விளக்ககட்டுரை- 01
க.பொ.த (சாதாரண தரப்) பரீட்சை - தமிழ் மொழியும் இலக்கியமும் - 2024(2025)
02. பின்வருவனவற்றுள் ஒன்றைத் தெரிவுசெய்து, ஏறத்தாழ 250 சொற்களில் அமையுமாறு விடை எழுதுக. நீங்கள் தெரிவுசெய்த விடயத்துக்குப் பொருத்தமான தலையங்கம் இடுக.
(i) நமது நாட்டில் சுகாதாரத்துறை குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி கண்டுள்ளது. அனைத்து விதமான நோய்களுக்கும் அரச வைத்தியசாலைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படுவது ஒரு வரப்பிரசாதமாகும். எமது நாட்டில் நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்கள் பலர் உள்ளனர். இவ்வாறான சிறப்பம்சங்கள் பல காணப்படும் அதேவேளை மருந்துத்தட்டுப்பாடு, கிராமப் புறங்களில் வைத்தியர்களின் போதாமை, தரமற்ற மருந்துகளின் இறக்குமதி முதலான குறைபாடுகளும் நிலவுகின்றன. இவ்விடயங்களை உள்ளடக்கியதாக ஒரு விளக்கக் கட்டுரை.
சட்டகம்
முகவுரை
பயிற்றப்பட்ட தாதிமார்களின் சேவை
குடும்பநல சுகாதார பரிசோதகர்களின் சேவை
தாய் - சேய் நலன் பேணும் சேவை
தடுப்பூசி வசதிகள்
மருத்துவத்துறையின் குறைபாடுகள்
அவசிய மருந்துகள் சிலவற்றின் பற்றாக்குறை
வைத்தியசாலைகளின் உட்கட்டமைப்புக் குறைபாடுகள்
ஊழல் மோசடிகள்
நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் வெளியேற்றம்
மருத்துவத்துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
சுகாதாரத்துறைக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தல்
நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள், தாதிமார்களைச் சேவையில் இணைத்தல், அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தல்.
தரமான மருந்து வகைகளை இறக்குமதி செய்தல்.
-வைத்திய சேவையைத் தரமுள்ளதாகவும் நவீனமாகவும் கட்டமைத்தல்.
ஊழல்களைக் கட்டுப்படுத்தல்.
. முடிவுரை
மருத்துவ துறையின் இன்றைய நிலை
எமது இலங்கை நாட்டின் சுகாதாரத்துறையானது இன்று பாரிய வளர்ச்சி அடைந்துள்ளது எனலாம். அதாவது குறிப்பாக இலவச மருத்துவ வசதி.
நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள், உயர் தொழில்நுட்ப மருத்துவ உபகரண வசதி,
கதிரியக்க உபகரணம், நன்கு பயிற்றுவிக்கப்பட்ட தாதியர்கள் மற்றும் குடும்ப நல சுகாதார பரிசோதகர்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஒன்பது மாகாண அமைச்சுகளின் கீழ் கிட்டத்தட்ட 588 வைத்தியசாலைகளும் 500 க்கும் மேற்பட்ட முதன்மை பராமரிப்பு நிறுவனங்களும் காணப்படுகின்றன. அவை அடிப்படை சுகாதார சேவைகளை வழங்குவதோடு நோய் பராமரிப்பு, தடுப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகளையும் வழங்குகின்றன. பெருந்தொற்று காலப்பகுதியில் கூட தடுப்பூசியினை பெற்றுக்கொடுக்க எமது சுகாதார அமைச்சு துணைநின்றது. தாய்-சேய் நலன் பேணும் சேவையினால் நிறைய கர்ப்பிணி தாய்மார்களும் குழந்தைகளும் உதவி பெற்று வருகின்றன. தேவையான ஊட்டச்சத்துக்களையும் வளர்ச்சி தொடர்பான வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றது.
எமது சுகாதார மற்றும் மருத்துவ துறையின் தோல்விகளையும் நாம் அறிய வேண்டியது அவசியம். இலங்கையின் பல மருத்துவமனையில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்கள் பற்றாக்குறையாக உள்ளன. இதனால் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் போகிறது மற்றும் மருத்துவ பணியாளர்களின் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக அறுவை சிகிச்சை உபகரணங்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களின் பற்றாக்குறை அதிகளவாக உள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் நிர்வாக சீர்கேடுகள் மருத்துவத் துறையின் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. சிகிச்சை தரத்தில் ஏற்படும் குறைபாடு, குறிப்பாக, பேராதனை வைத்தியசாலையில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளின் பயன்பாட்டால் இறப்புகளும் கூட ஏற்பட்டமை. நுவரெலியா மருத்துவமனையில் 10 மருத்துவர்கள் மாத்திரமே உள்ள நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தியமை. மட்டக்களப்பு மருத்துவமனையின் 17 வயது சிறுமி இறப்பு. யாழ்ப்பாண மருத்துவமனையில் காய்ச்சலினால் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் கையை தாதி ஒருவர் வெட்டியமை எனக் கூறிக்கொண்டே போகலாம்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி சுகாதார சேவையை கடுமையாக பாதித்துள்ளது. பொது சுகாதார நிறுவனங்கள் மருந்துகளின் தட்டுப்பாடு, ஒத்திவைக்கப்பட்ட அறுவைச் சிமிச்சை ஆகியவை பொதுமக்களுக்கு பாரிய பிரச்சினையாக உள்ளது மற்றும் 1000 க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். சாதகங்களை விட பாதகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இலங்கையில் மருத்துவத் துறையின் தோல்விகள் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும். இதுவே எமது மருத்துவத் துறையின் இன்றைய நிலையாகும்.
"நோய் நாடி, நோய் முதல் நாடி,
அது
தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப செயல்"

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக