பல்லவர் காலத்தில் தோன்றிய வைஷ்ணவ சமய ஆழ்வார்களையும், அவர்கள் பாடியருளிய திருப்பாசுரங்களையும் விளக்குக?
ஒற்றுமையாக வளர்ந்து வந்த சைவம், வைஷ்ணவமாகிய இரு சமயங்களும் ஒன்றிற் கொன்று போட்டி போட்டு வளரத் தொடங்கின. அந்த வகையில் வைஷ்ணவ சமய வளர்ச்சிக்க ஆழ்வார்கள் அரும்பாடுபட்டனர். முதல் மூன்று ஆழ்வார்களும் சங்கமருவிய கால பிற்பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட வைஷ்ணவ சமய வளர்ச்சியானது பல்லவர் காலத்தில் தோன்றிய ஏனைய 09 ஆழ்வார்களாலும் சிறப்பாக வளர்ச்சியுற்றது. திருமால் மீது அளவு கடந்த பக்தியை உடைய திருமழிசை ஆழ்வார் திருமாலிடத்தில் கொண்ட பக்தியினால் திருகுடந்தை. திருஅரங்கம் முதலிய இடங்களுக்கு சென்று திருமாலின் புகழை பக்தி வைராக்கியத்துடன் பாடித் திரிந்ததனால் பக்திசாரர் என்று அழைக்கப்பட்டனர்.
திரு அரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் திருமாலிடத்திலே ஆறாத அன்பு கொண்டு அவருக்கு பூமாலை சாத்துதல் முதலிய தொண்டுகளை புரிந்து தம் வாழ்நாளை கழித்தவர். தொண்டறடிபொடியாழ்வார் ஆவர். இவர் திருமாலை, திருப்பள்ளியெழுச்சி ஆகிய பிரபந்தங்களை பாடினார். பிராமண குலத்திலே உதித்த இவர் தாழ்ந்த சாதியில் பிறந்தவராய் இருந்தாலும் அவர்கள் திருமாலின் அடியார்கள் என்றால் அவர்களை பெரியோர்களாக மதித்து போற்றுவர். அதனால் தான் இவருக்கு இப்பெயர் உண்டாகியது.
பாணர் குலத்தை சேர்ந்தவராகிய திருப்பாணாழ்வார் அமலன் ஆதிபிரான் என்ற பாடலை பாடினார். இழி குலத்தவரான இவர் திரு அரங்கத்திலே இருக்கின்ற திருமாலின் திருவுருவத்தை கண்ணால் கண்டு அனுபவிக்க முடியாமல் தவித்த நேரம் உலக சாரங்க மகா முனிவர் இவரை தூக்கிச் சென்றார். என்றும் அவ்வாறு தூக்கிச் செல்கையிலே அமலன் ஆதிபிரான் என்ற பதிகத்தை பாடினார் என்றும் கூறுவர். திருமாலின் அழகினை கண்டு அனுபவித்ததை அப்பதிகத்தில் சுவைபட பாடியுள்ளார். அப்பதிகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
கள்வர் குடியில் பிறந்து திருமங்கையெனும் நாட்டை ஆண்ட திருமங்கை ஆழ்வார் ஒரு சிற்றரசராவார். இவரும் தொண்டரடி பொடி ஆழ்வார் போன்று பக்தர்களுக்கு தொட்டு செய்வதையே பெருமையாக மதித்தார். ஆலயப்பணியிலே தமது பொருளையெல்லாம் செலவிட்டார். இமையம் தொடக்கம் குமரி முனை வரையும் உள்ள திருமால் கோயில்கள் பலவற்றையும் கண்டு தரிசித்து பாடிய பதிகங்களே பெரிய திருமொழியாகும்.
இவர் பாடிய உர்ச்சி மிக்க பிரபந்தங்கள் ஒன்றாகிய திருமடல் உலகியற் காதலை கூறுவது போன்று நம்மை நாயகியாகவும் இறைவனை நாயகனாகவும் பாவனை செய்து இறைவனை காணாதுபடும் துன்பந்தை பலவாறாக எடுத்து கூறியுள்ளார். இக்கூற்றுக்கள் யாவும் ஒரு தலைவியின் கூற்றாக அமைகின்றது.
ஸ்ரீ வில்லி புத்தூரில் தோன்றிய பாண்டி நாட்டிலே வைஷ்ணவ சமயத்தை வளர்த்து வந்த ஒரு பெரியாரே பெரியாழ்வார் ஆவார். இவர் விஷ்ணு சித்தர் பட்டர் பிரான் என்ற திருநாமங்கள் இவருக்கு வழங்கப்படுகிறது. திருமாலுக்கு தொண்டு செய்து வழிபடுவதையே தமது வாழ்க்கையின் நோக்கமாக கொண்டவர். அவர் ஒரு தந்தவனம் அமைத்து நினந்தோறும் பூமாலை சூட்டியும், பூமாலை புனைந்து திருமால் வழிப்பட்டார். திருமால் அவதாஅவதாரங்களின் கண்ணன் குழந்தையாக இருந்த காலத்திலே யசோதை பிராட்டியார் கண்ணனிடம் அனுபவித்த குறும்புகளையெல்லாம் தான் அனுபவித்ததாக பாவித்து பாடிய பதிகங்களே பெரியாழ்வார் திருமொழியாகும். தொட்டிலிட்டு தாலாட்டுதல் முதல் பல பருவங்களாக கண்ணலுடைய பருவத்தை பாடிய இப்பிரபந்தம் பிற்காலத்திலே எழுந்த பிள்ளைத்தமிழ் பிரபந்தங்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாய் நின்றது. தாய்மார்கள் ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகள் செய்யும் குழந்தை குறும்புகளையும் தானும் அனுபவித்தது போல் கற்பனை பண்ணி பாடியதே இப்பிரபந்தமாகும். இவர் பாடிய இன்னொரு நூல் திருப்பல்லாண்டு ஆகும்.
பெரியாழ்வாருக்கு மகளாக அவதரித்த கோதையார் எனும் பெயருடையவர் ஆண்டாள் ஆகும். கண்ணனை தன் காதலனாக மனதில் நினைத்து அவளையே கணவனாக அடைய வேண்டுமென்ற அசையாத குறிக்கோள் உடையவள். கண்ணன் வாழ்ந்த காலத்தில் தாமும் வாழ்ந்து கண்னாவின் பேரழகை கண்டு அனுபவிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இவரது பாடல்களில் நிறைந்து காணப்படுகிறது. இவர் பாடிய நாச்சியார் திருமொழி எனும் பாடல் கற்பனை உலகத்தில் கண்ணனை அடைவதற்கு அவர் பட்ட பாடெல்லாம் உருண்டு திரண்டு வந்தது போல் காணப்படுகிறது.
அவர் பாடிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்பன கரைப்புரண்டோடும் காதல் வெள்ளத்தில் பற்றுக் கோடின்றி தவிக்கும் அவர் அனுபவங்கள் அனுபவங்கள் பொதிந்துள்ளன. இதனால் இப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் சிறப்பிடம் பெற்று விளங்குகின்றன. (இறைவனை காதலனாக நினைத்து பாடிய பெரியார்கள் பலர் இருந்தாலும் தம்மை இறைவலுக்கு நாயகியாக பாவித்து பாடிய புலவர் ஆண்டாலன்றி வேறு யாருமில)) ஆண்டாள் பாடிய திருப்பாவையும், மாணிக்க வாசகர் பாடிய திருப்பாவையும் பண்டைக் காலம் தொட்டே தமிழ் நாட்டுப் பெண்கள் அனுஷ்டித்து வந்த மார்கழி நோன்பை ஆதாரமாக கொண்டு எழுந்த சுவைமிக்கப் பாடல்களாகும்.
இவ்வாறு இப்பன்னிரு ஆழ்வார்களும் அருளிச் செய்த 24 பிரபந்தங்களும் அடங்கிய நூல் நாளாயிரத் திவ்விய பிரபந்தம் எனப்படும். இதவை தொகுத்தவர் நாத முனியாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக