிருக்கிறோம் என்று மெள்ளச் சொன்னாள்.

கருணாகரபல்லவனின் புருவங்கள் சந்தேகம் கேட்பன போல் சற்றே எழுந்தன. நான் ஆபத்திலிருப்பது உனக்குத் தெரியும், அரசகுமாரி. ஆனால் உங்களுக்கு என்ன ஆபத்து இருக்க முடியும்? மாறு பெயரிலேதானே இங்கு வசிக்கிறீர்கள்?" என்று கேட்டான் அவன்.

ஆம், மாறு பெயரில்தான் இங்கு வசிக்கிறோம். ஆனால் இந்த ஊர் அதிகாரிகளுக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டிருக்க வேண்டும், இளைய பல்லவரே! இரண்டு நாள்களாக இந்த மாளிகையின்மீது கண்காணிப்பு பலமாக இருக்கிறது என்று பதில் சொன்னாள் அவள்.

இதைக் கேட்டதும், தீவிர சிந்தனையில் ஆழ்ந்து விட்ட கருணாகரன் நீண்ட நேரம் பேசாமலே அறையில் அங்குமிங்கும் உலாவினான். பிறகு சட்டென்று அறை நடுவே நின்று அவளை நோக்கி, "நீங்கள் இங்கு வந்து எத்தனை நாள்களாகின்றன? என்று வினவினான்.

கிட்டத்தட்ட பதினைந்து நாள்களாகின்றன.

உங்களைத் துறைமுகத்தில் யார் சந்தித்தது?

"
யாரோ கோட்டைக்கரைக் கூலவாணிகனாம்.

அவன்தான் இந்த மாளிகையை அமர்த்திக் கொடுத் ?"

"
ஆமாம்."

அவன் இங்கு நாளைக் காலையில் வருவானா?"

தெரியாது!

தெரியாதா?

"
பத்து நாள்களாக அவன் இந்தப் பக்கமே நாடவில்லை."

இந்தப் பதிலைக் கேட்டதும் சில விநாடிகள் அசை வற்று நின்றுவிட்ட கருணாகர பல்லவன், மேலே ஏதோ பேச முற்படுமுன் அந்த அறைக் கதவு பலமாகத் தட்டப் பட்டது. "காஞ்சனா, காஞ்சனா, உனக்காக எத்தனை நேரம் காத்திருப்பது? ஆடை புனைய இத்தனை நேரமா? என்று அடுத்தடுத்துக் கேட்கப்பட்ட கேள்விகளின் காரண மாகச் சட்டென்று அரசகுமாரி கதவைத் திறக்கவே, உள்ளே நுழைந்த சைலேந்திர குலத் தோன்றலான குணவர்மன் அந்த அறை அளித்த காட்சியைக் கண்டு, வாயிற்படியைத் தாண்டி வைத்த ஒரு கால் அப்படியே இருக்க, உள்ளே முழுவதும் நுழையாமலும், ஏதும் புரியாமலும் தன் கண்களை அறையிலிருந்த இருவர் மீதும் மாறிமாறி நிலைக்க விட்டான்.

அந்த நிலைமை அங்கிருந்த மூவருக்குமே பெரும் சங்கடத்தை விளைவித்தது. ஆடையைச் சரியாகப் புனை யாமல் அரைகுறையாகச் சுற்றிக்கொண்டு தன் புதல்வி நிற்பதையும், அவளை விழுங்கி விடுபவன்போல் ஒரு வாலிப வீரன் கண்களை அவள்மீது செலுத்திக் கொண் டிருப்பதையும் கண்ட குணவர்மனுக்கு, என்ன பேசுவது, என்ன செய்வது என்று தெரியாததால், சற்றே குழம்பி னான். அரைகுறையாகச் சுற்றப்பட்ட ஆடையுடன் தான் நிற்பதைத் தந்தை கண்டு மலைத்ததைக் கவனித்த அரச குமாரி, நாணம் உணர்ச்சிகளைக் கௌவிக் கொள்ளவே குழப்ப மிகுதியால் தரையில் கண்களை ஓட்டினாள். மற்ற இருவரைவிடக் கருணாகர பல்லவனின் நிலை அதிக சங்கடமாயிருந்த போதிலும் அரசகுமாரியின் பெயர் காஞ்சனாதேவி' என்பதை அவள் தந்தையின் அழைப்பி லிருந்து அறிந்துகொண்ட காரணத்தால், அவன், 'காஞ்சனா தேவி! என்ன அழகான பெயர்!' என்று தனக்குள்ளேயே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டதன்றி, 'இவள் அழகுக்குப் பெயர் விளக்கம் கூறுகிறது. இவளும் சொர்ணவிக்ரகம் போலத்தானே இருக்கிறாள்' என்று விவரித்து மனத்தை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தான்.

இப்படி மூவரும் மூன்றுவித மார்க்கத்தில் சிந்தனை களை ஓட்டியதால் ஏற்பட்ட மௌனத்தை, சங்கடத்தி லிருந்து முதலில் தன்னை மீட்டுக்கொண்ட காஞ்சனா தேவியே கலைக்கத் தொடங்கி, ஆடை புனையத்தான் அறைக்கு வந்தேன்... என்று இழுத்தாள்.

அப்படியானால் ஏன் புனையவில்லை? என்று எழுந்தது குணவர்மனின் கேள்வி, சற்றுக் கோபத்துடன்.

அதற்குள் இவர் வந்துவிட்டார் என்றாள் காஞ்சனாதேவி, இளைய பல்லவனைக் கையால் சுட்டிக்காட்டி.

குணவர்மனின் குழப்பமும் கோபமும் அதிகமாகிக் கொண்டிருந்தன. தன் பெண் பாதி ஆடை உடுக்கும் போது ஊர் பேர் தெரியாத ஆடவன் ஒருவன் அறைக்குள் வந்ததை நினைத்தபோதே கோபம் அவன் முகத்தில் தாண்டவமாடியது. அதைப்பற்றித் தன் பெண் வெட்க மில்லாமல் பேசுகிறாளே என்பதை நினைக்க அந்தக் கோபம் எல்லையைத் தொட்டது. ஆனால் திடீரென ஏற்பட்ட அந்தச் சூழ்நிலையில் சிறிது குழப்பத்துக்கும் உள்ளான குணவர்மன், "இவர் வந்துவிட்டாரா!" என்று முதலில் சிறிது வியப்பைக் காட்டி, பிறகு, "இவர் யார்? முன்பே தெரியுமா உனக்கு? என்று புதல்வியைக் கேட்டான்.

"
தெரியாது. சற்று முன்புதான் அறிந்தேன் என்றாள் காஞ்சனாதேவி.

"
அப்படியா!" என்று எழுந்தது குணவர்மனின் இரண் டாவது கேள்வி. அவன் குரலில் ஒலித்தது இகழ்ச்சியா கோபமா என்பது விளங்கவில்லை காஞ்சனா தேவிக்கு. இருந்த போதிலும் மறுபடியும் சொன்னாள், "அறிந்ததும் வியப்படைந்தேன்," என்று.


"
எப்படி வந்தார் இவர்? என்று குணவர்மன் விசாரித்தான்.

"
சாளரத்தின் வழியாக.

வீரர்கள் வரச் சரியான வழிதான் இது!

தவறாக எண்ணுகிறீர்கள், தந்தையே. இவர் கலிங் கத்தின் வீரர்களால் துரத்தப்பட்டார். தப்பி வந்து அறைக் குள் குதித்தார்.

"
வீரர்களுக்குப் பயந்து பெண்ணிடம் சரணாகதியா? சிறந்த வீரன்தான். சந்தேகமில்லை."

தந்தை திரும்பத் திரும்ப இடக்காகவும் இகழ்ச்சியா கவும் பேசியதால் சற்றுக் கோபமடைந்த காஞ்சனாதேவி, யோசித்துப் பேசுங்கள், தந்தையே! இவரை யாரென்று நீங்கள் அறியாமல் பேசுகிறீர்கள்! என்று எச்சரித்தாள்.

"
அந்த வாய்ப்பு உனக்குத்தான் முதலில் கிடைத் திருக்கிறது" என்றான் குணவர்மன்.

அவன் சொற்களில் கண்ட இகழ்ச்சியின் விளை வாகச் சீறி எழுந்த காஞ்சனாதேவி, "அந்த வாய்ப்பை உங்களுக்கும் அளிக்கிறேன், தந்தையே! பெற்றுக்கொள் ளுங்கள். யாரை நாடி நீங்கள் கலிங்கம் வந்திருக்கிறீர்களோ, யார் துணை கொண்டு சோழவேந்தன் உதவியை நாடக் கடல் கடந்து இங்கு வந்து தங்கியிருக்கிறீர்களோ! அந்த இளைய பல்லவர்தான் உங்கள் முன்பு நிற்கிறார்? என்று கூறிவிட்டு அந்த அறையை விட்டுச் செல்லச் சரேலெனத் திரும்பினாள்.

நில்லுங்கள், அரசகுமாரி! என்று அவளைத் தடுத்த கருணாகர பல்லவன், சைலேந்திர மன்னரே! விதியின் விசித்திரக் கயிறுகள் விபரீத நிலையில் இந்த மாளிகையில் நம்மைப் பிணைத்திருக்கி்ன்றன. விரிவாகப் பேச இது சமயமல்ல. ஆனால் இதை மட்டும் படியுங்கள்" என்று தன் கச்சையிலிருந்த பையை எடுத்துப் பிரித்து, அதற்குள்ளிருந்த ஓர் ஓலையை எடுத்துக் குணவர்மனிடம் நீட்டினான். அந்த ஓலையை விளக்கின் அருகில் கொண்டு சென்று படிக்கத் துவங்கிய குணவர்மனின் முகத்தில் பெரும் வியப்பும் திகைப்பும் மெல்ல மெல்லப் படரலாயின. சில விநாடிகள் ஓலையைக் கையில் பிடித்த வண்ணமே நின்று விட்ட குணவர்மன் அந்த ஓலையைத் தனது மகளிடம் நீட்டினான். ஓலையில் கண்ட வரிகளில் ஓடிய ஏந்திழை யின் கண்கள் மெள்ள எழுந்து இளைய பல்லவனை நோக்கின. "இந்த ஓலையில் கண்டிருப்பது உண்மை யானால்... இதில் கண்டிருப்பது மட்டும் நடந்துவிட்டால்... என்று ஏதோ சொல்ல முயன்று, பெரும் திகிலால் பேச முடியாமல் சொற்களை விழுங்கினாள் காஞ்சனாதேவி.

அவளைத் தொடர்ந்து பேசிய குணவர்மனின் குரல் மிகவும் தீனமாக ஒலித்தது. "ஓலையில் கண்டிருப்பது நடந்தால் எங்கள் குலம் ஒழிந்தது! சைலேந்திரர் பேரரசு முறிந்தது! சொர்ண பூமியே அழிந்தது!

"
என்ன பயங்கர ஓலை! என்ன பயங்கரத் திட்டம்! என்று காஞ்சனா தேவியும் பெருமூச்செறிந்தாள். அறை விளக்கின் சுடர்கூட லேசாக நடுங்கியது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக